கோடை வெயிலில் சோர்வாக இருப்பது சகஜம். சத்தான உணவுடன் பழங்கள் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்வதன் மூலம் உடலை தெம்பாக வைத்திருக்கவும்.
அப்படியென்றால் இன்று இங்கு நாம் காண இருப்பது இஞ்சி மற்றும் எலுமிச்சையுடன் கூடிய ஜூஸ். இஞ்சி எலுமிச்சை ஜூஸ்ன் சிறப்பு என்னவென்றால், எலுமிச்சை மற்றும் இஞ்சியை மட்டும் பயன்படுத்தி மிக எளிதாக வீட்டிலேயே செய்யலாம்.
உடலுக்கு குளிர்ச்சி தரும் எலுமிச்சை மற்றும் இஞ்சி சேர்த்து சாப்பிட்டால் உடல் வலியும் நீங்கும்.
எனவே கோடை வெயிலில் இருந்து நம்மை காக்க எந்த செலவும் இல்லை என்றால், இஞ்சி எலுமிச்சை ஜூஸ் உடலுக்கு மிகவும் சத்தான பானம் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் தேவையான சிரப்பை ஒரு முறை செய்து 10 முதல் 15 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், அவ்வப்போது ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து ஜூஸை எளிதில் கலந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
14 எலுமிச்சம் பழம்
150 கிராம் இஞ்சி
தேவையான அளவு சர்க்கரை
செய்முறை
ஆரோக்கியமான லெமன் இஞ்சி ஜூஸ்
முதலில் இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் தெளித்து அதை நன்கு அரைத்து கொள்ளவும்.
அடுத்து அரைத்த இஞ்சியை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி சாரை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதை சுமார் 30 நிமிடத்தில் இருந்து 40 நிமிடம் வரை அப்படியே வைக்கவும்.
இஞ்சி சாரு இருக்கும் பாத்திரம் ஆடாமல் இருப்பது அவசியம் அப்பொழுது தான் அதில் இருக்கும் சுண்ணாம்பு அடியில் தங்கும் அதை நாம் எளிதில் நீக்கி விடலாம்.
இப்பொழுது எலுமிச்சம் பழங்களை எடுத்து அதை பாதியாக வெட்டி ஒரு juicer ரின் மூலம் ஜூஸை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து கொள்ளவும். அமேசான் மூலம் Juicer வாங்க இங்கே கிளிக் செய்யவும்.
பின்பு அது எத்தனை ml இருக்கிறது என்பதை உறுதி செய்த பின் அதை ஃப்ரிட்ஜில் வைத்து விடவும்.
பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் ஜூஸ்க்கு முக்கால் பாகம் தண்ணீர் என்ற கணக்கிர்க்கு தண்ணீரை அளந்து அதில் ஊற்றவும்.
அடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப தேவையான அளவு சர்க்கரையை போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் நன்கு கரைத்து விடவும். (சர்க்கரையை விரும்பாதவர்கள் இதில் சர்க்கரைக்கு பதிலாக உப்பை சேர்த்து கொள்ளலாம்.)
சர்க்கரை முழுவதும் கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே அடுப்பிலேயே வைத்திருக்கவும்.
இப்பொழுது நாம் இஞ்சி சாரை ஊற்றி வைத்து இருக்கும் பாத்திரத்தை எடுத்து அதில் இருக்கும் சாரை பக்குவமாக வேறு ஒரு பாத்திரத்தில் பொறுமையாக அதன் அடியில் இருக்கும் சுண்ணாம்பு இதனுடன் கலந்து வராமல் ஊற்றவும்.
பின்னர் அதை மீண்டும் சுமார் 20 லிருந்து 30 நிமிடம் வரை அப்படியே வைக்கவும். (இரண்டாவது முறை இவ்வாறு செய்யும் செய்யும் போதும் சுண்ணாம்பு அதிகமாக அடியில் படிந்தால் அதை மீண்டும் ஒரு முறை இவ்வாறு செய்து கொள்ளவும்.)
அடுத்து இந்த சாரை வெது வெதுப்பாக இருக்கும் சர்க்கரை பாகில் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
பாகு நன்கு ஆறியவுடன் அதை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி அதை நாம் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் எலுமிச்சை சாரை வெளிய எடுத்து அதில் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
பின்பு ஒரு டம்ளரை எடுத்து அதன் பாதி அளவிற்கு இந்த சிரப்பை ஊற்றி அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஐஸ் கியூபை போட்டு தண்ணியை ஊற்றி சில்லென்று பரிமாறவும்.
மீதமுள்ள சிரப்பை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது எடுத்து இவ்வாறு ஜூஸை தயார் செய்து பருகலாம்.
இப்பொழுது உங்கள் அருமையான மற்றும் சில்லென்று இருக்கும் இஞ்சி லெமன் ஜூஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.
