Author: Arumugam K

  • உருளைக்கிழங்கு மஞ்சூரியன் செய்வது எப்படி?

    மஞ்சூரியன் ஒரு இந்திய-சீன உணவாகும், இது இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இவை இளம் தலைமுறையினர் மற்றும் உணவு பிரியர்களின் விருப்பமான உணவாகும்.

    மஞ்சூரியனில் பல வகைகள் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கவை சிக்கன் மஞ்சூரியன், கோபி மஞ்சூரியன், பன்னீர் மஞ்சூரியன், மற்றும் மீன் மஞ்சூரியன். ஆனால் இன்று இங்கு காண்பது வித்தியாசமான உருளைக்கிழங்கு மஞ்சூரியன்.

    உருளைக்கிழங்கு மஞ்சூரியன் வழக்கமான மஞ்சூரியன் போலவே செய்யப்படுகிறது. எனவே மற்ற மஞ்சூரியன்களைப் போலவே, உருளைக்கிழங்கு மஞ்சூரியையும் ஃபிரைடு ரைஸ் மற்றும் நூடுல்ஸுக்கு சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம்.

    உருளைக்கிழங்கு மஞ்சூரியன் மாலை நேர சிற்றுண்டியாகவும் சிறந்தது. எனவே இதை நம் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    ¼ கப் சோள மாவு

    ¼ கப் மைதா மாவு

    4 உருளைக்கிழங்கு

    1 பெரிய வெங்காயம்

    ½ கப் குடை மிளகாய்

    2 பூண்டு பல்

    1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்

    1 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்

    1 மேஜைக்கரண்டி கிரீன் சில்லி சாஸ்

    1 மேஜைக்கரண்டி கெட்சப்

    2 மேஜைக்கரண்டி வினிகர்

    ¼ மேஜைக்கரண்டி மிளகு தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்

    செய்முறை:

    முதலில் வெங்காயம், குடை மிளகாய், பூண்டு, மற்றும் ஸ்பிரிங் ஆனியனை நறுக்கி, உருளைக்கிழங்கை அவரவருக்கு பிடித்தமான வடிவில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு bowl ல் சோள மாவு, மைதா மாவு, மிளகு தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதை நன்கு தண்ணியாக கரைத்து கொள்ளவும். (இந்த கலவையை நன்கு தண்ணியாக இருப்பது அவசியம் லேசாக உருளைக்கிழங்கின் மீது இவை ஒட்டினால் போதும்.)

    பிறகு நாம் நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை எடுத்து இதில் போட்டு அதை நன்கு கிளறி விடவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப மாவில் இருக்கும் உருளைக்கிழங்கை ஒவ்வொன்றாக எடுத்து பக்குவமாக போட்டு அது நன்கு பொன்னிறம் ஆனதும் அதை ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.

    2 நிமிடத்திற்குப் பிறகு அதில் சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், க்ரீன் சில்லி சாஸ், வினிகர், மற்றும் கெட்சப்பை ஊற்றி அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    1 நிமிடத்திற்கு பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதையும் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். (கிரேவி சிறிது கெட்டியாக வேண்டும் என்றால் சோள மாவில் தண்ணீர் கம்மியாக ஊற்றி கரைக்கவும்.)

    பின்னர் உப்பை சரிபார்த்து உப்பு தேவைப்பட்டால் தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ளவும்.

    அடுத்து நாம் பொரித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை இதில் போட்டு அதை நன்கு கிளறி விட்டு அதை சுமார் 2 லிருந்து 4 நிமிடம் வரை வேக விடவும்.

    4 நிமிடத்திற்கு பிறகு அதில் சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன் தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான உருளைக்கிழங்கு மஞ்சூரியன் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • பன்னீர் 65 மசாலா வீட்டிலேயே செய்வது எப்படி?

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு பன்னீர். பன்னீரைக் கொண்டு செய்யப்படும் அனைத்து உணவுகளும் உணவுப் பிரியர்களிடையே தனி ஈர்ப்பைக் கொண்டுள்ளன என்றால் அது மிகையாகாது.

    எனவே இன்று நாம் இப்போது பார்க்க இருப்பது பன்னீல் வித்தியாசமாக செய்யப்படும் பன்னீர் 65 மசாலா. பன்னீர் பிரியர்களுக்கு மட்டுமின்றி அனைவரும் விரும்பி உண்பார்கள்.

    நூடுல்ஸ், சப்பாத்தி, நாண், புல்கா, பிரைடு ரைஸ் போன்றவற்றுக்கு சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம். இவை மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றவை. நாம் வழக்கமாக மாலையில் சாப்பிடும் ஸ்நாக்ஸ் அல்லது டிபனுக்கு இவை சிறந்த மாற்றாகும். இதை நம் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்:

    300 கிராம் பன்னீர்

    4 மேஜைக்கரண்டி சோள மாவு

    3 மேஜைக்கரண்டி மைதா மாவு

    ½ கப் தயிர்

    2 பச்சை மிளகாய்

    4 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு

    2 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி

    1 மேஜைக்கரண்டி கடுகு

    2 to 3 காய்ந்த மிளகாய்

    1 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்

    1 மேஜைக்கரண்டி சீரக தூள்

    1 மேஜைக்கரண்டி மல்லி தூள்

    1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    1 மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு கருவேப்பிலை

    சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்

    செய்முறை:

    முதலில் பன்னீர், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, ஸ்பிரிங் ஆனியன், மற்றும் கருவேப்பிலையை நறுக்கி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் 3 மேஜைக்கரண்டி அளவு சோள மாவு, மைதா மாவு, கால் மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள், அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் ஒரு மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு, ஒரு மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி, நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு கருவேப்பிலையை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதை நன்கு கெட்டியான பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

    பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பன்னீரை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பன்னீரை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப அதில் பன்னீரை எடுத்து பக்குவமாக போட்டு அது நன்கு பொன்னிறமாகும் வரை அதை பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் கடுகை போட்டு அது வெடித்தவுடன் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், 3 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு, ஒரு மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி, மற்றும் கருவேப்பிலையை போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், கால் மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள், ரெட் சில்லி சாஸ், சீரக தூள், மல்லி தூள், மற்றும் கரம் மசாலாவை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு தயிரில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவை போட்டு அதை கரைத்து அதில் சேர்த்து அது நன்கு கெட்டியாகும் வரை அதை கிளறி கொண்டே இருக்கவும்.

    பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும். (50ml தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)

    அது கொதித்ததும் அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் பன்னீரை போட்டு அதை நன்கு பக்குவமாக கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியனை சேர்த்து அதை ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் பன்னீர் 65 மசாலா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • மணக்கும் பருப்பு குழம்பு செய்வது எப்படி?

    பருப்பு குழம்பு தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவாகும். தமிழக மக்களின் அன்றாட உணவில் பருப்பு குழம்புக்கு முக்கிய இடம் உண்டு.

    இவற்றில் நமது உடலுக்கு மிகவும் தேவையான புரதச்சத்து அதிகம் உள்ள பாசி பருப்பு மற்றும் துவரம் பருப்பு போன்றவை உடலுக்கு மிகவும் நல்லது.

    துவரம் பருப்பு மற்றும் பாசி பருப்பு குழம்பு செய்வதும் மிகவும் எளிது. எந்தவொரு கடினமான நடைமுறையையும் பின்பற்றாமல் மிக எளிதாக இதைச் செய்யலாம்.

    சமைக்காதவர்கள் கூட முதல் முறை மிக எளிதாக செய்யலாம். மேலும் இந்த பருப்பு குழம்பை வாரம் ஒருமுறை தவறாமல் செய்து வந்தால், அது நம் உடலுக்கு மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்:

    150 கிராம் பாசி பருப்பு

    100 கிராம் துவரம் பருப்பு

    2 பெரிய வெங்காயம்

    3 தக்காளி

    8 பல் பூண்டு

    2 பச்சை மிளகாய்

    2 காய்ந்த மிளகாய்

    1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    ½ மேஜைக்கரண்டி கடுகு

    1 மேஜைக்கரண்டி சீரகம்

    ½ மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு

    1 மேஜைக்கரண்டி பெருங்காய தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு கருவேப்பிலை

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை:

    முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, துவரம் பருப்பு மற்றும் பாசி பருப்பை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை ஊற வைக்கவும்.

    15 நிமிடத்திற்கு பிறகு ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒன்னே முக்கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி அதில் நாம் ஊற வைத்திருக்கும் துவரம் பருப்பு மற்றும் பாசிப் பருப்பை நன்கு கழுவி போடவும். (தண்ணீர் சரியான அளவு ஊற்ற வேண்டும் அதிகமாக ஊற்றி விடக்கூடாது.)

    அடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து மூடி போட்டு அதை சுமார் 4 விசில் வரும் வரை வேக விடவும்.

    4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு விசில் முழுமையாக போனதும் குக்கர் மூடியை திறந்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து பருப்பை நன்கு மசித்து விடவும்.

    பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். (நெய்யை விரும்புவர்கள் எண்ணெய்க்கு பதிலாக நெய்யையும் சேர்த்து கொள்ளலாம்.)

    எண்ணெய் சுட்ட பின் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் அதில் சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காய தூள், மற்றும் கருவேப்பிலையை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பில் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.

    பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி அதை நன்கு கலந்து விட்டு பருப்பு குழம்பை சுட சுட சாதத்தில் ஊற்றி பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான பருப்பு குழம்பு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • சுவையான ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?

    குருமா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான உணவு. குருமா பொதுவாக சப்பாத்தி, பூரி, பரோட்டா, தோசை, இட்லி போன்றவற்றுக்கு பக்க உணவாக உண்ணப்படுகிறது. வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையைப் பின்பற்றி வெவ்வேறு இடங்களில் உள்ளவர்களால் இது வித்தியாசமாக சமைக்கப்பட்டு சுவைக்கப்படுகிறது. குருமாவில் பல வகைகள் உண்டு.

    சிக்கன் குருமா, மட்டன் குருமா, வெஜிடபிள் குருமா, காலிஃபிளவர் பட்டாணி குருமா, உருளைக்கிழங்கு குருமா, தக்காளி குருமா போன்றவை மிகவும் பிரபலம். இன்று இங்கு காண்பது உருளைக்கிழங்கு குருமா.

    பூரி, தோசை, இட்லியை விட பக்க உணவாக குருமாவை மக்கள் விரும்பினாலும், சப்பாத்தி மற்றும் பரோட்டா குருமாவின் கலவையின் சுவையே தனி. இது பலரின் விருப்பமான கலவையாகும்.

    ஹோட்டல்களில் மட்டுமின்றி, பெரும்பாலான வீடுகளில் காலை, இரவு உணவாக சமைப்பவர்களுக்கும் இந்த கலவை ஹிட் ஆகிவிட்டது.

    தேவையான பொருட்கள்:

    6 to 7 உருளைக்கிழங்கு

    3 பெரிய வெங்காயம்

    5 to 6 தக்காளி

    1 கப் பச்சை பட்டாணி

    1 to 2 பச்சை மிளகாய்

    4 to 5 பூண்டு

    1 இஞ்சி துண்டு

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    1 மேஜைக்கரண்டி சீரகம்

    1 மேஜைக்கரண்டி மல்லி தூள்

    1 மேஜைக்கரண்டி ஆம்சூர் தூள்

    1 மேஜைக்கரண்டி பச்சை பயறு மாவு

    1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    1 மேஜைக்கரண்டி பெருங்காய தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு நெய்

    தேவையான அளவு உப்பு

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை:

    முதலில் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, மற்றும் பட்டாணியை உரித்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    அடுத்து நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் இஞ்சியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு பேஸ்ட் ஆக்கி ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 3 மேஜைக்கரண்டி அளவு நெய்யை ஊற்றி அதை சுட வைக்கவும்.
    நெய் சுட்ட பின் அதில் சீரகத்தை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.

    அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்ட்டை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதிலிருந்து நெய் தனியாக பிரிந்து வரும் வரை அதை வதக்கவும். (சுமார் 7 லிருந்து 8 நிமிடம் வரை வதக்கினால் சரியாக இருக்கும்.)

    8 நிமிடத்திற்கு பிறகு அதில் பச்சை பயறு மாவு, மஞ்சள் தூள், மல்லி தூள், ஆம்சூர் தூள், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

    பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (500ml அளவு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)

    பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் உரித்து வைத்திருக்கும் பச்சை பட்டாணியை போட்டு அது நன்கு மசாலா ஒட்டுமாறு அதை கிளறி விடவும்.

    அடுத்து அதில் மீண்டும் ஒரு முறை சுமார் 500ml அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் தேவையான அளவு உப்பை போட்டு அதை நன்கு கலந்து விட்டு பின்பு ஒரு மூடி போட்டு அதை சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை வேக விடவும்.

    15 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து குருமாவை ஒரு கிளறு கிளறி அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் கரம் மசாலாவை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய்யை ஊற்றி அதை சுட வைக்கவும்.

    நெய் சுட்ட பின் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு பெருங்காயத்தை போட்டு அதை நன்கு கரைத்து விட்டு பின்பு அடுப்பை அணைத்து விட்டு அதை குருமாவில் ஊற்றி நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு குருமாவை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதை சப்பாத்தியுடனோ அல்லது பூரியுடனோ சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் உருளைக்கிழங்கு குருமா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • மென்மையான சில்லி பரோட்டா செய்வது எப்படி?

    சில்லி பரோட்டா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான உணவாகும். குறிப்பாக தென்னிந்தியாவில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. பராட்டா பிரியர்களுக்கு மட்டுமின்றி பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்தமான உணவாகும். பரோட்டா என்றால் மதுரையை தான் சொல்வார்கள். அதன்படி, சில்லி பரோட்டா, கொத்து பரோட்டா மதுரை மாநகரில் தோன்றியதாக சொல்வார்கள்.

    சில்லி பரோட்டா தயாரிப்பது கொஞ்சம் சிக்கலான வேலையாக இருப்பதால், பெரும்பாலான நேரங்களில் அதை விரும்புபவர்கள் கூட சிறிய கடைகள் அல்லது உணவகங்களில் ஆர்டர் செய்து ருசிப்பார்கள். ஆனால் இன்னும் சிறிது நேரம் எடுத்தாலும் இதை வீட்டில் எளிதாக செய்யலாம் என்பது பலருக்குத் தெரியாது.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய செய்முறையைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் வீட்டிலேயே சில்லி பரோட்டாவை எளிதாக செய்யலாம் மற்றும் உங்கள் குடும்பத்தை ஈர்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    2 கப் மைதா மாவு

    3 மேஜைக்கரண்டி பால்

    1 பெரிய வெங்காயம்

    1 தக்காளி

    ½ பச்சை குடை மிளகாய்

    ½ சிவப்பு குடை மிளகாய்

    2 பச்சை மிளகாய்

    3 பல் பூண்டு

    1 துண்டு இஞ்சி

    1 மேஜைக்கரண்டி தனியா தூள்

    1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    1 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்

    2 மேஜைக்கரண்டி டொமேட்டோ கெட்சப்

    1 மேஜைக்கரண்டி சர்க்கரை

    தேவையான அளவு வெண்ணெய்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு கொத்தமல்லி

    சிறிதளவு கருவேப்பிலை

    செய்முறை:

    முதலில் வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    பிறகு ஒரு bowl லை எடுத்து அதில் மைதா மாவை போட்டு பின்பு ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு பிறகு அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விட்டு பின்பு மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு பிணையவும். (தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக கவனமாக சேர்க்க வேண்டும், அதிகமாக சேர்த்து விடக்கூடாது.)

    அடுத்து இந்த மாவை நன்கு அழுத்தி பிணைவதற்காக ஒரு பெரிய தட்டை எடுத்து அதை திருப்பி போட்டு அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய்யை தடவி கொள்ளவும்.

    பின்பு இந்த மாவை அதில் வைத்து நன்கு தேய்த்து சுமார் 15 நிமிடம் வரை பிணையவும்.

    15 நிமிடம் தேய்த்த பிறகு மாவின் மேலே சிறிதளவு எண்ணெய்யை தடவி அதை அப்படியே ஒரு மூடி போட்டு சுமார் ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.

    ஒரு மணி நேரத்திற்கு பிறகு மூடியை திறந்து அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    இப்பொழுது மாவை தேய்த்த தட்டில் சிறிதளவு எண்ணெய் விட்டு ஒரு உருண்டையை அதில் வைத்து கைகளால் தட்டி அதை நன்கு பெரிதாக விரித்து விடவும்.

    பின்பு அதன் மேலே சிறிதளவு எண்ணெய்யை தேய்த்து ஒரு கத்தியின் மூலம் செங்குத்தான வாக்கில் அதில் கோடுகளை போடவும்.

    கோடுகளை போட்ட பின் அதை அப்படியே புரட்டி நீள வாக்குக்கு கொண்டு வந்து அதை பாம்பு போல சுருட்டி ஒரு தட்டில் எண்ணெய் தடவி வைத்து கொள்ளவும்.

    இவ்வாறு மீதமுள்ள உருண்டைகளையும் செய்து சுருட்டி வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுடுவதற்குல் சுருட்டி வைத்திருக்கும் மாவை தேய்த்து எண்ணெய் சுட்டதும் அதை pan ல் போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி போட்டு அது வெந்ததும் அதை எடுத்து சிறிது நேரம் ஆற விடவும்.

    பின்பு அது ஆறியதும் அதை நம் கைகளின் மூலம் சிறு சிறு துண்டுகளாக பிய்த்து போட்டு ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
    அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மற்றும் கருவேப்பிலை போட்டு இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அடுப்பை ஏற்றி வைத்து அதில் நாம் பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, மற்றும் குடை மிளகாயை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 3 நிமிடம் வரை வதக்கவும்.

    3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதில் தனியா தூள், கரம் மசாலா, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 5 நிமிடம் வரை வதக்கவும்.

    5 நிமிடத்திற்கு பிறகு அதில் டொமேட்டோ கெட்சப் மற்றும் சில்லி சாஸை ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் நாம் பிய்த்து வைத்திருக்கும் பரோட்டாவை போட்டு அதை சுமார் 5 நிமிடம் வரை நன்கு கலந்து விடவும்.

    5 நிமிடத்திற்கு பிறகு அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி சில்லி பரோட்டாவை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை ஆனியன் ரைத்தா உடன் சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் சில்லி பரோட்டா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • நாவிற்கு சுவையான வெண் பொங்கல் செய்வது எப்படி?

    பொங்கலில் பல வகைகள் உண்டு. சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், மிளகுப் பொங்கல், புளிப் பொங்கல் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

    இன்று நாம் இங்கு காண்பது வெண்பொங்கல். வெண்பொங்கல் தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவாகும். பெரும்பாலும் விசேஷ நாட்களில் மக்கள் தங்கள் வீடுகளில் காலை உணவாக சாப்பிடுவார்கள்.

    குறிப்பாக பொங்கல் பண்டிகையின் போது தென்னிந்தியாவில் பெரும்பாலானோரின் வீடுகளில் வெண் பொங்கல் அல்லது சர்க்கரை பொங்கல் கண்டிப்பாக இருக்கும்.

    வெண் பொங்கல் பெரும்பாலும் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் பரிமாறப்படுகின்றன. வெண்பொங்கலோடு மெது வடை காம்பினேஷன் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானது. இந்த காம்பினேஷனுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தனி கூட்டமே உள்ளது.

    தேவையான பொருட்கள்:

    1 கப் பச்சரிசி

    1/2 கப் பாசி பருப்பு

    1/4 கப் பால்

    1/4 கப் நெய்

    2 பச்சை மிளகாய்

    1 இஞ்சி துண்டு

    1 மேஜைக்கரண்டி மிளகு

    1 மேஜைக்கரண்டி சீரகம்

    10 to 12 முந்திரி

    1 மேஜைக்கரண்டி பெருங்காய தூள்

    கருவேப்பிலை சிறிதளவு

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் பச்சரிசியை நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும். இஞ்சியை தட்டி, பச்சை மிளகாய், மற்றும் முந்திரியை சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசி பருப்பை போட்டு அதனின் பச்சை வாசனை போய் நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.

    பின்பு அதை நன்கு கழுவி தண்ணீரில் சுமார் கால் மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

    கால் மணி நேரத்திற்குப் பின் ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 6 கப் அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஊற வைத்திருக்கும் பச்சரிசி, மற்றும் பாசி பருப்பை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி சேர்த்து கொள்ளவும்.

    அடுத்து அதில் கால் கப் அளவு பால் சேர்த்து மூடி போட்டு சுமார் 3 விசில் வரும் வரை வேக விடவும். அப்போது தான் பொங்கல் நன்கு குழைந்து வரும். (பொங்கல் குழைந்த பதத்தில் இருப்பதை விரும்பாதவர்கள் 2 விசில் வந்ததுமே இறக்கி விடவும்.)

    3 விசில் வந்ததும் குக்கரைத் திறந்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். (அடியில் தண்ணீர் இருந்தால் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தண்ணீர் வற்றும் வரை பொங்கலை கிண்டி விடவும்.)

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்டதும் அதில் ஒரு மேஜைக்கரண்டி மிளகு, ஒரு மேஜைக்கரண்டி சீரகம், பச்சை மிளகாய், தட்டி வைத்திருக்கும் இஞ்சி, முந்திரி, மற்றும் பெருங்காய தூள் சேர்த்து வதக்கவும்.

    சிறிது நேரம் வதக்கியதும் அதை இறக்கும் முன்பு சிறிதளவு கருவேப்பிலையை அதில் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

    இப்பொழுது இதை குக்கரில் இருக்கும் பொங்கலில் ஊற்றி நன்கு கலந்து விடவும்.

    பின்பு மீதமுள்ள நெய்யை ஊற்றி மீண்டும் ஒரு முறை நன்கு கலந்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான வெண்பொங்கல் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • இனிப்பான கரும்பு சாறு பொங்கல் செய்வது எப்படி!!

    பொங்கல் பண்டிகை நெருங்குகிறது. இதனால், சந்தை எங்கும் கரும்பு விற்பனையாகிறது. நீங்கள் கரும்பு பிரியராக இருந்தால் கரும்பில் விதவிதமான ரெசிபிகளை தயாரித்து சாப்பிட விரும்பினால், பொங்கல் ஸ்பெஷலாக கரும்புச்சாறு பொங்கலைச் செய்யுங்கள்.

    இந்த கரும்பு பொங்கல் செய்வது மிகவும் எளிது. கரும்பு பொங்கல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கரும்பு சாறு பொங்கல் செய்முறையின் எளிய செய்முறை கீழே உள்ளது.

    படித்து சுவைத்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    அரிசி – 1 கப்

    கரும்புச்சாறு – 1 1/2 கப்

    வெல்லம் – 1/8 கப்

    பாசிப்பருப்பு – 1/4 கப்

    நெய் – 2 டேபிள் ஸ்பூன்

    முந்திரி – சிறிது

    உலர் திராட்சை – சிறிது

    ஏலக்காய் பொடி – சிறிது

    செய்முறை:

    முதலில் கரும்பை தோல் நீக்கி மிகச்சிறு துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.

    பிறகு மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து சாறு எடுக்கவும். இப்படி 1 1/2 கப் கரும்பு சாறு எடுத்துக் கொள்ளவும்.

    பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, பாசிப்பருப்பை சிறிது வறுத்து தனியாக வைக்கவும்.

    அதன் பிறகு அரிசியை தண்ணீரில் நன்கு கழுவவும்.

    பின் குக்கரில் கழுவிய அரிசி, பாசிப்பருப்பு மற்றும் கரும்புச்சாறு எடுத்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து குக்கரை மூடி 4 விசில் வந்ததும் இறக்கி வைக்கவும்.

    விசில் வந்ததும் குக்கரைத் திறந்து வெல்லம் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வெல்லம் கரையும் வரை கரண்டியால் நன்கு கிளறவும்.

    அதன் பிறகு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.

    மீண்டும் அடுப்பில் சிறிய கடாயில் சிறிது நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வறுத்து குக்கரில் வைத்துள்ள பொங்கலுடன் கிளறி இறக்கினால் சுவையான கரும்புச்சாறு பொங்கல் தயார்.

  • இட்லி, தோசைக்கு சுவையான வெங்காய தொக்கு செய்வது எப்படி..!

    இன்றைய பதிவில் இந்த வெங்காய தொக்கை சுவையாக செய்வது எப்படி என்று படித்து தெரிந்து கொள்ள போகிறோம்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த வெங்காய தொக்கை பிடிக்கும். சரி வாங்க இட்லி, தோசைக்கு ஏற்ற வெங்காய தொக்கை கூறப்பட்டுள்ள முறை படி செய்து அசத்தலாம்..!

    தேவையான பொருட்கள்:

    சின்ன வெங்காயம் – ½ கிலோ

    கடுகு – ஒரு டீஸ்பூன்

    கொத்தமல்லி விதை – ஒரு ஸ்பூன்

    வெந்தயம் – ½ ஸ்பூன்

    பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்

    புளி – ஒரு பெரிய நெல்லிக்கா அளவு

    நல்லெணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்

    கடுகு உளுந்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்

    கருவேப்பிலை – இரண்டு கொத்து

    உப்பு – தேவையான அளவு

    மஞ்சள் தூள் – இரண்டு சிட்டிகை

    மிளகாய் தூள் – 1½ டேபிள்ஸ்பூன்

    பொடி செய்த வெல்லம் – 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை:

    சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கவும்.

    பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை, 1/2 டீஸ்பூன் பெருங்காயம், 1 டீஸ்பூன் வெந்தயத்தை ஆகியவற்றை வறுத்து பொடியாக வைத்துக்கொள்ளுங்கள்.

    புளியை 20 நிமிடம் ஊறவைத்து கரைத்து தனியாக வைக்கவும். தண்ணீர் அதிகமாக சேர்க்கவேண்டாம்.

    பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மூன்று ஸ்பூன் நல்லெண்ணெ சேர்த்து சூடாக்கவும்.

    எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    பிறகு 1½ தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
    புளி கரைசலை ஊற்றி நன்கு கிளறி மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.

    தண்ணீர் அனைத்தும் வடிந்து எண்ணெய் பிரிந்ததும் பொடி செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து மீண்டும் இரண்டு நிமிடம் வதக்கவும்.

    இரண்டு நிமிடம் கழித்து ஒரு ஸ்பூன் இடித்த வெல்லம் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கினால் சுவையான வெங்காய தொக்கு ரெடி.

  • இட்லி, தோசைக்கு சுவையான வெங்காய தொக்கு செய்வது எப்படி?

    இன்றைய பதிவில் இந்த வெங்காய தொக்கை சுவையாக செய்வது எப்படி என்று படித்து தெரிந்து கொள்ள போகிறோம்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த வெங்காய தொக்கை பிடிக்கும். சரி வாங்க இட்லி, தோசைக்கு ஏற்ற வெங்காய தொக்கை கூறப்பட்டுள்ள முறை படி செய்து அசத்தலாம்..!

    தேவையான பொருட்கள்:

    சின்ன வெங்காயம் – ½ கிலோ

    கடுகு – ஒரு டீஸ்பூன்

    கொத்தமல்லி விதை – ஒரு ஸ்பூன்

    வெந்தயம் – ½ ஸ்பூன்

    பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்

    புளி – ஒரு பெரிய நெல்லிக்கா அளவு

    நல்லெணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்

    கடுகு உளுந்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்

    கருவேப்பிலை – இரண்டு கொத்து

    உப்பு – தேவையான அளவு

    மஞ்சள் தூள் – இரண்டு சிட்டிகை

    மிளகாய் தூள் – 1½ டேபிள்ஸ்பூன்

    பொடி செய்த வெல்லம் – 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை:

    சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கவும்.

    பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை, 1/2 டீஸ்பூன் பெருங்காயம், 1 டீஸ்பூன் வெந்தயத்தை ஆகியவற்றை வறுத்து பொடியாக வைத்துக்கொள்ளுங்கள்.

    புளியை 20 நிமிடம் ஊறவைத்து கரைத்து தனியாக வைக்கவும். தண்ணீர் அதிகமாக சேர்க்கவேண்டாம்.

    பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மூன்று ஸ்பூன் நல்லெண்ணெ சேர்த்து சூடாக்கவும்.

    எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    பிறகு 1½ தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
    புளி கரைசலை ஊற்றி நன்கு கிளறி மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.

    தண்ணீர் அனைத்தும் வடிந்து எண்ணெய் பிரிந்ததும் பொடி செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து மீண்டும் இரண்டு நிமிடம் வதக்கவும்.

    இரண்டு நிமிடம் கழித்து ஒரு ஸ்பூன் இடித்த வெல்லம் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கினால் சுவையான வெங்காய தொக்கு ரெடி.

  • நாவிற்கு சுவையான கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் செய்வது எப்படி..!!

    கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் செய்வது எப்படி என்று அனைவருக்கும் தெரியும். எங்கள் வீட்டில் அடிக்கடி செய்கிறோம். இதில் என்ன புதுமை என்று நீங்கள் நினைக்கலாம். இந்தக் குறிப்பைப் படியுங்கள்.

    உங்கள் வீட்டில் உள்ள சாம்பாரையும் பாருங்கள். நீங்கள் செய்யும் சாம்பாருக்கும் இந்த சாம்பாருக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு நிச்சயம் தெரியும்.

    தேவையான பொருட்கள் :

    கத்தரிக்காய் – 3

    முருங்கைகாய் – 1

    பச்சை மிளகாய் – 2

    சின்ன வெங்காயம் – 12

    கறிவேப்பிலை – 2 கொத்து

    உப்பு – தேவையான அளவு

    வெந்தயம் – 1/4 ஸ்பூன்

    எண்ணெய் – 2 ஸ்பூன்

    துவரம்பருப்பு – 150 கிராம்

    சீரகம் – 1/2 ஸ்பூன்

    தேங்காய் – துருவல் சிறிதளவு

    சாம்பார் பொடி – 2 ஸ்பூன்

    புளி – எலுமிச்சை அளவு

    தாளிப்புக்கு தேவையானவை:

    நெய் – 1 ஸ்பூன்

    எண்ணெய் – 1 ஸ்பூன்

    கடுகு – 1 ஸ்பூன்

    உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்

    கருவேப்பிலை – 1 கொத்து

    வரமிளகாய் – 3

    பெருங்காயம் – 1 ஸ்பூன்

    கொத்தமல்லி – 1 கொத்து

    செய்முறை :

    முதலில் புளியை எலுமிச்சை அளவு தண்ணீரில் கரைத்து புளி கரைசலை வைக்கவும். இந்த புளி கரைசலில் 2 தேக்கரண்டி சாம்பார் பொடி சேர்த்து கரைக்கவும். அப்படியே தனியாக வைத்துக்கொள்ளவும்.

    அடுத்து, ஒரு மிக்ஸி ஜாடியை எடுத்து அதில் ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவலைப் போட்டு, அதில் 1/2 ஸ்பூன் சீரகம், 2 சின்ன வெங்காயம், சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து, தனியே வைக்கவும்.

    அடுத்து குக்கரில் 150 கிராம் பருப்பை போட்டு 3 அல்லது 4 விசில் விட்டு வேக விடவும். வேகவைத்த பருப்புகளையும் தனியாக வைக்கவும்.

    அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் – 1/4 ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 2, முருங்கைக்காய் – 1, நறுக்கிய கத்தரிக்காய் – 3, கறிவேப்பிலை – 2 லீப், உப்பு தேவையான அளவு சேர்த்து, இந்த காய்களை எண்ணையில் நன்கு வதக்கி கரைத்த புளி கரைசலை ஊற்றி சுமார் 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இந்த புளி தண்ணீரில் முக்கால் பங்கு காய்கறிகளை வேகவைக்கவும்.

    அதன் பிறகு வேக வைத்த பருப்பை சேர்த்து நன்கு கலந்து சாம்பாரை கொதிக்க விடவும். சாம்பாரின் உப்புத்தன்மையை சரிபார்க்கவும்.

    சாம்பார் பருப்பும் நன்கு கொதி வந்ததும், மிக்ஸியில் செய்து வைத்திருக்கும் துருவிய தேங்காய் விழுதை ஊற்றி, மிதமான தீயில் 3 நிமிடம் மீண்டும் கொதிக்க வைத்து, கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைக்கவும்.

    இறுதியாக, நாம் சுவைக்க, மணக்க தாளிப்பு கொடுக்க வேண்டும். நெய் – 1 ஸ்பூன், எண்ணெய் – 1 ஸ்பூன் ஊற்றி கடுகு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, வர மிளகாய் – 3, பெருஞ்சீரகம் – 1/4 ஸ்பூன் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து சாம்பாரில் சேர்த்தால் அருமையான, சுவையான கத்தரிக்காய், முருங்கக்காய் சாம்பார் ரெடி.