Paneer Pan Fry Gravy

பன்னீர் பேன் ஃப்ரை கிரேவி செய்வது எப்படி?

பன்னீர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு. அதுமட்டுமல்லாமல், பொதுவாக பன்னீர் கொண்டு செய்யப்படும் அனைத்து உணவுகளுக்கும் உணவு பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

எனவே இன்று இங்கே பன்னீருடன் வித்தியாசமாக செய்யப்பட்ட பன்னீர் பான் ஃப்ரை கிரேவியை நாங்கள் தருகிறோம். பன்னீர் பிரியர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் அவசியம். பன்னீர் பான் ஃப்ரை கிரேவியை சப்பாத்தி, நாண் மற்றும் ஃபிரைடு ரைஸ் ஆகியவற்றுக்கு சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம். இவை மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றவை.

பொதுவாக மாலை நேரங்களில் சாப்பிடும் ஸ்நாக்ஸ் அல்லது டிபன்களுக்கு இது ஒரு சிறந்த மாற்றாகும். நம் குழந்தைகளுக்குக் கொடுத்தால் அவர்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

250 கிராம் பன்னீர்

பெரிய வெங்காயம் 1

முட்டைகோஸ் 1

1 குடை மிளகாய்

8 பல் பூண்டு

இஞ்சி 2 துண்டு

சோள மாவு 2 மேஜைக்கரண்டி

ஸ்செஷ்வான் சாஸ் 2 மேஜைக்கரண்டி

கெட்சப் 2 மேஜைக்கரண்டி

ரெட் சில்லி சாஸ் 1 மேஜைக்கரண்டி

வெண்ணெய் 1 மேஜைக்கரண்டி

½ மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள்

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

தேவையான அளவு ஸ்பிரிங் ஆனியன்

செய்முறை

பன்னீர் பேன் ஃப்ரை கிரேவி:

முதலில் வெங்காயம், முட்டைகோஸ், குடை மிளகாய், பூண்டு, மற்றும் ஸ்பிரிங் ஆனியன் ஐ தயார் செய்து, பன்னீரை சதுர வடிவில் நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பன்னீர், கால் மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள், சிறிதளவு உப்பு, மற்றும் நாம் அரைத்து எடுத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை ஒன்றாக போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

அடுத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவை சேர்த்து அது நன்கு பன்னீரோடு ஒட்டுமாறு கலந்து விடவும்.

பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பன்னீரை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

எண்ணெய் சூடான பின் அதில் இந்த பன்னீரை ஒவ்வொன்றாக எடுத்து வைத்து அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி வைத்து அதன் அனைத்து புறங்களிலும் பொன்னிறம் ஆகுமாறு அதை வறுக்கவும்.

பன்னீர் அனைத்து புறங்களிலும் பொன்னிறமானதும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் 5 பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, மற்றும் அரை கப் அளவு ஸ்ப்ரிங் ஆனியன் ஐ போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

1 நிமிடத்திற்கு பிறகு அதில் குடை மிளகாயை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் ஸ்செஷ்வான் சாஸ், கெட்சப், ரெட் சில்லி சாஸ், கால் மேஜைக்கரண்டி அளவு மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

1 நிமிடத்திற்கு பிறகு அதில் சுமார் 50 ml அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை கொதிக்க விடவும்.

பன்னீர் பேன் ஃப்ரை சிறிது கிரேவியாக வேண்டும் என்றால் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை கரைத்து இதில் சேர்த்து கொள்ளவும்.

பின்பு அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து அதை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக அந்த கலவையுடன் சேருமாறு கிண்டி விட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

2 நிமிடத்திற்கு பிறகு அதில் சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன் ஐ தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய்யை ஊற்றி அதை உருக விடவும்.

வெண்ணெய் உருகியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், மற்றும் முட்டைகோஸை போட்டு அதை ஒரு வதக்கு வதக்கி அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து விடவும்.

அடுத்து Sizzler Plate Tray வை எடுத்து அதை வெறுமனே அடுப்பில் வைத்து அது புகை வரும் அளவிற்கு அதை சுட வைக்கவும்.

பின்னர் Sizzler Plate Tray வில் இருந்து புகை வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதில் நாம் வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் முட்டைகோஸை போட்டு அதை நன்கு பரப்பி விடவும்.

பிறகு நாம் செய்து வைத்திருக்கும் பன்னீர் கிரேவியை அதன் மேலே ஊற்றி சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன் ஐ தூவி அதை சுட சுட பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான பன்னீர் பேன் ஃப்ரை கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Leave a Reply

Previous Post

Next Post

Discover more from Dad's Kitchen

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading