சுவையான ஐயர் ஹோட்டல் வத்த குழம்பு செய்வது எப்படி!!

Written by

in

வீடுகள் மற்றும் ஹோட்டலில் மதிய உணவிற்கு முதலில் சாம்பாரும் அதைத் தொடர்ந்து வத்த குழம்பும் வாங்கி சாப்பிடுவது வழக்கம். இந்த வத்த குழம்பு பலரின் விருப்பமான குழம்பு.

இதில் எந்த வித காய்கறிகளும் சேர்க்காமல், வத்தலை மட்டும் போட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். குறிப்பாக ஐயர் ஹோட்டலில் சமைத்த உணவுகளை அனைவரும் விரும்புவார்.

இந்த வத்த குழம்பு எப்படி செய்வது என்று படித்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி வத்தல் இல்லையென்றால் உங்கள் வீட்டில் உள்ள வத்தல்- 10

தக்காளி- 2

பூண்டு- 6 பற்கள்

புளி- இரு எலுமிச்சை அளவு

மிளகாய் தூள்- 3 தேக்கரண்டி

மல்லி தூள்- 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் –1/2 தேக்கரண்டி

பெஞ்சீரகம்- 1 தேக்கரண்டி

வெந்தயம் – 1 தேக்கரண்டி

கருவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

மிளகு- 1 தேக்கரண்டி

செய்முறை:

கடாயை அடுப்பில் வைத்து 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வத்தலை சேர்த்து வதக்கி தனியாக வைத்துக்கொள்ளவும்.

வெந்தயம், பெருஞ்சீரகம், பூண்டு, வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து, அதே கடாயில் வதக்கவும்.

அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

வெந்ததும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் புளி தண்ணீர் சேர்க்கவும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

20 நிமிடம் கழித்து குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து விட்டால் அடுப்பை அணைக்கவும்.

அவ்ளோ தாங்க ஐயர் ஹோட்டல் வத்த குழம்பு ரெடி.!

இதையும் செய்யலாமே!: செட்டிநாடு கார குழம்பு செய்வது எப்படி..?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *