Tag: மட்டன் குஸ்கா செய்வது எப்படி

  • நாவில் கரையும் சுவையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் கிராமத்து ஸ்டைல் மட்டன் சுக்கா!!

    கட்டுரை

    ஞாயிற்றுக்கிழமை என்றாலே நம் நினைவுக்கு வருவது சுடச்சுட மட்டன் குழம்பும், பிரியாணியும் தான். ஆனால், மட்டனில் செய்யப்படும் ஸ்பெஷல் வெரைட்டிகளில் அனைவரின் ஃபேவரிட் என்றால் அது மட்டன் சுக்கா தான்! மசாலாக்கள் கறி துண்டுகளுடன் நன்கு ஒட்டிக்கொண்டு, காரசாரமாக இருக்கும் இந்த மட்டன் சுக்காவைச் சாதம், ரசம் சாதம் அல்லது இட்லி, தோசையுடன் சேர்த்துச் சாப்பிட்டால் அதன் சுவையே தனி தான்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு வாங்கி சாப்பிடும் வகையில், நமது பாரம்பரிய முறையில் அருமையான மட்டன் சுக்கா செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம். வாருங்கள், இதன் செய்முறையைத் தெரிந்து கொள்வோம்.

    தேவையான பொருட்கள்

    • மட்டன் – 500 கிராம் (சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்தது)
    • சின்ன வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது – சுக்காவுக்கு சின்ன வெங்காயம் சேர்த்தால் சுவை அதிகம்)
    • இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
    • தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
    • பச்சை மிளகாய் – 2 (கீறியது)
    • மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
    • மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
    • மல்லித்தூள் (தனியா தூள்) – 1.5 தேக்கரண்டி
    • மிளகு சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
    • கரம் மசாலா – அரை தேக்கரண்டி
    • சோம்பு (பெரிய சீரகம்) – 1 தேக்கரண்டி
    • பட்டை, கிராம்பு, ஏலக்காய் – சிறிதளவு
    • கறிவேப்பிலை – இரண்டு கைப்பிடி (தாராளமாகச் சேர்க்கவும்)
    • நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் – 3 மேசைக் கரண்டி
    • உப்பு – தேவையான அளவு
    • கொத்தமல்லி தழை – சிறிதளவு

    செய்முறை விளக்கம்

    1. மட்டனை வேகவைத்தல்: முதலில் குக்கரில் சுத்தம் செய்த மட்டன், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 5 முதல் 6 விசில் விட்டு மட்டன் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
    2. மசாலா தாளித்தல்: அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
    3. இஞ்சி பூண்டு மற்றும் தக்காளி சேர்ப்பு: வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, தக்காளி குழைந்து வரும் வரை நன்றாக வதக்கவும்.
    4. மசாலா பொடிகள் சேர்ப்பு: இப்போது மிளகாய்த் தூள், மல்லித்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் குறைந்த தீயில் வதக்கவும் (மசாலா கருகாமல் பார்த்துக் கொள்ளவும்).
    5. சுக்கா பதம் கொண்டு வருதல்: வேகவைத்து வைத்துள்ள மட்டனைத் தண்ணீரோடு சேர்த்து இந்தக் கலவையில் ஊற்றவும். மசாலா மட்டனுடன் சேர்ந்து கெட்டியாக வரும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
    6. இறுதிக் கட்டம்: தண்ணீர் முற்றிலும் வற்றி மட்டன் சுக்கா பதம் வரும்போது, மிளகு சீரகத்தூள் மற்றும் நறுக்கிய மல்லித்தழையைத் தூவி நன்றாகப் பிரட்டி இறக்கவும்.

    இப்போது சூடான, மணக்க மணக்கக் காரசாரமான கிராமத்து ஸ்டைல் மட்டன் சுக்கா தயார்! இந்த வீக்என்ட் விருந்துக்கு இதைச் செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்!

    அசைவ பிரியர்களுக்கான செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்வது எப்படி?

  • மட்டன் குழம்பு வைப்பது எப்படி?

    அசைவம் இருந்தாலே போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறும். அசைவத்தில் உள்ள அனைத்தும் எல்லோருக்கும் விரும்பத்தக்கவை என்று அவசியமில்லை.

    சிலருக்கு சிக்கன், மீன், இறால், நண்டு போன்றவை பிடிக்கும்.ஆனால் சிலருக்கு மட்டன் பிடிக்காது, சிலருக்கு மட்டன் கிரேவி பிடிக்கும். அப்படி விரும்பி சாப்பிடுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த பேக்கேஜில் மட்டன் கிரேவியை மிகவும் சுவையாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மட்டன் – தேவையான அளவு

    மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள் தூள் – 3 சிட்டிகை

    இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு – சிறிதளவு

    எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

    பட்டை – 3

    ஏலக்காய் – 3

    கிராம்பு – 4

    ஸ்டார் பூ – 1

    மல்லி – 3 டேபிள் ஸ்பூன்

    மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

    பச்சை மிளகாய் – 2

    தோல் சீவிய இஞ்சி – 1

    தோல் உரித்த பூண்டு – 10

    நறுக்கிய வெங்காயம் – 1

    சீரகம் – அரை டேபிள் ஸ்பூன்

    பிரியாணி இலை – 2

    நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் – 2

    சிகப்பு மிளகாய் – 3

    நறுக்கிய தக்காளி – 1

    தண்ணீர் – தேவையான அளவு

    செய்முறை

    மட்டன் குழம்பு வைப்பது எப்படி:

    ஒரு பௌலில் தேவையான அளவு மட்டன் எடுத்து அதை சுத்தபடுத்தி கொள்ளவும்.

    பின்னர் அதில் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் 3 சிட்டிகை, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன், உப்பு சிறிதளவு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இதை ஒரு 10 நிமிடம் அப்படியே ஊறவைக்கவும்.

    பிறகு ஒரு மிக்சி ஜாரில் பட்டை 3, ஏலக்காய் 3, கிராம்பு 4, ஸ்டார் பூ 1, மல்லி 3 டேபிள் ஸ்பூன், மிளகு 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பொடியாக்கி கொள்ளவும்.

    பின்னர் அரைத்து வைத்த பொடியுடன் பச்சை மிளகாய் 2, தோல் சீவிய இஞ்சி 1, தோல் உரித்த பூண்டு 10, நறுக்கிய வெங்காயம் 1 மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடான பிறகு சீரகம் அரை டேபிள் ஸ்பூன், பிரியாணி இலை 2, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் 2, சிகப்பு மிளகாய் 3 சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கிய பின்பு நறுக்கிய தக்காளி 1 சேர்த்து வதக்கவும். வதக்கிய பின்பு மிக்ஸ் செய்து வைத்திருக்கும் ஆட்டுகறியை சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்.

    10 நிமிடம் கழித்து அரைத்து வைத்திருக்கும் பேஸ்டை சேர்த்து நன்றாக கிளறவும். பின் அதில் தேவையான அளவு உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து 40 நிமிடம் வேகவைக்கவும்.

    40 நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான ஆட்டுக்கறி குழம்பு தயார்.

  • அசைவ பிரியர்களுக்கான செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்வது எப்படி?

    மட்டன் சுக்கா தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான உணவு. அசைவ பிரியர்கள் மத்தியில் இதற்கு தனி வரவேற்பு உண்டு. குறிப்பாக தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இவை இல்லாத ஹோட்டல்களும், கையேந்தி சாப்பாடு கடைகளும் கிடைப்பது மிகவும் அரிது.

    மட்டன் சுக்காவை சாதத்தில் சேர்த்து உண்பதற்கும், சப்பாத்தி, நான்க்கு சைடிஃஷ் ஆக உண்பதற்கும் அருமையாக இருக்கும். இதைப் பற்றிய பெரிய விஷயம் என்னவென்றால், அதை உருவாக்க அதிக நேரம் எடுக்காது மற்றும் சிக்கலான செய்முறை எதுவும் இல்லை.

