Author: Arumugam K

  • ஆந்திரா ஸ்டைல் மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி?

    சிலருக்கு மழைக்காலம் என்றால் மாலையில் காரமான உணவுகளை சாப்பிட விரும்புவார்கள். அதிலும் எண்ணெய் பலகாரங்கள் என்றால் ரொம்பவே சாப்பிட ஆசையாக இருக்கும்.

    அந்தக் நேரத்தில் வீட்டில் சாப்பிட கேட்டால் உடனே தயார் செய்வது வடை, பக்கோடா, போண்டா தான். ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன், பஜ்ஜி செய்வார்கள் ஆனால் சாப்பிட்டு அலுத்துவிட்டோம். இனி கவலை வேண்டாம் ஆந்திரா ஸ்பெஷல் மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்..!

    தேவையான அளவுகள்

    மிளகாய் – 10

    வெங்காயம் – 1

    மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

    தனியா தூள் – 1 டீஸ்பூன்

    பெருங்காயம் – 15 கிராம்

    உப்பு – தேவையான அளவு

    வெல்லம் – 15 கிராம்

    புளி தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்

    கடலை மாவு – 200 கிராம்

    அரிசி மாவு – 50 கிராம்

    செய்முறை

    ஆந்திரா ஸ்டைல் மிளகாய் பஜ்ஜி:

    முதலில் மிளகாயை எடுத்து அதில் நடுப்பக்கம் மட்டும் கீறி விடவும் அது ஒரு பக்கம் மட்டுமே இருக்க வேண்டும். அதில் உள் இருக்கும் விதைகளை வெளியில் எடுத்துவிடவும்.

    இப்போது கிண்ணத்தை எடுத்துக்கொள்ளவும் அதில் வெங்காயம் நறுக்கியதை சேர்க்கவும்.

    வெங்காயத்துடன், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 15 கிராம், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு முறை கலந்து விடவும்.

    இப்போது தனியாக புளி தண்ணீர் எடுத்து வைத்திருப்போம் அதனை 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து அதனை கலந்து தனியாக வைக்கவும்.

    இப்போது அதனை தனியாக வைத்திவிட்டு பஜ்ஜி போடுவதற்கு மாவு செய்வோம் வாங்க..! கடலை மாவு – 200 கிராம், அரிசி மாவு – 50 கிராம், கொஞ்சம் பெருங்காயம், இந்த பஜ்ஜி மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். சிறிதளவு மிளகாய் தூள், 1 சிட்டிகை அளவு சோடா உப்பு சேர்த்து கலந்துவிடவும். பஜ்ஜி மாவு போல் கொஞ்சம் தண்ணீராக இருக்க வேண்டும்.

    இப்போது முதலில் செய்த மிளகாயை எடுத்துக்கொள்ளவும். அதில் நாம் செய்து வைத்த மசாலாவை மிளகாயின் உள்ளே வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி கொதிக்கவிடவும் ஓரளவு கொதிவந்தவுடன் அதில் நாம் செய்து வைத்துள்ள மாவையும், மிளகாயையும் எடுத்துக்கொள்ளவும்.

    இப்போது ஒவ்வொரு மிளகாயை எடுத்து பஜ்ஜி மாவில் நனைத்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

    அவ்வளவு தான் உங்களுக்கு பிடித்த சட்னியை தொட்டு சாப்பிட்டு பாருங்கள் சுவை தாறுமாறா இருக்கும்.

  • குடைமிளகாய் முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி?

    முட்டைகள் பொதுவாக பல வழிகளில் சுவையூட்டப்படுகின்றன. அப்படியானால் இன்று இங்கு நாம் காண இருப்பது வித்தியாசமான சில்லி எக் பொடிமாஸ்.

    மிளகாய் மற்றும் முட்டையுடன் இதை மிக எளிதாக செய்யலாம். குடை மிளகாய் எக் பொடிமாஸ் எந்த உணவிற்கும் ஒரு சிறந்த சைட் டிஷ் ஆகும். இவற்றை மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவது நல்லது.

