வெங்காய தொக்கு செய்வது எப்படி

இட்லி, தோசைக்கு சுவையான வெங்காய தொக்கு செய்வது எப்படி..!

இன்றைய பதிவில் இந்த வெங்காய தொக்கை சுவையாக செய்வது எப்படி என்று படித்து தெரிந்து கொள்ள போகிறோம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த வெங்காய தொக்கை பிடிக்கும். சரி வாங்க இட்லி, தோசைக்கு ஏற்ற வெங்காய தொக்கை கூறப்பட்டுள்ள முறை படி செய்து அசத்தலாம்..!

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – ½ கிலோ

கடுகு – ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி விதை – ஒரு ஸ்பூன்

வெந்தயம் – ½ ஸ்பூன்

பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்

புளி – ஒரு பெரிய நெல்லிக்கா அளவு

நல்லெணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்

கடுகு உளுந்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்

கருவேப்பிலை – இரண்டு கொத்து

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – இரண்டு சிட்டிகை

மிளகாய் தூள் – 1½ டேபிள்ஸ்பூன்

பொடி செய்த வெல்லம் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கவும்.

பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை, 1/2 டீஸ்பூன் பெருங்காயம், 1 டீஸ்பூன் வெந்தயத்தை ஆகியவற்றை வறுத்து பொடியாக வைத்துக்கொள்ளுங்கள்.

புளியை 20 நிமிடம் ஊறவைத்து கரைத்து தனியாக வைக்கவும். தண்ணீர் அதிகமாக சேர்க்கவேண்டாம்.

பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மூன்று ஸ்பூன் நல்லெண்ணெ சேர்த்து சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

பிறகு 1½ தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
புளி கரைசலை ஊற்றி நன்கு கிளறி மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.

தண்ணீர் அனைத்தும் வடிந்து எண்ணெய் பிரிந்ததும் பொடி செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து மீண்டும் இரண்டு நிமிடம் வதக்கவும்.

இரண்டு நிமிடம் கழித்து ஒரு ஸ்பூன் இடித்த வெல்லம் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கினால் சுவையான வெங்காய தொக்கு ரெடி.

Leave a Reply

Previous Post

Next Post

Discover more from Dad's Kitchen

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading