Blog

  • கர்நாடகா ஸ்டைல் கத்திரிக்காய் சாதம் செய்வது எப்படி?

    மைசூரைப் பூர்வீகமாகக் கொண்ட வாங்கி பாத்(கத்திரிக்காய் சாதம்), பிஸிபேளாபாத் போன்று கர்நாடக உணவு வகைகளில் பிரபலமான மதிய உணவாகும்.

    கத்திரிகாய் உடன் மசாலா ஆகிய தனித்துவமான தூள் சேர்த்து சாதத்துடன் கலந்து உண்ணப்படும் சாத வகைகளில் இதுவும் ஒன்றாகும்.

    கத்தரிக்காயைக் என்றவுடன் முகம் சுளிப்பார்கள் குழந்தைகள். வாங்கி பாத் நெய், கடலை, பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுவதால் விரும்பி உண்பார்கள். புளி சாதம் போல் இருக்கும்.

    ஆனால் அதன் சுவை முற்றிலும் வேறுபட்டது. இதற்கு பயன்படுத்தப்படும் பொடியை ஒரு முறை தயாரித்தால், தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

    தேவையான பொருட்கள்

    கத்திரிக்காய்

    நெய்

    வேர்க்கடலை

    கடலெண்ணெய்

    கடலை பருப்பு

    உளுத்தம் பருப்பு

    தனியா

    சீரகம்

    வெந்தயம்

    மிளகு

    கிராம்பு

    பட்டை

    தேங்காய்

    பைதாகி மிளகாய்

    பச்சை மிளகாய்

    கருவேப்பிலை

    புளி

    உப்பு

    கொத்தமல்லி

    செய்முறை

    அடுப்பில் கடாய் வைத்து ஐந்து டீஸ்பூன் கடலை பருப்பு, மூன்று டீஸ்பூன் உளுத்தம் பருப்பு போட்டு எண்ணெய் இன்றி மிதமான தீயில் வறுக்கவும்.

    இரண்டு நிமிடத்தில் கடலை பருப்பு வறுபட்டு ஒரு விதமான வாசனையை வெளியிட்ட பிறகு ஐந்து ஸ்பூன் தனியா, அரை டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் மிளகு சேர்த்து வறுக்கவும்.

    இதனுடன் நறுமணம் தரும் எட்டு கிராம்பு, நான்கு துண்டு பட்டை, கால் மூடி துருவிய தேங்காய் போடவும்.

    தேங்காய் கருகாமலும், கடாயில் ஒட்டாமலும் பார்த்துக் கொள்ளவும்.

    உலர் வறுவலுக்கு பிறகு இவை அனைத்தையும் தனியாக வைத்து ஆற விடுங்கள்.

    அடுத்ததாக அதே கடாயில் மூன்று ஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றி 12 பைதாகி மிளகாய் போட்டு நிறம் மாறாமல் வறுக்கவும்.

    இவற்றை மிக்ஸியில் போட்டு பவுடராக அரைக்கவும்.

    இதனிடையே அரை கிலோ அளவிற்கு வெள்ளை சாதம் வேக வைத்து கொள்ளுங்கள்.

    மசாலா தயார் செய்வதற்கு கடாயில் பத்து டீஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றி ஒரு டீஸ்பூன் கடுகு, நாலு பச்சை மிளகாய், கொஞ்சம் வேர்க்கடலை, தேவையான அளவு கறிவேப்பிலை மற்றும் அரை கிலோ கத்திரிக்காய் போடுங்கள்.

    கத்திரிக்காயை எண்ணெய்-ல் 70 விழுக்காடு அளவிற்கு வேக வைக்கவும்.

    ஐந்து நிமிடங்களிலேயே கத்திரிக்காய் எண்ணெய்-ல் வதங்கிவிடும்.

    இதனிடையே 75 கிராம் புளியை 150 மில்லி லிட்டர் சூடான தண்ணீரில் கரைத்து அதை கத்திரிக்காய் மீது ஊற்றுங்கள்.

    அடுத்ததாக 50 கிராம் வெல்லம், தேவையான அளவு உப்பு சேருங்கள். புளியின் வாசனை போவதற்கு ஆறு நிமிடங்கள் ஆகும்.

    இறுதியாக மிக்ஸியில் அரைத்த வாங்கி பாத் பவுடர் ஐந்து டீஸ்பூனும், அரை ஸ்பூன் பெருங்காய் தூள் சேருங்கள்.

    ஒன்றரை ஸ்பூன் நெய் ஊற்றி சாதத்தை நன்கு கிளறி கொத்தமல்லி இலை போடுங்கள். கர்நாடகா ஸ்டைல் மிக சுவையான கத்திரிக்காய் சாதம் ரெடி.

  • ஆடி கூழ் செய்வது எப்படி?

    உலகெங்கிலும், தமிழ் மாதங்கள் எப்போதுமே கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மத வழிபாடுகளுடன் கலந்த மாறுபட்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. தமிழ் நாட்காட்டியின் நான்காவது மாதமான ஆடி மாதம் அம்மனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.

    ஆடி மாதம் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காளிகாம்பாள், மாரியம்மன், பராசக்தி தேவி மற்றும் பத்ரகாளி போன்ற தெய்வங்களைக் கொண்டாடும் ஒரு பெரிய திருவிழா இது. அம்மன் கோவில்களில் பக்தர்கள் மற்றும் திருவிழாக்களில் கேழ்வரகு கூழ் வழங்குவது தமிழ் கலாச்சார பாரம்பரியமாக கருதப்படுகிறது.

    குறிப்பாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகர்புறங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் இந்த ஆடி மாதம் சிறப்பாக கொண்டாடப்பட்டு பக்தர்களுக்கு கேழ்வரகு கூழ் அம்மன் பிரசாதமாக வழங்கும் வழக்கம் உள்ளது.

    முக்கியமாக குழந்தைகளை தாக்கும் தட்டம்மை, தமிழ் வருடத்தில் கோடை மாதங்களான சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களிலும், அடுத்த பருவத்தின் தொடக்கமான ஆடி மாதத்திலும் அடிக்கடி ஏற்படும்.

    இம்மாதத்தில் நிலவும் குளிர்ச்சியின் காரணமாக ஆடி மாதத்தில் காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது. இந்நிலையை மாற்ற தான் கோவில்களில் கூழ் வைத்து வழிபடுகின்றனர்.

    தேவையான பொருட்கள்

    1 கப் ராகி மாவு

    1/4 கப் பச்சை அரிசி

    சுமார் 2 கப் தண்ணீர் + தேவைக்கேற்ப

    1 கப் தயிர்

    சிறிய வெங்காயம் 2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை 2 டீஸ்பூன்

    பச்சை மிளகாய்

    சுவைக்கு உப்பு

    செய்முறை

    ராகி மாவில் 4 கப் தண்ணீரைச் சேர்த்து, முழுமையாகக் கலந்து கட்டி இல்லாமல் கிளறவும். கட்டியாக இருந்தால் தனியாக ஒதுக்கி வைக்கவும்.

    பச்சை அரிசியை மிக்ஸியில் எடுத்து ரவா போல் அரைக்கவும்.

    அடி கனமான பாத்திரத்தில், 2.5 கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அரிசியைச் சேர்த்து, கஞ்சி போன்ற நிலைத்தன்மைக்கு மென்மையாக சமைக்கவும்.

    பிறகு கலந்து வைத்திருக்கும் ராகி மாவு கலவை மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும்.

    குறைந்த தீயில், அது கெட்டியாகும் வரை மற்றும் ராகி மாவு பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறவும். இது பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாறும்.

    இந்த கட்டத்தில், அதை அணைத்து, பரந்த வாய் கொள்கலனில் பரப்பி, அதை முழுமையாக குளிர்விக்க விடவும்.

    தயிரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும்.

    பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். இப்போது ராகி கூழில், மோர், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் விழுது சேர்க்கவும்.

    கட்டிகள் இல்லாமல் நன்றாக அடிக்கவும்; ஒரு மெல்லிய கூழ் நிலைத்தன்மைக்கு தண்ணீர் சேர்க்கவும். இது மிகவும் சளியாக இருக்க வேண்டும்.

    வெங்காயம் மற்றும் மிளகாயுடன் ஆடி கூழ் பரிமாறவும்.

  • வெஜ் மோமோஸ் செய்வது எப்படி?

