Author: Arumugam K

  • இட்லி தயார் செய்வது எப்படி?

    அனைத்து தென்னிந்தியர்களுக்கும் இட்லி தான் சிறந்த உணவாக இருக்க முடியும். இட்லியின் அமைப்புதான் அதை கம்பீரமாக்குகிறது. இட்லி தமிழர்களின் பாரம்பரிய உணவு.

    தினமும் காலையில் புதிதாக சமைத்த உணவை உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நமது பண்டைய தமிழ் நூல் “ஆசாரக்கோவை” வலியுறுத்துகிறது.

    இதற்கு சரியான உதாரணமான காலை உணவான இட்லியை எப்படி செய்வது என்று இங்கே கற்றுக்கொள்வோம்.

    தேவையான பொருட்கள்

    தோல் நீக்கப்பட்ட முழு உளுந்து – 1 கப்

    இட்லி அரிசி – 4 கப்

    உப்பு – 3 டீ ஸ்பூன்

    வெந்தயம் -1/2 டீ ஸ்பூன் (தேவைப்பட்டால்)

    செய்முறை

    முதலில் இட்லி மாவை செய்வதற்கு அரிசியையையும், உளுந்தையும் 3 மணி நேரத்திற்கு தனித்தனி பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

    ஊற வைக்கப்பட்ட உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயத்தை முதலில் கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும். அப்படி செய்யும் போது அந்த பருப்புகள் ஊற வைத்த நீரை சிறிது சிறிதாக விட்டு நன்றாக மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

    இதன் பின்னர் இந்த மாவை வழித்து எடுத்துவிட்டு, ஊறவைக்கப்பட்ட அரிசியை கிரைண்டரில் போட்டு சிறிது சிறிதாக நீர் விட்டு நன்கு மாவு பதத்திற்கு அரைக்க வேண்டும்.

    பின்பு இந்த அரிசி மாவு கலவையையும், உளுந்து வெந்தயம் மாவு கலவையையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.

    பின்பு அப்பாத்திரத்தை மூடி ஒரு குளுமையான இடத்தில் குறைந்தது 8 மணி நேரத்திற்கு அந்த மாவு கலவையை புளிக்க விட வேண்டும்.

    இவ்வளவு நேரத்திற்கு பிறகு அம்மாவு கலவையை பார்க்கும் போது அதில் நுரைகள் அதிகம் காணப்படும். இது மாவு சரியான பதத்தில் இருப்பதை காட்டும் அறிகுறியாகும்.

    இப்போது இட்லி அவிக்கும் குண்டாவில் அதன் காலளவு நீரால் நிரப்பி அடுப்பில் சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.

    இட்லி தட்டில் சுத்தமான பருத்தியால் ஆன வெள்ளை துணியை நன்கு பரப்பி, அதில் இட்லி மாவை ஊற்றி அடுப்பில் இருக்கும் குண்டாவை திறந்து, அந்த இட்லி தட்டை வைத்து மூடி அவிக்க வேண்டும்.

    அதிகபட்சம் 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை இட்லிகளை வேக வைப்பதால் மிருதுவான இட்லிகள் கிடைக்கும்.

    இந்த நேர அளவுக்குமேல் இட்லிகளை வேக வைப்பதால் இட்லிகள் மிகவும் இறுகிவிடக்கூடும்.

    ஒரு நல்ல இட்லி மென்மையாகவும், பஞ்சுபோன்றதாகவும் இருக்க வேண்டும்.

  • மலேசியன் ஸ்டைல் பிரைட் ரைஸ் செய்வது எப்படி?

    ஃபிரைடு ரைஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு. குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு இவை பிடித்தமான உணவுகள் என்றால் மிகையாகாது.

    ஆரம்ப காலத்தில் ஃபிரைடு ரைஸ் ஓரிரு முறைகளில் செய்யப்பட்டாலும், காலப்போக்கில் பல சமையல் வகைகள் உருவாகி வருகின்றன. இன்று நாம் பார்ப்பது மிகவும் சுவையான மலேசியன் ஃப்ரைட் ரைஸ்.

    இப்போது நாக்கில் எச்சில் உருகிறதா?. உங்கள் சுவை மொட்டுகளை திருப்திப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் பசி வேதனையையும் திருப்திப்படுத்தும் ஒரு சுவாரஸ்யமான ஃபிரைடு ரைஸ் குறிப்புகளை நாங்கள் கீழே குறிப்பிட்டுள்ளோம்.

    தேவையான பொருட்கள்

    1 cup பாசுமதி அரிசி

    250 g மஸ்ரூம்

    1/2 cup பச்சை குடைமிளகாய்

    1/2 cup மஞ்சள் குடை மிளகாய்

    1/2 cup சிவப்பு குடைமிளகாய்

    1/2 cup வேகவைத்த சோளம்

    1/2 cup வேகவைத்த பச்சை பட்டாணி

    8 பூண்டு பல்

    8 சிவப்பு மிளகாய்

    a small piece இஞ்சி

    3 tsp துருவிய தேங்காய்

    2 tsp எள் எண்ணெய்

    2 tsp சோயா சாஸ்

    1 tsp வினிகர்

    1 tsp பெப்பர்

    1 tsp உப்பு

    1/2 tsp சர்க்கரை

    தேவையான அளவு ஸ்ப்ரிங் ஆனியன்

    தேவையான அளவு தண்ணீர்

    செய்முறை

    ஒரு கப் பாசுமதி அரிசியை எடுத்து தண்ணீர் விட்டு நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    இப்பொழுது மஸ்ரூம், குடமிளகாய்கள், இஞ்சி, பூண்டு, மற்றும் ஸ்ப்ரிங் ஆனியனை நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு, துருவி வைத்திருக்கும் தேங்காய் மற்றும் ஊற வைத்திருக்கும் சிவப்பு மிளகாய்யை மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்ட் ஆக அரைத்துக் வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். பின்பு அதில் உப்பு சேர்த்து ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை நன்கு வடிகட்டி அதில் போட்டு 15 இல் இருந்து இருபது நிமிடம் வரை அதை வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு pan ஐ எடுத்து மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் எள் எண்ணெய் சேர்க்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா பேஸ்ட்டை போட்டு அதனின் பச்சை வாசம் போய் எண்ணெய் நன்கு பிரிந்து வரும் வரை வதக்கவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் மஸ்ரூம் மற்றும் குடை மிளகாய்களை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

    அடுத்து அதில் உப்பு மற்றும் பெப்பரை சேர்த்து சுமார் ஆறிலிருந்து ஏழு நிமிடம் வரை வேக வைக்கவும்.

    ஆறு நிமிடம் கழித்து நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் சோளம் மற்றும் பச்சை பட்டாணியை அதில் சேர்த்து சுமார் ஐந்து நிமிடம் வரை வேக வைக்கவும்.

    ஐந்து நிமிடம் கழித்து அதில் சோயா சாஸ், வினிகர், மற்றும் சர்க்கரையை சேர்த்து சுமார் ஒன்றிலிருந்து இரண்டு நிமிடம் வரை அதை வதக்கவும்.

    இப்பொழுது அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்த்து பூ போல் சாதம் உடையாதவாறு கிளறவும்.

    அடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங்காணியனை போட்டு நன்கு கிளறவும். அவ்வளவுதான் உங்கள் சூடான மற்றும் சுவையான மலேசியன் பிரைட் ரைஸ் ரெடி.

  • லெமன் ரைஸ் தயார் செய்வது எப்படி?

    எலுமிச்சை சாதம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மதிய உணவு. இவை தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக இருந்தாலும், சில வரலாற்றாசிரியர்கள் அவற்றின் பூர்வீகம் கர்நாடகா என்று கூறுகின்றனர்.

    இவை கன்னடத்தில் சித்ரன்னா என்று அழைக்கப்படுகின்றன. இல்லத்தரசிகள் மத்தியில் லெமன் ரைஸ் மிகவும் பிரபலமானது. ஏனெனில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், அலுவலகம் செல்லும் கணவர்களுக்கும் மதிய உணவாக லெமன் ரைஸ் தான் பெரும்பாலானோர் செய்கிறார்கள். கூடுதலாக, அவை மிகவும் எளிமையானவை.

    தேவையான பொருட்கள்

    1 கப் அரிசி

    2 எலுமிச்சம் பழம்

    1 பெரிய வெங்காயம்

    1 பச்சை மிளகாய்

    3 காஞ்ச மிளகாய்

    1 மேஜைக்கரண்டி கடுகு

    1 மேஜைக்கரண்டி கடலை பருப்பு

    2 மேஜைக்கரண்டி பச்சை கடலை

    1/4 மேஜைக்கரண்டி கால் மஞ்சள் தூள்

    சிறிதளவு கருவேப்பிலை

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு உப்பு

    செய்முறை

    முதலில் ஒரு கப் அளவு அரிசியை எடுத்து நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைத்த பின்பு அதை வடித்து வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, கடலையை வறுத்து, மற்றும் எலுமிச்சம்பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் கடுகைப் போட்டு கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் கடலை பருப்பை போட்டு வறுக்கவும்.

    அடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மற்றும் கருவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் கடலையை போட்டு வதக்கவும்.

    பின்னர் அதில் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறை ஊற்றி அதனுடன் மஞ்சள் தூளை தூவி நன்கு கிளறி அதை சுமார் ஒரு நிமிடம் வரை அப்படியே வதங்க விடவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு நாம் வடித்து வைத்திருக்கும் சாதத்தை எடுத்து இதில் சேர்த்து மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு பக்குவமாக நன்கு கிளறி விட்டு சுட சுட எடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான லெமன் ரைஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • கேப்பை ரொட்டி தயார் செய்வது எப்படி?

    இன்றைய இயந்திர உலகில் இயங்கும் நாம், உடலுக்கு சக்தி தரும் காலை உணவை சாப்பிட மறந்து விடுகிறோம். நாள் முழுவதும் உடலை உற்சாகமாக வைத்திருக்க மதிய உணவை விட காலை உணவு மிகவும் சிறந்தது. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

    பள்ளி, கல்லூரிக்கு சென்றாலும் காலை உணவாக சிறிது சாப்பிட வேண்டும். வீட்டில் உள்ள தாய்மார்களும் தினமும் ஒரு காலை உணவை வேகமாக இட்லி, தோசை, உப்புமா போன்றவற்றை சமைக்க வேண்டும்.

    ஒரே மாதிரியான உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் சலிப்பு ஏற்படும். இதைத் தவிர்க்க வெறும் 5 நிமிடங்களில் கேப்பை மாவில் செய்யப்பட்ட கேப்பை ரொட்டியை செய்யலாம். உங்களுக்கான செய்முறை குறிப்புகள் இதோ.

    தேவையான பொருட்கள்:

    கேப்பை மாவு – 1 கப்

    நறுக்கிய வெங்காயம் – அரை கப்

    மிளகாய், சீரகம்- தேவைக்கு ஏற்ப

    கறிவேப்பிலை – தாளிப்புக்கு ஏற்ப

    கடலைப் பருப்பு- சிறிதளவு

    எண்ணெய் – சிறிதளவு

    உப்பு- சுவைக்கு ஏற்ப

    செய்முறை:

    கேப்பை ரொட்டி செய்வதற்கு முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் கேப்பை மாவை எடுத்துக்கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டி பதத்திற்கு நன்கு பிசைத்துக் கொள்ளவும்.

    இதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், சீரகம் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து பிசைத்தால் போதும். கேப்பை மாவிற்கான மாவு ரெடி.

    பின்னர் இந்த கேப்பை மாவிற்கு சுவையை அதிகரிக்க விரும்பினால் கடாயில் கடலைப் பருப்பை நன்றாக வறுத்தெடுத்து, ஏற்கனவே பிசைந்து வைத்துள்ள மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.

    இதையடுத்து தோசைக்கல் சூடேறியதும், கேப்பை ரொட்டி செய்வதற்காக பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்தி போன்று தட்டிப் போட்டால் போதும். சுவையான கேப்பை ரொட்டி ரெடி.

    இதற்கு சைட் டிஸ்ஸாக பொரிகடலை சட்னி, தக்காளி சட்னி என உங்களுக்கு எது பிடிக்குமோ? அதை வைத்து சாப்பிட்டால் போதும். சுவையுடன் ஆரோக்கியத்தை உங்களுக்குக் கொடுக்கும்.

  • ஹைதராபாத் மட்டன் கட்லெட் செய்வது எப்படி?

    நீங்கள் அசைவ உணவு உண்பவராக இருந்தால், இந்த கட்டுரை உங்களுக்கு உதவும், ஏனென்றால் மட்டன் இறைச்சசியை வாரம் ஒரு முறை கிரேவி, ஃப்ரை செய்து சாப்பிட்டிருப்பீர்கள். வாரத்திற்கு இரண்டு முறையாவது ஆட்டிறைச்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஆட்டிறைச்சியில் புரதம் நிறைந்துள்ளது.

    பார்ட்டிகள் அல்லது விசேஷங்களில் பலர் மட்டன் இறைச்சியை சாப்பிட விரும்புகிறார்கள். நமக்குப் பிடித்தமான முறையில் சமைத்த மட்டன் மிகவும் சுவையாகவும், சத்தாகவும் இருக்கும், அதை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவோம். ஆதலால் இன்று நாம் கட்லெட் செய்வது எப்படி என்று பார்ப்போம். கட்லெட்டுகள் உணவகங்களில் மட்டுமே கிடைக்கும் என்று நீங்கள் நினைத்தால் கவலைப்பட வேண்டாம். சுவையான ஹைதராபாத் மட்டன் கட்லெட் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    1/4 கிலோ ஆட்டு இறைச்சி (சிறு சிறு துண்டுகளாக வெட்டியது)

    இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் 1

    மஞ்சள் 1/4 ஸ்பூன்

    இலவங்கப்பட்டை பொடி 1/4 டீஸ்பூன்

    வெங்காயம் 1

    உருளைக்கிழங்கு 1

    கொத்தமல்லி சிறிதளவு

    கறி மசால் தூள் 1/4 டீஸ்பூன்

    பிரட் தூள் சிறிதளவு

    தேவைக்கேற்ப உப்பு

    செய்முறை

    முதலில் மட்டனை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்து அதை குக்கரில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து தோலை உரித்து வைத்துக் கொள்ளவும்.

    பின்பு வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் வேக வைத்த மட்டன் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    கடாயை சிறிது நேரம் சூடாக்கி நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது மற்றும் மற்ற மசாலா பொருட்களை போட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும்.

    மசாலா பொருட்கள் சூடு குறைந்த உடன் அரைத்து சேர்த்து வைத்த மட்டன் மற்றும் உருளைக்கிழங்கு மசியல் ஆகியவற்றுடன் நன்கு கலந்து பிசையவும்.

    பின்னர் கலந்து எடுத்த மட்டன் கலவையை கட்லெட் வடிவில் வட்ட வடிவில் எடுத்து பிரட் தூள்களில் மூழ்கும் அளவு பிரட்டி எடுக்கவும்.

    பின்னர் குளிர்சாதன பெட்டியில் வைத்து அரை மணி நேரம் குளிர வைக்கவும்.

    குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து வைத்த கட்லெட்டை அரை மணி நேரம் வெளியில் தனியாக வைக்கவும்.

    கடாயை சூடு செய்து மிதமான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின்னர் வட்ட வடிவில் எடுத்து வைத்த கட்லெட்டை ஒவ்வொன்றாக எண்ணெயில் போடவும்.

    கட்லட் நன்றாக வேக நேரம் ஒதுக்கவும். பின்பு கட்டிலட்டை மறுபுறம் திருப்பவும். பொன்னிறமாக வரும் வரை நன்றாக ஒவ்வொரு முறையும் பிரட்டி போட்டு எடுக்கவும்.

    கட்லெட்டுகளை வறுத்த பிறகு அவற்றை ஒரு பேப்பர் டவலில் எடுத்து கூடுதல் எண்ணெய் வெளியேறும் வகையில் துடைக்கவும்.

    இப்போது சூடான மட்டன் கட்லெட் தயார் அதனுடன் டொமேட்டோ சாஸ் அல்லது புதினா சட்னி வைத்து பரிமாறவும்.

  • பன்னீர் பேன் ஃப்ரை கிரேவி செய்வது எப்படி?

    பன்னீர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு. அதுமட்டுமல்லாமல், பொதுவாக பன்னீர் கொண்டு செய்யப்படும் அனைத்து உணவுகளுக்கும் உணவு பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    எனவே இன்று இங்கே பன்னீருடன் வித்தியாசமாக செய்யப்பட்ட பன்னீர் பான் ஃப்ரை கிரேவியை நாங்கள் தருகிறோம். பன்னீர் பிரியர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் அவசியம். பன்னீர் பான் ஃப்ரை கிரேவியை சப்பாத்தி, நாண் மற்றும் ஃபிரைடு ரைஸ் ஆகியவற்றுக்கு சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம். இவை மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றவை.

    பொதுவாக மாலை நேரங்களில் சாப்பிடும் ஸ்நாக்ஸ் அல்லது டிபன்களுக்கு இது ஒரு சிறந்த மாற்றாகும். நம் குழந்தைகளுக்குக் கொடுத்தால் அவர்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    250 கிராம் பன்னீர்

    பெரிய வெங்காயம் 1

    முட்டைகோஸ் 1

    1 குடை மிளகாய்

    8 பல் பூண்டு

    இஞ்சி 2 துண்டு

    சோள மாவு 2 மேஜைக்கரண்டி

    ஸ்செஷ்வான் சாஸ் 2 மேஜைக்கரண்டி

    கெட்சப் 2 மேஜைக்கரண்டி

    ரெட் சில்லி சாஸ் 1 மேஜைக்கரண்டி

    வெண்ணெய் 1 மேஜைக்கரண்டி

    ½ மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள்

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    தேவையான அளவு ஸ்பிரிங் ஆனியன்

    செய்முறை

    பன்னீர் பேன் ஃப்ரை கிரேவி:

    முதலில் வெங்காயம், முட்டைகோஸ், குடை மிளகாய், பூண்டு, மற்றும் ஸ்பிரிங் ஆனியன் ஐ தயார் செய்து, பன்னீரை சதுர வடிவில் நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பன்னீர், கால் மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள், சிறிதளவு உப்பு, மற்றும் நாம் அரைத்து எடுத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை ஒன்றாக போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    அடுத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவை சேர்த்து அது நன்கு பன்னீரோடு ஒட்டுமாறு கலந்து விடவும்.

    பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பன்னீரை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் இந்த பன்னீரை ஒவ்வொன்றாக எடுத்து வைத்து அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி வைத்து அதன் அனைத்து புறங்களிலும் பொன்னிறம் ஆகுமாறு அதை வறுக்கவும்.

