Tag: how to make chicken biryani

  • விரும்பி சாப்பிடும் அசைவ பிரியர்களுக்கு சில்லி சிக்கன் செய்வது எப்படி?

    சில்லி சிக்கன் என்பது இந்தோ-சீன உணவாகும், இது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. இவைகளை ஃப்ரைடு ரைஸ் மற்றும் பிரியாணியுடன் அடிக்கடி சாப்பிடுவார்கள். இது ஒரு கூட்டத்தை எளிமையாக ரசித்து சாப்பிட வைக்கிறது.

    உண்மையில், பல துரித உணவு உணவகங்களில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று சில்லி சிக்கன் என்று சொன்னால் அது மிகையாகாது. சில்லி சிக்கன் பிரியர்கள் பொதுவாக துரித உணவு உணவகங்களில் ஆர்டர் செய்வார்கள்.

    ஆனால் இதை நாம் வீட்டிலேயே சுகாதாரமான முறையில் எளிதாக செய்யலாம். சில்லி சிக்கன் பெரும்பாலான குழந்தைகளின் விருப்பமான உணவாகும். எனவே இதை வீட்டிலேயே சுகாதாரமாக செய்து குழந்தைகளுக்கு பயமின்றி கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    500 கிராம் போன்லெஸ் சிக்கன்

    1 முட்டை

    1 பெரிய வெங்காயம்

    1 குடை மிளகாய்

    2 பச்சை மிளகாய்

    6 பூண்டு பல்

    2 துண்டு இஞ்சி

    4 மேஜைக்கரண்டி சோள மாவு

    4 மேஜைக்கரண்டி மைதா மாவு

    2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்

    1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்

    1 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்

    ¼ மேஜைக்கரண்டி மிளகு தூள்

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு வெங்காய தாள்

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை:

    முதலில் வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து அதை கழுவி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    அடுத்து நாம் கழுவி வைத்திருக்கும் சிக்கனை ஒரு bowl ல் போட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற விடவும்.

    கோழி கறியே தண்ணீர் விடும் என்பதால் அதில் நாம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

    பின்பு ஒரு bowl ல் முட்டையை உடைத்து ஊற்றி அதில் 3 மேஜைக்கரண்டி அளவு சோள மாவு, ஒரு சிட்டிகை உப்பு, மற்றும் மைதா மாவை போட்டு தேவையான அளவு தண்ணீரை தெளித்து அதை நன்கு அடித்து மாவை கெட்டியான பதத்திற்கு கொண்டு வரவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கோழி கறியை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்ட பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் மாவில் நன்கு முக்கி எண்ணெய்யில் போடவும்.

    பின்பு அது ஒரு புறம் வெந்ததும் அதை ஒரு கரண்டியின் மூலம் மறு புறம் திருப்பி விட்டு அது பொன் நிறம் ஆனதும் கரண்டியில் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    இவ்வாறு மீதமிருக்கும் சிக்கன் துண்டுகளையும் பொரித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

    பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், மற்றும் ஒரு சிட்டிகை அளவு உப்பை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் பெப்பர் தூளைப் போட்டு அதை நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மற்றும் சில்லி சாஸை ஊற்றி அதை நன்கு கிளறி விடவும்.

    பின்னர் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் பொரித்தெடுத்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து அது நன்கு மசாலாவுடன் சேருமாறு அதை கிண்டி விட்டு சிறிது நேரம் வேக விடவும்.

    பின்பு அதை இறக்குவதற்கு முன் அதில் சிறிதளவு வெங்காய தாள் மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சில்லி சிக்கன் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • அனைவரும் விரும்பும் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி?

    இந்திய உணவு வகைகளில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. உணவைத் தவிர, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு இவை.

    தென்னிந்தியாவில் பிரியாணிக்கு தனி அந்தஸ்து உண்டு என்றால் அது மிகையாகாது. பிரியாணியில் பல வகைகள் உண்டு. குறிப்பாக சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் பிரியாணி, இறால் பிரியாணி, காளான் பிரியாணி, பன்னீர் பிரியாணி போன்றவை பிரபலம். இன்று நாம் இங்கு பார்ப்பது வெஜிடபிள் பிரியாணி.

    அசைவ பிரியாணிக்கு சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் பிரியாணி, மற்றும் இறால் பிரியாணி மற்றும் சைவ பிரியாணிக்கு காளான் பிரியாணி, பன்னீர் பிரியாணி.

    இறைச்சி பிரியாணியில் உள்ள அளவுக்கு புரதச்சத்து இதில் இல்லை என்றாலும், வெஜிடபிள் பிரியாணியில் பலவகையான காய்கறிகளைச் சேர்ப்பது உடலுக்கும் நல்லது.

    தேவையான பொருட்கள்:

    2 கப் பாசுமதி அரிசி

    2 பெரிய வெங்காயம்

    2 தக்காளி

    2 கேரட்

    8 to 10 பீன்ஸ்

    ¼ காலிஃப்ளவர்

    1 உருளைக்கிழங்கு

    ¼ கப் பச்சை பட்டாணி

    ¼ கப் தயிர்

    2 பச்சை மிளகாய்

    3 பூண்டு பல்

    1 இஞ்சி துண்டு

    ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    2 மேஜைக்கரண்டி மல்லி தூள்

    2 பிரியாணி இலை

    1 துண்டு பட்டை

    3 ஏலக்காய்

    3 கிராம்பு

    1 நட்சத்திர பூ

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு நெய்

    தேவையான அளவு உப்பு

    சிறிதளவு கொத்தமல்லி

    சிறிதளவு புதினா

    செய்முறை:

    முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், காலிபிளவர், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, பச்சை பட்டாணியை உரித்து வைத்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் பாசுமதி அரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.

    அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு நெய்யை ஊற்றி அதை உருக விடவும்.

    நெய் உருகியதும் அதில் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர பூ, மற்றும் பட்டையை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.

    அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு உப்பு போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு அதை நன்கு கலந்து விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், மற்றும் பச்சை பட்டாணியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 3 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.

    5 நிமிடத்திற்கு பிறகு அதில் கால் கப் அளவு தயிரை சேர்த்து அதை சுமார் ஒரு நிமிடம் வரை நன்கு கிளறி விடவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (சுமார் ரெண்டரை கப்பில்லிருந்து மூன்று கப் வரை தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)

    பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி அதில் சேர்த்து அதை பக்குவமாக அரிசி உடைந்து விடாமல் கிளறி விடவும்.

    பின்பு அதில் ஒரு மூடி போட்டு ஆவி வந்ததும் விசிலை போட்டு சுமார் ஒரு விசில் வரும் வரை அதை வேக விடவும். (பாசுமதி அரிசி எளிதாக வேகும் தன்மை கொண்டதால் கவனமாக இருக்க வேண்டும்.)

    ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை அப்படியே சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை வைக்கவும்.

    20 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து வெஜிடபிள் பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆனியன் ரைத்தா உடன் அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் அட்டகாசமாக இருக்கும் வெஜிடபிள் பிரியாணி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • சுவையான திண்டுக்கல் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி!!

    நீங்கள் பிரியாணி பிரியர்களா? நீங்கள் திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி ரசிகரா? இந்த பிரியாணியை வீட்டிலேயே செய்ய வேண்டுமா?

    திண்டுக்கல் சிக்கன் பிரியாணியின் இந்த எளிய செய்முறையைப் படித்து, இந்த விடுமுறை வார இறுதியில் செய்து பாருங்கள், உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    சீரக சம்பா அரிசி – 1 1/2 கப்;
    சுடுநீர் – 2 1/2-3 கப்
    சிக்கன் – 500-600 கிராம் (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
    இஞ்சி – 1 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
    பூண்டு – 1 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
    பச்சை மிளகாய் – 6
    சின்ன வெங்காயம் – 20
    பிரியாணி மசாலா பவுடர் – 2 டேபிள் ஸ்பூன் (இதன் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
    நெய் + எண்ணெய் – 3 + 2 டேபிள் ஸ்பூன்
    தயிர் – 1/3 கப் * மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
    மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்
    சுடுநீர் – 1/4 கப்
    புதினா மற்றும் கொத்தமல்லி – தலா 1/3 கப் (பொடியாக நறுக்கியது)
    உப்பு – சுவைக்கேற்ப
    நெய் – 1 டேபிள் ஸ்பூன்
    எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

    பிரியாணி மசாலா பவுடர் அரைப்பதற்கு:

    மல்லி – 2 டீஸ்பூன்
    சோம்பு – 1/2 டீஸ்பூன்
    சீரகம் – 1/2 டீஸ்பூன்
    ஏலக்காய் – 5
    கிராம்பு – 5
    பட்டை – 1 1/2 இன்ச்
    முந்திரி – 5
    ஜாதிக்காய் – 1/8 டீஸ்பூன்
    அன்னாசிப்பூ – 1
    கல்பாசி – 1 டீஸ்பூன்
    பிரியாணி இலை – 2 சிறியது

    செய்முறை:

    முதலில் பிரியாணி மசாலாப் பொடியை அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி குறைந்த தீயில் சூடாக்கவும்.

    இதற்கிடையில், மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைக்கவும். பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.

    இப்போது அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு பச்சை வாசனை போகும் வரை 12-15 நிமிடம் வதக்கவும். அதன் பிறகு அரைத்த பிரியாணி மசாலா தூள் சேர்த்து வதக்கவும், மிகவும் வறண்டு போய் இருந்தால் ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கிளறி ஒரு நிமிடம் குறைந்த தீயில் சமைக்கவும்.

