Tag: முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி

  • மாலை நேர ஸ்நாக்ஸ் வெங்காய பக்கோடா செய்வது எப்படி?

    பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாவில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பான்னீர் பக்கோடா, உருளைக்கிழங்கு பக்கோடா, முந்திரிப் பருப்பு பக்கோடா, முட்டைக்கோஸ் பக்கோடா என்பன மிகவும் பிரபலமானவை.

    இன்று இங்கு காண்பது வெங்காய பக்கோடா. மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடா சாப்பிடுவது பெரும்பாலானோருக்கு விருப்பமான தேர்வாகும். இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றிய இவைகள், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் படிப்படியாகப் பிரபலமடைந்துள்ளது.

    இங்கிலாந்தில் உள்ள இந்தியர்கள் நடத்தும் உணவகங்களில் பகோராக்கள் பிரபலமான துரித உணவுப் பொருளாகும். தமிழ்நாட்டில் பக்கோடா என்றும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பஜ்ஜி என்றும், மகாராஷ்டிராவில் பகோராஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

    தேவையான பொருட்கள்:

    ½ கப் கடலை மாவு

    ¼ கப் அரிசி மாவு

    3 பெரிய வெங்காயம்

    2 பச்சை மிளகாய்

    1 மேஜைக்கரண்டி சோம்பு

    1 சிட்டிகை பெருங்காய தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு கொத்தமல்லி

    சிறிதளவு கருவேப்பிலை

    செய்முறை:

    முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்து கொள்ளவும்.

    அடுத்த ஒரு bowl லை எடுத்து அதில் நாம் நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அதை கைகளின் மூலம் நன்கு பிரித்து விடவும்.

    பின்பு அதில் நம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், சோம்பு, பெருங்காய தூள், தேவையான அளவு உப்பு, ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை போட்டு அதை நன்கு கிளறி விடவும்.

    பின்னர் அதில் கடலை மாவு மற்றும் அரிசி மாவை கொட்டி அதை நன்கு கலந்து விடவும். (இதில் நாம் தண்ணீர் எதுவும் சேர்த்து விட கூடாது.)

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பக்கோடாவை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் நாம் கலந்து வைத்திருக்கும் கலவையில் சிறிதளவு தண்ணீரை தெளித்து அதை கடாயின் அளவிற்கேற்ப எடுத்து எண்ணெய்யில் உதிர்த்து விடவும். (மாவில் தண்ணீரை தெளித்து தான் விடவேண்டும் ஊற்றினால் அது பஜ்ஜி மாவு போல் ஆகி விடும்.)

    பக்கோடா கட்டியாக இருப்பதை விரும்புவார்கள் அதை சிறு சிறு கட்டிகளாக எண்ணெய்யில் போடவும்.

    பின்பு அது ஒரு புறம் வெந்ததும் அதை ஒரு கரண்டியின் மூலம் மறு புறம் திருப்பி விட்டு அது நன்கு பொன்னிறமானதும் அதை கரண்டியில் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இவ்வாறே மீதமுள்ள மாவையும் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து அதை சுட சுட பரிமாறவும். (தேவைப்பட்டால் மாவை எடுத்து எண்ணெய்யில் போடுவதற்கு முன் சிறிதளவு தண்ணீரை தெளித்து கொள்ளவும்.)

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் நன்கு மொறு மொறுப்பாக இருக்கும் வெங்காய பக்கோடா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • சுவையான முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி?

    முட்டைக்கோஸ் பலவித நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இதில் நார்சத்து அதிகம் உள்ளது. முட்டைகோஸ் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. மேலும் இது சரும ஆரோக்கியத்தை பராமரிக்க பயன்படுகிறது. முட்டைகோஸ் பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    நீளமாக நறுக்கிய முட்டைகோஸ்- 1 கப்

    கடலை மாவு – 1 கப்

    அரிசி மாவு – 1/4 கப்

    மிளகாய் துாள்- 1/2 டீ ஸ்பூன்

    பெருங்காயம் – 1 சிட்டிகை

    ஓமம் – 1 சிட்டிகை

    சீரகம் – 1 டீ ஸ்பூன்

    சோம்பு – 1 டீ ஸ்பூன்

    கறிவேப்பிலை  -சிறிது

    உப்பு – 1 சிட்டிகை

    கடலை எண்ணெய்  – 200 மிலி

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில், சிறிதாக நறுக்கிய முட்டைக்கோஸ், சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொஞ்சம் இஞ்சி சேர்க்கவும்.

    கடலை மாவுடன் வெங்காயம், முட்டைக்கோஸ், நறுக்கிய கொத்தமல்லி இலைகள், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், பெருங்காயம், ஓமம், சீரகம், சோம்பு, கறிவேப்பிலை சேர்க்கவும்.

    பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

    Delicious Cabbage Baguette

    சிறிது நேரம் கழித்து ஒரு கடாயில் எண்ணெய்யை  சூடாக்கவும். மிதமான தீயில் அந்தக் கலவையை சிறிது சிறிதாக பொரித்து எடுக்கவும்.

    இப்பொழுது சுவையான முட்டைக்கோஸ் பக்கோடா ரெடி.

    பின்னர் முட்டைக்கோஸ் பக்கோடாவை  தக்காளி சட்னி அல்லது புதினா சட்னியுடன் சூடாக பரிமாறவும்.