Category: Snacks

  • சுண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி?

    மழைக்காலம் தொடங்கிவிட்டது. குளிர்ந்த காலநிலைக்கு சில சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். இதற்கு ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை மறந்து விடுங்கள்.

    குழந்தைகள் சாக்லேட் மற்றும் நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள் கடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க சுண்டைக்காய் பயன்படுத்தி பக்கோடா செய்யலாம்.

    சற்றே கசப்பாக இருந்தாலும், சுண்டையக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. பசியே இல்லை என்று சொல்பவர்கள் வாரம் ஒரு முறையாவது சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

    சுண்டைகாயைப் பயன்படுத்தி ஆரோக்கியமான பக்கோடா செய்வது எப்படி என்பதை பார்ப்போம். இன்றே செய்து ருசித்து பாருங்கள்.

    தேவையான பொருட்கள்

    சுண்டைக்காய் – அரை கிலோ

    கடலை மாவு- 1 கப்

    கடலை எண்ணெய் – தேவையான அளவு

    பெருங்காயம் – சிறிதளவு

    இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு

    உப்பு – சுவைக்கு ஏற்ப

    சோம்பு – சிறிதளவு

    மிளகாய் வத்தல் – 5

    செய்முறை

    சுண்டைக்காய் பக்கோடா செய்வதற்கு முதலில் சுண்டைக்காயை இரு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ளவும். குழந்தைகளுக்கு விதைகள் சாப்பிட பிடிக்கவில்லையென்றால் நீக்கிக் கொள்ளலாம்.

    பின்னர் இஞ்சி, பூண்டு இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதையடுத்து சோம்பு, மிளகாய் வத்தலையும் அரைத்து தனித்தனியாக வைத்துக் கொள்ளவும்.

    இதையடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, மிளகாய் வத்தவல் கலவையையும் ஒன்றாக தண்ணீர் விட்டு பிசைந்துக் கொள்ள வேண்டும். இதனுடனே நறுக்கி வைத்துள்ள சுண்டைக்காயையும் அதனுடன் சேர்ந்துக் கலந்து கொண்டு அரை மணி நேரத்திற்கு அப்படியே வைத்து விட வேண்டும்.

    இறுதியாக கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள சுண்டைக்காய் கலவையை எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் போதும். சுவையாக சுண்டைக்காய் பக்கோடா ரெடி.

    இதுபோன்ற முறைகளைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு செய்துக் கொடுக்கவும். சுண்டைக்காய் என்று கூறினால் தான் சாப்பிடுவதற்குத் தயக்கம் காட்டுவார்கள். சாதாரண பக்கோடா என்று கொடுங்கள், நிச்சயம் சுவையை ருசித்து சாப்பிடுவார்கள். நீங்களும் இந்த ரெசிபியை நிச்சயம் உங்களது வீடுகளில் செய்துக் கொடுக்க மறந்து விடாதீர்கள்.

  • செட்டிநாடு ரங்கூன் ஸ்வீட் செய்வது எப்படி?

    செட்டிநாடு அதன் சமையலுக்கு மட்டுமின்றி இனிப்பு வகைகளுக்கும் பிரபலமானது. ரங்கூன் ஸ்வீட் என்பது செட்டிநாடு பகுதியில் உள்ள ஒரு சிறிய சிறப்பு இனிப்பு வகைகளில் ஒன்று.

    வெல்லம் சேர்த்து செய்யக்கூடிய கேசரி வகை இது. இந்த இனிப்பு திருமண நிகழ்வுகளில் வழங்கப்படுகிறது. கேசரி என்று நினைப்போம். ஆனால் அது ரங்கூன் ஸ்வீட். ரங்கூன் ஸ்வீட் மிகவும் எளிதான செய்யக்கூடிய இனிப்பு.வாங்க செய்து ருசிக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    ரவை

    முந்திரி

    திராட்சை

    நெய்

    தேங்காய்

    வெல்லம்

    ஏலக்காய் தூள்

    செய்முறை

    இந்த இனிப்பு தயாரிப்பில் முதல் படி முந்திரி, திராட்சையை நெய்-ல் வறுப்பது. பேனில் ஒன்றரை ஸ்பூன் நெய் ஊற்றி 20 முந்திரி போட்டு பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும்.

    அடுத்ததாக உலர் திராட்சை 25 கிராம் போட்டு வறுத்தால் அது நன்கு உப்பி வரும்.

    இவை இரண்டையும் தனியாக வைக்கவும். அதே பேனில் இரண்டு டீஸ்பூன் நெய் ஊற்றி அரை மூடி தேங்காயை துருவி நெய்-ல் போட்டு வறுங்கள்.

    2-3 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வறுத்த பிறகு அடுப்பை ஆஃப் செய்யுங்கள்.

    அடுத்ததாக ஒரு கப் வெல்லத்தை கடாயில் போட்டு அதற்கு 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.

    இந்த வெல்ல தண்ணீர் ரங்கூன் புட்டு செய்வதற்கு முக்கியமானது. ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை ஆப் செய்யவும்.

    கடாயில் ஐந்து ஸ்பூன் நெய் ஊற்றி அது உருகிய பிறகு 250 கிராம் ரவை போட்டு வறுக்கவும். ரவை நன்கு வறுப்பட்டால் நல்ல வாசனையை நுகர முடியும்.

    இப்போது வெல்ல தண்ணீரை வடிகட்டி ரவை மீது ஊற்றவும். ரவையை வெல்ல தண்ணீரிலேயே வேக வைக்கவும்.

    இனிப்பு அதிகமாக வேண்டுமானால் வெல்லம் ஒன்றரை கப் சேர்க்கலாம்.

    ரவை கொஞ்சம் கொஞ்சமாக கெட்டி ஆக மாற ஆரம்பிக்கும்.

    அடுத்ததாக கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள், வறுத்து வைத்திருக்கும் முந்திரி & திராட்சை மற்றும் தேங்காய் சேர்த்து கலந்து விடுங்கள்.
    இவற்றை சேர்த்த பிறகு ஐந்து ஸ்பூன் நெய் ஊற்றுங்கள்.

    கடாயை குறைந்த தீயில் வைத்து மூடி ஐந்து நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

    ரவை நன்றாக வெந்து தண்ணீர் வற்றி இருக்கும். இறுதியாக மீண்டும் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றுங்கள். ரவை இதை உடனடியாக உறிஞ்சி விடும்.

  • அவல் கொழுக்கட்டை செய்வது எப்படி?

    கோடை விடுமுறைகள் குழந்தைகளுக்கு உற்சாகமாக இருந்தாலும், பெற்றோருக்கும் சவாலாக இருக்கும். பள்ளிக்குச் சென்றாலும் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் சத்தான உணவையே உண்கின்றனர்.

    ஆனால் கோடை விடுமுறை என்பதால் நாள் முழுவதும் விளையாடுவது, தாமதமாக சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் அதிகம். இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

    நம் முன்னோர்களின் பாரம்பரிய உணவுகளில் இதுவும் ஒன்று. இதில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், துத்தநாகம், இரும்பு, மாங்கனீஸ், மெக்னீசியம், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற பல்வேறு சத்துக்கள் இருப்பதால் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. மேலும் இதில் உள்ள சத்துக்கள் உடல் சூட்டை தணித்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

    இந்த அவல் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம். அதைப் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்

    அவல் – 1 கப்

    வெல்லம் – அரை கப்

    தண்ணீர் – கால் கப்

    தேங்காய் துருவியது – கால் கப்

    ஏலக்காய் பொடி – சிறிதளவு

    நெய்- தேவையான அளவு

    செய்முறை

    அவல் கொழுக்கட்டை செய்வதற்கு முதலில் அவலை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    இதையடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை அரை கப் தண்ணீர் ஊற்றி உருகியதும் இறக்கி விடவும். சூடு ஆறியதும் வடிகட்டிக் கொள்ளவும்.

    வடிகட்டி வைத்துள்ள வெல்லத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்துக கிளறவும். பின்னர் அரைத்த அவலையும் சேர்த்து ஓரளவு கெட்டியாகும் வரை கிளற வேண்டும்.

    ஓரளவிற்குக் கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

    இந்த அவல் கலவையை வழக்கம் போல கொழுக்கட்டை எப்படி பிடிப்போமோ? அதுபோன்று பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைத்தால் போதும் சுவையான அவல் கொழுக்கட்டை ரெடி.

    ஒருவேளை உங்களுக்கு இனிப்பு கொழுக்கட்டை பிடிக்கவில்லையென்றால், தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க வைப்பதற்கு முன்னதாக வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை வதக்கிக்கொள்ளவும். பின்னர் வழக்கம் போல கொழுக்கட்டையை தயார் செய்யலாம்.

  • ஆடி கூழ் செய்வது எப்படி?

    உலகெங்கிலும், தமிழ் மாதங்கள் எப்போதுமே கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மத வழிபாடுகளுடன் கலந்த மாறுபட்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. தமிழ் நாட்காட்டியின் நான்காவது மாதமான ஆடி மாதம் அம்மனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.

    ஆடி மாதம் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காளிகாம்பாள், மாரியம்மன், பராசக்தி தேவி மற்றும் பத்ரகாளி போன்ற தெய்வங்களைக் கொண்டாடும் ஒரு பெரிய திருவிழா இது. அம்மன் கோவில்களில் பக்தர்கள் மற்றும் திருவிழாக்களில் கேழ்வரகு கூழ் வழங்குவது தமிழ் கலாச்சார பாரம்பரியமாக கருதப்படுகிறது.

    குறிப்பாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகர்புறங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் இந்த ஆடி மாதம் சிறப்பாக கொண்டாடப்பட்டு பக்தர்களுக்கு கேழ்வரகு கூழ் அம்மன் பிரசாதமாக வழங்கும் வழக்கம் உள்ளது.

    முக்கியமாக குழந்தைகளை தாக்கும் தட்டம்மை, தமிழ் வருடத்தில் கோடை மாதங்களான சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களிலும், அடுத்த பருவத்தின் தொடக்கமான ஆடி மாதத்திலும் அடிக்கடி ஏற்படும்.

    இம்மாதத்தில் நிலவும் குளிர்ச்சியின் காரணமாக ஆடி மாதத்தில் காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது. இந்நிலையை மாற்ற தான் கோவில்களில் கூழ் வைத்து வழிபடுகின்றனர்.

    தேவையான பொருட்கள்

    1 கப் ராகி மாவு

    1/4 கப் பச்சை அரிசி

    சுமார் 2 கப் தண்ணீர் + தேவைக்கேற்ப

    1 கப் தயிர்

    சிறிய வெங்காயம் 2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை 2 டீஸ்பூன்

    பச்சை மிளகாய்

    சுவைக்கு உப்பு

    செய்முறை

    ராகி மாவில் 4 கப் தண்ணீரைச் சேர்த்து, முழுமையாகக் கலந்து கட்டி இல்லாமல் கிளறவும். கட்டியாக இருந்தால் தனியாக ஒதுக்கி வைக்கவும்.

    பச்சை அரிசியை மிக்ஸியில் எடுத்து ரவா போல் அரைக்கவும்.

    அடி கனமான பாத்திரத்தில், 2.5 கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அரிசியைச் சேர்த்து, கஞ்சி போன்ற நிலைத்தன்மைக்கு மென்மையாக சமைக்கவும்.

    பிறகு கலந்து வைத்திருக்கும் ராகி மாவு கலவை மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும்.

    குறைந்த தீயில், அது கெட்டியாகும் வரை மற்றும் ராகி மாவு பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறவும். இது பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாறும்.

    இந்த கட்டத்தில், அதை அணைத்து, பரந்த வாய் கொள்கலனில் பரப்பி, அதை முழுமையாக குளிர்விக்க விடவும்.

    தயிரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும்.

    பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். இப்போது ராகி கூழில், மோர், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் விழுது சேர்க்கவும்.

    கட்டிகள் இல்லாமல் நன்றாக அடிக்கவும்; ஒரு மெல்லிய கூழ் நிலைத்தன்மைக்கு தண்ணீர் சேர்க்கவும். இது மிகவும் சளியாக இருக்க வேண்டும்.

    வெங்காயம் மற்றும் மிளகாயுடன் ஆடி கூழ் பரிமாறவும்.

  • வெஜ் மோமோஸ் செய்வது எப்படி?

    உலகம் முழுவதும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி மோமோஸ். இது மதிய உணவுக்கு முன் ஒரு ஸ்டார்ட்டராகவும் வழங்கப்படுகிறது. உணவுப் பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இதற்கு தனி மோகம் உண்டு.