    உலகம் முழுவதும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி மோமோஸ். இது மதிய உணவுக்கு முன் ஒரு ஸ்டார்ட்டராகவும் வழங்கப்படுகிறது. உணவுப் பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இதற்கு தனி மோகம் உண்டு.

    மாலை நேரங்களில், மோமோஸ் வழங்கப்படும் உணவகங்கள் மற்றும் நண்பர்கள் கூடும் கடைகளில் கூட்டத்தை நாம் காணலாம். மோமோஸில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பிரபலமானவை சிக்கன் மோமோஸ், பீஃப் மோமோஸ், வெஜிடபிள் மோமோஸ், சீஸ் மோமோஸ் மற்றும் பால் உருண்டை மற்றும் சர்க்கரையால் செய்யப்பட்ட khoa மோமோஸ்.

    மோமோஸ் திபெத்தில் அல்லது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தோன்றியிருக்கலாம் என்று கூறப்பட்டாலும், மோமோஸ் என்ற பெயரே சீன மொழியில் இருந்து வந்தது. அதன்படி, சீனர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று மோமோஸ்.

    இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த பகுதிகளின் உணவு வகைகளுக்கு ஏற்ப சிறுசிறு மாற்றங்களுடன் தயாரித்து சுவைக்கிறார்கள். மோமோஸைத் தொட்டு சாப்பிடுவதற்காகவே ஒரு சட்னி தயாரிக்கப்படுகிறது.

    இந்த சட்னி தக்காளி, கஞ்சா காஷ்மீரி மிளகாய், பூண்டு, மிளகு தூள், சர்க்கரை, வினிகர் மற்றும் உப்பு சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த சட்னியுடன் மோமோஸ் சாப்பிடுவது ஒரு அற்புதமான கலவை என்பதை மறுக்க முடியாது.

    தேவையான பொருட்கள்

    1 கப் மைதா மாவு

    1 பெரிய வெங்காயம்

    1 குடை மிளகாய்

    2 கேரட்

    5 to 6 பீன்ஸ்

    1/2 முட்டைகோஸ் (சின்னது)

    2 பல் பூண்டு

    1 துண்டு இஞ்சி

    1 மேஜைக்கரண்டி மிளகு தூள்

    1 மேஜைக்கரண்டி வினிகர்

    1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்

    சிறிதளவு கொத்தமல்லி

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    செய்முறை

    முதலில் வெங்காயம், குடை மிளகாய், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை தயார் செய்து வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு bowl ல் மைதா மாவு, கால் மேஜைக்கரண்டி அளவு உப்பு, 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய், மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

    பின்பு ஒரு பாத்திரத்தில் வைத்து இறுக்கமாக மூடி போட்டு அதை சுமார் 40 லிருந்து ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.

    அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாய், கேரட், முட்டைகோஸ், மற்றும் பீன்ஸை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வதக்கவும்.

    பின்பு அதில் மிளகாய் தூள், வினிகர், சோயா சாஸ், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வேக விடவும்.

    பின்னர் அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சிறிது நேரம் ஆற விடவும்.

    அடுத்து நாம் ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    இப்பொழுது சப்பாத்தி கல்லில் ஒவ்வொரு உருண்டைகளாக வைத்து சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நாம் செய்து வைத்திருக்கும் ஸ்டப்பிங்கை வைக்கவும்.

    ஸ்டப்பிங்கை வைத்த பின் அவரவருக்கு பிடித்தமான வடிவில் மோமோஸ்ஸை மடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    பின்பு இட்லி தட்டை எடுத்து அதில் எண்ணெய்யை தடவி இந்த மோமோஸ்ஸை அதில் வைக்கவும்.

    அடுத்து இட்லி அவிக்கும் பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி தட்டை வைத்து மூடி போட்டு சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை அதை வேக விடவும்.

    10 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து மோமோஸ்ஸை எடுத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான வெஜ் மோமோஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • வெண்டைக்காய் வறுவல் செய்வது எப்படி?

    மதிய உணவிற்கு என்ன சைட் டிஷ் செய்வது என்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வெண்டைக்காய் இருக்கிறதா? ஆனால் வெண்டைக்காய் செய்தால் வீட்டில் யாரும் சாப்பிடமாட்டார்களா? அவர்களை வெண்டைக்காய் சாப்பிட வைக்க வேண்டுமா?

