Author: Arumugam K

  • மதிய உணவிற்கு பரங்கிக்காய் பச்சைப்பயிறு கூட்டு செய்வது எப்படி!!

    தேவையான பொருள்கள் :

    இளம் பரங்கிக்காய்          –    400 கிராம்

    சிறு பயிறு                     –    100 கிராம்

    தேங்காய்                       –    1/2  முடி

    பச்சை மிளகாய்              –    4

    தேங்காய் எண்ணெய்       –  2 தேக்கரண்டி

    உப்பு                          –   தேவையான அளவு

    செய்முறை :

    முந்தின நாள் இரவு சிறுபயிரை நனைய வைக்கவும். மறுநாள் தண்ணீரை வடித்துவிட வேண்டும். பயிறு முளை விட்டிருக்கும். தேங்காயுடன் பச்சை மிளகாயையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தண்ணீரை கொதிக்க வைத்து பயிரை வேக வைக்கவும்.

    முக்கால் பதம் வெந்ததும் வெட்டிய பரங்கிக்காய், அரைத்த விழுது, உப்பு சேர்த்து வேக வைக்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து வெந்ததும் மல்லி இலை, கருவேப்பிலை கிள்ளிப்போட்டு தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறி விட்டு இறக்கவும்.

  • சுவையான முந்திரிப் பருப்பு பக்கோடா செய்வது எப்படி?

    என்ன பக்கோடா சாப்பிட்டாலும் வாயில் கரையும். கடைகளுக்குச் சென்றால், பலவிதமான பக்கோடா வகைகள் உள்ளன, அவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தாலும் சுவை வித்தியாசமாக இருக்கும்.

    தேவையான பொருள்கள்:

    முந்திரிப்பருப்பு – ¼ கிலோ

    கடலைமாவு – 1 கிலோ

    டால்டா – 200 கிராம்

    உப்பு – தேவையானது

    இஞ்சி – 25 கிராம்

    பச்சை மிளகாய் – 25 கிராம்

    சீரகம் தூள் செய்தது – ½ தேக்கரண்டி

    சோடா உப்பு – ½ தேக்கரண்டி

    சுடுவதற்கு ரீபைண்ட் ஆயில் – 2 லிட்டர்

    கருவேப்பிலை, மல்லி இலை – தேவையானது

    செய்முறை:

    முந்திரியை நெய்யில் சிறு தீயில் வறுத்து உப்பு தூவி தனியாக வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, நெய் அல்லது டால்டா, சோடா உப்பு, பொடியாக வெட்டிய இஞ்சி, பச்சை மிளகாய், சீரகத்தூள், மல்லி இலை மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

    பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

    பிறகு அதே எண்ணெயில் கறிவேப்பிலையை வறுத்து முந்திரியைத் தூவி இறக்கவும்.

    இப்போது சுவையான முந்திரி பக்கோடா ரெடி.

  • ஆரோக்கியமான வாழைப்பூ வடை செய்வது எப்படி?

    எப்போதும் உளுந்த வடை, மசால் வடை என சாப்பிட்டு பழகியோருக்கு உடலுக்கு நன்மையை தரக்கூடிய வாழைப்பூவில் வடை செய்து கொடுத்தால் சற்று மாறுதலுடன் சுவையான வடையும் கிடைக்கும். இன்று வாழைப்பூவில் வடை செய்வது குறித்து காணலாம்.

    தேவையான பொருட்கள்:

    வாழைப்பூ – 1,

    கடலைப்பருப்பு – 1 கப்,

    காய்ந்த மிளகாய் – 2,

    பச்சை மிளகாய் – 5,

    பெருஞ்சீரகம் – சிறிதளவு,

    வெங்காயம் – 2,

    கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,

    இஞ்சி, பூண்டு, உப்பு – தேவையான அளவு.

    செய்முறை:

    முதலில் வாழை பூவை எடுத்து சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கப் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சேர்த்து தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

    மிக்ஸியில் இஞ்சி – பூண்டு சிறிதளவு, பச்சை மிளகாய் 5, பெருஞ்சீரகம் அரை ஸ்பூன், அதனுடன் நாம் ஊற வைத்த கடலைப்பருப்பு அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயம், கறிவேப்பில்லை, கொத்தமல்லி சிறதளவு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய வாழைப்பூ, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

    பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்பொழுது சூடான சுவையான மொறு மொறு வாழைப்பூ வடை தயார். வாழைப்பூவை உண்பதால் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும்., உடல் சூட்டை தணிக்கும்., கை-கால் எரிச்சலையும் குணமாக்கும்.

  • குழந்தைகளுக்கு பிடித்த அரிசி மிட்டாய் செய்வது எப்படி!!

    இனிப்பு என்றாலே குழந்தைகளுக்கு பிடிக்கும் அதுவும் இனிப்பு மற்றும் மொறுமொறுப்பான அரிசி மிட்டாய் எல்லோருக்குமே ரொம்பவே பிடிக்கும்.

    தேவையான பொருள்கள் :-

    பச்சரிசி                       – 200 மி.லிட்டர்

    உளுந்தம் பருப்பு          – 200மி.லிட்டர்

    கருப்பட்டி or சீனி          – 1 கி

    தண்ணீர்                    – 3/4 லிட்டர்

    எண்ணெய்                  – ரீ பைண்ட் ஆயில்

    செய்முறை :-

    பச்சரிசியையும் பருப்பையும் 15 முதல் 20 நிமிடங்கள் நனைய வைத்து வடைக்கு ஆட்டுவது போல் தண்ணீர் தெளித்து பொங்க ஆட்டி வெயிலில் ஒரு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.  மாவு, தோசை மாவு போல் இருக்கவும்.

    சீனியுடன் தண்ணீர் கலந்து கம்பிப்பதத்தில் பாகு காய்ச்சி தணலில் வைத்துக் கொள்ளவும். வாணலியில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  மாவை ஒரு துளையுள்ள சிரட்டை அல்லது செம்பில் எடுத்து அழுத்தி ஒரே பக்கமாக வளைவு வரும்படி நீளமாக சுட்டு சூடாக இருக்கும் சீனிப்பாகில் போட்டு நன்கு பாகு குடித்ததும்  எடுத்து தனியாக வைக்கவும்.

    பாகு சூடாக இருந்தால் மிட்டாய் சீனிப் பாகை நன்றாக குடிக்கும். பாகு கட்டியாகி விட்டால் ஒரு கரண்டி வெந்நீரை கலந்து கொள்ளலாம். கருப்பட்டி மிட்டாய் சுடுவதனால் கருப்பட்டியைத் தட்டிப் போட்டு கருப்பட்டி கரைத்து ஒரு கொதி கொதித்ததும் இளம் பாகாக வைத்துக் கொள்ளவும்.

  • ஆரோக்கியமான கேரட் அல்வா செய்வது எப்படி!

    உடலுக்கு ஆரோக்கியம் தரும் இனிப்பு ரெசிபி இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேரட் அல்வா செய்வது எப்படி. அதை மிக எளிதாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

    தேவையான பொருள்கள்:

    காரட்                                –    ¼ கிலோ

    ஏலக்காய்                      –    4

    சீனி                                   –    ¼ கிலோ

    கிராம்பு                            –    4

    பால்                                 –     1 கோப்பை

    முந்திரிப் பருப்பு         –    15

    செய்முறை:

    முதலில் காரட்டைக் கழுவி சுத்தம் செய்து துருவியில் துருவிக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் ஒரு கோப்பை பாலில் காரட் துருவலை மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும். பால் சுண்டி வருகையில் சீனியைப் போட்டு கிளறிவிடவும்.

    அடுப்பை சிறிதாக எரியவிடவும். தொடர்ந்து விடாமல் கிளறிக் கொண்டு இருக்கவும். அல்வா பதத்தில் வரும்போது டால்டாவை ஊற்றவும்.

    ஏலக்காய், கிராம்பைப் பொடி செய்து போடவும். அல்வா நன்றாகத் திரண்டு வந்த பின், நெய் அல்லது டால்டா தடவிய தட்டில் கொட்டி, மேலே வறுத்த முந்திரிப் பருப்பை பரப்பவும்.

  • மார்பியஸ் செய்வது எப்படி!!