    மாலை நேரங்களில், மோமோஸ் வழங்கப்படும் உணவகங்கள் மற்றும் நண்பர்கள் கூடும் கடைகளில் கூட்டத்தை நாம் காணலாம். மோமோஸில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பிரபலமானவை சிக்கன் மோமோஸ், பீஃப் மோமோஸ், வெஜிடபிள் மோமோஸ், சீஸ் மோமோஸ் மற்றும் பால் உருண்டை மற்றும் சர்க்கரையால் செய்யப்பட்ட khoa மோமோஸ்.

    மோமோஸ் திபெத்தில் அல்லது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தோன்றியிருக்கலாம் என்று கூறப்பட்டாலும், மோமோஸ் என்ற பெயரே சீன மொழியில் இருந்து வந்தது. அதன்படி, சீனர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று மோமோஸ்.

    இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த பகுதிகளின் உணவு வகைகளுக்கு ஏற்ப சிறுசிறு மாற்றங்களுடன் தயாரித்து சுவைக்கிறார்கள். மோமோஸைத் தொட்டு சாப்பிடுவதற்காகவே ஒரு சட்னி தயாரிக்கப்படுகிறது.

    இந்த சட்னி தக்காளி, கஞ்சா காஷ்மீரி மிளகாய், பூண்டு, மிளகு தூள், சர்க்கரை, வினிகர் மற்றும் உப்பு சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த சட்னியுடன் மோமோஸ் சாப்பிடுவது ஒரு அற்புதமான கலவை என்பதை மறுக்க முடியாது.

    தேவையான பொருட்கள்

    1 கப் மைதா மாவு

    1 பெரிய வெங்காயம்

    1 குடை மிளகாய்

    2 கேரட்

    5 to 6 பீன்ஸ்

    1/2 முட்டைகோஸ் (சின்னது)

    2 பல் பூண்டு

    1 துண்டு இஞ்சி

    1 மேஜைக்கரண்டி மிளகு தூள்

    1 மேஜைக்கரண்டி வினிகர்

    1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்

    சிறிதளவு கொத்தமல்லி

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    செய்முறை

    முதலில் வெங்காயம், குடை மிளகாய், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை தயார் செய்து வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு bowl ல் மைதா மாவு, கால் மேஜைக்கரண்டி அளவு உப்பு, 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய், மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

    பின்பு ஒரு பாத்திரத்தில் வைத்து இறுக்கமாக மூடி போட்டு அதை சுமார் 40 லிருந்து ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.

    அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாய், கேரட், முட்டைகோஸ், மற்றும் பீன்ஸை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வதக்கவும்.

    பின்பு அதில் மிளகாய் தூள், வினிகர், சோயா சாஸ், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வேக விடவும்.

    பின்னர் அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சிறிது நேரம் ஆற விடவும்.

    அடுத்து நாம் ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    இப்பொழுது சப்பாத்தி கல்லில் ஒவ்வொரு உருண்டைகளாக வைத்து சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நாம் செய்து வைத்திருக்கும் ஸ்டப்பிங்கை வைக்கவும்.

    ஸ்டப்பிங்கை வைத்த பின் அவரவருக்கு பிடித்தமான வடிவில் மோமோஸ்ஸை மடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    பின்பு இட்லி தட்டை எடுத்து அதில் எண்ணெய்யை தடவி இந்த மோமோஸ்ஸை அதில் வைக்கவும்.

    அடுத்து இட்லி அவிக்கும் பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி தட்டை வைத்து மூடி போட்டு சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை அதை வேக விடவும்.

    10 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து மோமோஸ்ஸை எடுத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான வெஜ் மோமோஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • உருளைக்கிழங்கு கோலா உருண்டை செய்வது எப்படி?

    பொதுவாக உருளைக்கிழங்கில் செய்யப்படும் அனைத்து உணவுகளையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இன்று இங்கு இருப்பது பிசைந்த உருளைக்கிழங்கு உருண்டைகள்.

    இவை நமது வழக்கமான மாலை நேர சிற்றுண்டிகளுக்கு சிறந்த மாற்றாகும். இந்த மொறுமொறுப்பான மசித்த உருளைக்கிழங்கு கோலா உருண்டைகளை கெட்சப்வுடன் சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.

