Tag: நொறுக்கு தீனி

  • நொறுக்கு தீனியாக உப்பு சீடை செய்வது எப்படி?

    சின்ன வயசுல இருந்தே வீட்டில் நிறைய பலகாரங்கள் சாப்பிடுபவர்கள் உண்டு. கடையில் வாங்கும் உப்பு சீடை எனக்கு மிகவும் பிடிக்கும். வீட்டில் செய்யப்படும் முறுக்கு சீடை வாசனை வித்தியாசமானது. அப்படிப்பட்ட சுவையான மல்டி ஸ்பைசி உப்பு சீடை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளப் போகிறோம்.

    தேவையானவை :

    பச்சரிசி – 4 டம்ளர்

    உளுந்தம் பருப்பு – 1/2 டம்ளர்

    கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

    வெண்ணெய் – 100 கிராம்

    உப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்

    மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

    சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

    பெருங்காயத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

    தேங்காய் மூடி – 1

    தண்ணீர் – மாவு பிசையும் அளவு

    சமையல் எண்னெய் – 1/2 கிலோ

    செய்முறை :

    பச்சரிசியை களைந்து தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஊற வைத்த அரிசியை நன்கு வடிய வைத்து, நிழலில் உலர்த்தவும்.

    லேசாக ஈரப்பசையுடன் இருக்கும் உலர்ந்த அரிசியை (பிடித்தால் பிடிக்க வரும், விட்டாலும் உலர்ந்து விடும் பக்குவம்) மிஷினில் மாவாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.

    சலித்த மாவை வெறும் வாணலியில் லேசான சிவப்பு நிறத்தில் வறுத்துக் கொள்ளவும். மீண்டும் சலித்துக்கொள்ளவும்.

    உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்து மிஷினில் மாவாக அரைத்துக் கொண்டு, சலித்து வைத்துக்கொள்ளவும்.

    கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, வடிய வைத்துக் கொள்ளவும்.

    தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடி செய்து கொள்ளவும்.

    அரிசி மாவு, உளுந்து மாவு ஊற வைத்த கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், மிளகு, சீரகம், உப்பு தூள், பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு, வெண்ணெய்யையும் சேர்க்கவேண்டும்.

    சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து பிசையவும். அதிகமாக நீர் விட்டால் ‘மொழுக்’ என்று இருக்கும். ஆகையால் பிசறினாற்போல் இருக்க வேண்டும். அதே சமயம் உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும்.

    பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி ஒரு துணியில் அல்லது பேப்பரில் பரவலாகப் போடவும். எண்ணெய் காயவைத்து ஈரப்பசை கொஞ்சம் குறைந்தவுடன் முதலில் ஓரிரண்டு சீடைகளை போட்டு வெடிக்காமல் இருந்தால் மீதமுள்ள சீடைகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு எடுக்கவும்.

  • நொறுக்கு தீனி மசால் கடலை எப்படி செய்வது?

    நொறுக்கு தீனி மசால் கடலை எப்படி செய்வது?

    மசாலா கடலை ஒரு சிறந்த சிற்றுண்டி. மாலையில் டீ மற்றும் காபியுடன் சாப்பிடலாம். கடையில் வாங்கும் மசாலா கடலை போன்ற சுவையுடன் இதை வீட்டிலேயே தயார் செய்யலாம்.

    தேவையான பொருள்கள் :

    பச்சை நிலக்கட‌லைப் பருப்பு – 200 கிராம்

    கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்

    அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்

    மிளகாய் வற்றல் பொடி – 1/2 டேபிள் ஸ்பூன்

    கரம் மசாலா பொடி – 1/4 டேபிள் ஸ்பூன்

    வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)

    பெருங்காயப் பொடி – 2 சிட்டிகை

    பெருஞ்சீரகம் – 2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை – 3 கீற்று

    மிளகு சீரகப் பொடி – 1/4 டேபிள் ஸ்பூன்

    உப்பு – தேவையான அளவு

    கடலை எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

    செய்முறை :

    நிலக்கடலைப் பருப்பில் தூசி, கல் மற்றும் சொத்தைப் பருப்பு ஆகியவற்றை நீக்கி விட வேண்டும்.

    வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி நன்கு நசுக்கிக் கொள்ளவும்.

    கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

    இரண்டு கீற்று உருவிய கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஓரு கீற்று கறிவேப்பிலையை முழுதாக வைத்திருக்கவும்.

