Author: Arumugam K

  • சுவையான முட்டை பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி?

     குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு முட்டை. முட்டை பொதுவாக வெவ்வேறு வழிகளில் சமைக்கப்படுகிறது. அப்படியென்றால் இன்று நாம் இங்கு காணவிருப்பது வித்தியாசமான முட்டை பெப்பர் ஃப்ரை.

    இந்த முட்டை பெப்பர் ஃப்ரையை பிரைடு ரைஸுடன் அல்லது மற்ற உணவுகளுக்கு சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம். இவை மாலை நேர சிற்றுண்டியாக எளிமையாக செய்து சாப்பிடுவதற்கு ஏற்றது.

    இந்த எக் பெப்பர் ஃப்ரையை நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சிரமம் இல்லாமல் எளிதாக செய்யலாம். உடலுக்குத் தேவையான புரதச் சத்து வழங்கும் முட்டை, மிளகாய் சேர்த்துச் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது.

    எனவே இதை நம் குழந்தைகள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்ததும் அவர்களுக்கு ஒரு சிறந்த மாலை நேர சிற்றுண்டியாக செய்யலாம். அல்லது அவர்களுக்கு மதிய உணவு செய்யுங்கள்.

    தேவையான பொருட்கள்

    3 முட்டை

    2 பெரிய வெங்காயம்

    1 தக்காளி

    3 பல் பூண்டு

    1 துண்டு இஞ்சி

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    1½ மேஜைக்கரண்டி மிளகு

    1 மேஜைக்கரண்டி மல்லி விதைகள்

    ½ மேஜைக்கரண்டி சோம்பு

    ½ மேஜைக்கரண்டி சீரகம்

    2 பட்டை துண்டு

    4 கிராம்பு

    1 ஏலக்காய்

    1 வரமிளகாய்

    மிளகாய் தூள்  தேவையான அளவு 

    எண்ணெய்  தேவையான அளவு 

    உப்பு  தேவையான அளவு

    சிறிதளவு கருவேப்பிலை

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை

    முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் முட்டைகளை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் முட்டைகளை போட்டு அதை சுமார் 10 லிருந்து 12 நிமிடம் வரை வேக விடவும்.

    12 நிமிடத்திற்கு பிறகு முட்டைகளை வெளியே எடுத்து சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதன் கூடை உரித்து அதை 2 துண்டுகளாக வெட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் மிளகு, சோம்பு, சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய், காஞ்ச மிளகாய், மற்றும் மல்லி விதைகளை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வறுக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி சிறிது நேரம் ஆற விடவும்.
    அது நன்கு ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மஞ்சள் தூள், மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் நாம் வெட்டி வைத்திருக்கும் முட்டை துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு அதை நன்கு அந்த மசாலாக்கலோடு ஒட்டுமாறு கிளறி விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, கருவேப்பிலை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை போட்டு அதை நன்கு கிளறி விட்டு பின்பு அதில் சிறிதளவு தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை அதை கொதிக்க விடவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் செய்து வைத்திருக்கும் முட்டைகளை போட்டு அது நன்கு மசாலாக்கலோடு ஒட்டுமாறு அதை கிளறி விட்டு பின்பு அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு முட்டை பெப்பர் ஃப்ரையை சுட சுட சாதத்தில் ஊற்றி பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான முட்டை பெப்பர் ஃப்ரை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • செட்டிநாடு பச்சை பட்டாணி காளான் மசாலா செய்வது எப்படி?

    சைவ உணவு உண்பவர்களுக்கு காளான் மிகவும் பிடித்தமானது. அனைத்து வகையான காளான்களிலும் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.

    காளான்களில் புரதங்கள், வைட்டமின் சி, பி மற்றும் டி, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.

    அப்படிப்பட்ட காளான்களை வைத்து செட்டிநாடு பச்சை பட்டாணி காளான் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    காளான் – 450 கிராம்

    பச்சை பட்டாணி – 3/4 கப்

    வெங்காயம் – 1 (நறுக்கியது)

    தக்காளி – 2 (நறுக்கியது)

    இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் – 2

    மிளகாய் தூள் – 1 1 /4 டீஸ்பூன்

    மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

    கரம் மசாலா – 1 /4 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் – 1 /4 டீஸ்பூன்

    கெட்டியான தேங்காய் பால் – 1 /4 கப்

    கொத்தமல்லி – சிறிது

    சீரகம் – 1 /2 டீஸ்பூன்

    உப்பு – சுவைக்கேற்ப

    எண்ணெய் – 1 1 /2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    முதலில் காளானை சுத்தம் செய்து, நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் பச்சை பட்டாணியை நீரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், காளானை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.

    அதே வாணலியில் மீண்டும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி, பின் தக்காளியைப் போட்டு, உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    வதக்கிக் வைத்திருக்கும் அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுத்து அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பச்சை மிளகாய் மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிய ஆரம்பித்ததும், அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, சிறிது நீர் ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.

    இறுதியாக தேங்காய் பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லி மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், செட்டிநாடு பச்சை பட்டாணி காளான் மசாலா தயார்.

  • ஃபிஷ் பிரியாணி செய்வது எப்படி?

      பிரியாணி உணவு பிரியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பிடித்தமான உணவாகும். பொதுவாக அனைவரும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி செய்து ருசிப்பார்கள். ஆனால் மீன் பிரியாணியும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி போன்ற ஒரு அற்புதமான பிரியாணி.

    மீன் பிரியாணி மீன் பிரியர்களுக்கு அவசியம். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி போல மீன் மிருதுவாக இருப்பதினால் மீனை அதிக நேரம் வேக விட்டால் குழைந்து விடும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள செய்முறையை சரியாகப் பின்பற்றினால், மீன் உடையாமல் சரியாக சமைக்கப்படும்.

    தேவையான பொருட்கள்:

    1/2 கிலோ மீன்

    1/2 கிலோ பாசுமதி அரிசி

    3 தக்காளி

    1 பெரிய வெங்காயம்

    3 பச்சை மிளகாய்

    1 எலுமிச்சம்பழம்

    1/4 கப் தேங்காய்

    1 கப் தேங்காய் பால்

    1/2 மேஜைக்கரண்டி மிளகுத் தூள்

    மல்லித் தூள்  1/4 மேஜைக்கரண்டி 

    சீரக தூள்  1/4 மேஜைக்கரண்டி 

    சோம்பு தூள்  1/4 மேஜைக்கரண்டி 

    1/2 மேஜைக்கரண்டி சோம்பு

    5 துண்டு இஞ்சி

    13 பூண்டு பல்

    6 கிராம்பு

    8 ஏலக்காய்

    2 துண்டு பட்டை

    1 பிரியாணி இலை

    1/4 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    8 to 10 முந்திரி

    எண்ணெய் தேவையான அளவு

    நெய் தேவையான அளவு

    மிளகாய் தூள் தேவையான அளவு

    சிறிதளவு புதினா

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை

    முதலில் மீனை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக்கி வைத்து பாசுமதி அரிசியை நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

    பின்பு வெங்காயம், தக்காளி, தேங்காய், முந்திரியை தயார் செய்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய், 3 ஏலக்காய், சோம்பு, மற்றும் பச்சை மிளகாயை போட்டு அதை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது சிறு சிறு துண்டங்களாக ஆக்கி வைத்திருக்கும் மீனை ஒரு bowl ல் போட்டு அதில் தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

    பின்பு அதில் கால் மேஜைக்கரண்டி மிளகுத் தூள், சோம்பு தூள், மல்லி தூள், சீரகத் தூள், ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு பிரட்டி அதை சுமார் 25 நிமிடம் வரை அதை அப்படியே ஊற விடவும்.

    25 நிமிடத்திற்கு பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 10 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் 4 மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் ஊற வைத்திருக்கும் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு நன்கு பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத் துமீன் பொரித்தெடுத்த எண்ணெய்யை வடி கட்டி அதில் சேர்த்து சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, மற்றும் ஒரு பிரியாணி இலையை சேர்த்து அதை வதக்கவும்.

    இவை வதங்கியதும் அதில் 2 பச்சை மிளகாய், முந்திரி, மற்றும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் சாதத்திற்கு தேவையான அளவு உப்பு, கால் மேஜைக்கரண்டி அளவு மிளகுத் தூள், சோம்பு தூள், கரம் மசாலா, அவரவர் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் மற்றும் 3 மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.

    இப்பொழுது நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து இந்த மசாலாவில் சேர்த்து பக்குவமாக கிளறி விடவும்.

    அரிசியை நன்கு கிளறி விட்டதும் அதில் ஒரு கப் அளவு தேங்காய் பால் ஒன்றரை கப் அளவு தண்ணீர் மற்றும் மீதமுள்ள எலுமிச்சம் பழ சாறை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    பின்பு குக்கரில் மூடியை போட்டு விசில் போடாமல் சுமார் 2 நிமிடம் வரை ஆவி வரும் வரை அதை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு மூடியை திறந்து 2 கரண்டி அளவு பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது நாம் வறுத்து வைத்திருக்கும் மீனை சாதத்தில் வைத்து சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லியை தூவி விடவும்.

    பின்பு தட்டில் இருக்கும் சாதத்தை அதன் மேலே போட்டு மீதமுள்ள மீன், புதினா மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு மேஜைக்கரண்டி நெய்யை ஊற்றி மூடி போட்டு விசில் வைத்து சுமார் ஒரு விசில் வரும் வரை வேக விட்டு பின்பு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு குக்கரை அடுப்பிலேயே 3 நிமிடம் வரை வைத்திருக்கவும்.

    3 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட ரைத்தா உடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான ஃபிஷ் பிரியாணி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • அசைவ பிரியர்களுக்கான செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்வது எப்படி?

    மட்டன் சுக்கா தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான உணவு. அசைவ பிரியர்கள் மத்தியில் இதற்கு தனி வரவேற்பு உண்டு. குறிப்பாக தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இவை இல்லாத ஹோட்டல்களும், கையேந்தி சாப்பாடு கடைகளும் கிடைப்பது மிகவும் அரிது.

    மட்டன் சுக்காவை சாதத்தில் சேர்த்து உண்பதற்கும், சப்பாத்தி, நான்க்கு சைடிஃஷ் ஆக உண்பதற்கும் அருமையாக இருக்கும். இதைப் பற்றிய பெரிய விஷயம் என்னவென்றால், அதை உருவாக்க அதிக நேரம் எடுக்காது மற்றும் சிக்கலான செய்முறை எதுவும் இல்லை.

    சமைக்கத் தெரியாதவர்களும் இதை மிக எளிதாக செய்யலாம். இதற்கு தேவையான மசாலாவை தயார் செய்தால் மிக எளிதாக செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    1/2 kg மட்டன்

    10 to 15 சின்ன வெங்காயம்

    3 பல் பூண்டு

    இஞ்சி  1 துண்டு

    மிளகு  1 மேஜைக்கரண்டி

    சீரகம்  1 மேஜைக்கரண்டி

    மல்லி  1 மேஜைக்கரண்டி

    1/2 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    3 காஞ்ச மிளகாய்

    சிறிதளவு கொத்தமல்லி

    சிறிதளவு கருவேப்பிலை

    மிளகாய் தூள்  தேவையான அளவு

    எண்ணெய்  தேவையான அளவு

    உப்பு  தேவையான அளவு

    செய்முறை

    முதலில் மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்து, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு அதனுடன் மஞ்சள் தூளையும் சேர்த்து வதக்கவும்.

    பின்பு அதில் நாம் கழுவி வைத்திருக்கும் மட்டனை சேர்த்து அது நன்கு இஞ்சி பூண்டு பேஸ்டுடன் ஒட்டுமாறு சுமார் ஒரு நிமிடம் வரை கிளறி விட்ட பின் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு குக்கரில் மூடி போட்டு மட்டனை சுமார் 5 நிமிடம் வரை வேக விடவும்.

    5 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து பார்த்தால் மட்டன் நன்றாக தண்ணீர் விட்டு இருக்கும் அதனுடன் நாம் மேலும் கால் கப் அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் மூடி போட்டு அதை சுமார் 15 நிமிடம் வரை வேக விடவும்.

    நாம் மீண்டும் மட்டனை வேக வைக்க போவதால் மட்டன் 90 விழுக்காடு வெந்தால் போதும்.

    மட்டன் வேகுவதற்குள் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் மிளகு, சீரகம், மல்லி, மற்றும் காஞ்ச மிளகாயை போட்டு அது நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.

    பின்பு அதை சிறிது நேரம் ஆற விட்ட பின் அப்படியே ஒரு மிக்ஸி ஜார்க்கு மாற்றி நன்கு அரைத்து கொள்ளவும்.

    15 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அனைத்து விட்டு குக்கரின் மூடியை திறந்து பார்த்தால் மட்டன் 90 விழுக்காடு வெந்து தண்ணீரும் சரியாக இருக்கும். (ஒரு வேளை தண்ணீர் அதிகமாக இருந்தால் அதை தனியாக எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.)

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் சிறிதளவு கருவேப்பிலை, ஒரு காஞ்ச மிளகாய், மற்றும் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் மட்டனை சேர்த்து நன்கு கிளறி விட்டு அதை வேக விடவும்.

    தண்ணீர் அதிகமாக இருந்து அதை தனியாக பாத்திரத்தில் எடுத்து வைத்திருந்தால் இப்பொழுது இதில் சேர்த்து கொள்ளவும்.

    பின்பு அதில் கரம் மசாலா மற்றும் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை தூவி நன்கு கிளறி விட்டு மூடி போட்டு அடுப்பை முற்றிலுமாக குறைத்து வைத்து அதை சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை வேக விடவும்.

    10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • பெப்பர் சிக்கன் செய்வது எப்படி?

    பொதுவாக அசைவ பிரியர்கள் மத்தியில் சிக்கன் மிகவும் பிரபலமானது. பிரபலமான சிக்கன் உணவுகளில் சிக்கன் 65, பட்டர் சிக்கன், தந்தூரி சிக்கன், கிரில் சிக்கன், பெப்பர் சிக்கன் போன்றவை அடங்கும்.

    இவற்றில் காரத்தை விரும்புவோருக்கு பெப்பர் சிக்கன் சிறந்த தேர்வாகும். இந்த உணவு மிகவும் எளிமையானது மற்றும் பாரம்பரிய செட்டிநாடு சமையல் முறையைப் பின்பற்றுகிறது. ஏனெனில் மிளகு தவிர வேறு எந்த மசாலாவும் சேர்க்கப்படுவதில்லை.

    மிளகாயை சிக்கனில் சேர்ப்பதால் மற்ற சிக்கன் உணவுகளை விட இவை அதிக சத்தானவை. ஜலதோஷம், வாயு பிரச்சனை மற்றும் செரிமானத்திற்கு மிளகு மிகவும் நல்லது.

    இப்போது பெப்பர் சிக்கன் தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் எளிய செய்முறையை கீழே பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    500 கிராம் சிக்கன்

    2 பெரிய வெங்காயம்

    1 1/2 மேசைக்கரண்டி மிளகு

    1 மேசைக்கரண்டி சோம்பு

    1 மேசைக்கரண்டி சீரகம்

    1 துண்டு பட்டை

    2 கிராம்பு

    2 காய்ந்த மிளகாய்

    2 பச்சை மிளகாய்

    1 துண்டு இஞ்சி

    4 பல் பூண்டு

    1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    கருவேப்பிலை சிறிதளவு

    கொத்தமல்லி சிறிதளவு

    செய்முறை

    முதலில் மிளகு, சோம்பு, மற்றும் சீரகத்தை ஒன்றாக ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி மற்றும் பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் கிராம்பு, பட்டை, காய்ந்த மிளகாய், மற்றும் சிறிதாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வெங்காயம் நன்றாக பொன் நிறம் வரும் அளவிற்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கி பொன்னிறமானதும் அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய், மற்றும் அரைத்து வைத்துள்ள மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    பின்னர் சிக்கன் துண்டுகளை அதில் போட்டு பெப்பர் நன்றாக சிக்கன் துண்டுகளில் ஓட்டும் அளவிற்கு புரட்டிப் போடவும்.

    பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாத்திரத்தில் ஒரு மூடியைப் போட்டு சிக்கனை வேக விடவும்.

    சிக்கன் வெந்ததும் அதில் சிறிது அளவு கருவேப்பிலையை போட்டு ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் வைத்து சிறிது கொத்தமல்லியை மேலே தூவவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பெப்பர் சிக்கன் தயார்.

    இதை வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி செய்வது எப்படி?

    சிக்கன் கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவாகும். இன்னும் கொஞ்சம் காரம் தூக்கலாக செய்தால் எப்படி இருக்கும்?. அதைத்தான் இன்று பார்க்க வந்திருக்கிறோம். நமது உள்ளூர் சிக்கன் கிரேவிக்கும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவிக்கும் உள்ள பெரிய வித்தியாசம் காரமானது.

    ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி நமது உள்ளூர் சிக்கன் கிரேவியை விட இரண்டு மடங்கு காரமாக இருக்கும். ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி நம் உள்ளூர் சிக்கன் கிரேவியை சாப்பிட்டு அலுப்பவர்களுக்கு நல்ல மாற்று. அதிக காரமாக விரும்பாதவர்கள் அதில் நாம் சேர்க்கும் மிளகாய்த்தூள் மற்றும் பச்சை மிளகாயின் அளவைக் குறைத்துக்கொள்ளலாம்.