    அதன் பிறகு, அதில் சிக்கனைக் கழுவி, உப்பு சேர்த்து, சிக்கன் நிறம் மாறும் வரை சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

    பிறகு அதனுடன் தயிர், புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி, சிக்கனை மிதமான தீயில் வேக வைக்கவும். பின்னர் அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்னர் 1/4 கப் சூடான நீரை ஊற்றி கிளறி, அடிக்கடி கிளறி சிக்கனை 15 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.

    பிறகு சிக்கன் துண்டுகளை மட்டும் எடுத்து தனி தட்டில் வைக்கவும். இப்போது கடாயில் எவ்வளவு குழம்பு உள்ளது என்பதை அளவிடவும். இது சுமார் 1/2 கப் இருக்க வேண்டும்.

    1 1/2 கப் சீரக சம்பா அரிசிக்கு 3 கப் தண்ணீர் தேவை. எனவே கடாயில் 1/2 கப் கிரேவியுடன் 2 1/2 கப் வெந்நீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். அதன் பிறகு சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி 1-2 நிமிடம் கொதிக்க விடவும். இப்போது உப்பு சுவையை கவனித்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.

    பிறகு தண்ணீரில் நன்றாகக் கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் 4-5 நிமிடம் வேகவிடவும்.

    பின் மூடியைத் திறந்து கிளறி மீண்டும் மூடி 6 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும். அரிசியை அவ்வப்போது கிளறவும். இதனால் அரிசி கெட்டுப் போகாமல் இருக்கும். 6 நிமிடங்களுக்குப் பிறகு, அலுமினியத் தாளில் கடாயை போர்த்தி, ஒரு மூடியால் மூடி, ஒரு கனமான பொருளை மேலே வைக்கவும்.

    அதே சமயம் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். கல் சூடாகியதும், தீயைக் குறைத்து, அதன் மேல் பிரியாணியை வைத்து, 8-10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து அடுப்பை அணைக்கவும்.

    10-15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்த பின் பிரியாணி சட்டியை திறந்து மெதுவாக கிளறி மீண்டும் 5-6 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான திண்டுக்கல் சிக்கன் பிரியாணி ரெடி.

    இதையும் செய்யலாமே: செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி?

  • சுவையான திண்டுக்கல் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

    நீங்கள் பிரியாணி பிரியர்களா? நீங்கள் திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி ரசிகரா? இந்த பிரியாணியை வீட்டிலேயே செய்ய வேண்டுமா?

    திண்டுக்கல் சிக்கன் பிரியாணியின் இந்த எளிய செய்முறையைப் படித்து, இந்த விடுமுறை வார இறுதியில் செய்து பாருங்கள், உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    சீரக சம்பா அரிசி – 1 1/2 கப்

    சுடுநீர் – 2 1/2-3 கப்

    சிக்கன் – 500-600 கிராம் (சிறு துண்டுகளாக்கப்பட்டது)

    இஞ்சி – 1 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

    பூண்டு – 1 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

    பச்சை மிளகாய் – 6

    சின்ன வெங்காயம் – 20

    பிரியாணி மசாலா பவுடர் – 2 டேபிள் ஸ்பூன் (இதன் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

    நெய் + எண்ணெய் – 3 + 2 டேபிள் ஸ்பூன்

    தயிர் – 1/3 கப் * மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

    மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்

    சுடுநீர் – 1/4 கப்

    புதினா மற்றும் கொத்தமல்லி – தலா 1/3 கப் (பொடியாக நறுக்கியது)

    உப்பு – சுவைக்கேற்ப

    நெய் – 1 டேபிள் ஸ்பூன்

    எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

    பிரியாணி மசாலா பவுடர் அரைப்பதற்கு:

    மல்லி – 2 டீஸ்பூன்

    சோம்பு – 1/2 டீஸ்பூன்

    சீரகம் – 1/2 டீஸ்பூன்

    ஏலக்காய் – 5

    கிராம்பு – 5

    பட்டை – 1 1/2 இன்ச்

    முந்திரி – 5

    ஜாதிக்காய் – 1/8 டீஸ்பூன்

    அன்னாசிப்பூ – 1

    கல்பாசி – 1 டீஸ்பூன்

    பிரியாணி இலை – 2 சிறியது

    செய்முறை:

    முதலில் பிரியாணி மசாலாப் பொடியை அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி குறைந்த தீயில் சூடாக்கவும்.

    இதற்கிடையில், மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைக்கவும். பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.

    இப்போது அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு பச்சை வாசனை போகும் வரை 12-15 நிமிடம் வதக்கவும். அதன் பிறகு அரைத்த பிரியாணி மசாலா தூள் சேர்த்து வதக்கவும், மிகவும் வறண்டு போய் இருந்தால் ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கிளறி ஒரு நிமிடம் குறைந்த தீயில் சமைக்கவும்.