    இந்த வெண்டைக்காய் பொரியல், சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த சைட் டிஷ் ஆகும். மேலும் இது மிகவும் எளிதானது. முக்கியமாக குழந்தைகள் கேட்கவும் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

    இந்த வெண்டைக்காய் வறுவல் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? வெண்டைக்காய் வறுவல் செய்முறைக்கான எளிய செய்முறை கீழே உள்ளது. படித்து சுவைத்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்

    வெண்டைக்காய் – 15

    மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

    கடலை மாவு – 1 டீஸ்பூன்

    எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்

    பெரிய வெங்காயம் – 1 (மெல்லியதாக நறுக்கியது)

    உப்பு – சுவைக்கேற்ப

    மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்

    மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

    தண்ணீர் – 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் வெண்டைக்காயை நன்கு நீரில் கழுவி, அதை துடைத்துவிட்டு, மெல்லிய சிறு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    பின் நறுக்கிய அந்த வெண்டைக்காயுடன் மஞ்சள் தூள், கடலை மாவு சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இந்த வெண்டைக்காயை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ப்ரை செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 1 நிமிடம் குறைவான தீயில் வைத்து வதக்கி, 1 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    பின்னர் அதில் ப்ரை செய்து வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து நன்கு ஒருசேர வதக்கி இறக்கினால், சுவையான வெண்டைக்காய் ப்ரை தயார்.

  • சமையல் ருசிக்கு சிம்பிள் டிப்ஸ்கள்!!

    சமையல் ஒரு கலை. அதை நன்றாகக் கெடுப்பதும், ருசிக்காவே முடியாத அளவுக்குக் கெடுப்பதும் சமையற்காரர்களின் கையில்தான் இருக்கிறது. குறிப்பாக வீட்டில் பெண்கள் பார்த்து பார்த்து சமைத்தாலும் சில சமயம் சுவையாக இருக்காது.

    ஒரு நாள் சமையல் ருசியாக அமைந்துவிட்டால், அதை இன்னும் சுவையாகச் செய்ய விரும்புவார்கள். உங்கள் உணவில் கூடுதல் சுவையை சேர்க்க சில எளிய சமையல் குறிப்புகள் இங்கே.

    சமையலை ருசியாக்கும் சிம்பிள் டிப்ஸ்கள்:

    தக்காளி, லெமன், தயிர் போன்ற கலவை சாதம், பிரியாணி போன்வற்றைக் குக்கரில் செய்யும் போது மூடியைத் திறந்ததுமே சிறிது எலுமிச்சைச் சாறை விட்டு கிளறவும். இவ்வாறு நீங்கள் செய்யும் போது சாதம் கொழந்தைவிடாமல் உதிரி உதிரியாக வரும்.

    வாழைப்பூவைப் பிரித்தெடுத்து வைத்தால் அது கருமை நிறத்திற்கு வரக்கூடும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், வாழைப்பூவை எப்போதும் நறுக்கியவுடன் உப்பு, மஞ்சள் பொடி கரைத்த நீரில் ஊறப் போட வேண்டும். இவ்வாறு செய்யும் போது பூ கறுக்காமல் இருக்கும்.

    கோடை விடுமுறையில் கட்டாயம் உங்களது குழந்தைகளுக்கு ஒருமுறையாவது பக்கோடா செய்து கொடுத்திருப்போம். சில நேரங்களில் மொறு மொறுவென்று இருக்கும். சில நேரங்களில் நமத்துப்போயிருக்கும். இதை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்றால், பக்கோடா செய்யும் போது வேர்ககடலையை பொடி செய்து கடலைமாவில் கலந்துக்கொள்ளும் போது மொறு மொறுன்னு இருக்கும்.

    சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு சாப்பிட்டால் நாக்கு அரிக்கும். ஆனாலும் ஃப்ரை செய்து சாப்பிடுவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச்சாப்பிடுவார்கள். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் சேனைக்கிழங்கை சமைக்கும் போது, புளிநீரில் வேக வைத்தால் சாப்பிடும் போது நாக்கு அரிக்காமல் இருக்கும்.