    தேவையான பொருட்கள்

    3 முட்டை

    1 பெரிய வெங்காயம்

    1 குடை மிளகாய்

    4 to 6 பூண்டு பல்

    ¾ மேஜைக்கரண்டி 65 மசாலா

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு உப்பு

    செய்முறை

    குடைமிளகாய் முட்டை பொடிமாஸ்:

    முதலில் வெங்காயம், குடை மிளகாய், மற்றும் பூண்டை நறுக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை குறைத்து விட்டு அதில் 65 மசாலாவை போட்டு அதை நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி பின்பு தீயை மிதமான சூட்டிற்கு மாற்றி அதை ஒரு கரண்டியின் மூலம் கிண்டி கொண்டே இருக்கவும்.

    முட்டை நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான குடை மிளகாய் முட்டை பொடிமாஸ் தயார்.

    இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • மட்டன் உப்பு கண்டம் செய்வது எப்படி?

    மட்டன் உப்புகண்டத்தை பொதுவாக நன்றாக வெயில் அடிக்கும் கோடையில் செய்து வைத்தால் தான் நன்கு காய்ந்து இருக்கும். நன்கு காய்ந்தால் தான் மழைகாலத்தில் பொரித்தோ அல்லது உப்புகண்டம் குழம்பு வைத்தோ சாப்பிடலாம்.

    ஆட்டு இறைச்சி சாப்பிடுவதற்கு சுவையான மற்றும் சத்தான உணவு. உப்பு சேர்த்து நன்கு உலர்த்தி உப்புகண்டமாக சேர்த்து சாப்பிட கூடுதல் சுவை கிடைக்கும். இன்றும் தென் மாவட்ட கிராமங்களில் செய்து சாப்பிடுகிறார்கள்.

    மட்டன் உப்புகண்டம் பொதுவாக வெப்பமான கோடை காலத்தில் தயாரிக்கப்படுகிறது மற்றும் மழைக்காலத்தில் வறுத்த அல்லது உப்புகண்டம் குழம்புடன் உண்ணப்படுகிறது. கிராமத்தில் உள்ள விவசாயிகள் தினமும் உப்புகண்டத்தை ஊறுகாயாக சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    ஆட்டு இறைச்சி – 1 கிலோ

    பூண்டு – 20 பல்,

    காய்ந்த மிளகாய் – 15

    மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்

    உப்பு – தேவையான அளவு

    செய்முறை

    மட்டன் உப்பு கண்டம் செய்வது எப்படி:

    ஆட்டு இறைச்சியை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

    பூண்டு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். இந்த விழுதினை நறுக்கி வைத்த கறியில் சேர்த்து நன்கு கலக்கவும்.

    மசாலா நன்றாக பிடிக்க வேண்டும். இதனை ஒரு நூலில் கோர்த்து வெயிலில் காய வைக்கவும்.

    ஈரம் வற்றும் வரை இரண்டு மூன்று நாட்கள் வரை காய வைக்கவும். நன்றாக காய்ந்த உடன் காற்று புகாதா டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

    சில மாதம் வரை கெட்டுப்போகாது. தேவைப்படும் போது உப்புக்கண்டத்தை எடுத்து சிறு சிறு துண்டுகளாக அம்மிக்கல்லில் தட்டி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.

    சுவையான ருசியான உப்புக்கண்டம் ரெடி.

  • பீட்ரூட் தோசை செய்வது எப்படி?

    தோசை தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய உணவாகும். தோசையில் பல வகைகள் உண்டு. அதில் பன்னீர் தோசை, வெங்காய ரவா தோசை, முட்டை தோசை, பொடி தோசை, மசாலா தோசை, கொத்தமல்லி தோசை, அடை தோசை போன்றவை மிகவும் பிரபலமானவை.

    எனவே இன்று இங்கு நாம் காண இருப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பீட்ரூட் தோசை. உணவு பிரியர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    பீட்ரூட் தோசை வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையுடன் அவர்களின் சமையல் பாணிக்கு ஏற்ப செய்து சுவைக்கிறார்கள்.

    தேவையான பொருட்கள்

    துருவிய பீட்ரூட் – ஒரு கையளவு

    இஞ்சி – 1/2 துண்டு

    காய்ந்த மிளகாய் – 3

    உப்பு – தேவையான அளவு

    தோசை மாவுக்கு

    1/2 கப் பச்சை அரிசி

    1/2 கப் புழுங்கல் அரிசி

    1/4 கப் உளுத்தம் பருப்பு

    செய்முறை

    பீட்ரூட் தோசை செய்வது எப்படி:

    தோசை செய்வதற்கு முந்தைய நாள் ஒரு bowl ல் இட்லி அரிசி மற்றும் புழுங்கல் அரிசியை நன்கு கழுவி போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

    3 மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை எடுத்து கிரைண்டரில் போட்டு அதை சிறிது அரைத்த பின் அதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் உளுத்தம் பருப்பை போட்டு அரைக்கவும்.

    பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலக்கி அதை சுமார் 8 மணி நேரம் வரை room temperature யில் புளிக்க விடவும்.

    ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள் அவற்றில் பீட்ரூட், இஞ்சி, காய்ந்த மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    இவ்வாறு அரைத்த கலவையை தோசை மாவில் நன்கு கலத்து மாவு முழுவதும் பீட்ரூட் பேஸ்ட் கலந்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

    இப்பொழுது தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய வெங்காயத்தை பாதியாக நறுக்கி அதை கல்லில் வைத்து நன்கு தேய்த்து கல்லை சுட விடவும்.

    தோசைக்கல் சுட்ட பின் அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பீட்ரூட் கலந்த தோசை மாவை ஒரு கரண்டியின் மூலம் தோசைக்கல்லில் ஊற்றி அதை சுற்றி தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றவும்.

    இப்பொழுது உங்களுக்கு சூடான மற்றும் மிகவும் சுவையான பீட்ரூட் தோசை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • கொத்தமல்லி தோசை செய்வது எப்படி?

    தோசை தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய உணவாகும். தோசையில் பல வகைகள் உண்டு. அதில் பன்னீர் தோசை, வெங்காய ரவா தோசை, முட்டை தோசை, பொடி தோசை,  மசாலா தோசை, போன்றவை மிகவும் பிரபலமானவை.

    எனவே இன்று இங்கு நாம் காண இருப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கொத்தமல்லி தோசை. உணவு பிரியர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    கொத்தமல்லி தோசை வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையுடன் அவர்களின் சமையல் பாணிக்கு ஏற்ப செய்து சுவைக்கிறார்கள்.

    தேவையான பொருட்கள்

    கொத்தமல்லி – ஒரு கையளவு

    பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப

    பூண்டு – இரண்டு பல்

    உப்பு – சிறிதளவு

    சீரகம் தூள் – 1/2 ஸ்பூன்

    தோசை மாவுக்கு

    1/2 கப் பச்சை அரிசி

    1/2 கப் புழுங்கல் அரிசி

    1/4 கப் உளுத்தம் பருப்பு

    செய்முறை

    கொத்தமல்லி தோசை செய்வது எப்படி:

    தோசை செய்வதற்கு முந்தைய நாள் ஒரு bowl ல் இட்லி அரிசி மற்றும் புழுங்கல் அரிசியை நன்கு கழுவி போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

    3 மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை எடுத்து கிரைண்டரில் போட்டு அதை சிறிது அரைத்த பின் அதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் உளுத்தம் பருப்பை போட்டு அரைக்கவும்.

    பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலக்கி அதை சுமார் 8 மணி நேரம் வரை room temperature யில் புளிக்க விடவும்.

    ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் மொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டு, உப்பு, சீரகம் தூள் ஆகியவற்றை செய்து பேஸ்ட்டு போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

    இவ்வாறு அரைத்த கலவையை தோசை மாவில் நன்கு கலத்து மாவு முழுவதும் கொத்தமல்லி பேஸ்ட் கலந்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

    இப்பொழுது தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய வெங்காயத்தை பாதியாக நறுக்கி அதை கல்லில் வைத்து நன்கு தேய்த்து கல்லை சுட விடவும்.

    தோசைக்கல் சுட்ட பின் அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் கொத்தமல்லி கலந்த தோசை மாவை ஒரு கரண்டியின் மூலம் தோசைக்கல்லில் ஊற்றி அதை சுற்றி தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றவும்.

    இப்பொழுது உங்களுக்கு சூடான மற்றும் மிகவும் சுவையான கொத்தமல்லி தோசை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • ரோஸ் மில்க் செய்வது எப்படி?

    கோடை வெயிலில் குளிர்ந்த ஜூஸ் பருகுவது அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் அதே ஜூஸ்களை தொடர்ந்து குடித்தால், நமக்கு அலுப்பு ஏற்படுவது சகஜம். எனவே இன்று நாம் இங்கு காண இருப்பது வித்தியாசமான ஆனால் மிக அற்புதமான ரோஸ் மில்க்.

    பொதுவாக கோடைக்காலத்தில் சர்பத்துக்கென்று தனி மவுசு தான் இருக்கும். சர்பத் 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெர்சியாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது, மேலும் 16 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் முகலாய படையெடுப்பின் போது மன்னர் பாபரால் இந்தியாவில் பிரபலப்படுத்தப்பட்டது என கூறிகிறார்கள்.

    இன்று சர்பத் ஈரான், துருக்கி, போஸ்னியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் பிரபலமான குளிர்பானமாக உள்ளது. சர்பத்துகளில் பல வகைகள் உள்ளன. இது நாடுகளின் பாணிக்கு ஏற்ப பல வேறுபாடுகளுடன் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களால் விரும்பப்படுகிறது.

    தேவையான பொருட்கள்

    1 லிட்டர் பால்

    3 மேஜைக்கரண்டி சப்ஜா விதைகள்

    வெள்ளரி விதை 2 மேஜைக்கரண்டி

    முந்திரி 2 மேஜைக்கரண்டி

    பாதாம் 2 மேஜைக்கரண்டி

    3 மேஜைக்கரண்டி பிஸ்தா

    1 மேஜைக்கரண்டி பால் பவுடர்

    1 சிட்டிகை ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள்

    தேவையான அளவு ரோஸ் சிரப்

    தேவையான அளவு சர்க்கரை

    செய்முறை

    ரோஸ் மில்க் செய்வது எப்படி:

    முதலில் சப்ஜா விதைகளை சுமார் 20 லிருந்து 30 நிமிடம் வரை ஊற வைக்கவும். பின்பு பாதாம், பிஸ்தா, மற்றும் முந்திரியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் முந்திரி, பால் பவுடர், மற்றும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சர்க்கரையை சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பால் மற்றும் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும். (பாலில் ஆடை வராமல் இருப்பதற்கு அவ்வப்போது அதை கிண்டி கொண்டே இருக்கவும்.)

    பால் நன்கு கொதித்து பொங்கி வரும் போது அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு ஒரு கரண்டியின் மூலம் சுமார் 4 லிருந்து 6 நிமிடம் வரை அதை கிண்டி கொண்டே கொதிக்க விடவும்.

    6 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மாவை ஒவ்வொரு மேஜைக்கரண்டியாக சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    மாவை முற்றிலுமாக சேர்த்த பின் அதை மீண்டும் கிண்டி கொண்டே சுமார் 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.

    3 நிமிடத்திற்கு பிறகு அதில் பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை, மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை கொதிக்க விடவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு பாலை அடுப்பில் இருந்து கீழே இறக்கி அதை நன்கு ஆற விடவும்.

    பால் நன்கு ஆறியவுடன் அதில் நாம் ஊற வைத்திருக்கும் சப்ஜா விதைகளை எடுத்து அதில் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    அடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப ரோஸ் சிரப்பை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு அதை பிரிட்ஜில் சுமார் 2 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரம் வரை வைக்கவும்.