    அதன் பிறகு, அதில் சிக்கனைக் கழுவி, உப்பு சேர்த்து, சிக்கன் நிறம் மாறும் வரை சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

    பிறகு அதனுடன் தயிர், புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி, சிக்கனை மிதமான தீயில் வேக வைக்கவும். பின்னர் அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்னர் 1/4 கப் சூடான நீரை ஊற்றி கிளறி, அடிக்கடி கிளறி சிக்கனை 15 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.

    பிறகு சிக்கன் துண்டுகளை மட்டும் எடுத்து தனி தட்டில் வைக்கவும். இப்போது கடாயில் எவ்வளவு குழம்பு உள்ளது என்பதை அளவிடவும். இது சுமார் 1/2 கப் இருக்க வேண்டும்.

    1 1/2 கப் சீரக சம்பா அரிசிக்கு 3 கப் தண்ணீர் தேவை. எனவே கடாயில் 1/2 கப் கிரேவியுடன் 2 1/2 கப் வெந்நீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். அதன் பிறகு சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி 1-2 நிமிடம் கொதிக்க விடவும். இப்போது உப்பு சுவையை கவனித்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.

    பிறகு தண்ணீரில் நன்றாகக் கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் 4-5 நிமிடம் வேகவிடவும்.

    பின் மூடியைத் திறந்து கிளறி மீண்டும் மூடி 6 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும். அரிசியை அவ்வப்போது கிளறவும். இதனால் அரிசி கெட்டுப் போகாமல் இருக்கும். 6 நிமிடங்களுக்குப் பிறகு, அலுமினியத் தாளில் கடாயை போர்த்தி, ஒரு மூடியால் மூடி, ஒரு கனமான பொருளை மேலே வைக்கவும்.

    அதே சமயம் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். கல் சூடாகியதும், தீயைக் குறைத்து, அதன் மேல் பிரியாணியை வைத்து, 8-10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து அடுப்பை அணைக்கவும்.

    10-15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்த பின் பிரியாணி சட்டியை திறந்து மெதுவாக கிளறி மீண்டும் 5-6 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான திண்டுக்கல் சிக்கன் பிரியாணி ரெடி.

    இதையும் செய்யலாமே: செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி?

  • நீங்கள் மீண்டும் மீண்டும் சாப்பிடக்கூடிய சிக்கன் பிரியாணி செய்முறை!!

    நீங்கள் மீண்டும் மீண்டும் சாப்பிடக்கூடிய சிக்கன் பிரியாணி செய்முறை!!

    நாம் அனைவரும் விரும்பும் அசைவ உணவுகளில் சிக்கன் பிரியாணியும் ஒன்று. இந்த பதிவில் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் இந்த உணவை எப்படி எளிதாக சமைப்பது என்று பார்ப்போம்.

    தேவையானவை :

    பிரியாணி அரிசி                            –  1/4 படி

    சிக்கன் கறி                                       –  250 கிராம்

    தேங்காய்                                          –  1/2 மூடி பால் எடுக்கவும்

    இஞ்சி                                                 –  3 அங்குலம் அரைப்பதற்கு

    பூண்டு                                                –  1

    நெய்யில் வறுத்த பட்டை         –  1 அங்குலம்

    கிராம்பு                                              –  6

    கொத்தமல்லி                                 –  2 டீஸ்பூன் (வறுத்தது)

    புதினா, கொத்தமல்லி தழை
    பெல்லாரி                                         –  2

    மிளகாய்                                           –  6

    ஏலக்காய்                                         –  6

    பெருஞ்சீரகம்                                 –  1 டீஸ்பூன்

    செய்முறை :

    அரிசியை கல்நீக்கி சுத்தம் செய்து வடிகட்டி வைக்கவும். பிரஷர் குக்கரில் வெட்டிய சிக்கன் கறித்துண்டுகளை உப்பு, மஞ்சள் 1/3 படி நீர் சேர்த்து வேக வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி நீளமாக அரித்த வெங்காயம் புதினா மல்லி இலை சேர்த்து வதக்கவும்.

    அரைத்த மசால், அவித்த கறி, அரிசியையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். பிரஷர் குக்கரில் கறி வெந்த தண்ணீர் தேங்காய் பால் சேர்த்து அரை படியாக்கி கொதிக்க வைக்கவும்.

    கொதிக்கும் தேங்காய் பாலில் வதக்கிய மசால் அரிசி, கறி, இவற்றையும் உப்பும் சேர்த்துக் கிளறி இளந்தீயில் குக்கரை வெயிட் வைத்து மூடி 10 நிமிடத்தில் இறக்கவும்.