Tag: வெங்காய பக்கோடா செய்வது எப்படி

  • நாவிற்கு சுவையான வெங்காய சப்ஜி செய்வது எப்படி?

    விருந்துகளுக்கு வரும்போது, ​​நம்மில் பலர் வித்தியாசமாக ஏதாவது செய்து விருந்தினர்களை ஆச்சரியப்படுத்த விரும்புகிறோம். எனவே இன்று இங்கு நாம் காணவிருப்பது வெஜிடபிள் சப்ஜி என்ற வித்தியாசமான சைட் டிஷ்.

    வெங்காய சப்ஜி தயாரிக்க நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார்ச்சத்து, புரதம், நீர் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. அவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், எலும்பு வலிமையை அதிகரிக்கவும் உதவுகின்றன.

    இதில் நாம் பயன்படுத்தும் தக்காளியில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி மற்றும் கே ஆகியவை உள்ளன.இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும்.

    இதில் நாம் சேர்க்கும் பூண்டில் புரதம், மாங்கனீஸ், வைட்டமின் சி மற்றும் பி6 உள்ளது. இவை இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

    தேவையான பொருட்கள்

    1/2 cup தயிர்

    2 பெரிய வெங்காயம்

    24 சின்ன வெங்காயம்

    2 தக்காளி

    3 பச்சை மிளகாய்

    7 பல் பூண்டு

    1 சிறு துண்டு இஞ்சி

    1/2 tsp மஞ்சள் தூள்

    2 tsp காஷ்மீர் மிளகாய் தூள்

    2 tsp மல்லி தூள்

    1 tsp சீரகம்

    1/2 tsp கருஞ்சீரகம்

    1 tsp பெருஞ்சீரகம்

    1 tsp கரம் மசாலா

    1/2 tsp பெருங்காய தூள்

    1 tsp கசூரி மேத்தி

    1 tsp உப்பு

    தேவையான அளவு கொத்தமல்லி

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு தண்ணீர்

    செய்முறை

    முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் பூண்டை சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 1 tsp அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் கிராஸ் இட்டு வைத்திருக்கும் முழு சின்ன வெங்காயங்களை போட்டு வெங்காயம் சற்று பொன்னிறமாகும் வரை அதை வதக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    பின்பு அதே pan ல் மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 1 tsp அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் சீரகம், சோம்பு, கருஞ்சீரகம், பெருங்காயம், மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் சற்று நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் சற்று நிறம் மாறியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் அதில் மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், மல்லி தூள், மற்றும் உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அதை வதக்கவும்.

    எண்ணெய் பிரிந்ததும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து நன்கு கிளறி விட்டு அதில் இருக்கும் தண்ணீர் சற்று வற்றும் வரை அதை வதக்கவும்.

    தண்ணீர் சற்று வற்றிய பின் அதில் நன்கு அடித்த தயிரை சேர்த்து அதை கிளறி விடவும்.

    அடுத்து அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அதை வதக்கவும்.

    எண்ணெய் பிரிந்து வந்ததும் அதில் மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.

    ஐந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து அதில் கரம் மசாலா மற்றும் கசூரி மேத்தியை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

    அடுத்து அதில் 1 cup அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 20 நிமிடம் வரை அதை வேக விடவும்.

    20 நிமிடத்திற்க்குப் பிறகு மூடியை திறந்து அதை ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும்.

    அவ்வளவுதான் உங்கள் அட்டகாசமான வெங்காய சப்ஜி ரெடி. இதை உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • மாலை நேர ஸ்நாக்ஸ் வெங்காய பக்கோடா செய்வது எப்படி?

    பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாவில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பான்னீர் பக்கோடா, உருளைக்கிழங்கு பக்கோடா, முந்திரிப் பருப்பு பக்கோடா, முட்டைக்கோஸ் பக்கோடா என்பன மிகவும் பிரபலமானவை.

    இன்று இங்கு காண்பது வெங்காய பக்கோடா. மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடா சாப்பிடுவது பெரும்பாலானோருக்கு விருப்பமான தேர்வாகும். இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றிய இவைகள், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் படிப்படியாகப் பிரபலமடைந்துள்ளது.

    இங்கிலாந்தில் உள்ள இந்தியர்கள் நடத்தும் உணவகங்களில் பகோராக்கள் பிரபலமான துரித உணவுப் பொருளாகும். தமிழ்நாட்டில் பக்கோடா என்றும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பஜ்ஜி என்றும், மகாராஷ்டிராவில் பகோராஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

    தேவையான பொருட்கள்:

    ½ கப் கடலை மாவு

    ¼ கப் அரிசி மாவு

    3 பெரிய வெங்காயம்

    2 பச்சை மிளகாய்

    1 மேஜைக்கரண்டி சோம்பு

    1 சிட்டிகை பெருங்காய தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு கொத்தமல்லி

    சிறிதளவு கருவேப்பிலை

    செய்முறை:

    முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்து கொள்ளவும்.

    அடுத்த ஒரு bowl லை எடுத்து அதில் நாம் நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அதை கைகளின் மூலம் நன்கு பிரித்து விடவும்.

    பின்பு அதில் நம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், சோம்பு, பெருங்காய தூள், தேவையான அளவு உப்பு, ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை போட்டு அதை நன்கு கிளறி விடவும்.

    பின்னர் அதில் கடலை மாவு மற்றும் அரிசி மாவை கொட்டி அதை நன்கு கலந்து விடவும். (இதில் நாம் தண்ணீர் எதுவும் சேர்த்து விட கூடாது.)

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பக்கோடாவை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் நாம் கலந்து வைத்திருக்கும் கலவையில் சிறிதளவு தண்ணீரை தெளித்து அதை கடாயின் அளவிற்கேற்ப எடுத்து எண்ணெய்யில் உதிர்த்து விடவும். (மாவில் தண்ணீரை தெளித்து தான் விடவேண்டும் ஊற்றினால் அது பஜ்ஜி மாவு போல் ஆகி விடும்.)

    பக்கோடா கட்டியாக இருப்பதை விரும்புவார்கள் அதை சிறு சிறு கட்டிகளாக எண்ணெய்யில் போடவும்.

    பின்பு அது ஒரு புறம் வெந்ததும் அதை ஒரு கரண்டியின் மூலம் மறு புறம் திருப்பி விட்டு அது நன்கு பொன்னிறமானதும் அதை கரண்டியில் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இவ்வாறே மீதமுள்ள மாவையும் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து அதை சுட சுட பரிமாறவும். (தேவைப்பட்டால் மாவை எடுத்து எண்ணெய்யில் போடுவதற்கு முன் சிறிதளவு தண்ணீரை தெளித்து கொள்ளவும்.)

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் நன்கு மொறு மொறுப்பாக இருக்கும் வெங்காய பக்கோடா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.