    சமைக்கத் தெரியாதவர்களும் இதை மிக எளிதாக செய்யலாம். இதற்கு தேவையான மசாலாவை தயார் செய்தால் மிக எளிதாக செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    1/2 kg மட்டன்

    10 to 15 சின்ன வெங்காயம்

    3 பல் பூண்டு

    இஞ்சி  1 துண்டு

    மிளகு  1 மேஜைக்கரண்டி

    சீரகம்  1 மேஜைக்கரண்டி

    மல்லி  1 மேஜைக்கரண்டி

    1/2 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    3 காஞ்ச மிளகாய்

    சிறிதளவு கொத்தமல்லி

    சிறிதளவு கருவேப்பிலை

    மிளகாய் தூள்  தேவையான அளவு

    எண்ணெய்  தேவையான அளவு

    உப்பு  தேவையான அளவு

    செய்முறை

    முதலில் மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்து, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு அதனுடன் மஞ்சள் தூளையும் சேர்த்து வதக்கவும்.

    பின்பு அதில் நாம் கழுவி வைத்திருக்கும் மட்டனை சேர்த்து அது நன்கு இஞ்சி பூண்டு பேஸ்டுடன் ஒட்டுமாறு சுமார் ஒரு நிமிடம் வரை கிளறி விட்ட பின் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு குக்கரில் மூடி போட்டு மட்டனை சுமார் 5 நிமிடம் வரை வேக விடவும்.

    5 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து பார்த்தால் மட்டன் நன்றாக தண்ணீர் விட்டு இருக்கும் அதனுடன் நாம் மேலும் கால் கப் அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் மூடி போட்டு அதை சுமார் 15 நிமிடம் வரை வேக விடவும்.

    நாம் மீண்டும் மட்டனை வேக வைக்க போவதால் மட்டன் 90 விழுக்காடு வெந்தால் போதும்.

    மட்டன் வேகுவதற்குள் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் மிளகு, சீரகம், மல்லி, மற்றும் காஞ்ச மிளகாயை போட்டு அது நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.

    பின்பு அதை சிறிது நேரம் ஆற விட்ட பின் அப்படியே ஒரு மிக்ஸி ஜார்க்கு மாற்றி நன்கு அரைத்து கொள்ளவும்.

    15 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அனைத்து விட்டு குக்கரின் மூடியை திறந்து பார்த்தால் மட்டன் 90 விழுக்காடு வெந்து தண்ணீரும் சரியாக இருக்கும். (ஒரு வேளை தண்ணீர் அதிகமாக இருந்தால் அதை தனியாக எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.)

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் சிறிதளவு கருவேப்பிலை, ஒரு காஞ்ச மிளகாய், மற்றும் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் மட்டனை சேர்த்து நன்கு கிளறி விட்டு அதை வேக விடவும்.

    தண்ணீர் அதிகமாக இருந்து அதை தனியாக பாத்திரத்தில் எடுத்து வைத்திருந்தால் இப்பொழுது இதில் சேர்த்து கொள்ளவும்.

    பின்பு அதில் கரம் மசாலா மற்றும் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை தூவி நன்கு கிளறி விட்டு மூடி போட்டு அடுப்பை முற்றிலுமாக குறைத்து வைத்து அதை சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை வேக விடவும்.

    10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • வீட்டிலேயே வெள்ளை குஸ்கா செய்வது எப்படி!!

    நாம் அனைவரும் குஸ்காவை விரும்புவோம். அசைவ பிரியர்கள் கூட இந்த குஸ்காவை விரும்பி சாப்பிடுவார்கள்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் White Rice குஸ்காவை வீட்டிலேயே செய்யலாம்.

    அந்த வகையில் இன்று இந்த ரெசிபி பதிவின் மூலம் பிரியாணியின் சுவையுடன் வெள்ளை குஸ்கா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்..!

