இன்றைய இயந்திர உலகில் இயங்கும் நாம், உடலுக்கு சக்தி தரும் காலை உணவை சாப்பிட மறந்து விடுகிறோம். நாள் முழுவதும் உடலை உற்சாகமாக வைத்திருக்க மதிய உணவை விட காலை உணவு மிகவும் சிறந்தது. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள். பள்ளி, கல்லூரிக்கு சென்றாலும் காலை உணவாக சிறிது சாப்பிட வேண்டும். வீட்டில் உள்ள தாய்மார்களும் தினமும் ஒரு காலை உணவை வேகமாக இட்லி, தோசை, உப்புமா போன்றவற்றை சமைக்க வேண்டும். ஒரே மாதிரியான உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் சலிப்பு ஏற்படும். இதைத் தவிர்க்க வெறும் 5 நிமிடங்களில் கேப்பை மாவில் செய்யப்பட்ட கேப்பை ரொட்டியை செய்யலாம்.…