Tag: How To Make Chicken Manchurian

  • வெஜிடபிள் மஞ்சூரியன் கிரேவி செய்வது எப்படி?

    பொதுவாகவே மஞ்சூரியன் பெரும்பாலானோரின் விருப்பமான உணவாகும். அவற்றில் சிக்கன் மஞ்சூரியன், முட்டை மஞ்சூரியன், கோபி மஞ்சூரியன், வெஜிடபிள் மஞ்சூரியன் போன்றவை மிகவும் பிரபலம்.

    இவற்றுடன் ஃபிரைடு ரைஸ், நாண் மற்றும் சப்பாத்தி ஆகியவை இருக்கும். அதனுடன் கேரட், முட்டையின் மஞ்சள் கரு, பீன்ஸ் போன்றவற்றைச் சேர்ப்பது உடலுக்கு நல்லது.

    காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகள் இப்படி சுவையாக செய்தால் தானாகவே சாப்பிடுவார்கள். மேலும் இது மிக எளிதாக செய்ய முடியும்.

    தேவையான பொருட்கள்

    1 கப் துருவிய கேரட்

    1 கப் துருவிய முட்டை கோஸ்

    10 to 12 பீன்ஸ்

    1 பெரிய வெங்காயம்

    1 குடை மிளகாய்

    2 மேஜைக்கரண்டி மைதா மாவு

    2 மேஜைக்கரண்டி சோள மாவு

    மிளகாய் தூள் தேவையான அளவு

    மிளகு தூள் தேவையான அளவு

    2 பல் பூண்டு

    1 துண்டு இஞ்சி

    1 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்

    1 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்

    1 மேஜைக்கரண்டி சோயாசாஸ்

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    வெங்காயத்தாள் சிறிதளவு

    செய்முறை

    முதலில் கேரட், முட்டை கோஸ், பீன்ஸ், வெங்காயம், குடை மிளகாய், இஞ்சி, மற்றும் பூண்டை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு bowl ல் துருவிய கேரட், முட்டை கோஸ், பீன்ஸ், தேவையான அளவு மிளகாய் தூள், சிறிதளவு மிளகு தூள், தேவையான அளவு உப்பு, மைதா மாவு மற்றும் சோள மாவை ஒன்றாக போட்டு நன்கு கலக்கி கொள்ளவும்.

    அடுத்து இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். (உருண்டை உடைந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து பிடிக்கவும்.)

    இப்பொழுது ஒரு வட சட்டியை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை வட சட்டியின் அளவிற்கேற்ப போட்டு ஒரு பக்கம் பொன்னிறம் ஆனதும் மறுபக்கம் திருப்பி விட்டு பொன்னிறம் வரும் வரை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போன பின் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் குடை மிளகாயை போட்டு சுமார் 3 நிமிடம் வரை வதக்கவும்.

    3 நிமிடத்திற்கு பிறகு அதில் தக்காளி சாஸ், சில்லி சாஸ், மற்றும் சோயா சாஸ் ஐ சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். (கிரேவியாக வேண்டுமென்றால் ஒரு மேஜைக்கரண்டி சோள மாவில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.)

    இப்பொழுது பொரித்து எடுத்து வைத்திருக்கும் உருண்டைகளை இதில் சேர்த்து பக்குவமாக உருண்டை உடைந்து விடாமல் கிளறி விடவும்.

    சுமார் 2 நிமிடம் வரை இதை வேக விட்டு இறக்குவதற்கு முன் சிறிதளவு வெங்காயத் தாள்களை அதில் தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான வெஜிடபிள் மஞ்சூரியன் கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • சுவையான முட்டைக்கோஸ் மஞ்சூரியன் செய்வது எப்படி?

    மஞ்சூரியன் என்பது இந்தோ-சீன உணவு வகையாகும், இது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு. குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, மவுசே தனித்தன்மை வாய்ந்தது. மஞ்சூரியனில் பல வகைகள் உண்டு.