    3 மணி நேரத்திற்கு பிறகு அதை பிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி அதன் மேலே சிறிதளவு பிஸ்தாவை தூவி சில்லென்று பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சுவையான மற்றும் சில்லென்று இருக்கும் ரோஸ் மில்க் சர்பத் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.

  • கொங்குநாடு மட்டன் குழம்பு செய்வது எப்படி?

    பொதுவாக மட்டன் வாங்கி, ஒரே மாதிரியான மட்டன் குழம்பு அல்லது மட்டன் கிரேவி தான் செய்வோம். ஒரே மாதிரியான மட்டன் குழம்பு செய்வது வீட்டில் போர் இல்லையா?

    தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான சமையல் முறை உண்டு. செட்டிநாடு, கொங்கு நாடு, மதுரை ஸ்பெஷல் என பலவகையான சமையல் முறைகளை கையாளுகின்றனர்.

    ஒவ்வொன்றும் ஒரு தனி சுவை மற்றும் மணம் கொண்டது. எனவே இன்று நாம் பார்க்கப் போவது மிகவும் பிரபலமான கொங்கு மட்டன் குழம்பு.

    இதன் சுவை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும். மேலும், அடிக்கடி இந்தக் குழம்பைக் கேட்பார்கள். இன்றைய பதிவில் மண்ணின் சுவையுடன் கொங்கு நாட்டு மட்டன் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    மசாலா அரைக்க

    சின்ன வெங்காயம் -200 கிராம்

    பூண்டு- 10 பல்

    சீரகம் 2 ஸ்பூன்

    மிளகு 1 ஸ்பூன்

    காய்ந்த மிளகாய் 10

    தனியா -1 ஸ்பூன்

    துருவிய தேங்காய் -1 கப்

    குழப்பு செய்ய

    மட்டன்-1/2 கிலோ

    சின்ன வெங்காயம் -200 கிராம்

    பச்சை மிளகாய் -2

    சோம்பு- 1/2 ஸ்பூன்

    பூண்டு- 10 பல்

    மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்

    கருவேப்பிலை 1 கொத்து

    எண்ணெய் தேவையான அளவு

    தண்ணீர் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    மல்லி தழை சிறிது

    செய்முறை

    கொங்குநாடு மட்டன் குழம்பு செய்வது எப்படி:

    முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும், அதில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் தனியா சேர்த்து மணம் வரும் வரை வறுத்துக் கொண்டு அதனை ஆற விட்டு ஒரு மிக்சி ஜாரில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

    பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமாக மாறியவுடன் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் இதனையும் மிக்ஸி ஜாரில் மாற்றிவிட்டு , ஜாரில் சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் ஒரு குக்கரை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானவுடன், அதில் சோம்பு, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

    அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தையும் சேர்த்துக் கொண்டு நன்றாக வதக்கி விட வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் மட்டனை சேர்த்து கொஞ்சம் கிளறி விட்டு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக வேகவைத்து விட்டு அதனுடன் அரைத்த வைத்துள்ள மசாலா சேர்த்து ஒரு முறை பிரட்டி எடுத்து கொண்டு உப்பு சேர்த்துக் நன்றாக கிளறி விட வேண்டும்.

    பின்பு குக்கரை மூடி விட்டு சுமார் 7 முதல் 8 விசில் வரும் வரை, அடுப்பை மிதமான தீயில் வைத்து , வேக வைத்துக்கொள்ள வேண்டும்.

    8 விசில் வரை வெந்த பின் அடுப்பை அணைத்து விட்டு ஆவி அடங்கியவுடன் குக்கரை திறந்து குழம்பில் சிறிது சிறிது மல்லி தழையை சேர்த்து கிளறிவிட்டால் அருமையான கொங்கு நாடு மட்டன் குழம்பு ரெடி!

    மட்டன் மூலம் மட்டன் சுக்கா செய்யலாமே!

