மசால் வடை தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய மாலை நேர சிற்றுண்டியாகும். இன்றும் மசாலா வடை என்பது பலரின் விருப்பமான உணவுகளில் ஒன்றாகும். மாலையில், மசாலா வடைகள் விற்கும் ஸ்டால்களின் கூட்டத்தைக் காணலாம்.
Masal வடை பொதுவாக தனியாக உண்ணலாம் ஆனால் சிலர் சாதத்துடன் சைடிஷ் உணவாக சாப்பிடுவார்கள். ஆமை வடிவில் இருப்பதால் மசால் வடை, ஆமை வடை என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு பருப்பு வாடை என்ற மற்றொரு பெயரும் உண்டு.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் மாலை நேர சிற்றுண்டி. அவை தமிழ்நாட்டில் மசாலா வடை என்றும், கேரளாவில் பரிப்பு வட அல்லது மசாலா வடை என்றும், கர்நாடகாவில் மசாலா வடே என்றும் அழைக்கப்படுகின்றன.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு 1 கப்
பெரிய வெங்காயம் 3
பச்சை மிளகாய் 3
காய்ந்த மிளகாய் 2
பூண்டு பல் 4
இஞ்சி துண்டு 1
பட்டை துண்டு 1
சோம்பு 1 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
கருவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி சிறிதளவு
புதினா சிறிதளவு
செய்முறை
முதலில் கடலை பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற வைக்கவும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, புதினா, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, மற்றும் பூண்டை தட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் சோம்பு, பட்டை, காய்ந்த மிளகாய், மற்றும் இஞ்சியை போட்டு அதை ஒரு சுற்று சுற்றி கொள்ளவும்.
பின்பு அதில் நாம் ஊற வைத்திருக்கும் கடலை பருப்பில் இருந்து 2 மேஜைக்கரண்டி அளவு கடலை பருப்பை எடுத்து தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்து மீதமுள்ள கடலை பருப்புகளை போட்டு அதை அரைத்து கொள்ளவும்.
இந்த பருப்பை கொரகொரப்பான பதத்திற்கு அரைத்தால் போதும் அதை நன்கு நைசாக அரைத்து விடக்கூடாது.
இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் இந்த அரைத்த கலவையை போட்டு அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், தட்டி வைத்திருக்கும் பூண்டு, எடுத்து வைத்திருக்கும் கடலை பருப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா, மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
இந்த கலவையை நன்கு கிளறி விட்ட பின் அதிலிருந்து சிறிதளவு மாவை எடுத்து அதை உருண்டையாக உருட்டி பின்பு அதை கையில் வைத்து பக்குவமாக தட்டி அதை தட்டையான வடிவிற்க்கு மாற்றி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
இவ்வாறு மீதமுள்ள மாவுகளையும் உருட்டி பின்பு தட்டி தயார் செய்து தட்டில் வைத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த வடைகளை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
எண்ணெய் சூடான பின் அதில் நாம் தட்டி வைத்திருக்கும் வடைகளை வடசட்டியின் அளவிற்கேற்ப பக்குவமாக எடுத்து எண்ணெய்யில் போடவும்.
பின்பு அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது பொன்னிறம் ஆகும் வரை அதை வேக விடவும்.
வடை இரு புறமும் பொன்னிறமானதும் அதை ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
இவ்வாறு மீதமுள்ள வடைகளையும் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் நன்கு மொறு மொறுப்பாக இருக்கும் மசால் வடை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
Leave a Reply