    தேவையான பொருட்கள்:

    அரிசி – 300 கிராம்

    தக்காளி – 2

    பெரிய வெங்காயம் – 3

    பச்சை மிளகாய் – 5

    நெய் – 2 ஸ்பூன்

    இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்

    புதினா – 1 கைப்பிடி அளவு

    கொத்தமல்லி – 3 கொத்து

    கறிவேப்பில்லை – 1 கொத்து

    பட்டை – 2

    கிராம்பு – 2

    ஏலக்காய் – 2

    லவங்கம் – 2

    தண்ணீர் – தேவையான அளவு

    எண்ணெய் – தேவையான அளவு

    உப்பு – தேவையான அளவு

    எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கவும்.

    முதலில் குஸ்காவை செய்ய தேவையான அளவு பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்.

    பிறகு அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, இலவங்கப்பட்டை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் கறிவேப்பிலை, புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
    வெங்காயம், தக்காளி நன்கு வதங்கிய பின் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

    பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
    அடுத்து நாம் அரிசி அளவிடும் கிளாஸில் அதே அளவில் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

    அதாவது, 1 கிளாஸ் அரிசியை எடுத்துக் கொண்டால், அதே கிளாஸில் 2 முறை தண்ணீர் சேர்க்கவும்.

    அரிசியைக் கழுவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்கவும்.
    தண்ணீர் சேர்த்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் ஊறவைத்த அரிசியைச் சேர்க்கவும். பின்னர் கடாயை 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

    10 நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணீர் நன்கு வற்றியபின், நன்கு கிளறவும்.

    பிறகு அடுப்பை குறைத்து 10 முதல் 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு அதில் நெய் மற்றும் கொத்தமல்லி சேர்க்கவும்.

    அவ்வளவு தான்!! இந்த சுவையுடன் உங்கள் வீட்டிலேயே வெள்ளை குஸ்காவை செய்து பாருங்கள்.

  • வீட்டிலேயே வெள்ளை குஸ்கா செய்வது எப்படி?

    நாம் அனைவரும் குஸ்காவை விரும்புவோம். அசைவ பிரியர்கள் கூட இந்த குஸ்காவை விரும்பி சாப்பிடுவார்கள்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் White Rice குஸ்காவை வீட்டிலேயே செய்யலாம்.

    அந்த வகையில் இன்று இந்த ரெசிபி பதிவின் மூலம் பிரியாணியின் சுவையுடன் வெள்ளை குஸ்கா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்..!

    தேவையான பொருட்கள்:

    அரிசி – 300 கிராம்

    தக்காளி – 2

    பெரிய வெங்காயம் – 3

    பச்சை மிளகாய் – 5

    நெய் – 2 ஸ்பூன்

    இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்

    புதினா – 1 கைப்பிடி அளவு

    கொத்தமல்லி – 3 கொத்து

    கறிவேப்பில்லை – 1 கொத்து

    பட்டை – 2

    கிராம்பு – 2

    ஏலக்காய் – 2

    லவங்கம் – 2

    தண்ணீர் – தேவையான அளவு

    எண்ணெய் – தேவையான அளவு

    உப்பு – தேவையான அளவு

    எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கவும்.

    முதலில் குஸ்காவை செய்ய தேவையான அளவு பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்.

    பிறகு அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, இலவங்கப்பட்டை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் கறிவேப்பிலை, புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
    வெங்காயம், தக்காளி நன்கு வதங்கிய பின் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

    பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
    அடுத்து நாம் அரிசி அளவிடும் கிளாஸில் அதே அளவில் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

    அதாவது, 1 கிளாஸ் அரிசியை எடுத்துக் கொண்டால், அதே கிளாஸில் 2 முறை தண்ணீர் சேர்க்கவும்.

    அரிசியைக் கழுவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்கவும்.
    தண்ணீர் சேர்த்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் ஊறவைத்த அரிசியைச் சேர்க்கவும். பின்னர் கடாயை 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

    10 நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணீர் நன்கு வற்றியபின், நன்கு கிளறவும்.

    பிறகு அடுப்பை குறைத்து 10 முதல் 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு அதில் நெய் மற்றும் கொத்தமல்லி சேர்க்கவும்.

    அவ்வளவு தான்!! இந்த சுவையுடன் உங்கள் வீட்டிலேயே வெள்ளை குஸ்காவை செய்து பாருங்கள்.