    மார்பியஸ் செய்வது எப்படி!!

    தேவையான   பொருட்கள்:

    மைதா         –   ¼  கிலோ

    டால்டா        –  ¼ கிலோ

    சீனி                   –  ½  கிலோ

    ஏலக்காய்      – ½  தேக்கரண்டி

    செய்முறை :

    வாணலியில் டால்டாவை சுமார் 75 கிராம் காய வைத்து, மைதாமாவில் சிறிது, சிறிதாக ஊற்றி நன்றாக பிசையவும்.

    மாவு உதிரியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து பூரி மாவு போல் மெதுவாக பிசைந்து கொள்ளவும்.

    பிறகு பூரி பலகையில், பூரி போல் விரித்து அரை சென்டிமீட்டர். இடைவெளி விட்டு, ஓரங்களில் வெட்டாமல் நடுவில் மாத்திரம் கத்தியால் நீள நீளமாக கீரி பூரியை கையால் மெதுவாக சுருட்டி, ஓரங்கலை  அழுத்ட்  வைக்கவும்.

    இதேபோல் மீதி மாவையும் செய்து வைத்துக் கொள்ளவும். சீனியை, பாகு கம்பிப்பதம் வரும் வரை காய்ச்சி, இறக்கி வைத்துக்கொள்ளவும்.

    மீதி டால்டாவை வாணலியில்  ஊற்றி, காய்ந்ததும் தயார் செய்து வைத்திருக்கும், பூரிகளை மெதுவாக  எடுத்து போட்டு சிவந்ததும் எடுத்து, சீனிப்பாகில் போட்டு உடனே எடுத்து தாம்பளத்தில் வைக்கவும்.

    குறிப்பு: விரும்பினால் மைதா மாவுடன் பச்சை கலர் சேர்த்துக்கொள்ளலாம்.

  • நொறுக்கு தீனியாக உப்பு சீடை செய்வது எப்படி?

    சின்ன வயசுல இருந்தே வீட்டில் நிறைய பலகாரங்கள் சாப்பிடுபவர்கள் உண்டு. கடையில் வாங்கும் உப்பு சீடை எனக்கு மிகவும் பிடிக்கும். வீட்டில் செய்யப்படும் முறுக்கு சீடை வாசனை வித்தியாசமானது. அப்படிப்பட்ட சுவையான மல்டி ஸ்பைசி உப்பு சீடை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளப் போகிறோம்.

    தேவையானவை :

    பச்சரிசி – 4 டம்ளர்

    உளுந்தம் பருப்பு – 1/2 டம்ளர்

    கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

    வெண்ணெய் – 100 கிராம்

    உப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்

    மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

    சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

    பெருங்காயத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

    தேங்காய் மூடி – 1

    தண்ணீர் – மாவு பிசையும் அளவு

    சமையல் எண்னெய் – 1/2 கிலோ

    செய்முறை :

    பச்சரிசியை களைந்து தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஊற வைத்த அரிசியை நன்கு வடிய வைத்து, நிழலில் உலர்த்தவும்.

    லேசாக ஈரப்பசையுடன் இருக்கும் உலர்ந்த அரிசியை (பிடித்தால் பிடிக்க வரும், விட்டாலும் உலர்ந்து விடும் பக்குவம்) மிஷினில் மாவாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.

    சலித்த மாவை வெறும் வாணலியில் லேசான சிவப்பு நிறத்தில் வறுத்துக் கொள்ளவும். மீண்டும் சலித்துக்கொள்ளவும்.

    உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்து மிஷினில் மாவாக அரைத்துக் கொண்டு, சலித்து வைத்துக்கொள்ளவும்.

    கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, வடிய வைத்துக் கொள்ளவும்.

    தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடி செய்து கொள்ளவும்.

    அரிசி மாவு, உளுந்து மாவு ஊற வைத்த கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், மிளகு, சீரகம், உப்பு தூள், பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு, வெண்ணெய்யையும் சேர்க்கவேண்டும்.

    சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து பிசையவும். அதிகமாக நீர் விட்டால் ‘மொழுக்’ என்று இருக்கும். ஆகையால் பிசறினாற்போல் இருக்க வேண்டும். அதே சமயம் உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும்.

    பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி ஒரு துணியில் அல்லது பேப்பரில் பரவலாகப் போடவும். எண்ணெய் காயவைத்து ஈரப்பசை கொஞ்சம் குறைந்தவுடன் முதலில் ஓரிரண்டு சீடைகளை போட்டு வெடிக்காமல் இருந்தால் மீதமுள்ள சீடைகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு எடுக்கவும்.

  • கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி!

    பொதுவாக, சிக்கன் குழம்பு எப்படிச் செய்தாலும், கோழியின் சுவை குழம்பை இன்னும் சுவையாக்கும் அல்லவா?

    இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சிக்கன் கிரேவியை எப்படி சரியாக தயாரிப்பது என்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    கோழிக்கறி – 1/2 கிலோ

    வெங்காயம் – 4

    பச்சை மிளகாய் – 4

    தக்காளி – 4

    சிவப்பு மிளகாய் – 8

    தனியா – ஒரு கைப்பிடி

    மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

    மிளகு – 1 தேக்கரண்டி

    சீரகம் – 1 தேக்கரண்டி

    சோம்பு – 1/2 தேக்கரண்டி

    இஞ்சி – 1 துண்டு

    பூண்டு – 1(முழு)

    கசகசா – 1 தேக்கரண்டி

    தேங்காய் – 1/2 மூடி

    கிராம்பு, பட்டை, ஏலக்காய் – சிறிதளவு

    எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி

    கறிவேப்பிலை – 1 கொத்து

    உப்பு – தேவையான அளவு

    செய்முறை:

    கோழியை நன்றாக கழுவவும். வர மிளகாய், தனியா, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா ஆகியவற்றை எண்ணெயில்லாமல் வறுத்து, நைசாக அரைக்கவும்.

    இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வேண்டுமானால் சின்ன வெங்காயத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கவும். தக்காளியை நறுக்கவும்.

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலக்காயை தோல் நீக்கி, பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கவும். சிவந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, கோழிக்கறி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    கறி நன்றாக வெந்ததும், அரைத்த மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, கறியின் மேல் மட்ட அளவு தண்ணீர் ஊற்றவும். குழம்பு கொதித்து கெட்டியானதும் இறக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்க்கவும். சுவையான கிராமத்து சிக்கன் குழம்பு தயார்.

    குறிப்பு: தேங்காய்க்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்து சிக்கன் கிரேவி செய்யலாம். இது மிகவும் சுவையாக இருக்கும்.

  • நீங்கள் மீண்டும் மீண்டும் சாப்பிடக்கூடிய சிக்கன் பிரியாணி செய்முறை!!

    நீங்கள் மீண்டும் மீண்டும் சாப்பிடக்கூடிய சிக்கன் பிரியாணி செய்முறை!!

    நாம் அனைவரும் விரும்பும் அசைவ உணவுகளில் சிக்கன் பிரியாணியும் ஒன்று. இந்த பதிவில் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் இந்த உணவை எப்படி எளிதாக சமைப்பது என்று பார்ப்போம்.

    தேவையானவை :

    பிரியாணி அரிசி                            –  1/4 படி

    சிக்கன் கறி                                       –  250 கிராம்

    தேங்காய்                                          –  1/2 மூடி பால் எடுக்கவும்

    இஞ்சி                                                 –  3 அங்குலம் அரைப்பதற்கு

    பூண்டு                                                –  1

    நெய்யில் வறுத்த பட்டை         –  1 அங்குலம்

    கிராம்பு                                              –  6

    கொத்தமல்லி                                 –  2 டீஸ்பூன் (வறுத்தது)

    புதினா, கொத்தமல்லி தழை
    பெல்லாரி                                         –  2

    மிளகாய்                                           –  6

    ஏலக்காய்                                         –  6

    பெருஞ்சீரகம்                                 –  1 டீஸ்பூன்

    செய்முறை :

    அரிசியை கல்நீக்கி சுத்தம் செய்து வடிகட்டி வைக்கவும். பிரஷர் குக்கரில் வெட்டிய சிக்கன் கறித்துண்டுகளை உப்பு, மஞ்சள் 1/3 படி நீர் சேர்த்து வேக வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி நீளமாக அரித்த வெங்காயம் புதினா மல்லி இலை சேர்த்து வதக்கவும்.

