Tag: பூந்தி செய்வது எப்படி

  • சுவையான நொறுக்கு தீனி காரா பூந்தி எப்படி செய்வது?

    சுவையான நொறுக்கு தீனி காரா பூந்தி எப்படி செய்வது?

    காரா பூந்தி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாகும். குறைந்த நேரத்தில் வீட்டிலேயே சுவையாக தயாரிக்கலாம்.

    தேவையான பொருள்கள்:

    கடலை மாவு – 1/4 கிலோ

    முந்திரி பருப்பு – 50 கிராம்

    பச்சரிசி மாவு – 50 கிராம்

    வற்றல் தூள் ,உப்பு தூள்  – தேவையான அளவு

    எண்ணெய் – தேவையான அளவு (சுடுவதற்கு )

    செய்முறை: 

    இரண்டு மாவையும் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்எண்ணெயின் மேல் பெரிய கண்கரண்டியை பிடித்து கொண்டு ஒரு கரண்டி மாவு எடுத்து அதில் ஊற்றி வேகமாக தேய்த்து விடவும்.மாவு மேலே மேலேவிழாமல்  கண்கரண்டியை எடுத்து விட வேண்டும்.

    காரா பூந்தி எண்ணெய்க்குமேலே மிதந்து வந்ததும், அரித்து எடுத்து கண் தட்டில் வடிய வைக்கவும். இதே போல் மீதி மாவையும் சுட்டு எடுக்கவும்.

    வற்றல் தூள், உப்பு தூள் கலந்து ஒருதேக்கரண்டி நெய்யில் பாதியாக ஒடித்த முந்திரி பருப்பு, கருவேப்பில்லை வறுத்து போடவும். கரைத்து வைத்துள்ள மாவில் தேவையான  வற்றல் தூள், உப்பு தூள் கலந்தும் மேலே கூறியப்படி சுடலாம்.

    இதையும் செய்யலாமே!: மைதா மாவு பூந்தி செய்வது எப்படி!

  • மைதா மாவு பூந்தி செய்து சாப்பிடலாமா?

    மைதா மாவு பூந்தி செய்து சாப்பிடலாமா?

    கல்யாணம் அல்லது ஸ்வீட் ஸ்டால்களில் கிடைக்கும் இனிப்பு பூந்தி ரெசிபி. எளிமையான பொருட்கள் இன்னும் சாப்பிடக்கூடிய கற்பூரம், ரோஜா வாசனையுடன் மிகவும் சுவையாக, தெய்வீக வாசனை!

    தேவையான பொருள்கள்:

    மைதா மாவு       – 1/2 லிட்டர்

    உளுந்த மாவு      – 200 மி.லி.

    ரீபைண்ட் ஆயில்  – சுடுவதற்கு

    கலர் பொடிகள்    – 4 அல்லது 5 பிரியப்பட்ட கலர் பொடிகள்

    பச்சரிசி மாவு      – 200 மி.லி.

    சீனி                 – 1 கிலோ

    சோடா உப்பு       – 1 சிட்டிகை

    செய்முறை:

    மூன்று மாவையும் கலந்து சோடா உப்பு சேர்த்து தோசை மாவு போல் தண்ணிர் ஊற்றி கரைத்து கொள்ளவும். சீனியை பிசுபிசுப்பாக பாகு தயாரித்துக் கொள்ளவும்.

    தயார் செய்து வைத்திருக்கும் மாவை ஐந்து பாத்திரத்தில் பிரித்து வைத்து ஒரு  தவிர மற்ற நான்கு பாத்திரத்திலிருக்கும் மாவிற்கும் வெவ்வேறு கலர் கலந்து  தனித்தனியாக மேலே பூந்திக்கு சொன்னது போல் சுட்டு சீனிப்பாகில் போட்டு எடுத்து எல்லாப் பூந்திகளையும் கலந்து உபயோகிக்கவும்.

    இந்த பூந்தி கலர், கலாராக பார்ப்பதற்கு அழகாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.பாயாசத்திற்கு போட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.