Tag: முட்டை தோசை செய்வது எப்படி

  • முட்டை தோசை செய்வது எப்படி?

    வீட்டில் தோசை செய்ய திட்டமிடுகிறீர்களா? ஆனால் அதற்கு சைட் டிஷ் செய்ய பிடிக்கவில்லையா? எனவே உங்கள் வீட்டில் முட்டை இருக்கிறதா? அந்த முட்டையில் முட்டை தோசை செய்து சுவையாக சாப்பிடலாம். இந்த முட்டை தோசையை இரண்டு விதமாக செய்யலாம். இரண்டுக்கும் சைட் டிஷ் தேவையில்லை.

    முட்டை தோசையின் இரண்டு வகைகளை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இரண்டு வகையான முட்டை தோசைகள் உள்ளன. நீங்கள் விரும்பியபடி சாப்பிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்

    வெரைட்டி – 1

    தோசை மாவு

    முட்டை – 4

    வெங்காயம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

    பச்சை மிளகாய் – 2

    தக்காளி – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

    உப்பு – சுவைக்கேற்ப

    மிளகுத் தூள் – சுவைக்கேற்ப

    எண்ணெய் – தேவையான அளவு

    வெரைட்டி – 2

    தோசை மாவு – 2 கப்

    முட்டை – 3

    பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

    உப்பு – சுவைக்கேற்ப

    மிளகுத் தூள் – சுவைக்கேற்ப

    எண்ணெய் – தேவையான அளவு

    செய்முறை

    முட்டை தோசை செய்வது எப்படி:

    தோசை செய்வதற்கு முந்தைய நாள் ஒரு bowl ல் இட்லி அரிசி மற்றும் புழுங்கல் அரிசியை நன்கு கழுவி போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

    மற்றொரு bowl ல் உளுத்தம் பருப்பு, வெந்தயம், மற்றும் அரை மேஜைக்கரண்டி அளவு கடலை பருப்பையும் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதையும் சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

    3 மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை எடுத்து கிரைண்டரில் போட்டு அதை சிறிது அரைத்த பின் அதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் உளுத்தம் பருப்பை போட்டு அரைக்கவும்.

    பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலக்கி அதை சுமார் 8 மணி நேரம் வரை room temperature யில் புளிக்க விடவும். தோசை மாவு தயார்.

    வெரைட்டி- 1

    முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் உப்பு, மிளகுத் தூள், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    இப்பொழுது தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய வெங்காயத்தை பாதியாக நறுக்கி அதை கல்லில் வைத்து நன்கு தேய்த்து கல்லை சுட விடவும்.

    தோசைக்கல் சுட்ட பின் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தோசை மாவை ஒரு கரண்டியின் மூலம் ஊற்றி அதை சுற்றி தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றவும். அதன் மேல் இந்த முட்டை கலவையை ஊற்றி பரப்பி, எண்ணெய் ஊற்றி, முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்தால், முட்டை தோசை தயார்.

    வெரைட்டி – 2

    முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    இப்பொழுது தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய வெங்காயத்தை பாதியாக நறுக்கி அதை கல்லில் வைத்து நன்கு தேய்த்து கல்லை சுட விடவும்.

    தோசைக்கல் சுட்ட பின் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தோசை மாவை ஒரு கரண்டியின் மூலம் ஊற்றி அதை சுற்றி தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றவும். அதன் மேல் கலந்து வைத்துள்ள முட்டையை பாதி ஊற்றி பரப்பி, மேலே சிறிது உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான முட்டை தோசை தயார்.

    இதையும் செய்யலாம்!: அடை தோசை செய்வது எப்படி?

  • ரவா தோசை செய்வது எப்படி?

    தோசை என்பது தமிழர்களின் பாரம்பரிய உணவு. தமிழ் சமையல் முறையில் மிக நீண்ட வரலாறு உண்டு. தோசை என்பது தமிழ்நாட்டில் வாழும் பல குடும்பங்களின் காலை டிப்பன். இவை பொதுவாக சாம்பார், தேங்காய் சட்னி மற்றும் பருப்பு பொடியுடன் பரிமாறப்படும்.

    தோசையில் பல வகைகள் உண்டு. ப்ளைன் தோசை, கீ ரோஸ்ட், மசால் தோசை, ரவா தோசை, பன்னீர் தோசை, வெங்காய தோசை, கல் தோசை போன்றவை மிகவும் பிரபலம். இவை தமிழ்நாட்டில் உருவானவை என்றாலும் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டன.

    இந்தியாவில் இவை இல்லாத தென்னிந்திய உணவகங்களை நீங்கள் காண முடியாத அளவுக்கு அவை பிரபலமாக உள்ளன. அதுமட்டுமின்றி, இந்தியர்கள் அதிகம் உள்ள அமெரிக்கப் பகுதிகளிலும் அமெரிக்கர்களின் விருப்ப உணவாக இவை மாறிவிட்டன என்றால் மிகையாகாது.

    தேவையான பொருட்கள்

    1 கப் அரிசி மாவு

    1 கப் ரவை

    2 மேஜைக்கரண்டி மைதா மாவு

    2 மேஜைக்கரண்டி தயிர்

    1 பெரிய வெங்காயம்

    1 பச்சை மிளகாய்

    1 துண்டு இஞ்சி

    8 to 10 முந்திரி

    1/2 மேஜைக்கரண்டி மிளகு தூள்

    1/2 மேஜைக்கரண்டி சீரகத் தூள்

    1/4 மேஜைக்கரண்டி எள்

    1/4 மேஜைக்கரண்டி சர்க்கரை

    1 கை அளவு கொத்தமல்லி

    1 கை அளவு கருவேப்பிலை

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    செய்முறை

    முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, மற்றும் முந்திரியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ரவை, மற்றும் மைதா மாவை கொட்டி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை, மற்றும் முந்திரியை சேர்த்து அதனுடன் மிளகு தூள், சீரகத் தூள், எள், தயிர், மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    இப்பொழுது அந்த மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து முதலில் அதை நன்கு கட்டி தட்டாமல் கலந்து கொள்ளவும்.

    மாவை நன்கு கட்டி தட்டாமல் கலந்த பின்பு அதில் மேலும் தண்ணீர் சேர்த்து அதை நன்கு தண்ணியான பதத்திற்கு கொண்டு வந்து அதை சுமார் 20 லிருந்து 30 நிமிடம் வரை ஊற விடவும்.

    20 நிமிடத்திற்குப் பிறகு மாவு கட்டியாக ஆகியிருந்தால் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அதை தண்ணீர் பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு கலந்து விடவும்.

    பின்னர் ஒரு தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து ஒரு பெரிய வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி அந்த கல்லின் மீது வைத்து நன்கு தேய்த்து விடவும்.

    தோசைக்கல் சூடானதும் அதில் நாம் கரைத்து வைத்திருக்கும் மாவை சுத்தி நன்கு பரவலாக ஊற்றவும்.

    ஆங்காங்கே ஏற்படும் சிறு சிறு குழிகளிலும் தேவைப்பட்டால் சிறிதளவு மாவை ஊற்றி கொள்ளவும்.

    அடுத்து நாம் ஊற்றி வைத்திருக்கும் மாவை சுற்றி தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றவும். (நெய்யை விரும்புபவர்கள் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்துக் கொள்ளலாம்.)

    தோசை நன்கு பொன்னிறம் வரும் வரை அதை வேக விட்டு பொன்னிறம் வந்ததும் அதை ஒரு தோசை கரண்டியின் மூலம் எடுத்து மடித்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    பொதுவாக ரவை தோசையை ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பிப் போட வேண்டிய அவசியமில்லை. எனினும் தேவைப்பட்டால் அதைத் திருப்பிப் போட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மொறு மொறுப்பான ரவா தோசை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • மிக சுவையான மசாலா தோசை செய்வது எப்படி?

    தோசை தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய உணவாகும். தோசையில் பல வகைகள் உண்டு. அதில் பன்னீர் தோசை, வெங்காய ரவா தோசை, முட்டை தோசை, பொடி தோசை போன்றவை மிகவும் பிரபலமானவை.

    எனவே இன்று இங்கு இருப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மசாலா தோசை. உணவு பிரியர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    மசாலா தோசையிலேயே பல வகைகள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை பேப்பர் மசாலா தோசை, மெட்ராஸ் ஸ்பெஷல் மசாலா தோசை, கேரளா மசாலா தோசை, மற்றும் மைசூர் மசாலா தோசை.

    மசாலா தோசை வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையுடன் அவர்களின் சமையல் பாணிக்கு ஏற்ப செய்து சுவைக்கிறார்கள்.

    தேவையான பொருட்கள்:

    1/2 கப் இட்லி அரிசி

    1/2 கப் புழுங்கல் அரிசி

    1/4 கப் உளுத்தம் பருப்பு

    1/4 கப் அவல்

    2 பெரிய வெங்காயம்

    3 உருளைக்கிழங்கு

    4 பூண்டு பல்

    1 பச்சை மிளகாய்

    8 காஞ்ச மிளகாய்

    2 1/2 மேஜைக்கரண்டி கடலை பருப்பு

    1 1/2 மேஜைக்கரண்டி வெந்தயம்

    3 மேஜைக்கரண்டி சீரகம்

    1/4 மேஜைக்கரண்டி கடுகு

    1/4 மேஜைக்கரண்டி பெருங்காய தூள்

    1/2 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    சிறிதளவு கருவேப்பிலை

    சிறிதளவு கொத்தமல்லி

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு நெய்

    தேவையான அளவு உப்பு

    செய்முறை:

    தோசை செய்வதற்கு முந்தைய நாள் ஒரு bowl ல் இட்லி அரிசி மற்றும் புழுங்கல் அரிசியை நன்கு கழுவி போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

    மற்றொரு bowl ல் உளுத்தம் பருப்பு, வெந்தயம், மற்றும் அரை மேஜைக்கரண்டி அளவு கடலை பருப்பையும் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதையும் சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

    மற்றொரு bowl ல் அவலை போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதையும் சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

    3 மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை எடுத்து கிரைண்டரில் போட்டு அதை சிறிது அரைத்த பின் அதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் உளுத்தம் பருப்பை போட்டு அரைக்கவும்.

    பருப்பு சிறிது அரைபட்டதும் அதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் அவலையும் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு அரைத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்.

    பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலக்கி அதை சுமார் 8 மணி நேரம் வரை room temperature யில் புளிக்க விடவும்.

    8 மணி நேரத்திற்கு பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்டதும் அதில் 2 மேஜைக்கரண்டி அளவு கடலை பருப்பு மற்றும் சீரகத்தை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வறுக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு வெங்காயம், பூண்டு, மற்றும் காஞ்ச மிளகாயை போட்டு அதை நன்கு வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.

    பின்பு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை high flame ல் வைத்து அதில் உருளைக்கிழங்கு வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு சுமார் 25 லிருந்து 30 நிமிடம் வரை அதை வேக வைத்து எடுத்து மசித்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்டதும் அதில் கடுகு, கால் மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு, மற்றும் கால் மேஜைக்கரண்டி சீரகத்தை சேர்த்து கடுகு வெடிக்கும் போது அதில் பெருங்காயத் தூள் மற்றும் சிறிதளவு கருவேப்பிலை போட்டு அதை வறுக்கவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் மீதமுள்ள ஒரு வெங்காயத்தையும் மற்றும் பச்சை மிளகாயையும் போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் நாம் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சிறிது நேரம் வேக விடவும்.

    பிறகு அதை இறக்குவதற்கு முன் சிறிதளவு கொத்தமல்லியை அதில் தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய வெங்காயத்தை பாதியாக நறுக்கி அதை கல்லில் வைத்து நன்கு தேய்த்து கல்லை சுட விடவும்.

    தோசைக்கல் சுட்ட பின் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தோசை மாவை ஒரு கரண்டியின் மூலம் ஊற்றி அதை சுற்றி தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றவும்.

    தோசை ஒரு புறம் வெந்ததும் அதை மறு புறம் திருப்பி போட்டு வேக விடவும்.

    பின்பு தோசையை திருப்பி போட்டு அதன் உள்புறத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் சட்னியை எடுத்து நன்கு தடவிய பின் அதில் நாம் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து தோசையை மடித்து கல்லிலிருந்து எடுத்து தட்டில் வைத்து சுட சுட சாம்பார் சட்னியுடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான மசாலா தோசை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.