    குழந்தைகளுக்கு மதிய உணவிற்காகத் தக்காளி சாதம் செய்துக் கொடுக்க வேண்டும் என்று நினைப்போம். சில நேரங்களில் நாமே சாப்பிட முடியாத அளவிற்கு கொடுமையாகிவிடும். இதன் ருசியை மேலும் அதிகமாக்க வேண்டும் என்றால், தக்காளி சாதம் செய்யும் போது சிறிது இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி போன்றவற்றை அரைத்து ஊற்றினால் போதும். தக்காளி சாதம் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

    அப்பளம் பொரித்து சாப்பிடுவதே மொறு மொறு சுவைக்காகத் தான். ஒருவேளை நமத்துவிடும் போது அதன் சுவை முற்றிலும் மாறிவிடும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், அப்பளத்தின் இருபுறமும் லேசாக எண்ணெய் தடவி நெருப்பில் சுட்டால் பொரித்தது போலவே இருக்கும். இதுபோன்ற முறைகளைப் பின்பற்றி நீங்கள் சமைக்கும் உணவுகளுக்குக் கொஞ்சம் கூடுதல் சுவையைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

  • ரோட்டுக்கடை காரச் சட்னி செய்வது எப்படி?

    காலையில் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லியுடன் என்ன சட்னி செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? ஆனால் சட்னி செய்ய உங்கள் வீட்டில் தேங்காய் இல்லையா? அதனால் கவலைப்பட வேண்டாம்.

    தேங்காய் சேர்க்காமல் தேங்காய் இல்லாத ரோட்டுக்கடை கார சட்னி செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த கார சட்னியை செய்யலாம்.

    தேங்காய் இல்லாமல் ரோட்டுக்கடை கார சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? படித்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்

    எண்ணெய் – 1 டீஸ்பூன்

    வரமிளகாய் – 7

    பூண்டு – 6 பல்

    இஞ்சி – 1 இன்ச் துண்டு

    கறிவேப்பிலை – 1 கொத்து

    சீரகம் – 1 டீஸ்பூன்

    புளி – சிறிய துண்டு

    பொட்டுக்கடலை – 1 1/2 கப் அல்லது 150 கிராம்

    பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)

    உப்பு – 1 டீஸ்பூன்

    தண்ணீர் – தேவையான அளவு

    தாளிப்பற்கு…

    எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

    வரமிளகாய் – 1

    கடுகு – 1/2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

    சீரகம் – 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை – 1 கொத்து

    கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)

    செய்முறை

    முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், பூண்டு இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம் மற்றும் புளி சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    பின் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை, நறுக்கிய வெங்காயம், உப்பு மற்றும் வதக்கி குளிர வைத்துள்ள பொருட்களை சேர்த்து ஒருமுறை கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து தாளிக்கவேண்டும்.

    தாளித்த பின் அதை அரைத்த சட்னியை ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான தேங்காய் சேர்க்காத ரோட்டுக்கடை கார சட்னி தயார்.

  • சிக்கன் கோலா செய்வது எப்படி?

    சிக்கன் கோலா உருண்டை தமிழ்நாட்டின் பிரபலமான உணவாகும். சிக்கன் கோலா என்பது நமது வழக்கமான சிக்கன் உணவுகளை விட வித்தியாசமான உணவு.

    இதை சாதத்துடன் அல்லது சைடிஷ் உணவாக சாப்பிடலாம். அதுமட்டுமின்றி தோசை, சப்பாத்தி, பரோட்டா, நாண், பல்கா, இடியப்பம் போன்றவற்றுக்கு சைட் டிஷ் ஆகவும் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    250 கிராம் பொடியாக நறுக்கிய சிக்கன் துண்டுகள்

    1 முட்டை

    4 பெரிய வெங்காயம்

    1 தக்காளி

    2 பச்சை மிளகாய்

    7 பல் பூண்டு

    2 துண்டு இஞ்சி

    2 மேஜைக்கரண்டி தயிர்

    4 to 5 மேஜைக்கரண்டி bread crumbs

    2 துண்டு பட்டை

    4 கிராம்பு

    4 ஏலக்காய்

    ½ மேஜைக்கரண்டி மிளகு தூள்

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    2 மேஜைக்கரண்டி மல்லி தூள்

    1 மேஜைக்கரண்டி சீரக தூள்

    ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா

    மிளகாய் தூள் தேவையான அளவு

    தேவையான அளவு உப்பு

    எண்ணெய் தேவையான அளவு

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை

    முதலில் 2 வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, பிறகு 2 வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் கருவேப்பிலையை பொடியாக நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.

