குழந்தைகளுக்கு பிடித்த அரிசி மிட்டாய் செய்வது எப்படி!!
இனிப்பு என்றாலே குழந்தைகளுக்கு பிடிக்கும் அதுவும் இனிப்பு மற்றும் மொறுமொறுப்பான அரிசி மிட்டாய் எல்லோருக்குமே ரொம்பவே பிடிக்கும்.
தேவையான பொருள்கள் :-
பச்சரிசி – 200 மி.லிட்டர்
உளுந்தம் பருப்பு – 200மி.லிட்டர்
கருப்பட்டி or சீனி – 1 கி
தண்ணீர் – 3/4 லிட்டர்
எண்ணெய் – ரீ பைண்ட் ஆயில்
செய்முறை :-
பச்சரிசியையும் பருப்பையும் 15 முதல் 20 நிமிடங்கள் நனைய வைத்து வடைக்கு ஆட்டுவது போல் தண்ணீர் தெளித்து பொங்க ஆட்டி வெயிலில் ஒரு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். மாவு, தோசை மாவு போல் இருக்கவும்.
சீனியுடன் தண்ணீர் கலந்து கம்பிப்பதத்தில் பாகு காய்ச்சி தணலில் வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை ஒரு துளையுள்ள சிரட்டை அல்லது செம்பில் எடுத்து அழுத்தி ஒரே பக்கமாக வளைவு வரும்படி நீளமாக சுட்டு சூடாக இருக்கும் சீனிப்பாகில் போட்டு நன்கு பாகு குடித்ததும் எடுத்து தனியாக வைக்கவும்.
பாகு சூடாக இருந்தால் மிட்டாய் சீனிப் பாகை நன்றாக குடிக்கும். பாகு கட்டியாகி விட்டால் ஒரு கரண்டி வெந்நீரை கலந்து கொள்ளலாம். கருப்பட்டி மிட்டாய் சுடுவதனால் கருப்பட்டியைத் தட்டிப் போட்டு கருப்பட்டி கரைத்து ஒரு கொதி கொதித்ததும் இளம் பாகாக வைத்துக் கொள்ளவும்.