    பெருஞ்சீரகத்தை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும்.

    வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் வற்றல் பொடி, மிளகு சீரகப் பொடி, கரம் மசாலா பொடி, நறுக்கிய கறிவேப்பிலை, பெருங்காயப் பொடி, நசுக்கிய வெள்ளைப் பூண்டு, பெருஞ்சீரகம் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

    எல்லாப் பொருட்களையும் நன்கு கலந்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து படத்தில் உள்ளபடி பாதி கூழ்ம நிலைக்குப் பிசையவும்.

    அதனுடன் சுத்தம் செய்த பச்சை நிலக்கடலையைச் சேர்க்கவும்.

    எல்லா கடலையிலும் மாவு ஒட்டும்படி மெதுவாக கையால் கிளறி ஒரு சேரப் பிசையவும்.

    அடிப்பாகம் சமமாக உள்ள வாணலியை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் சேர்த்து காய விடவும். குழியான வாணலியைப் பயன்படுத்தினால் கடலை தனித்தனியாக இல்லாமல் ஒரே இடத்தில் குவிந்து விடும்.

    எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும் போது, பிசைந்த கடலையை எடுத்து ஒவ்வொன்றாக எண்ணெயில் உதிர்த்து விடவும்.

    எண்ணெயில் போடும் போது கவனமாகப் போடவும். இல்லையென்றால் கரண்டியில் கடலையை உதிர்த்து விட்டு கரண்டி மூலம் எண்ணெயில் சேர்க்கலாம்.

    அடுப்பில் தீயை மிதமாக வைக்க வேண்டும். நிலக்கடலையில் எண்ணெய் குமிழி அடங்கியதும் வெளியே எடுத்து, எண்ணெயை வடித்து பாத்திரத்தில் சேர்க்கவும்.

    எல்லா கடலையையும் பொரித்ததும், கடைசியாக உருவி முழுதாக வைத்துள்ள கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து எடுத்து வறுத்த நிலக்கடலையில் சேர்க்கவும்.

    சுவையான மசாலா கடலை தயார்.

    வறுத்தவுடன் சுவைத்தால் உள்ளே கடலை வறுபடாதது போல் தோன்றும். ஆதலால் சற்று நேரம் கழித்து லேசாக ஆறிய பின் சுவைக்கவும்.

    இதையும் செய்யலாமே!: ரவை பணியாரம் செய்வது எப்படி!!

  • சுவையான நொறுக்கு தீனி காரா பூந்தி எப்படி செய்வது?

    சுவையான நொறுக்கு தீனி காரா பூந்தி எப்படி செய்வது?

    காரா பூந்தி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாகும். குறைந்த நேரத்தில் வீட்டிலேயே சுவையாக தயாரிக்கலாம்.

    தேவையான பொருள்கள்:

    கடலை மாவு – 1/4 கிலோ

    முந்திரி பருப்பு – 50 கிராம்

    பச்சரிசி மாவு – 50 கிராம்

    வற்றல் தூள் ,உப்பு தூள்  – தேவையான அளவு

    எண்ணெய் – தேவையான அளவு (சுடுவதற்கு )

    செய்முறை: 

    இரண்டு மாவையும் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்எண்ணெயின் மேல் பெரிய கண்கரண்டியை பிடித்து கொண்டு ஒரு கரண்டி மாவு எடுத்து அதில் ஊற்றி வேகமாக தேய்த்து விடவும்.மாவு மேலே மேலேவிழாமல்  கண்கரண்டியை எடுத்து விட வேண்டும்.

    காரா பூந்தி எண்ணெய்க்குமேலே மிதந்து வந்ததும், அரித்து எடுத்து கண் தட்டில் வடிய வைக்கவும். இதே போல் மீதி மாவையும் சுட்டு எடுக்கவும்.

    வற்றல் தூள், உப்பு தூள் கலந்து ஒருதேக்கரண்டி நெய்யில் பாதியாக ஒடித்த முந்திரி பருப்பு, கருவேப்பில்லை வறுத்து போடவும். கரைத்து வைத்துள்ள மாவில் தேவையான  வற்றல் தூள், உப்பு தூள் கலந்தும் மேலே கூறியப்படி சுடலாம்.

    இதையும் செய்யலாமே!: மைதா மாவு பூந்தி செய்வது எப்படி!