    அவற்றில் சிக்கன் மஞ்சூரியன், மீன் மஞ்சூரியன், பன்னீர் மஞ்சூரியன், வெஜிடபிள் மஞ்சூரியன், முட்டை மஞ்சூரியன், உருளைக்கிழங்கு மஞ்சூரியன் ஆகியவை அடங்கும். ஆனால் இன்று இங்கு காண்பது வித்தியாசமான முட்டைகோஸ் மஞ்சூரியன்.

    நாம் வழக்கமாக மஞ்சூரியன் செய்வது போல் முட்டைக்கோஸ் மஞ்சூரியனும் செய்யப்படுகிறது. எனவே இதை மற்ற மஞ்சூரியன் உணவுகளைப் போல ஃப்ரைடு ரைஸ் மற்றும் நூடுல்ஸுக்கு சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம். அல்லது முட்டைக்கோஸ் மஞ்சூரியன் ஒரு சிறந்த மாலை நேர சிற்றுண்டியாக முயற்சிக்கவும். முட்டைக்கோஸ் மஞ்சூரியாவின் சிறப்பு என்னவென்றால், இந்த அற்புதமான மஞ்சூரியாவை வெறும் முட்டைக்கோசுடன் செய்யலாம்.

    மேலும் நம் பிறந்தநாளில் அல்லது நம் வீட்டிற்கு விருந்துக்கு வரும்போது இந்த முட்டைக்கோஸ் மஞ்சூரியன் செய்து நம் உறவினர்களை ஆச்சரியப்படுத்தலாம்.

    தேவையான பொருட்கள்

    2 கப் துருவிய முட்டைகோஸ்

    1 பெரிய வெங்காயம்

    1 குடை மிளகாய்

    5 பூண்டு பல்

    1½ இஞ்சி துண்டு

    2 மேஜைக்கரண்டி சோள மாவு

    2 மேஜைக்கரண்டி மைதா மாவு

    1 மேஜைக்கரண்டி டார்க் சோயா சாஸ்

    2 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்

    2 மேஜைக்கரண்டி டொமேட்டோ கெட்சப்

    1 மேஜைக்கரண்டி வினிகர்

    ½ மேஜைக்கரண்டி மிளகு தூள்

    மிளகாய் தூள் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்

    செய்முறை

    முதலில் வெங்காயம், குடை மிளகாய், இஞ்சி, பூண்டு, மற்றும் ஸ்பிரிங் ஆனியன்னை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் முட்டைகோஸை நன்கு பொடியாக துருவி எடுத்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து நாம் பொடியாக துருவி வைத்திருக்கும் முட்டைகோஸை எடுத்து அதை ஒரு bowl ல் போட்டு அதனுடன் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவு உப்பு, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மற்றும் சிறிதளவு மிளகு தூள் சேர்த்து அதை கலந்து விடவும்.

    பின்பு அதில் சோள மாவு மற்றும் மைதா மாவை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். (முட்டைகோஸ் தண்ணீர் விடும் என்பதால் நாம் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.)

    இந்த கலவையை நன்கு கலந்த பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்து அதை சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை பிரிட்ஜில் வைக்கவும்.

    15 நிமிடத்திற்கு பிறகு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப அதில் நாம் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை ஒவ்வொன்றாக போடவும்.

    பின்பு அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது பொன்னிறம் ஆகும் வரை அதை வேக விடவும்.

    முட்டைகோஸ் உருண்டை இரு புறமும் பொன்னிறமானதும் அதை ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து அதை ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.

    அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயை போட்டு அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வதக்கவும்.

    3 நிமிடத்திற்கு பிறகு அதில் சோயா சாஸ், வினிகர், டொமேட்டோ கெட்சப், மற்றும் ரெட் சில்லி சாஸ்ஸை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதில் சுமார் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் நன்கு கலந்து விட்டு அதை சுமார் 2 மணி நேரம் வரை கொதிக்க விடவும்.

    மஞ்சூரியன் சிறிது கிரேவியாக வேண்டும் என்றால் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் சேர்த்து கொள்ளவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு நாம் பொரித்து எடுத்து வைத்திருக்கும் முட்டைகோஸ் உருண்டைகளை அதில் போட்டு அதை பக்குவமாக அது நன்கு மசாலாவோடு சேருமாறு கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதை நன்கு கிளறி விட்டு பின்பு அதில் சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்னை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அருமையான முட்டைகோஸ் மஞ்சூரியன் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • விரும்பி சாப்பிடும் அசைவ பிரியர்களுக்கு சில்லி சிக்கன் செய்வது எப்படி?

    சில்லி சிக்கன் என்பது இந்தோ-சீன உணவாகும், இது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. இவைகளை ஃப்ரைடு ரைஸ் மற்றும் பிரியாணியுடன் அடிக்கடி சாப்பிடுவார்கள். இது ஒரு கூட்டத்தை எளிமையாக ரசித்து சாப்பிட வைக்கிறது.

    உண்மையில், பல துரித உணவு உணவகங்களில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று சில்லி சிக்கன் என்று சொன்னால் அது மிகையாகாது. சில்லி சிக்கன் பிரியர்கள் பொதுவாக துரித உணவு உணவகங்களில் ஆர்டர் செய்வார்கள்.

    ஆனால் இதை நாம் வீட்டிலேயே சுகாதாரமான முறையில் எளிதாக செய்யலாம். சில்லி சிக்கன் பெரும்பாலான குழந்தைகளின் விருப்பமான உணவாகும். எனவே இதை வீட்டிலேயே சுகாதாரமாக செய்து குழந்தைகளுக்கு பயமின்றி கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    500 கிராம் போன்லெஸ் சிக்கன்

    1 முட்டை

    1 பெரிய வெங்காயம்

    1 குடை மிளகாய்

    2 பச்சை மிளகாய்

    6 பூண்டு பல்

    2 துண்டு இஞ்சி

    4 மேஜைக்கரண்டி சோள மாவு

    4 மேஜைக்கரண்டி மைதா மாவு

    2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்

    1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்

    1 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்

    ¼ மேஜைக்கரண்டி மிளகு தூள்

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு வெங்காய தாள்

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை:

    முதலில் வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து அதை கழுவி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    அடுத்து நாம் கழுவி வைத்திருக்கும் சிக்கனை ஒரு bowl ல் போட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற விடவும்.

    கோழி கறியே தண்ணீர் விடும் என்பதால் அதில் நாம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

    பின்பு ஒரு bowl ல் முட்டையை உடைத்து ஊற்றி அதில் 3 மேஜைக்கரண்டி அளவு சோள மாவு, ஒரு சிட்டிகை உப்பு, மற்றும் மைதா மாவை போட்டு தேவையான அளவு தண்ணீரை தெளித்து அதை நன்கு அடித்து மாவை கெட்டியான பதத்திற்கு கொண்டு வரவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கோழி கறியை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்ட பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் மாவில் நன்கு முக்கி எண்ணெய்யில் போடவும்.

    பின்பு அது ஒரு புறம் வெந்ததும் அதை ஒரு கரண்டியின் மூலம் மறு புறம் திருப்பி விட்டு அது பொன் நிறம் ஆனதும் கரண்டியில் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    இவ்வாறு மீதமிருக்கும் சிக்கன் துண்டுகளையும் பொரித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

    பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், மற்றும் ஒரு சிட்டிகை அளவு உப்பை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் பெப்பர் தூளைப் போட்டு அதை நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மற்றும் சில்லி சாஸை ஊற்றி அதை நன்கு கிளறி விடவும்.

    பின்னர் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் பொரித்தெடுத்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து அது நன்கு மசாலாவுடன் சேருமாறு அதை கிண்டி விட்டு சிறிது நேரம் வேக விடவும்.

