Tag: ஊறுகாய்

  • கேரள ஸ்டைலில் பொரித்த மாங்காய் ஊறுகாய்!!

    நீங்கள் இதுவரை எத்தனையோ விதமாக மாங்காய் ஊறுகாய் செய்திருப்பீர்கள். ஆனால் இந்தப் பதிவில் நான் சொல்லப்போகும் மாங்காய் ஊறுகாயை ஒருமுறை செய்துவிட்டால் சுவை வேறு லெவல்.

    அதே போல இதை வீட்டில் ஒரு முறை செய்தால் மாங்காய் ஊறுகாயை கடையில் வாங்கும் எண்ணம் வராது. சரி முற்றிலும் வித்தியாசமான முறையில் மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மாங்காய் – 10 முதல் 12 எண்கள்

    நல்லெண்ணெய் – 7 டீஸ்பூன்

    வெந்தயம் – 1 டீஸ்பூன்

    கடுகு – 1 டீஸ்பூன்

    உப்பு – 1 டீஸ்பூன் (தேவையான அளவு)

    சிவப்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் (உங்கள் காரத்திற்கு ஏற்ப)

    செய்முறை

    மாங்காயில் பால் வடிந்து அதில் அழுக்கு படிந்து இருக்கும். அதனால் இரண்டு முறை கழுவி தனியாக வைக்கவும்.

    பிறகு மாங்காயின் நுனியை நீக்கி நறுக்கி மீண்டும் ஒருமுறை கழுவவும்.

    கேரள முறைப்படி நாம் செய்ய இருப்பதால் மாங்காயை நீள துண்டுகளாக நறுக்கவும்.

    இப்போது ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானபின், அதில் நறுக்கிய அனைத்து மாங்காயையும் போட்டு மேலோட்டமாக வதக்கவும்.

    பின்னர் வதக்கிய மாங்காயை ஒரு பாத்திரத்தில் தனியாக வைக்கவும்.

    இப்போது வெந்தயத்தையும் கடுகையும் வறுத்து தனியாக வைக்கவும்.

    பின் இந்த வெந்தயத்தையும் கடுகையும் நன்கு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

    பிறகு கடாயை அடுப்பில் வைத்து சூடான பின் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம் மற்றும் வறுத்து அரைத்த பொடியை அதில் பாதியாக வதங்கிய மாங்காயை சேர்த்து நன்கு கலக்கவும்.

    மாங்காய் மசாலாவுடன் கலந்து நன்றாக வதங்கிய பக்குவம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். சிறிது நேரம் ஆனவுடன் அதை ஒரு ஜாடிக்கு மாற்றவும்.

    கேரள ஸ்டைலில் பொரித்த மாங்காய் ஊறுகாய் பரிமாற தயார்.

  • நாவூறும் சுவையில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி!!

    நாவூறும் சுவையில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி!!

    ஊறுகாய் பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். இன்று உடனே செய்யக்கூடிய நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    நெல்லிக்காய் – 10

    மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

    டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1

    டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/4

    வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

    கடுகு   – 1/4 டீஸ்பூன்

    கல் உப்பு     – தேவையான அளவு

    செய்முறை :

    இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி இட்லி அவிப்பது போன்று நெல்லிக்காயை நன்று அவித்து எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரில் போட்டு அவித்தல் அதன் சத்துக்கள் தண்ணீரில் சென்றுவிடும்.

    சற்று நேரம் கழித்து, நெல்லிக்காயை சட்டியில் இருந்து எடுத்து வைக்கவும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினாலே, நெல்லிக்காய் சிறு துண்டுகளாக வந்து விடும். இல்லையென்றால், கத்தியால் நீள துண்டுகளாக்கி, நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும்.

    இப்போது நெல்லிக்காயையும், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு ஆகியவற்றையும் போட்டு, 5 நிமிடங்கள் வதக்கவேண்டும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும்.

    வெறும் கடாயில் வெந்தயத்தையும் கடுகையும் போட்டு இலேசாக வறுத்து எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

    அதே வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு தாளித்த பின் பிசறி வைத்துள்ள நெல்லிக்காயைப் போட்டு வதக்கவும். ஒரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர், வெந்தய, கடுகு பொடியை தூவி நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

    சூப்பரான உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.

  • நாவூறும் சுவையில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

    நாவூறும் சுவையில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?