Tag: வாழைக்காய் சிப்ஸ் செய்வது எப்படி

  • மிகவும் சுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி?

    பாரம்பரிய செட்டிநாட்டு உணவுகள் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாகும். செட்டிநாட்டு உணவு வகைகளுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படியென்றால் இங்கு நாம் பார்ப்பது செட்டிநாடு வாழைக்காய் வறுவல்.

    இது செட்டிநாடு வாழை மீன் வறுவல் என்றும் அழைக்கப்படுகிறது.

    தமிழகத்தின் காரைக்குடி மற்றும் சிவகங்கை பகுதிகளில் நடைபெறும் திருமண விழாக்களில் இவை கட்டாயம் இருக்க வேண்டும். செட்டிநாட்டு வாழைக்காய் பொரியல் தயிர் சாதம் மற்றும் ரசம் சாதத்திற்கு அருமையான சைட் டிஷ் ஆகும். இவை தனியாகவும் மாலை நேர சிற்றுண்டியாகவும் உண்ணப்படுகின்றன.

    இவை பிரஞ்சு பொரியல்களைப் போலவே வெளியில் மிருதுவாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும், மேலும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்:

    2 வாழைக்காய்

    1 பெரிய வெங்காயம்

    1 தக்காளி

    1/2 எலுமிச்சம் பழம்

    1/2 மேஜைக்கரண்டி மல்லி தூள்

    1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    6 பல் பூண்டு

    2 துண்டு இஞ்சி

    1 மேஜைக்கரண்டி சோம்பு தூள்

    1/2 மேஜைக்கரண்டி சோம்பு

    1 துண்டு பட்டை

    சிறிதளவு கருவேப்பிலை

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு நெய்

    செய்முறை:

    முதலில் வாழைக்காயை நன்கு கழுவி தோலை சீவி அவரவர் விருப்பத்திற்கேற்ற வடிவில் நறுக்கி, தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வாழைக்காயை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.

    பின்பு அதில் சிறிதளவு உப்பு, கால் மேஜைக்கரண்டி அளவு மஞ்சள் தூள், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காயையும் போட்டு தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது அதை அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    பின்னர் தண்ணீரை வடிகட்டி விட்டு நாம் வேக வைத்த வாழைக்காய் துண்டுகளை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து அதை ஆற விடவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து அதனுடன் சோம்பு தூள், தேவையான அளவு உப்பு, நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு எலுமிச்சை சாறை ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    அடுத்து அந்த மசாலாவில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் வாழைக்காய் துண்டுகளை போட்டு நன்கு பிரட்டி அதை சுமார் 10 லிருந்து 20 நிமிடம் வரை ஊற விடவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வாழைக்காயை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் கடாயின் அளவிற்கேற்ப நாம் ஊற வைத்திருக்கும் வாழைக்காயை 2 முறையாகவோ அல்லது 3 முறையாகவோ போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு நன்கு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து அதை சூடாக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் பட்டை மற்றும் அரை மேஜைக்கரண்டி அளவு சோம்பை சேர்த்து வறுக்கவும்.

    சோம்பு வறுபட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் கருவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சிறிது வதங்கியதும் அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் வாழைக்காயை போட்டு பக்குவமாக நன்கு கிளறி விட்டு அதை சுமார் 5 நிமிடம் வரை அவ்வப்போது கிளறி விட்டு வேக விடவும்.

    5 நிமிடத்திற்குப் பிறகு அடுப்பை அணைத்து விட்டு வாழைக்காய் வறுவலை சுட சுட எடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் அறுசுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் தயார்.

  • வாழைக்காய் சிப்ஸ் செய்வது எப்படி?

    பொதுவாக, சிப்ஸ்கலுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் சிப்ஸ்கலின் மவுஸ் தனித்துவம் வாய்ந்தது என்றால் அது மிகையாகாது. எனவே இன்று நாம் இங்கு காண்பது பலவிதமான சிப்ஸ்களில் வாழைக்காய் சிப்ஸ் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சிப்களில் ஒன்றாகும்.

    வாழைக்காய் சிப்ஸ் பொதுவாக மாலை நேர சிற்றுண்டியாகவோ அல்லது கஞ்சிக்கு பக்க உணவாகவோ உண்ணப்படுகிறது. வாழைப்பழ சிப்ஸ் வெவ்வேறு பகுதிகளில் உள்ளவர்களால் வித்தியாசமாக செய்து சுவைக்கப்படுகிறது. உதாரணமாக, இவை தமிழ்நாட்டில் ஒரு முறையிலும், தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் முற்றிலும் வேறுபட்ட வகையிலும் செய்யப்படுகின்றன.

    தமிழ்நாட்டில் வாழை சிப்ஸ் என்று அழைக்கப்படும் இவை ஈக்வடார், தாய்லாந்து மற்றும் பெருவில் சிபிலிஸ் என்றும், இந்தோனேசியாவில் கிரிபிக் பிசாங் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த நாடுகளில் வாழைக்காய் சிப்ஸும் மிகவும் பிரபலம்.

    இப்போது வாழைக்காய் சிப்ஸ் தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் எளிய செய்முறையை கீழே பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    2 வாழைக்காய்

    1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    1/4 மேஜைக்கரண்டி மிளகுத் தூள்

    1/4 மேஜைக்கரண்டி சீரக தூள்

    ஒரு கை அளவு கருவேப்பிலை

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    செய்முறை:

    முதலில் 2 வாழைக்காயை எடுத்து தோலை சீவி அதை தண்ணீரில் போட்டு அதனுடன் அரை மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து சுமார் அரை மணி நேரத்தில் இருந்து 40 நிமிடம் வரை ஊற விடவும்.

    40 நிமிடத்திற்கு பிறகு வாழைக்காயை எடுத்து அதை ரவுண்டாக சீவி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். (வாழைக்காயை அப்படியே எண்ணெயின் மேலே வைத்து சீவி விட பழக்கப்பட்டவர்கள் நேரடியாகவும் வாழைக்காயை சீவி விடலாம்).

    அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வாழைக்காயை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சூடாக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் சீவி வைத்திருக்கும் வாழைக்காயை கடாயின் அளவிற்கேற்ப பக்குவமாக எண்ணெயில் போடவும்.

    பின்பு ஒரு கரண்டியின் மூலம் அதை நன்கு திருப்பி விட்டு கொண்டே இருக்கவும் அப்போது தான் அனைத்து புறங்களிலும் அது நன்றாக வெந்து வரும்.

    வாழைக்காய் சிப்ஸ் நன்கு வெந்ததும் அதை கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை வடித்து எடுத்து ஒரு bowl ல் போடவும்.

    மீதமுள்ள வாழைக்காயை போட்டு பொரித்து எடுப்பதற்கு எண்ணெய்யை, மீண்டும் மிதமான சூடான பதத்திற்கு கொண்டு வருவதற்கு சிறிது நேரம் எண்ணெய்யை சூடாக்கவும்.

    எண்ணெய் சுடுவதற்குல் நாம் பொரித்து எடுத்து வைத்திருக்கும் சிப்ஸ் சூடாக இருக்கும் போதே அதில் சீரக தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    மொத்தமாக பொரித்து எடுத்த பின் மசாலாவை அதில் சேர்ப்பதை தவிர்க்கவும் ஏனென்றால் சூடாக இருக்கும் போதே அதில் மசாலாக்களை போட்டால் தான் மசாலா நன்கு சிப்ஸ்சோடு சேரும்.

    அடுத்து எண்ணெய் சூடான பதத்தில் இருப்பதை உறுதி செய்த பின்னர் மீதமுள்ள வாழைக்காய்களை நாம் முன்பு செய்தது போன்ற எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து மசாலாக்களை தூவி நன்கு கலந்து விடவும்.

    சிப்ஸுகளை பொரித்து எடுத்த பின்பு கருவேப்பிலையை சூடாக இருக்கும் எண்ணெயில் போட்டு அடுப்பை உடனடியாக அணைத்து விட்டு கருவேப்பிலை நிறம் மாறுவதற்குல் அதை எடுத்து சிப்ஸ் உடன் சேர்த்து நன்கு கலந்து விட்டு சிப்ஸை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான, சுவையான மற்றும் மொறு மொறுப்பான வாழைக்காய் சிப்ஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.