    பின்பு அதை இறக்குவதற்கு முன் அதில் சிறிதளவு வெங்காய தாள் மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சில்லி சிக்கன் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • உருளைக்கிழங்கு மஞ்சூரியன் செய்வது எப்படி?

    மஞ்சூரியன் ஒரு இந்திய-சீன உணவாகும், இது இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இவை இளம் தலைமுறையினர் மற்றும் உணவு பிரியர்களின் விருப்பமான உணவாகும்.

    மஞ்சூரியனில் பல வகைகள் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கவை சிக்கன் மஞ்சூரியன், கோபி மஞ்சூரியன், பன்னீர் மஞ்சூரியன், மற்றும் மீன் மஞ்சூரியன். ஆனால் இன்று இங்கு காண்பது வித்தியாசமான உருளைக்கிழங்கு மஞ்சூரியன்.

    உருளைக்கிழங்கு மஞ்சூரியன் வழக்கமான மஞ்சூரியன் போலவே செய்யப்படுகிறது. எனவே மற்ற மஞ்சூரியன்களைப் போலவே, உருளைக்கிழங்கு மஞ்சூரியையும் ஃபிரைடு ரைஸ் மற்றும் நூடுல்ஸுக்கு சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம்.

    உருளைக்கிழங்கு மஞ்சூரியன் மாலை நேர சிற்றுண்டியாகவும் சிறந்தது. எனவே இதை நம் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    ¼ கப் சோள மாவு

    ¼ கப் மைதா மாவு

    4 உருளைக்கிழங்கு

    1 பெரிய வெங்காயம்

    ½ கப் குடை மிளகாய்

    2 பூண்டு பல்

    1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்

    1 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்

    1 மேஜைக்கரண்டி கிரீன் சில்லி சாஸ்

    1 மேஜைக்கரண்டி கெட்சப்

    2 மேஜைக்கரண்டி வினிகர்

    ¼ மேஜைக்கரண்டி மிளகு தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்

    செய்முறை:

    முதலில் வெங்காயம், குடை மிளகாய், பூண்டு, மற்றும் ஸ்பிரிங் ஆனியனை நறுக்கி, உருளைக்கிழங்கை அவரவருக்கு பிடித்தமான வடிவில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு bowl ல் சோள மாவு, மைதா மாவு, மிளகு தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதை நன்கு தண்ணியாக கரைத்து கொள்ளவும். (இந்த கலவையை நன்கு தண்ணியாக இருப்பது அவசியம் லேசாக உருளைக்கிழங்கின் மீது இவை ஒட்டினால் போதும்.)

    பிறகு நாம் நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை எடுத்து இதில் போட்டு அதை நன்கு கிளறி விடவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப மாவில் இருக்கும் உருளைக்கிழங்கை ஒவ்வொன்றாக எடுத்து பக்குவமாக போட்டு அது நன்கு பொன்னிறம் ஆனதும் அதை ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.

    2 நிமிடத்திற்குப் பிறகு அதில் சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், க்ரீன் சில்லி சாஸ், வினிகர், மற்றும் கெட்சப்பை ஊற்றி அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    1 நிமிடத்திற்கு பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதையும் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். (கிரேவி சிறிது கெட்டியாக வேண்டும் என்றால் சோள மாவில் தண்ணீர் கம்மியாக ஊற்றி கரைக்கவும்.)

    பின்னர் உப்பை சரிபார்த்து உப்பு தேவைப்பட்டால் தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ளவும்.

    அடுத்து நாம் பொரித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை இதில் போட்டு அதை நன்கு கிளறி விட்டு அதை சுமார் 2 லிருந்து 4 நிமிடம் வரை வேக விடவும்.

    4 நிமிடத்திற்கு பிறகு அதில் சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன் தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான உருளைக்கிழங்கு மஞ்சூரியன் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.