    மசாலாப் பிரியர்கள் இதை அப்படியே செய்து, சாதத்தில் அல்லது சப்பாத்தி, நாண், பராத்தா போன்றவற்றில் சைட் டிஷ்ஷாக சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுதே உங்கள் நாவில் எச்சில் ஊர ஆரம்பித்து விட்டதா?

    தேவையான பொருட்கள்

    500 கிராம் சிக்கன்

    2 பெரிய வெங்காயம்

    2 தக்காளி

    3 பச்சை மிளகாய்

    10 to 15 தேங்காய் துண்டுகள்

    3 பூண்டு பல்

    1 இஞ்சி துண்டு

    2 மேஜைக்கரண்டி தனியா

    1 மேஜைக்கரண்டி கசகசா

    ½ மேஜைக்கரண்டி சீரகம்

    ½ மேஜைக்கரண்டி சோம்பு

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    1 பட்டை துண்டு

    2 ஏலக்காய்

    3 கிராம்பு

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு கருவேப்பிலை

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை

    முதலில் வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு பிரட்டி ஒரு மூடி போட்டு அப்படியே வைத்து சுமார் 30 நிமிடம் வரை ஊற விடவும்.

    பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தனியா, சீரகம், சோம்பு, 2 மேஜைக்கரண்டி கசகசா, பட்டை, ஏலக்காய், மற்றும் கிராம்பை சேர்த்து அதை சுமார் 2 நிமிடம் வரை வறுக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி சிறிது நேரம் ஆற விட்டு பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    பின்னர் நாம் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி அளவு கசகசாவை சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையை போட்டு வெங்காயம் நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் நிறம் மாறியதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு நன்கு கிளறி விட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை அதில் சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை வதக்கவும்.

    10 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து எடுத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீரை தெளித்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 5 நிமிடம் வரை அதை வதக்கவும்.
    (உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் உப்பை சேர்த்து கொள்ளவும்.)

    5 நிமிடத்திற்கு பிறகு இதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அடுப்பை குறைத்து மூடி போட்டு சுமார் 10 நிமிடம் வரை வேக விடவும்.

    10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து நன்கு கிளறி விட்டு பின்பு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விட்டு மூடி போட்டு அதை மீண்டும் ஒரு10 நிமிடம் வேக விடவும்.(150 ml லிருந்து 200 ml வரை தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.)

    10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சாதத்தில் ஊற்றி சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான, சுவையான, மற்றும் காரமான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • மதிய உணவிற்கு புடலங்காய் கூட்டு செய்வது எப்படி?

    புடலங்காய் கூட்டு என்பது தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய வகை பொரியலாகும். தமிழகத்தில் பெரும்பாலான திருமண விழாக்களில் இவை கட்டாயம் இருக்கும்.

    பல வகையான கலவைகள் உள்ளன. அவற்றில் குறிப்பாக பிரபலமானது காலிஃபிளவர் கூட்டு, சுரைக்காய் கூட்டு, கத்திரிக்காய் கூட்டு, பூசணி கூட்டு, வெள்ளரி கூட்டு மற்றும் வாழை தண்டு கூட்டு. இன்று நாம் இங்கு காண்பது புடலங்காய் கூட்டுவைத்தான்.

    புடலங்காய் கூட்டின் சிறப்பு என்னவென்றால், மிக எளிதாக எந்த சிரமமும் இன்றி, குறைந்த நேரத்தில் செய்து முடிக்க முடியும். மேலும், இது குறைந்த பொருட்களை கொண்டு செய்ய முடியும்.

    கடலைப்பருப்பு, பாசி பருப்பு மற்றும் பிற வீட்டுப் பொருட்களைக் கொண்டு எளிதாக செய்யலாம். மேலும், இதில் அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து இருப்பதால், நம் உடலுக்கு மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்

    1½ கப் புடலங்காய்

    ¼ கப் கடலை பருப்பு

    ¼ கப் துருவிய தேங்காய்

    1 மேஜைக்கரண்டி அரிசி மாவு

    2 மேஜைக்கரண்டி பாசி பருப்பு

    2 சின்ன வெங்காயம்

    2 பச்சை மிளகாய்

    1 மேஜைக்கரண்டி சீரகம்

    ½ மேஜைக்கரண்டி சீரக தூள்

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    ½ மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு

    ¼ மேஜைக்கரண்டி கடுகு

    1 சிட்டிகை பெருங்காய தூள்

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு தேஉப்பு

    சிறிதளவு கருவேப்பிலை

    செய்முறை

    முதலில் வெங்காயம், புடலங்காய், பச்சை மிளகாய், மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, தேங்காயை துருவி, கடலை பருப்பு மற்றும் பாசி பருப்பை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 30 லிருந்து 45 நிமிடம் வரை ஊற வைக்கவும்.

    45 நிமிடத்திற்கு பிறகு ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் கடலை பருப்பு மற்றும் பாசி பருப்பை மீண்டும் ஒரு முறை நன்கு சுத்தம் செய்து போடவும்.

    பின்பு அதில் கடலை பருப்பு முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள், சீரக தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் புடலங்காயை போட்டு ஒரு மூடி போட்டு சுமார் 2 விசில் வரும் வரை அதை வேக விடவும். (புடலங்காயை கடைசியாகவே போடவும் அப்பொழுது தான் அது குழைந்து விடாமல் இருக்கும்.)

    2 விசில் வருவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காய், நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், அரிசி மாவு, மற்றும் ஒரு சிட்டிகை அளவு பெருங்காயத்தை போடவும்.

    பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கொற கொறப்பான பதத்திற்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    பிறகு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் புடலங்காயை போட்டு அதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 5 லிருந்து 6 நிமிடம் வரை அதை கொதிக்க விடவும்.

    6 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே அடுப்பில் வைத்திருக்கவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்சூடான பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை போட்டு உளுத்தம் பருப்பு லேசாக பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.

    உளுத்தம் பருப்பு லேசாக பொன்னிறமானதும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் புடலங்காய் கூட்டில் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் புடலங்காய் கூட்டு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • வெண் பொங்கல் செய்வது எப்படி?

    பொங்கலில் பல வகைகள் உண்டு. சர்க்கரைப் பொங்கல், வெள்ளைப் பொங்கல், மிளகுப் பொங்கல், புளிப் பொங்கல் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. இன்று நாம் இங்கு காண்பது வெண்பொங்கல். வெண்பொங்கல் தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவாகும்.

    மக்கள் தங்கள் வீடுகளில் விசேஷ நாட்களில் காலையில் டிபன் சாப்பிடுகிறார்கள். வெண் பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கல் தென்னிந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களின் வீடுகளில் குறிப்பாக பொங்கல் பண்டிகையின் போது இருக்க வேண்டும்.

    இவை பெரும்பாலும் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் பரிமாறப்படுகின்றன. வெண்பொங்கலோடு மெது வடை கலவை தென்னிந்தியா முழுவதும் பிரபலமானது. இந்த காம்பினேஷன்க்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தனி கூட்டமே உள்ளனர்.

    தேவையான பொருட்கள்

    1 கப் பச்சரிசி

    1/2 கப் பாசி பருப்பு

    1/4 கப் பால்

    1/4 கப் நெய்

    2 பச்சை மிளகாய்

    1 இஞ்சி துண்டு

    1 மேஜைக்கரண்டி மிளகு

    1 மேஜைக்கரண்டி சீரகம்

    10 to 12 முந்திரி

    1 மேஜைக்கரண்டி பெருங்காய தூள்

    கருவேப்பிலை சிறிதளவு

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    செய்முறை

    முதலில் பச்சரிசியை நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும். இஞ்சியை தட்டி, பச்சை மிளகாய், மற்றும் முந்திரியை சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசி பருப்பை போட்டு அதனின் பச்சை வாசனை போய் நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.

    பின்பு அதை நன்கு கழுவி தண்ணீரில் சுமார் கால் மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

    கால் மணி நேரத்திற்குப் பின் ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 6 கப் அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஊற வைத்திருக்கும் பச்சரிசி, மற்றும் பாசி பருப்பை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி சேர்த்து கொள்ளவும்.

    அடுத்து அதில் கால் கப் அளவு பால் சேர்த்து மூடி போட்டு சுமார் 3 விசில் வரும் வரை வேக விடவும். அப்போது தான் பொங்கல் நன்கு குழைந்து வரும். (பொங்கல் குழைந்த பதத்தில் இருப்பதை விரும்பாதவர்கள் 2 விசில் வந்ததுமே இறக்கி விடவும்.)