  • கேரட் ஆரஞ்சு ஜூஸ் தயார் செய்வது எப்படி?

    கோடை வெயிலில் நாக்கு வறண்டு போகாமல் இருக்கவும், உடல் சோர்வடையாமல் இருக்கவும் குளிர் பானங்கள் அருந்துவது இயற்கை. அதற்காகவே இன்று நாம் இங்கு காண இருப்பது வித்தியாசமான கேரட் ஆரஞ்சு ஜூஸ் குளிர்பானம்.

    பொதுவாக நாம் ஆரஞ்சு ஜூஸ் குடிப்போம். இந்த கேரட் ஆரஞ்சு ஜூஸ் அதில் கேரட்டைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

    கேரட்டில் பொதுவாக வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது இது கண்களுக்கு நல்லது, ஆரஞ்சுகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உடலில் உள்ள திசுக்களை சரிசெய்ய உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

    எனவே உடலுக்கு மிகவும் சத்தான ஆரஞ்சு மற்றும் கேரட்டைக் கொண்டு இந்த ஜூஸை தயார் செய்வோம். மேலும் இவை மிகவும் சுவையாக இருப்பதால், பொதுவாக ஆரஞ்சு மற்றும் கேரட்டை விரும்பும் குழந்தைகள் கூட சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    2 கேரட்

    2 ஆரஞ்சு

    1/2 எலுமிச்சம் பழம்

    4 மேஜைக்கரண்டி சர்க்கரை

    ½ இஞ்சி துண்டு

    தேவையான அளவு ஐஸ்க்யூப்ஸ்

    செய்முறை

    கேரட் ஆரஞ்சு ஜூஸ் தயார் செய்வது எப்படி:

    முதலில் கேரட் மற்றும் ஆரஞ்சை வெட்டி வைத்து, பின் புஎலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் அளவு சர்க்கரையை போட்டு அதில் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டியின் மூலம் சர்க்கரை நன்கு கரையும் வரை அதை கிண்டி விடவும்.

    சர்க்கரை நன்கு கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த பாத்திரத்தை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் அதை ஆற விடவும்.

    அடுத்து நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட் மற்றும் இஞ்சி துண்டை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு அரைத்து கொள்ளவும்.

    இப்பொழுது அந்த சக்கையை ஒரு வெள்ளை துணியில் கொட்டி துணியை மடித்து நன்கு இருக்கமாக சுற்றி வரும் சாரை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து அந்த கேரட் சக்கையை மீண்டும் ஒருமுறை மிக்ஸி ஜாரில் போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதை மீண்டும் நன்கு அரைக்கவும்.

    பிறகு அந்த சக்கையை நாம் முன்பு செய்தது போலவே மீண்டும் ஒரு முறை செய்து வரும் சாறை நாம் ஏற்கனவே சாறை எடுத்து வைத்திருக்கும் பாத்திரத்தில் சேர்த்து விடவும்.

    பின்பு ஒரு juicer யின் மூலம் ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சாறை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் கேரட் சாறில் ஊற்றி அதை நன்கு கலக்கி விடவும்.

    இப்பொழுது அதில் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப தண்ணியை ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும். (ஜூஸ் திக்காக வேண்டும் என்றால் தண்ணீர் கம்மியாகவும், ஜூஸ் தண்ணியாக வேண்டும் என்றால் தண்ணீர் அதிகமாகவும் சேர்த்து கொள்ளவும்.)

    அடுத்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் சர்க்கரை சிரப்பை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஊற்றி அதை நன்கு கலக்கி விடவும். (தேனை விரும்புவர்கள் இதில் சர்க்கரை சிரப்புக்கு பதிலாக தேனை சேர்த்து கொள்ளலாம்.)

    பின்பு ஒரு கிளாஸ் டம்ளரை எடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஐஸ்க்யூப்ஸை போட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் கேரட் ஆரஞ்சு ஜூஸை ஊற்றி அதில் 2 ஆரஞ்சு பழ slice ஐ நறுக்கி போட்டு அதை சில்லென்று பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் அருமையான மற்றும் உடம்பிற்கு மிகவும் சத்தான கேரட் ஆரஞ்சு ஜூஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.