    பன்னீர் அனைத்து புறங்களிலும் பொன்னிறமானதும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் 5 பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, மற்றும் அரை கப் அளவு ஸ்ப்ரிங் ஆனியன் ஐ போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    1 நிமிடத்திற்கு பிறகு அதில் குடை மிளகாயை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் ஸ்செஷ்வான் சாஸ், கெட்சப், ரெட் சில்லி சாஸ், கால் மேஜைக்கரண்டி அளவு மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    1 நிமிடத்திற்கு பிறகு அதில் சுமார் 50 ml அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை கொதிக்க விடவும்.

    பன்னீர் பேன் ஃப்ரை சிறிது கிரேவியாக வேண்டும் என்றால் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை கரைத்து இதில் சேர்த்து கொள்ளவும்.

    பின்பு அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து அதை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக அந்த கலவையுடன் சேருமாறு கிண்டி விட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன் ஐ தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய்யை ஊற்றி அதை உருக விடவும்.

    வெண்ணெய் உருகியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், மற்றும் முட்டைகோஸை போட்டு அதை ஒரு வதக்கு வதக்கி அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து விடவும்.

    அடுத்து Sizzler Plate Tray வை எடுத்து அதை வெறுமனே அடுப்பில் வைத்து அது புகை வரும் அளவிற்கு அதை சுட வைக்கவும்.

    பின்னர் Sizzler Plate Tray வில் இருந்து புகை வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதில் நாம் வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் முட்டைகோஸை போட்டு அதை நன்கு பரப்பி விடவும்.

    பிறகு நாம் செய்து வைத்திருக்கும் பன்னீர் கிரேவியை அதன் மேலே ஊற்றி சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன் ஐ தூவி அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான பன்னீர் பேன் ஃப்ரை கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • சில்லுனு 3 ஸ்மூத்தி ரெசிபிகள் எப்படி தயாரிப்பது?

    கோடைக்காலம் என்பது வசந்த காலத்துக்கும் இலையுதிர்காலத்துக்கும் இடைப்பட்ட பருவமாகும், அப்போது வானிலை பொதுவாக வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும். இந்த காலநிலை அடிக்கடி வெப்ப அலைகள் மற்றும் வெப்ப நாட்கள் காரணமாக சோர்வுக்கு வழிவகுக்கிறது.

    பருவகால ப்ளூஸை எதிர்த்து உங்கள் நல்வாழ்வை பராமரிக்க, சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம், குறிப்பாக ஆரோக்கியமான உணவு மூலம். உங்கள் உடலை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் போது, ​​​​நீரேற்றமாக இருப்பது முக்கியம். ஆனால், தண்ணீர் மட்டும் குடிக்கக் கூடாது.

    உங்கள் உடலுக்கு ஊட்டமளிப்பதற்கும் கோடையில் குளிர்ச்சியாகவும் அமைதியாகவும் உணர அற்புதமான பழங்களால் செய்யப்பட்ட சில ஸ்மூத்திகளையும் நீங்கள் முயற்சி செய்யலாம். இந்த மிருதுவாக்கிகள் தயாரிக்க நீண்ட நேரம் எடுக்கும் என்று நீங்கள் நினைத்தால், கவலைப்பட வேண்டாம். இந்த ஸ்மூத்திகள் அனைத்தும் செய்து ரசிக்க எளிதானது.

    நுங்கு ஸ்மூத்தி

    பனை பழம் அல்லது நுங்கு என்றும் அழைக்கப்படும் ஐஸ் ஆப்பிள், ஜெல்லி போன்ற அமைப்பு மற்றும் லேசான இனிப்புடன் அற்புதமாக புத்துணர்ச்சி அளிக்கிறது. இது அதிக நீர் உள்ளடக்கம் மற்றும் குளிரூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது, இது ஒரு சரியான ஈரப்பதமூட்டும் ஸ்மூத்தியாக அமைகிறது.

    தேவையான பொருட்கள்

    3-4 நுங்குகள், தோல் நீக்கப்பட்டது

    1 கப் தேங்காய் தண்ணீர்

    ஒரு எலுமிச்சை சாறு

    கையளவு புதினா இலைகள்

    1 டீஸ்பூன் தேன் (விரும்பினால்)

    ஐஸ் கட்டிகள்

    செய்முறை

    நுங்குகளை தேங்காய் தண்ணீர், புதினா இலைகள், எலுமிச்சை சாறு சேர்த்து மிருதுவாகக் கலக்கவும். நீங்கள் விரும்பினால் இனிப்புக்கு தேன் சேர்க்கவும். கோடை வெயிலுக்கு ஐஸ் கட்டிகள் சேர்த்து ஜில்லுனு சாப்பிட்டு மகிழுங்கள்.