    இதில் உள்ள பெரிய விஷயம் என்னவென்றால், வீட்டுப் பொருட்களைக் கொண்டு எளிதாக, சிரமமின்றி, குறைந்த நேரத்தில் செய்துவிட முடியும். மேலும் சமையல்காரர்கள் அல்லாதவர்கள் கூட மிக எளிதாக செய்து விடுவார்கள்.

    மேலும் இதற்கு நிறைய பொருட்கள் தேவையில்லை. அவசர காலங்களில் குறைந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய சுவையான ஸ்நாக்ஸ் இவை.

    தேவையான பொருட்கள்

    4 உருளைக்கிழங்கு

    ½ கப் பொட்டு கடலை

    1 பெரிய வெங்காயம்

    1 பச்சை மிளகாய்

    ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை

    முதலில் உருளைக்கிழங்கை சுத்தம் செய்து, வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.

    25 நிமிடத்துக்கு பிறகு அதை எடுத்து சிறிது நேரம் ஒரு பாத்திரத்தில் வைத்து ஆற விட்டு பின்பு அதை எடுத்து ஒரு bowl ல் வைத்து நன்கு ஒரு கரண்டியின் மூலம் மசித்து விடவும்.

    பிறகு அரை கப் அளவு பொட்டு கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.

    பின்னர் நாம் உருளைக்கிழங்கை மசித்து வைத்திருக்கும் bowl லை எடுத்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பொட்டு கடலை மாவில் இருந்து இரண்டரை மேஜைக்கரண்டி அளவு மாவை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், கரம் மசாலா, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். (தண்ணீர் எதுவும் இதில் சேர்த்து விடக்கூடாது.)

    அடுத்து அதில் எலுமிச்சம் பழம் அளவு மாவை எடுத்து அதை நன்கு உருட்டி பின்பு அதை கையில் வைத்து பக்குவமாக தட்டி அதை தட்டையான வடிவிற்க்கு மாற்றி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இவ்வாறு மீதமுள்ள மாவுகளையும் உருட்டி பின்பு தட்டி தயார் செய்து தட்டில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் தட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி போட்டு அது பொன்னிறம் ஆகும் வரை அதை வேக விடவும்.

    அது இரு புறமும் பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான பிசைந்த உருளைக்கிழங்கு பந்துகள் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • அவல் லட்டு தயார் செய்வது எப்படி?

    அவுல் லட்டு கிருஷ்ண ஜெயந்தியின் போது செய்யப்படும் ஒரு பிரபலமான இனிப்பு. கிருஷ்ணர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரம். கிருஷ்ணர் அவுலை மிகவும் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

    எனவே, கிருஷ்ணரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி அன்று அவல் லட்டு என்று அழைக்கப்படும் இந்த போஹா லட்டுவை பலர் செய்கிறார்கள். இந்த போஹா லட்டு செய்ய சிவப்பு அவல் அல்லது வெள்ளை அவல் பயன்படுத்தலாம். சிவப்பு அவலின் சுவை மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கும்.

    பூஜை முடிந்ததும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அவல் லட்டு பரிமாறப்படுகிறது. இந்த அவல் லட்டு மிகவும் சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சிற்றுண்டியாகவும் இதை வழங்கலாம்.

    மங்களகரமான சந்தர்ப்பங்களில் இந்த அவல் லட்டுவை ருசிப்பதற்கான செய்முறை இங்கே…

    தேவையான பொருட்கள்

    வெள்ளை அவல்

    வெல்லம்

    நெய்

    நல்லெண்ணெய்

    ஏலக்காய்

    தேங்காய் துருவல்

    முந்திரி

    உலர்திராட்சை

    செய்முறை

    அவல் லட்டு செய்வதற்கு முதலில் அரை மூடி தேங்காயை துருவிக் கொள்ளவும்.

    பேனில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு 250 கிராம் வெள்ளை அவல் போட்டு வறுக்கவும். சிலர் எண்ணெய் ஊற்றாமல் கூட வறுப்பார்கள்.

    அவலின் நிறம் மாறி கொஞ்சம் மொறுமொறுப்பாக வறுபட்டவுடன் அடுப்பை அணைக்கவும்.