    3 விசில் வந்ததும் குக்கரைத் திறந்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். (அடியில் தண்ணீர் இருந்தால் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தண்ணீர் வற்றும் வரை பொங்கலை கிண்டி விடவும்.)

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் ஒரு மேஜைக்கரண்டி மிளகு, ஒரு மேஜைக்கரண்டி சீரகம், பச்சை மிளகாய், தட்டி வைத்திருக்கும் இஞ்சி, முந்திரி, மற்றும் பெருங்காய தூள் சேர்த்து வதக்கவும்.

    சிறிது நேரம் வதக்கியதும் அதை இறக்கும் முன்பு சிறிதளவு கருவேப்பிலையை அதில் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
    இப்பொழுது இதை குக்கரில் இருக்கும் பொங்கலில் ஊற்றி நன்கு கலந்து விடவும்.

    பின்பு மீதமுள்ள நெய்யை ஊற்றி மீண்டும் ஒரு முறை நன்கு கலந்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான வெண்பொங்கல் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • நாவிற்கு சுவையான பிரைட் சில்லி இட்லி செய்வது எப்படி?

    பன்னீர் மஞ்சூரியன் ஆசியா முழுவதும் பிரபலமான இந்தோ-சீன உணவாகும். உணவு பிரியர்களிடையே பன்னீர் மஞ்சூரியிற்கு தனி இடம் உண்டு. இவை வெவ்வேறு பொருட்கள் மற்றும் முறைகளைப் பயன்படுத்தி வெவ்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகின்றன.

    இது பொதுவாக இந்தியாவில் சைவ உணவு உண்பவர்களால் உண்ணப்படுகிறது. எனவே அவர்கள் முட்டைகளை சேர்ப்பதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் சீனாவில் மஞ்சூரியன் முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு பனீர் தயாரிக்கப்படுகிறது.

    பன்னீர் மஞ்சூரியன் பொதுவாக ஃபிரைடு ரைஸ் அல்லது நூடுல்ஸுக்கு சைட் டிஷ் ஆக சாப்பிடுவார்கள். ஆனால் பன்னீர் மிகவும் தேவையான புரதச்சத்து நிறைந்தது மற்றும் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக செய்யலாம். சிறிது குழம்பு செய்தால் சப்பாத்தி மற்றும் நானுக்கு சைட் டிஷ் ஆகவும் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    1 கப் மைதா மாவு

    2 மேஜைக்கரண்டி சோள மாவு

    200 கிராம் பன்னீர்

    1 பெரிய வெங்காயம்

    2 பச்சை குடைமிளகாய்

    1 பச்சை மிளகாய்

    1 எலுமிச்சம் பழம்

    4 பல் பூண்டு

    1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்

    1 மேஜைக்கரண்டி வினிகர்

    2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்

    தேவையான அளவு மிளகுத் தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    1/2 மேஜைக்கரண்டி சீரகம்

    1 கை அளவு வெங்காய தாள்

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு உப்பு

    செய்முறை

    முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், பூண்டு, வெங்காய தாள், மற்றும் பன்னீரை நன்கு கழுவி அதை நறுக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பாதியாக வெட்டி அதன் சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு Bowl லை எடுத்து அதில் மைதா மாவு, சோள மாவு, தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    அடுத்து அந்த மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை நன்கு கட்டி தட்டாமல் கரைத்து அதை பஜ்ஜி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.

    பின்பு நாம் நறுக்கி வைத்திருக்கும் பன்னீரை இந்த மாவில் சேர்த்து அதை பக்குவமாக நன்கு மாவுடன் பன்னீர் சேருமாறு பிரட்டி அதை சுமார் 5 லிருந்து 10 நிமிடம் வரை ஊற விடவும்.

    பன்னீர் ஊருவதற்குள் ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பன்னீரை பொரித்து எடுப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுசூடானதும் pan ன் அளவிற்கேற்ப பன்னீர் துண்டுகளை மாவில் இருந்து எடுத்து போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு அது பொன் நிறம் வந்ததும் எடுத்து ஒரு தட்டில் டிஸ்யூ பேப்பரை விரித்து அதில் வைத்து எண்ணெய்யை வடிய விடவும்.

    அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் அரை மேஜைக்கரண்டி அளவு சீரகத்தை போட்டு வறுக்கவும்.

    சீரகம் வறுபட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், மற்றும் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாரை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் பொரித்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து அதை பக்குவமாக நன்கு மசாலாவுடன் சேருமாறு சுமார் 2 நிமிடம் வரை கிளறி விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகுதூள் சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். (இது கிரேவியாக வேண்டுமென்றால் 2 மேஜைக்கரண்டி சோள மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இதில் சேர்த்துக் கொள்ளவும்.)

    பின்பு இறக்குவதற்கு முன் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காய தாளை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பில் இருந்து இறக்கி சுட சுட ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான பன்னீர் மஞ்சூரியன் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • பன்னீர் மஞ்சூரியன் செய்வது எப்படி?

    பன்னீர் மஞ்சூரியன் ஆசியா முழுவதும் பிரபலமான இந்தோ-சீன உணவாகும். உணவு பிரியர்களிடையே பன்னீர் மஞ்சூரியிற்கு தனி இடம் உண்டு. இவை வெவ்வேறு பொருட்கள் மற்றும் முறைகளைப் பயன்படுத்தி வெவ்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகின்றன.

    இது பொதுவாக இந்தியாவில் சைவ உணவு உண்பவர்களால் உண்ணப்படுகிறது. எனவே அவர்கள் முட்டைகளை சேர்ப்பதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் சீனாவில் மஞ்சூரியன் முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு பனீர் தயாரிக்கப்படுகிறது.

    பன்னீர் மஞ்சூரியன் பொதுவாக ஃபிரைடு ரைஸ் அல்லது நூடுல்ஸுக்கு சைட் டிஷ் ஆக சாப்பிடுவார்கள். ஆனால் பன்னீர் மிகவும் தேவையான புரதச்சத்து நிறைந்தது மற்றும் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக செய்யலாம். சிறிது குழம்பு செய்தால் சப்பாத்தி மற்றும் நானுக்கு சைட் டிஷ் ஆகவும் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    1 கப் மைதா மாவு

    2 மேஜைக்கரண்டி சோள மாவு

    200 கிராம் பன்னீர்

    1 பெரிய வெங்காயம்

    2 பச்சை குடைமிளகாய்

    1 பச்சை மிளகாய்

    1 எலுமிச்சம் பழம்

    4 பல் பூண்டு

    1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்

    1 மேஜைக்கரண்டி வினிகர்

    2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்

    தேவையான அளவு மிளகுத் தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    1/2 மேஜைக்கரண்டி சீரகம்

    1 கை அளவு வெங்காய தாள்

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு உப்பு

    செய்முறை

    முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், பூண்டு, வெங்காய தாள், மற்றும் பன்னீரை நன்கு கழுவி அதை நறுக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பாதியாக வெட்டி அதன் சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு Bowl லை எடுத்து அதில் மைதா மாவு, சோள மாவு, தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    அடுத்து அந்த மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை நன்கு கட்டி தட்டாமல் கரைத்து அதை பஜ்ஜி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.

    பின்பு நாம் நறுக்கி வைத்திருக்கும் பன்னீரை இந்த மாவில் சேர்த்து அதை பக்குவமாக நன்கு மாவுடன் பன்னீர் சேருமாறு பிரட்டி அதை சுமார் 5 லிருந்து 10 நிமிடம் வரை ஊற விடவும்.

    பன்னீர் ஊருவதற்குள் ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பன்னீரை பொரித்து எடுப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுசூடானதும் pan ன் அளவிற்கேற்ப பன்னீர் துண்டுகளை மாவில் இருந்து எடுத்து போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு அது பொன் நிறம் வந்ததும் எடுத்து ஒரு தட்டில் டிஸ்யூ பேப்பரை விரித்து அதில் வைத்து எண்ணெய்யை வடிய விடவும்.

    அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் அரை மேஜைக்கரண்டி அளவு சீரகத்தை போட்டு வறுக்கவும்.

    சீரகம் வறுபட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், மற்றும் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாரை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் பொரித்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து அதை பக்குவமாக நன்கு மசாலாவுடன் சேருமாறு சுமார் 2 நிமிடம் வரை கிளறி விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகுதூள் சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். (இது கிரேவியாக வேண்டுமென்றால் 2 மேஜைக்கரண்டி சோள மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இதில் சேர்த்துக் கொள்ளவும்.)

    பின்பு இறக்குவதற்கு முன் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காய தாளை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பில் இருந்து இறக்கி சுட சுட ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான பன்னீர் மஞ்சூரியன் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.