    கோட்டை கால பானமான ஃப்ரூட் மிக்ஸர் தயார் பண்ணலாம்!

  • மட்டன் கோலா செய்வது எப்படி?

    ஆங்கிலத்தில் Meatballs என்று அழைக்கப்படும் இந்த கோலா உருண்டைகள் இந்திய துணைக்கண்டம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரபலமான உணவாகும். இவையும் இறைச்சி சேர்க்காமல் செய்யப்படுகின்றன. இறைச்சி இல்லாமல் தயாரிக்கப்படும் கோலா உருண்டைகள் கிரேக்க மொழியில் hortokeftedes என்றும் துருக்கியில் Çiğ köfte என்றும் அழைக்கப்படுகிறது.

    இறைச்சிக்கு பதிலாக உருளைக்கிழங்கு அல்லது சீஸ் கொண்டு இறைச்சி இல்லாத கோலா உருண்டைகள் தயாரிக்கப்படுகின்றன. சில பகுதிகளில் இவை குழம்புகளாகவும் செய்யப்படுகின்றன.

    மட்டன் கோலா உருண்டைகளின் சிறப்பு என்னவென்றால், அவை மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் மட்டுமல்லாமல், சத்தான மாலை நேர சிற்றுண்டியாகவும் இருக்கும்.

    குழந்தைகளுக்கு மாலையில் பிஸ்கட் மற்றும் சிப்ஸ் கொடுப்பதற்கு பதிலாக, இந்த சத்தான மட்டன் கோலா உருண்டைகளை உருவாக்குங்கள்.

    தேவையான பொருட்கள்

    250 g மட்டன் கொத்துக்கறி

    1 பெரிய வெங்காயம்

    1 மேஜைக்கரண்டி பொட்டுகடலை

    1 பச்சை மிளகாய்

    1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    1 மேஜைக்கரண்டி சோம்பு

    1 பட்டை துண்டு

    2 கிராம்பு

    1 ஏலக்காய்

    1 இஞ்சி துண்டு

    2 பூண்டு பல்

    மிளகாய் தூள் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    1 கை அளவு கொத்தமல்லி

    செய்முறை

    மட்டன் கோலா செய்வது எப்படி:

    முதலில் வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை நன்றாக பொடியாக நறுக்கி, பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு பவுடராக்கி வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு துண்டு பட்டை, ஒரு மேஜைக்கரண்டி சோம்பு, 2 கிராம்பு, மற்றும் ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    பின்பு அதில் 2 பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, மற்றும் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.

    எண்ணெய் சுசூடானதும் அதில் கொத்துக்கறி, மஞ்சள் தூள், அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்கு கிண்டி சுமார் 5 நிமிடம் வரை வேக விடவும்.

    5 நிமிடத்திற்குப் பிறகு வெந்த கொத்துக்கறியை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். (கறியிலிருந்து தண்ணீர் வந்திருந்தால் தண்ணீர் இல்லாமல் கறியை மட்டும் எடுத்து வைக்கவும்.)

    இப்பொழுது இந்த கரியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

    அடுத்து அரைத்த கறியில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கொத்தமல்லி, மற்றும் அரைத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலையை போட்டு நன்கு பிணைந்து கொள்ளவும்.

    கோலா உருண்டைகளை பொரித்து எடுக்கும் போது கரி தனியாக பிரிந்து விடாமல் இருப்பதற்காகவே பொட்டுகடலை அரைத்து சேர்க்கிறோம்.

    அதனால் மாவு தண்ணியாக இருந்தால் அதற்கேற்றவாறு பொட்டுக்கடலை பவுடரை கொஞ்சம் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

    இப்பொழுது பிணைந்து வைத்திருக்கும் இந்தக் கரியை உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    பின்னர் ஒரு வட சட்டியை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த உருண்டைகளை பொரித்து எடுப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் பிடித்து வைத்திருக்கும் இந்த உருண்டைகளை வட சட்டியின் அளவிற்கேற்ப ஒரு முறையோ அல்லது இரு முறையோ போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பிவிட்டு பொன்னிறமானதும் எண்ணெய்யை வடித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கெட்சப் உடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான மட்டன் கோலா உருண்டை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

    இதையும் செய்யலாம்!: மட்டன் சுக்கா செய்வது எப்படி?

  • முட்டை தோசை செய்வது எப்படி?

    வீட்டில் தோசை செய்ய திட்டமிடுகிறீர்களா? ஆனால் அதற்கு சைட் டிஷ் செய்ய பிடிக்கவில்லையா? எனவே உங்கள் வீட்டில் முட்டை இருக்கிறதா? அந்த முட்டையில் முட்டை தோசை செய்து சுவையாக சாப்பிடலாம். இந்த முட்டை தோசையை இரண்டு விதமாக செய்யலாம். இரண்டுக்கும் சைட் டிஷ் தேவையில்லை.

    முட்டை தோசையின் இரண்டு வகைகளை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இரண்டு வகையான முட்டை தோசைகள் உள்ளன. நீங்கள் விரும்பியபடி சாப்பிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்

    வெரைட்டி – 1

    தோசை மாவு

    முட்டை – 4

    வெங்காயம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

    பச்சை மிளகாய் – 2

    தக்காளி – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

    உப்பு – சுவைக்கேற்ப

    மிளகுத் தூள் – சுவைக்கேற்ப

    எண்ணெய் – தேவையான அளவு

    வெரைட்டி – 2

    தோசை மாவு – 2 கப்

    முட்டை – 3

    பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

    உப்பு – சுவைக்கேற்ப

    மிளகுத் தூள் – சுவைக்கேற்ப

    எண்ணெய் – தேவையான அளவு

    செய்முறை

    முட்டை தோசை செய்வது எப்படி:

    தோசை செய்வதற்கு முந்தைய நாள் ஒரு bowl ல் இட்லி அரிசி மற்றும் புழுங்கல் அரிசியை நன்கு கழுவி போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

    மற்றொரு bowl ல் உளுத்தம் பருப்பு, வெந்தயம், மற்றும் அரை மேஜைக்கரண்டி அளவு கடலை பருப்பையும் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதையும் சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

    3 மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை எடுத்து கிரைண்டரில் போட்டு அதை சிறிது அரைத்த பின் அதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் உளுத்தம் பருப்பை போட்டு அரைக்கவும்.

    பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலக்கி அதை சுமார் 8 மணி நேரம் வரை room temperature யில் புளிக்க விடவும். தோசை மாவு தயார்.

    வெரைட்டி- 1

    முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் உப்பு, மிளகுத் தூள், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    இப்பொழுது தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய வெங்காயத்தை பாதியாக நறுக்கி அதை கல்லில் வைத்து நன்கு தேய்த்து கல்லை சுட விடவும்.

    தோசைக்கல் சுட்ட பின் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தோசை மாவை ஒரு கரண்டியின் மூலம் ஊற்றி அதை சுற்றி தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றவும். அதன் மேல் இந்த முட்டை கலவையை ஊற்றி பரப்பி, எண்ணெய் ஊற்றி, முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்தால், முட்டை தோசை தயார்.

    வெரைட்டி – 2

    முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    இப்பொழுது தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய வெங்காயத்தை பாதியாக நறுக்கி அதை கல்லில் வைத்து நன்கு தேய்த்து கல்லை சுட விடவும்.

    தோசைக்கல் சுட்ட பின் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தோசை மாவை ஒரு கரண்டியின் மூலம் ஊற்றி அதை சுற்றி தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றவும். அதன் மேல் கலந்து வைத்துள்ள முட்டையை பாதி ஊற்றி பரப்பி, மேலே சிறிது உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான முட்டை தோசை தயார்.

    இதையும் செய்யலாம்!: அடை தோசை செய்வது எப்படி?