Tag: How To Make Ragi Phan Dosa

  • ரவா தோசை செய்வது எப்படி?

    தோசை என்பது தமிழர்களின் பாரம்பரிய உணவு. தமிழ் சமையல் முறையில் மிக நீண்ட வரலாறு உண்டு. தோசை என்பது தமிழ்நாட்டில் வாழும் பல குடும்பங்களின் காலை டிப்பன். இவை பொதுவாக சாம்பார், தேங்காய் சட்னி மற்றும் பருப்பு பொடியுடன் பரிமாறப்படும்.

    தோசையில் பல வகைகள் உண்டு. ப்ளைன் தோசை, கீ ரோஸ்ட், மசால் தோசை, ரவா தோசை, பன்னீர் தோசை, வெங்காய தோசை, கல் தோசை போன்றவை மிகவும் பிரபலம். இவை தமிழ்நாட்டில் உருவானவை என்றாலும் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டன.

    இந்தியாவில் இவை இல்லாத தென்னிந்திய உணவகங்களை நீங்கள் காண முடியாத அளவுக்கு அவை பிரபலமாக உள்ளன. அதுமட்டுமின்றி, இந்தியர்கள் அதிகம் உள்ள அமெரிக்கப் பகுதிகளிலும் அமெரிக்கர்களின் விருப்ப உணவாக இவை மாறிவிட்டன என்றால் மிகையாகாது.

    தேவையான பொருட்கள்

    1 கப் அரிசி மாவு

    1 கப் ரவை

    2 மேஜைக்கரண்டி மைதா மாவு

    2 மேஜைக்கரண்டி தயிர்

    1 பெரிய வெங்காயம்

    1 பச்சை மிளகாய்

    1 துண்டு இஞ்சி

    8 to 10 முந்திரி

    1/2 மேஜைக்கரண்டி மிளகு தூள்

    1/2 மேஜைக்கரண்டி சீரகத் தூள்

    1/4 மேஜைக்கரண்டி எள்

    1/4 மேஜைக்கரண்டி சர்க்கரை

    1 கை அளவு கொத்தமல்லி

    1 கை அளவு கருவேப்பிலை

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    செய்முறை

    முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, மற்றும் முந்திரியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ரவை, மற்றும் மைதா மாவை கொட்டி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை, மற்றும் முந்திரியை சேர்த்து அதனுடன் மிளகு தூள், சீரகத் தூள், எள், தயிர், மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    இப்பொழுது அந்த மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து முதலில் அதை நன்கு கட்டி தட்டாமல் கலந்து கொள்ளவும்.

    மாவை நன்கு கட்டி தட்டாமல் கலந்த பின்பு அதில் மேலும் தண்ணீர் சேர்த்து அதை நன்கு தண்ணியான பதத்திற்கு கொண்டு வந்து அதை சுமார் 20 லிருந்து 30 நிமிடம் வரை ஊற விடவும்.

    20 நிமிடத்திற்குப் பிறகு மாவு கட்டியாக ஆகியிருந்தால் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அதை தண்ணீர் பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு கலந்து விடவும்.

    பின்னர் ஒரு தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து ஒரு பெரிய வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி அந்த கல்லின் மீது வைத்து நன்கு தேய்த்து விடவும்.

    தோசைக்கல் சூடானதும் அதில் நாம் கரைத்து வைத்திருக்கும் மாவை சுத்தி நன்கு பரவலாக ஊற்றவும்.

    ஆங்காங்கே ஏற்படும் சிறு சிறு குழிகளிலும் தேவைப்பட்டால் சிறிதளவு மாவை ஊற்றி கொள்ளவும்.

    அடுத்து நாம் ஊற்றி வைத்திருக்கும் மாவை சுற்றி தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றவும். (நெய்யை விரும்புபவர்கள் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்துக் கொள்ளலாம்.)

    தோசை நன்கு பொன்னிறம் வரும் வரை அதை வேக விட்டு பொன்னிறம் வந்ததும் அதை ஒரு தோசை கரண்டியின் மூலம் எடுத்து மடித்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    பொதுவாக ரவை தோசையை ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பிப் போட வேண்டிய அவசியமில்லை. எனினும் தேவைப்பட்டால் அதைத் திருப்பிப் போட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மொறு மொறுப்பான ரவா தோசை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • ஆரோக்கியம் மிகுந்த கேழ்வரகு கூழ் செய்வது எப்படி?

    நாம் அனைவரும் வெயிலில் குளிர்ச்சியாக சாப்பிட விரும்புகிறோம். இதற்காக கடைக்கு சென்று குளிர்பானங்கள் வாங்குவோம். மாறாக, உடலுக்கு நன்மை தரும் கூல் கேழ்வரகு பச்சரிசி செய்து குடித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

    தேவையானவை:

    கேழ்வரகு             – கால் கிலோ,

    கொள்ளு, கோதுமை, சோளம், சிவப்பு அரிசி   – தலா 25 கிராம்,

    பொட்டுக்கடலை, கம்பு    – தலா 100 கிராம்.

    முந்திரி, பதாம்           – தலா 10,

    ஏலக்காய்    – 5,

    பார்லி     – 4 டேபிள்ஸ்பூன்,

    நெய், சர்க்கரை    – தலா ஒரு டீஸ்பூன்

    செய்முறை:

    கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, கம்பு ஆகியவற்றை ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, ஒரு துணியில் போட்டு முடிந்து வைத்தால் காலையில் முளைவிட்டிருக்கும்.

    வெறும் வாணலியில் பொட்டுக்கடலை, சோளம், பாதாம், முந்திரி, சிவப்பு அரிசி, பார்லி, ஏலக்காய் எல்லாவற்றையும் தனித்தனியாக நன்கு வறுக்கவும்.

    இவற்றுடன் முளைகட்டிய தானியங்களையும் சேர்த்து அரவை மெஷினில் நைஸாக அரைத்துக் வைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் சூடுபடுத்தவும். அதில் 2 டேபிள்ஸ்பூன் மாவு போட்டு நன்கு கிளறவும். சில நிமிடங்களில் இது கெட்டியாக வெந்துவிடும். இதனுடன் நெய், சர்க்கரை கலந்து கொடுக்கவும்.

    குறிப்பு:

    அனைத்து தானியங்களும் கலந்திருப்பதால் குழந்தை ஆரோக்கியமாக வளரத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. குழந்தைக்கு எளிதில் ஜீரணம் ஆகும். 4 மாதம் முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்.

  • இனிப்பு ராகி தோசை செய்வது எப்படி!!

    நமது ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவைப் பொறுத்தது. ஆம்! இந்த உணவு ஆரோக்கியமான உணவு.

    தேவையானவை:

    கேழ்வரகு மாவு – 200 கிராம்,

    வெல்லம் – 100 கிராம்,

    ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,

    அரிசி மாவு – 4 டீஸ்பூன்,

    நெய் – ஒரு கப்

    செய்முறை:

    வெல்லத்தைப் சிறிய துண்டுளாக உடைத்து கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்து கொள்ளுங்கள், வெல்லத்தில் மண் இருக்கலாம் அதனால் நன்கு வடிகட்டிக்கொள்ளவும்.

    வெல்ல தண்ணீருடன் கேழ்வரகு மாவுடன் சேர்க்கவும். இதனுடன் அரிசி மாவு, ஏலப்பொடி சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

    வெல்ல தண்ணீருடன் மாவு சேர்வதால் கட்டி இல்லாமல் கலந்துகொள்ளவும். அதன் பின் தோசைக்கல்லில் நெய் விட்டு, இந்த மாவை தோசையாக வார்த்து எடுக்கவும்.

    குறிப்பு:

    கேழ்வரகில் கார்போஹைட்ரேட்டும், வெல்லத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளன. இவை இரண்டுமே உடல் வளர்ச்சிக்குத் தேவையானவை. தொட்டுச் சாப்பிட ஏதும் தேவை இல்லை.