    அவல் வறுத்த பேனிலேயே மீண்டும் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி தேங்காய் துருவலை வறுக்கவும்.

    மிதமான தீயில் வைத்து தேங்காய் துருவல் கருகாமல் பழுப்பு நிறத்திற்கு மாறும்படி வறுக்கவும்.

    இதனிடையே கடாயில் மூன்று ஸ்பூன் நெய் ஊற்றி அது சூடான பிறகு 50 கிராம் முந்திரி மற்றும் 50 கிராம் உலர்திராட்சை போட்டு பொன்னிறத்திற்கு வறுக்கவும்.

    அடுத்ததாக 400 கிராம் பவுடர் வெல்லம் மற்றும் வறுத்து வைத்திருக்கும் தேங்காய் துருவலை அம்மியில் ஆட்டவும்.

    இதே போல 6-7 ஏலக்காயை பொடியாக்கவும். அடுத்ததாக வறுத்த அவுலை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் நன்கு பொடிதாக அரைக்கவும்.

    வெல்லம் – தேங்காய் துருவல் கலவை, ஏலக்காய் தூள், பொடியாக அரைத்த அவுல், நெய்-ல் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை அனைத்தையும் பாத்திரத்தில் போட்டு நன்கு மிக்ஸ் செய்யவும்.

    உங்களுக்கு பிடித்தமான சைஸில் உருண்டை பிடிக்கவும். நாம் பயன்படுத்திய வெல்லத்தின் அளவு மிகச்சரியாக இருக்கும். கூடுதல் இனிப்பு சேர்க்க தேவையில்லை.

  • கேப்பை ரொட்டி தயார் செய்வது எப்படி?

    இன்றைய இயந்திர உலகில் இயங்கும் நாம், உடலுக்கு சக்தி தரும் காலை உணவை சாப்பிட மறந்து விடுகிறோம். நாள் முழுவதும் உடலை உற்சாகமாக வைத்திருக்க மதிய உணவை விட காலை உணவு மிகவும் சிறந்தது. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

    பள்ளி, கல்லூரிக்கு சென்றாலும் காலை உணவாக சிறிது சாப்பிட வேண்டும். வீட்டில் உள்ள தாய்மார்களும் தினமும் ஒரு காலை உணவை வேகமாக இட்லி, தோசை, உப்புமா போன்றவற்றை சமைக்க வேண்டும்.

    ஒரே மாதிரியான உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் சலிப்பு ஏற்படும். இதைத் தவிர்க்க வெறும் 5 நிமிடங்களில் கேப்பை மாவில் செய்யப்பட்ட கேப்பை ரொட்டியை செய்யலாம். உங்களுக்கான செய்முறை குறிப்புகள் இதோ.

    தேவையான பொருட்கள்:

    கேப்பை மாவு – 1 கப்

    நறுக்கிய வெங்காயம் – அரை கப்

    மிளகாய், சீரகம்- தேவைக்கு ஏற்ப

    கறிவேப்பிலை – தாளிப்புக்கு ஏற்ப

    கடலைப் பருப்பு- சிறிதளவு

    எண்ணெய் – சிறிதளவு

    உப்பு- சுவைக்கு ஏற்ப

    செய்முறை:

    கேப்பை ரொட்டி செய்வதற்கு முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் கேப்பை மாவை எடுத்துக்கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டி பதத்திற்கு நன்கு பிசைத்துக் கொள்ளவும்.

    இதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், சீரகம் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து பிசைத்தால் போதும். கேப்பை மாவிற்கான மாவு ரெடி.

    பின்னர் இந்த கேப்பை மாவிற்கு சுவையை அதிகரிக்க விரும்பினால் கடாயில் கடலைப் பருப்பை நன்றாக வறுத்தெடுத்து, ஏற்கனவே பிசைந்து வைத்துள்ள மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.

    இதையடுத்து தோசைக்கல் சூடேறியதும், கேப்பை ரொட்டி செய்வதற்காக பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்தி போன்று தட்டிப் போட்டால் போதும். சுவையான கேப்பை ரொட்டி ரெடி.

    இதற்கு சைட் டிஸ்ஸாக பொரிகடலை சட்னி, தக்காளி சட்னி என உங்களுக்கு எது பிடிக்குமோ? அதை வைத்து சாப்பிட்டால் போதும். சுவையுடன் ஆரோக்கியத்தை உங்களுக்குக் கொடுக்கும்.

  • மசால் வடை செய்வது எப்படி?

    மசால் வடை தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய மாலை நேர சிற்றுண்டியாகும். இன்றும் மசாலா வடை என்பது பலரின் விருப்பமான உணவுகளில் ஒன்றாகும். மாலையில், மசாலா வடைகள் விற்கும் ஸ்டால்களின் கூட்டத்தைக் காணலாம்.

    Masal வடை பொதுவாக தனியாக உண்ணலாம் ஆனால் சிலர் சாதத்துடன் சைடிஷ் உணவாக சாப்பிடுவார்கள். ஆமை வடிவில் இருப்பதால் மசால் வடை, ஆமை வடை என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு பருப்பு வாடை என்ற மற்றொரு பெயரும் உண்டு.

    தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் மாலை நேர சிற்றுண்டி. அவை தமிழ்நாட்டில் மசாலா வடை என்றும், கேரளாவில் பரிப்பு வட அல்லது மசாலா வடை என்றும், கர்நாடகாவில் மசாலா வடே என்றும் அழைக்கப்படுகின்றன.

    தேவையான பொருட்கள்

    கடலை பருப்பு 1 கப்

    பெரிய வெங்காயம் 3

    பச்சை மிளகாய் 3

    காய்ந்த மிளகாய் 2

    பூண்டு பல் 4

    இஞ்சி துண்டு 1

    பட்டை துண்டு 1

    சோம்பு 1 மேஜைக்கரண்டி

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    கருவேப்பிலை சிறிதளவு

    கொத்தமல்லி சிறிதளவு

    புதினா சிறிதளவு

    செய்முறை

    முதலில் கடலை பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற வைக்கவும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, புதினா, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, மற்றும் பூண்டை தட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் சோம்பு, பட்டை, காய்ந்த மிளகாய், மற்றும் இஞ்சியை போட்டு அதை ஒரு சுற்று சுற்றி கொள்ளவும்.

    பின்பு அதில் நாம் ஊற வைத்திருக்கும் கடலை பருப்பில் இருந்து 2 மேஜைக்கரண்டி அளவு கடலை பருப்பை எடுத்து தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்து மீதமுள்ள கடலை பருப்புகளை போட்டு அதை அரைத்து கொள்ளவும்.

    இந்த பருப்பை கொரகொரப்பான பதத்திற்கு அரைத்தால் போதும் அதை நன்கு நைசாக அரைத்து விடக்கூடாது.

    இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் இந்த அரைத்த கலவையை போட்டு அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், தட்டி வைத்திருக்கும் பூண்டு, எடுத்து வைத்திருக்கும் கடலை பருப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா, மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

    இந்த கலவையை நன்கு கிளறி விட்ட பின் அதிலிருந்து சிறிதளவு மாவை எடுத்து அதை உருண்டையாக உருட்டி பின்பு அதை கையில் வைத்து பக்குவமாக தட்டி அதை தட்டையான வடிவிற்க்கு மாற்றி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இவ்வாறு மீதமுள்ள மாவுகளையும் உருட்டி பின்பு தட்டி தயார் செய்து தட்டில் வைத்து கொள்ளவும்.

    பின்னர் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த வடைகளை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் தட்டி வைத்திருக்கும் வடைகளை வடசட்டியின் அளவிற்கேற்ப பக்குவமாக எடுத்து எண்ணெய்யில் போடவும்.

    பின்பு அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது பொன்னிறம் ஆகும் வரை அதை வேக விடவும்.

    வடை இரு புறமும் பொன்னிறமானதும் அதை ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இவ்வாறு மீதமுள்ள வடைகளையும் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் நன்கு மொறு மொறுப்பாக இருக்கும் மசால் வடை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • பால் பணியாரம் செய்வது எப்படி?

    பால் பணியாரம் தமிழ்நாட்டின் பிரபலமான இனிப்பு உணவு. செட்டிநாட்டு உணவு வகைகளை அடிப்படையாக கொண்டு, தமிழகத்தின் சிவகங்கை, புதுக்கோட்டை பகுதிகளில் வசிக்கும் பலரின் வீடுகளில் திருவிழாக் காலங்களில் இவை கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.