    பின்பு சிக்கனை எடுத்து அதை நன்கு சுத்தம் செய்து கழுவி பின்னர் அதை பொடியாக நறுக்கி ஒரு bowl ல் போட்டு கொள்ளவும்.

    அடுத்து பிரட்டை எடுத்து மைக்ரோவேவ் அவனில் சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வைத்து எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு நற நறப்பான பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

    மைக்ரோவேவ் அவன் இல்லையென்றால் பிரட்டை pan னின் மூலமாகவோ அல்லது toaster யின் மூலமாகவோ toast செய்து அதை பொடித்து வைத்து கொள்ளலாம்.

    இப்பொழுது நாம் சிக்கனை போட்டு வைத்திருக்கும் bowl லை எடுத்து அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 2 வெங்காயம், பச்சை மிளகாய், ஒரு பூண்டு, கொத்தமல்லி, மிளகு தூள், பொடித்து வைத்திருக்கும் bread crumbs, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பின்னர் அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு நம் கைகளில் எண்ணெய் தடவி கொண்டு இந்த சிக்கன் கலவையை சிறிது அளவு எடுத்து அதை உருண்டையாக உருட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இவ்வாறு மீதமுள்ள சிக்கன் கலவைகளையும் உருட்டி தட்டில் வைத்த பின்பு அதை சுமார் ஒரு மணி நேரம் வரை fridge ல் வைக்கவும்.

    இப்பொழுது ஒரு தக்காளியை நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கி ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைத்து கொள்ளவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அது நன்கு பொன் நிறம் வரும் வரை அதை வதக்கி பின்பு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.

    அது ஆறியதும் அதை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தயிரையும் சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
    எண்ணெய் சுட்ட பின் அதில் கிராம்பு, ஏலக்காய், மற்றும் பட்டையை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.

    அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் 2 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் வறுத்த வெங்காய பேஸ்ட்டை சேர்த்து அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வதக்கவும்.

    3 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்டில் இருந்து 3 மேஜைக்கரண்டி அளவு சேர்த்து அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், சீரக தூள், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம்வரை அதை வதக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் சுமார் 200ml அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
    3 நிமிடத்திற்கு பிறகு அதில் கரம் மசாலாவை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    அடுத்து நாம் fridge ல் வைத்திருக்கும் சிக்கன் உருண்டைகளை எடுத்து அதை கொதித்து கொண்டிருக்கும் மசாலாவுடன் பக்குவமாக சேர்த்து ஒரு மூடி போட்டு அதை சுமார் 5 லிருந்து 7 நிமிடம் வரை வேக விடவும்.

    7 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து சிக்கன் உருண்டைகளை பக்குவமாக திருப்பிவிட்டு மீண்டும் மூடி போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.

    20 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து சிக்கன் கோலா உருண்டைகளை எடுத்து ஒரு கிண்ணத்தில் மசாலாவுடன் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமான சிக்கன் கோலா உருண்டை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • கறிவேப்பிலை சிக்கன் சுக்கா செய்வது எப்படி?

    தங்கள் குழந்தைகளுக்கு வித்தியாசமான ஒன்றைக் கொடுக்க விரும்பும் பெற்றோரில் நீங்களும் ஒருவரா?

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவையான மற்றும் ஆரோக்கியமான சிக்கன் ரெசிபி இதோ?

    அப்படியானால் கறிவேப்பில்லை சிக்கன் சுக்கா ரெசிபி உங்களுக்காக. அதற்கான சில எளிய குறிப்புகள் இதோ.