    அரைத்த மசால், அவித்த கறி, அரிசியையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். பிரஷர் குக்கரில் கறி வெந்த தண்ணீர் தேங்காய் பால் சேர்த்து அரை படியாக்கி கொதிக்க வைக்கவும்.

    கொதிக்கும் தேங்காய் பாலில் வதக்கிய மசால் அரிசி, கறி, இவற்றையும் உப்பும் சேர்த்துக் கிளறி இளந்தீயில் குக்கரை வெயிட் வைத்து மூடி 10 நிமிடத்தில் இறக்கவும்.

  • ஹோட்டலில் செய்வது போல தேங்காய் சட்னி செய்வது எப்படி!!

    உடைத்த வேர்க்கடலை, தேங்காய், பச்சை மிளகாய் மட்டும் சேர்த்து செய்யும் தேங்காய் சட்னியும் நல்லது. ஆனால் எந்த அளவுகளில் முதிர்ச்சியடைய வேண்டும்? தந்திரம் தெரிந்திருக்க வேண்டும்.

    தேங்காய் சட்னி அதிக சுவைக்கு காரணம் என்ன? ஹோட்டலில் செய்வது போல சுவையான தேங்காய் சட்னியை இப்படி செய்து பார்க்கலாம்! அதை எப்படி செய்வது? என்பதை அறிய இந்தப் பதிவில் தொடர்ந்து பயணிப்போம்.

    தேவையான பொருட்கள்:

    தேங்காய் – அரை மூடி

    உடைத்த கடலை – அரை கப்

    பச்சை மிளகாய் – 2

    வர மிளகாய் – 2

    சின்ன வெங்காயம் – 4

    பூண்டு பல் – 2

    இஞ்சி – ஒரு சிறிய துண்டு

    கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவிற்கு

    கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவிற்கு

    கல் உப்பு – தேவையான அளவிற்கு

    செய்முறை:

    தேங்காய் சட்னியை அரைக்க முதலில் தேங்காயை உடைத்து அரை கப் தேங்காயை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.

    தேங்காய் சட்னிக்கு முற்றிய தேங்காய் இல்லாமலும், இளம் தேங்காய், சட்னிக்கு மிகவும் சுவையாக இருக்கும். எனவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் தேங்காயை முதலில் சரிபார்க்கவும்.

    பிறகு தேங்காய்த் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரை கப் உடைத்த கடலைப்பருப்பு, இரண்டு பச்சை மிளகாய் அளவு சேர்த்து அரைக்கவும்.

    பிறகு 2 பூண்டு பல், 2 வர மிளகாய் மற்றும் ஒரு துண்டு இஞ்சி மட்டும் சேர்க்கவும். அதிக இஞ்சி தேங்காய் சட்னியின் சுவையை கெடுத்துவிடும். ஒரு அங்குலத்தைச் சேர்த்தால் போதும்.

    பிறகு ஒரு பிடி கறிவேப்பிலை மற்றும் ஒரு பிடி கொத்தமல்லி இலைகளை கழுவி சேர்க்கவும். நான்கு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அதில் இரண்டை மட்டும் சேர்க்கவும்.

    மீதமுள்ள 2 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். மிக்ஸி ஜாரில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பொடி உப்பை விட கல் உப்பு சேர்த்தால் தேங்காய் சட்னி இன்னும் சுவையாக இருக்கும்.

    இப்போது மிக்ஸி ஜாடியின் மூடியை மூடி, தேங்காய் சட்னியை மிக நைசாக அரைக்கவும்.

    பிறகு ஒரு ஸ்பூன் எடுத்து தாளிக்கவும் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கடுகு சேர்த்து வதக்கவும்.

    கடுகு வெந்ததும் கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, கால் டீஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து தேங்காய் சட்னியில் ஊற்றவும்.

    அவ்வளவுதான்! தேங்காய் சட்னி, ஹோட்டலில் அதீத ருசியுடன் செய்வது போல, செய்து பார்த்து மகிழுங்கள்.