ஃபிரைடு ரைஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு. குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு இவை பிடித்தமான உணவுகள் என்றால் மிகையாகாது.
ஆரம்ப காலத்தில் ஃபிரைடு ரைஸ் ஓரிரு முறைகளில் செய்யப்பட்டாலும், காலப்போக்கில் பல சமையல் வகைகள் உருவாகி வருகின்றன. இன்று நாம் பார்ப்பது மிகவும் சுவையான மலேசியன் ஃப்ரைட் ரைஸ்.
இப்போது நாக்கில் எச்சில் உருகிறதா?. உங்கள் சுவை மொட்டுகளை திருப்திப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் பசி வேதனையையும் திருப்திப்படுத்தும் ஒரு சுவாரஸ்யமான ஃபிரைடு ரைஸ் குறிப்புகளை நாங்கள் கீழே குறிப்பிட்டுள்ளோம்.
தேவையான பொருட்கள்
1 cup பாசுமதி அரிசி
250 g மஸ்ரூம்
1/2 cup பச்சை குடைமிளகாய்
1/2 cup மஞ்சள் குடை மிளகாய்
1/2 cup சிவப்பு குடைமிளகாய்
1/2 cup வேகவைத்த சோளம்
1/2 cup வேகவைத்த பச்சை பட்டாணி
8 பூண்டு பல்
8 சிவப்பு மிளகாய்
a small piece இஞ்சி
3 tsp துருவிய தேங்காய்
2 tsp எள் எண்ணெய்
2 tsp சோயா சாஸ்
1 tsp வினிகர்
1 tsp பெப்பர்
1 tsp உப்பு
1/2 tsp சர்க்கரை
தேவையான அளவு ஸ்ப்ரிங் ஆனியன்
தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
ஒரு கப் பாசுமதி அரிசியை எடுத்து தண்ணீர் விட்டு நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
இப்பொழுது மஸ்ரூம், குடமிளகாய்கள், இஞ்சி, பூண்டு, மற்றும் ஸ்ப்ரிங் ஆனியனை நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
அடுத்து நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு, துருவி வைத்திருக்கும் தேங்காய் மற்றும் ஊற வைத்திருக்கும் சிவப்பு மிளகாய்யை மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்ட் ஆக அரைத்துக் வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். பின்பு அதில் உப்பு சேர்த்து ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை நன்கு வடிகட்டி அதில் போட்டு 15 இல் இருந்து இருபது நிமிடம் வரை அதை வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு pan ஐ எடுத்து மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் எள் எண்ணெய் சேர்க்கவும்.
எண்ணெய் சூடானதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா பேஸ்ட்டை போட்டு அதனின் பச்சை வாசம் போய் எண்ணெய் நன்கு பிரிந்து வரும் வரை வதக்கவும்.
பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் மஸ்ரூம் மற்றும் குடை மிளகாய்களை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
அடுத்து அதில் உப்பு மற்றும் பெப்பரை சேர்த்து சுமார் ஆறிலிருந்து ஏழு நிமிடம் வரை வேக வைக்கவும்.
ஆறு நிமிடம் கழித்து நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் சோளம் மற்றும் பச்சை பட்டாணியை அதில் சேர்த்து சுமார் ஐந்து நிமிடம் வரை வேக வைக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து அதில் சோயா சாஸ், வினிகர், மற்றும் சர்க்கரையை சேர்த்து சுமார் ஒன்றிலிருந்து இரண்டு நிமிடம் வரை அதை வதக்கவும்.
இப்பொழுது அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்த்து பூ போல் சாதம் உடையாதவாறு கிளறவும்.
அடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங்காணியனை போட்டு நன்கு கிளறவும். அவ்வளவுதான் உங்கள் சூடான மற்றும் சுவையான மலேசியன் பிரைட் ரைஸ் ரெடி.