    தேவையான பொருட்கள்

    கறிவேப்பிலை – 1 கிலோ

    சிக்கன் – 1 கிலோ

    மிளகாய் வத்தல்- 10

    மிளகு – சிறிதளவு

    சீரகம் – அரை தேக்கரண்டி

    கடுகு- சிறிதளவு

    பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்

    பச்சை மிளகாய் – 4

    தக்காளி – 2

    இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு

    உப்பு- சுவைக்கு ஏற்ப

    மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி

    செய்முறை:

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடக்கூடிய கறிவேப்பிலை சிக்கன் சுக்கா ரெசிபி செய்ய வேண்டும் என்றால், முதலில் கடாயை சூடேற்றி எண்ணெய் ஊற்றாமல் கறிவேப்பிலையை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

    இதையடுத்து கடாயில் சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளளகு, மிளகாய் வத்தல் போன்றவற்றைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

    ஆறிய பின்னதாக இவற்றையெல்லாம் பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தற்போது கறிவேப்பிலை சிக்கன் சுக்கா ரெசிபி செய்வதற்கான மசாலா ரெடி.

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.

    இந்த கலவை நன்கு வதங்குவதற்குள், ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் உப்பு, மஞ்சள் சேர்த்த பின்னதாக வதக்கிய தக்காளியுடன் சேர்க்கவும்.

    ஒரு 10 நிமிடங்களுக்குப் பின்னதாக சிக்கன் சுக்காவிற்காக அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்க்க வேண்டும். இதனுடன் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை பொடியையும் சேர்த்து சுருள வதக்கவும்.

    எண்ணெய் பிரிந்து வரும் வரை கடாயில் போட்டு நன்கு வதக்கிக் கொண்டே இருக்கவும். இறுதியில் கறிவேப்பிலை, புதினா தூவி இறக்கினால் போதும் சுவையான கறிவேப்பிலை சிக்கன் சுக்கா ரெசிபி ரெடி.

    இந்த ரெசிபியை நீங்கள் சூடான சாதத்தில் போட்டு சாப்பிடலாம். அல்லது இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன்களுக்கு சைடு டிஸ்ஸாகவும் பயன்படுத்தலாம்.

    கறிவேப்பிலை அதிகமாக சேர்த்திருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பதால் வாரத்திற்கு ஒரு முறையாவது உங்களது குழந்தைகளுக்குச் செய்துக் கொடுக்க மறந்துவிடாதீர்கள்.

  • உருளைக்கிழங்கு கோலா உருண்டை செய்வது எப்படி?

    பொதுவாக உருளைக்கிழங்கில் செய்யப்படும் அனைத்து உணவுகளையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இன்று இங்கு இருப்பது பிசைந்த உருளைக்கிழங்கு உருண்டைகள்.

    இவை நமது வழக்கமான மாலை நேர சிற்றுண்டிகளுக்கு சிறந்த மாற்றாகும். இந்த மொறுமொறுப்பான மசித்த உருளைக்கிழங்கு கோலா உருண்டைகளை கெட்சப்வுடன் சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.

    இதில் உள்ள பெரிய விஷயம் என்னவென்றால், வீட்டுப் பொருட்களைக் கொண்டு எளிதாக, சிரமமின்றி, குறைந்த நேரத்தில் செய்துவிட முடியும். மேலும் சமையல்காரர்கள் அல்லாதவர்கள் கூட மிக எளிதாக செய்து விடுவார்கள்.

    மேலும் இதற்கு நிறைய பொருட்கள் தேவையில்லை. அவசர காலங்களில் குறைந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய சுவையான ஸ்நாக்ஸ் இவை.

    தேவையான பொருட்கள்

    4 உருளைக்கிழங்கு

    ½ கப் பொட்டு கடலை

    1 பெரிய வெங்காயம்

    1 பச்சை மிளகாய்

    ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை

    முதலில் உருளைக்கிழங்கை சுத்தம் செய்து, வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.

    25 நிமிடத்துக்கு பிறகு அதை எடுத்து சிறிது நேரம் ஒரு பாத்திரத்தில் வைத்து ஆற விட்டு பின்பு அதை எடுத்து ஒரு bowl ல் வைத்து நன்கு ஒரு கரண்டியின் மூலம் மசித்து விடவும்.

    பிறகு அரை கப் அளவு பொட்டு கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.

    பின்னர் நாம் உருளைக்கிழங்கை மசித்து வைத்திருக்கும் bowl லை எடுத்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பொட்டு கடலை மாவில் இருந்து இரண்டரை மேஜைக்கரண்டி அளவு மாவை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், கரம் மசாலா, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். (தண்ணீர் எதுவும் இதில் சேர்த்து விடக்கூடாது.)