    சாக்லேட் புதினா ஸ்மூத்தி

    இந்த கிரீமி ஆரோக்கியமான சாக்லேட் புதினா ஸ்மூத்தி ரெசிபி சுவைகள் நிறைந்தது மற்றும் மிகவும் புத்துணர்ச்சியூட்டும்.

    தேவையான பொருட்கள்

    1 கப் புதிய கீரை (ஒரு கூடுதல் ஊட்டச்சத்து ஊக்கத்திற்காக)

    ¼ கப் புதிய புதினா இலைகள்

    1 உறைந்த வாழைப்பழம்

    2 டீஸ்பூன் கொக்கோ தூள்

    1 கப் பாதாம் பால்

    ஒரு சில டார்க் சாக்லேட் சிப்ஸ் அல்லது கொக்கோ நிப்ஸ்

    செய்முறை

    கீரை, புதினா இலைகள், உறைந்த வாழைப்பழம், கோகோ பவுடர் மற்றும் பாதாம் பால் ஆகியவற்றை மென்மையான வரை கலக்கவும். அமைப்புக்காக சாக்லேட் சில்லுகளை கிளறி, ஒரு கண்ணாடிக்குள் மாற்றி, மகிழுங்கள்.

    தர்பூசணி துளசி ஸ்மூத்தி

    கோடை காலத்தில் நீங்கள் அனுபவிக்கக்கூடிய மிகவும் ஈரப்பதமூட்டும் ஸ்மூத்திகளில் இதுவும் ஒன்றாகும். தர்பூசணி அதன் அதிக நீர் உள்ளடக்கத்திற்கு அறியப்பட்டாலும், துளசி உடலின் இயற்கையான pH அளவை மீட்டெடுக்கவும், ஸ்மூத்தியின் சுவையை அதிகரிக்கவும் உதவுகிறது

    தேவையான பொருட்கள்

    2 கப் நறுக்கிய தர்பூசணி

    ¼ கப் புதிய துளசி இலைகள்

    1 எலுமிச்சை சாறு

    ஐஸ் கட்டிகள்

    செய்முறை

    தர்பூசணி, துளசி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை மிருதுவாகக் கலக்கவும். ஒரு சூப்பர் புத்துணர்ச்சியூட்டும் பானத்தை உடனடியாக அனுபவிக்கவும்.

    எனவே, கொளுத்தும் வெப்பத்தைத் தணிக்க, குளிர்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்க, இந்த ஸ்மூத்திகளை முயற்சிக்கவும்.

  • மதுரை ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

    கிட்டத்தட்ட அனைவரும் அசைவத்தை விரும்புகிறார்கள், குறிப்பாக மதுரை ஸ்டைல் ​​மட்டன் குழம்பு என்றால் சொல்ல தேவையில்லை, மதுரை ஸ்டைல் ​​மட்டன் குழம்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

    காரமான மட்டன் எலும்பு குழம்பு மதுரை ஸ்டைல் ​​எப்படி செய்வது என்று யோசித்து, கவலைப்பட வேண்டாம் நாங்கள் உங்களுக்கு சரியான வழிமுறைகளை வழங்குகிறோம். மதுரை பாணியில் மட்டன் எலும்பு குழம்பு செய்து உங்கள் குடும்பத்தை மகிழ்விக்கவும்.

    தேவையான பொருட்கள்

    மட்டன் எலும்பு அரை கிலோ

    சின்ன வெங்காயம் – 200 gram

    தக்காளி 1 மல்லித்தூள் – 3 ஸ்பூன்

    மட்டன் மசாலா – 1 ஸ்பூன் தனி மிளகாய் தூள் ஒன்றரை ஸ்பூன்

    மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் நல்லெண்ணெய் – 6 ஸ்பூன்

    தாளிக்க இரண்டு ஏலக்காய், 1/4 ஸ்பூன் சோம்பு மல்லி இலை

    கருவேப்பிலை சிறிதளவு உப்பு -தேவையான அளவு

    அரைப்பதற்கு தேவையான பொருட்கள்

    தேங்காய் துருவல் – கால் மூடி

    முந்திரிப்பருப்பு – 6 சீரகம் – 1ஸ்பூன்

    அரைக்க பூண்டு 10 பல் இஞ்சி 2 துண்டு

    பட்டை, கிராம்பு, கல்பாசி

    ஜாதிபத்திரி – சிறிதளவு

    சோம்பு- 1 ஸ்பூன்

    செய்முறை

    மட்டன் எலும்பை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.

    சின்ன வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு, பட்டை, சோம்பு, கிராம்பு, ஜாதிபத்திரி, கல்பாசி இவை அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    தேங்காய், சீரகம், முந்திரிப்பருப்பு இது அனைத்தையும் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கழுவிய மட்டன் எலும்பை ஒரு நிமிடம் நன்கு வதக்கி விட்டு அதனுடன் அரைத்த வைத்த இஞ்சி, பூண்டு பேஸ்ட், சின்ன வெங்காயம், தேவையான அளவுக்கு உப்பும் சேர்த்து சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்கு வதங்கி பச்சை வாசனை போனவுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மட்டன் மசாலா சேர்த்து நன்கு பச்சை வாசனை போக 2 நிமிடம் வதக்கவும்.

    பச்சை வாசனை போனவுடன் தக்காளியும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு மட்டன் எலும்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி எட்டு விசில் விட்டு வேக விடவும்.

    மட்டன் எலும்பு நன்கு வந்தவுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    குழம்பு நன்கு கொதித்து தேங்காயின் பச்சை வாசனை போனவுடன் இறக்கவும்.

    பின்பு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து இரண்டு ஏலக்காய், அரை ஸ்பூன் சோம்பு கருவேப்பிலை, மல்லி இலை போட்டு தாளித்து குழம்பில் சேர்த்தால் மிகவும் ருசியான மட்டன் எலும்பு குழம்பு ரெடி.

    இந்த மட்டன் எலும்பு குழம்பு சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை, பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

  • மசால் வடை செய்வது எப்படி?

    மசால் வடை தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய மாலை நேர சிற்றுண்டியாகும். இன்றும் மசாலா வடை என்பது பலரின் விருப்பமான உணவுகளில் ஒன்றாகும். மாலையில், மசாலா வடைகள் விற்கும் ஸ்டால்களின் கூட்டத்தைக் காணலாம்.

    Masal வடை பொதுவாக தனியாக உண்ணலாம் ஆனால் சிலர் சாதத்துடன் சைடிஷ் உணவாக சாப்பிடுவார்கள். ஆமை வடிவில் இருப்பதால் மசால் வடை, ஆமை வடை என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு பருப்பு வாடை என்ற மற்றொரு பெயரும் உண்டு.

    தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் மாலை நேர சிற்றுண்டி. அவை தமிழ்நாட்டில் மசாலா வடை என்றும், கேரளாவில் பரிப்பு வட அல்லது மசாலா வடை என்றும், கர்நாடகாவில் மசாலா வடே என்றும் அழைக்கப்படுகின்றன.

    தேவையான பொருட்கள்

    கடலை பருப்பு 1 கப்

    பெரிய வெங்காயம் 3

    பச்சை மிளகாய் 3

    காய்ந்த மிளகாய் 2

    பூண்டு பல் 4

    இஞ்சி துண்டு 1

    பட்டை துண்டு 1

    சோம்பு 1 மேஜைக்கரண்டி

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    கருவேப்பிலை சிறிதளவு

    கொத்தமல்லி சிறிதளவு

    புதினா சிறிதளவு

    செய்முறை

    முதலில் கடலை பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற வைக்கவும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, புதினா, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, மற்றும் பூண்டை தட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் சோம்பு, பட்டை, காய்ந்த மிளகாய், மற்றும் இஞ்சியை போட்டு அதை ஒரு சுற்று சுற்றி கொள்ளவும்.

    பின்பு அதில் நாம் ஊற வைத்திருக்கும் கடலை பருப்பில் இருந்து 2 மேஜைக்கரண்டி அளவு கடலை பருப்பை எடுத்து தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்து மீதமுள்ள கடலை பருப்புகளை போட்டு அதை அரைத்து கொள்ளவும்.

    இந்த பருப்பை கொரகொரப்பான பதத்திற்கு அரைத்தால் போதும் அதை நன்கு நைசாக அரைத்து விடக்கூடாது.

    இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் இந்த அரைத்த கலவையை போட்டு அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், தட்டி வைத்திருக்கும் பூண்டு, எடுத்து வைத்திருக்கும் கடலை பருப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா, மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

    இந்த கலவையை நன்கு கிளறி விட்ட பின் அதிலிருந்து சிறிதளவு மாவை எடுத்து அதை உருண்டையாக உருட்டி பின்பு அதை கையில் வைத்து பக்குவமாக தட்டி அதை தட்டையான வடிவிற்க்கு மாற்றி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இவ்வாறு மீதமுள்ள மாவுகளையும் உருட்டி பின்பு தட்டி தயார் செய்து தட்டில் வைத்து கொள்ளவும்.

    பின்னர் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த வடைகளை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் தட்டி வைத்திருக்கும் வடைகளை வடசட்டியின் அளவிற்கேற்ப பக்குவமாக எடுத்து எண்ணெய்யில் போடவும்.

    பின்பு அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது பொன்னிறம் ஆகும் வரை அதை வேக விடவும்.

    வடை இரு புறமும் பொன்னிறமானதும் அதை ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இவ்வாறு மீதமுள்ள வடைகளையும் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் நன்கு மொறு மொறுப்பாக இருக்கும் மசால் வடை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • பால் பணியாரம் செய்வது எப்படி?

    பால் பணியாரம் தமிழ்நாட்டின் பிரபலமான இனிப்பு உணவு. செட்டிநாட்டு உணவு வகைகளை அடிப்படையாக கொண்டு, தமிழகத்தின் சிவகங்கை, புதுக்கோட்டை பகுதிகளில் வசிக்கும் பலரின் வீடுகளில் திருவிழாக் காலங்களில் இவை கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.

    வீட்டு திருமண விழாக்களிலும், விஷேசம் காலங்களிலும் பால் பணியாரங்கள் பரவலாகக் இடத்தை பிடித்திருக்கும். சாதாரண நாட்களில் கூட மாலை நேர சிற்றுண்டியாக பால் பணியாரத்தை சாப்பிடுவார்கள்.

    பால் பணியாரம் பல தலைமுறைகளைக் கடந்தாலும், அனைவராலும் விரும்பப்படும் உணவாக இருந்தாலும், பெரியோர்களின் பால் பணியார வரவேற்பு தனித்தன்மை வாய்ந்தது. பால் பணியாரின் சிறப்பு என்னவென்றால், மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும்.

    பணியாரம் செய்வதற்கு மிக எளிமையான செய்முறை தான் எனினும் இதை செய்வதற்கு சிறிது நேரம் பிடிக்கும். ஆனால் இதை செய்து நாம் சுவைக்கும் போது நாம் செலவிட்ட நேரம் மிகவும் பயன் ஆனது தான் என்று தோன்றும்.

    தேவையான பொருட்கள்

    உளுத்தம் பருப்பு 1 கப்

    பச்சரிசி 1 கப்

    சர்க்கரை  1 1/2 கப்

    தேங்காய் 1

    4 to 6 ஏலக்காய்

    1 சிட்டிகை உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    செய்முறை

    முதலில் உளுந்து மற்றும் பச்சரிசியை நன்கு கழுவி அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.

    அடுத்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து தேவைப்பட்ட அளவு தண்ணீரை தெளித்து அதை நன்கு நைசாக அரைத்த பின்பு ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்.

    பின்பு மிக்ஸி ஜாரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் இருக்கும் மாவை நன்கு அலசி பாத்திரத்தில் இருக்கும் மாவில் ஊற்றி அதை தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும். (தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.)

    இப்பொழுது தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஏலக்காயையும் போட்டு அதை நன்கு அரைத்து கொள்ளவும்.

    பின்னர் நாம் அரைத்த தேங்காயை ஒரு வடிகட்டி மூலம் வடிகட்டி தேங்காய் பாலை மட்டும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

    அடுத்து அந்த தேங்காய் பாலில் ஒன்றரை கப் அளவு சர்க்கரையோ அல்லது அவரவர் விருப்பத்திற்கேற்ப சர்க்கரையை சேர்த்து அதை நன்கு கரையும் வரை ஒரு கரண்டி மூலம் கலக்கி விட்டு சர்க்கரை கரைந்ததும் அதை மீண்டும் ஒரு முறை வடிகட்டி வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பணியாரத்தை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் மாவை நம் கைகளின் மூலம் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக கடாயின் அளவிற்கேற்ப போடவும்.

    பின்னர் பணியாரம் ஒரு புறம் வெந்ததும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது வெந்ததும் அதை எடுத்து எண்ணெய்யை ஜல்லி கரண்டியின் மூலம் நன்கு வடித்து ஒரு தட்டில் போட்டு வைத்து கொள்ளவும்.

    இவ்வாறு மீதமுள்ள மாவையும் எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும். (பணியாரம் ஒன்றோடு ஒன்று ஓட்டி கொண்டிருந்தால் அதை இப்பொழுதே பிரித்து வைத்து கொள்ளவும்.)

    அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த பணியாரத்தை போட்டு எடுப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீரை சுட வைக்கவும்.

    தண்ணீர் சூடானதும் அதில் நாம் பொரித்து வைத்திருக்கும் பணியாரத்தை போட்டு தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு பணியாரத்தை எடுத்து ஒரு வடிகட்டியில் போட்டு தண்ணீரை நன்கு வடிய விடவும். (இவ்வாறு செய்வதால் பணியாரம் எளிதாக தேங்காய் பாலில் ஊறி விடும்.)

    தண்ணீர் வடிந்தவுடன் பணியாரத்தை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் தேங்காய் பாலில் போட்டு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை ஊற விட்ட பின்பு அதை பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சுவையான மற்றும் இனிப்பான பால் பணியாரம் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.