    வீட்டு திருமண விழாக்களிலும், விஷேசம் காலங்களிலும் பால் பணியாரங்கள் பரவலாகக் இடத்தை பிடித்திருக்கும். சாதாரண நாட்களில் கூட மாலை நேர சிற்றுண்டியாக பால் பணியாரத்தை சாப்பிடுவார்கள்.

    பால் பணியாரம் பல தலைமுறைகளைக் கடந்தாலும், அனைவராலும் விரும்பப்படும் உணவாக இருந்தாலும், பெரியோர்களின் பால் பணியார வரவேற்பு தனித்தன்மை வாய்ந்தது. பால் பணியாரின் சிறப்பு என்னவென்றால், மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும்.

    பணியாரம் செய்வதற்கு மிக எளிமையான செய்முறை தான் எனினும் இதை செய்வதற்கு சிறிது நேரம் பிடிக்கும். ஆனால் இதை செய்து நாம் சுவைக்கும் போது நாம் செலவிட்ட நேரம் மிகவும் பயன் ஆனது தான் என்று தோன்றும்.

    தேவையான பொருட்கள்

    உளுத்தம் பருப்பு 1 கப்

    பச்சரிசி 1 கப்

    சர்க்கரை  1 1/2 கப்

    தேங்காய் 1

    4 to 6 ஏலக்காய்

    1 சிட்டிகை உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    செய்முறை

    முதலில் உளுந்து மற்றும் பச்சரிசியை நன்கு கழுவி அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.

    அடுத்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து தேவைப்பட்ட அளவு தண்ணீரை தெளித்து அதை நன்கு நைசாக அரைத்த பின்பு ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்.

    பின்பு மிக்ஸி ஜாரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் இருக்கும் மாவை நன்கு அலசி பாத்திரத்தில் இருக்கும் மாவில் ஊற்றி அதை தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும். (தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.)

    இப்பொழுது தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஏலக்காயையும் போட்டு அதை நன்கு அரைத்து கொள்ளவும்.

    பின்னர் நாம் அரைத்த தேங்காயை ஒரு வடிகட்டி மூலம் வடிகட்டி தேங்காய் பாலை மட்டும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

    அடுத்து அந்த தேங்காய் பாலில் ஒன்றரை கப் அளவு சர்க்கரையோ அல்லது அவரவர் விருப்பத்திற்கேற்ப சர்க்கரையை சேர்த்து அதை நன்கு கரையும் வரை ஒரு கரண்டி மூலம் கலக்கி விட்டு சர்க்கரை கரைந்ததும் அதை மீண்டும் ஒரு முறை வடிகட்டி வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பணியாரத்தை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் மாவை நம் கைகளின் மூலம் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக கடாயின் அளவிற்கேற்ப போடவும்.

    பின்னர் பணியாரம் ஒரு புறம் வெந்ததும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது வெந்ததும் அதை எடுத்து எண்ணெய்யை ஜல்லி கரண்டியின் மூலம் நன்கு வடித்து ஒரு தட்டில் போட்டு வைத்து கொள்ளவும்.

    இவ்வாறு மீதமுள்ள மாவையும் எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும். (பணியாரம் ஒன்றோடு ஒன்று ஓட்டி கொண்டிருந்தால் அதை இப்பொழுதே பிரித்து வைத்து கொள்ளவும்.)

    அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த பணியாரத்தை போட்டு எடுப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீரை சுட வைக்கவும்.

    தண்ணீர் சூடானதும் அதில் நாம் பொரித்து வைத்திருக்கும் பணியாரத்தை போட்டு தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு பணியாரத்தை எடுத்து ஒரு வடிகட்டியில் போட்டு தண்ணீரை நன்கு வடிய விடவும். (இவ்வாறு செய்வதால் பணியாரம் எளிதாக தேங்காய் பாலில் ஊறி விடும்.)

    தண்ணீர் வடிந்தவுடன் பணியாரத்தை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் தேங்காய் பாலில் போட்டு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை ஊற விட்ட பின்பு அதை பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சுவையான மற்றும் இனிப்பான பால் பணியாரம் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.