    அடுத்து அதில் எலுமிச்சம் பழம் அளவு மாவை எடுத்து அதை நன்கு உருட்டி பின்பு அதை கையில் வைத்து பக்குவமாக தட்டி அதை தட்டையான வடிவிற்க்கு மாற்றி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இவ்வாறு மீதமுள்ள மாவுகளையும் உருட்டி பின்பு தட்டி தயார் செய்து தட்டில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் தட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி போட்டு அது பொன்னிறம் ஆகும் வரை அதை வேக விடவும்.

    அது இரு புறமும் பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான பிசைந்த உருளைக்கிழங்கு பந்துகள் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • அவல் லட்டு தயார் செய்வது எப்படி?

    அவுல் லட்டு கிருஷ்ண ஜெயந்தியின் போது செய்யப்படும் ஒரு பிரபலமான இனிப்பு. கிருஷ்ணர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரம். கிருஷ்ணர் அவுலை மிகவும் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

    எனவே, கிருஷ்ணரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி அன்று அவல் லட்டு என்று அழைக்கப்படும் இந்த போஹா லட்டுவை பலர் செய்கிறார்கள். இந்த போஹா லட்டு செய்ய சிவப்பு அவல் அல்லது வெள்ளை அவல் பயன்படுத்தலாம். சிவப்பு அவலின் சுவை மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கும்.

    பூஜை முடிந்ததும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அவல் லட்டு பரிமாறப்படுகிறது. இந்த அவல் லட்டு மிகவும் சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சிற்றுண்டியாகவும் இதை வழங்கலாம்.

    மங்களகரமான சந்தர்ப்பங்களில் இந்த அவல் லட்டுவை ருசிப்பதற்கான செய்முறை இங்கே…

    தேவையான பொருட்கள்

    வெள்ளை அவல்

    வெல்லம்

    நெய்

    நல்லெண்ணெய்

    ஏலக்காய்

    தேங்காய் துருவல்

    முந்திரி

    உலர்திராட்சை

    செய்முறை

    அவல் லட்டு செய்வதற்கு முதலில் அரை மூடி தேங்காயை துருவிக் கொள்ளவும்.

    பேனில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு 250 கிராம் வெள்ளை அவல் போட்டு வறுக்கவும். சிலர் எண்ணெய் ஊற்றாமல் கூட வறுப்பார்கள்.

    அவலின் நிறம் மாறி கொஞ்சம் மொறுமொறுப்பாக வறுபட்டவுடன் அடுப்பை அணைக்கவும்.

    அவல் வறுத்த பேனிலேயே மீண்டும் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி தேங்காய் துருவலை வறுக்கவும்.

    மிதமான தீயில் வைத்து தேங்காய் துருவல் கருகாமல் பழுப்பு நிறத்திற்கு மாறும்படி வறுக்கவும்.

    இதனிடையே கடாயில் மூன்று ஸ்பூன் நெய் ஊற்றி அது சூடான பிறகு 50 கிராம் முந்திரி மற்றும் 50 கிராம் உலர்திராட்சை போட்டு பொன்னிறத்திற்கு வறுக்கவும்.

    அடுத்ததாக 400 கிராம் பவுடர் வெல்லம் மற்றும் வறுத்து வைத்திருக்கும் தேங்காய் துருவலை அம்மியில் ஆட்டவும்.

    இதே போல 6-7 ஏலக்காயை பொடியாக்கவும். அடுத்ததாக வறுத்த அவுலை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் நன்கு பொடிதாக அரைக்கவும்.

    வெல்லம் – தேங்காய் துருவல் கலவை, ஏலக்காய் தூள், பொடியாக அரைத்த அவுல், நெய்-ல் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை அனைத்தையும் பாத்திரத்தில் போட்டு நன்கு மிக்ஸ் செய்யவும்.

    உங்களுக்கு பிடித்தமான சைஸில் உருண்டை பிடிக்கவும். நாம் பயன்படுத்திய வெல்லத்தின் அளவு மிகச்சரியாக இருக்கும். கூடுதல் இனிப்பு சேர்க்க தேவையில்லை.