Blog

  • மட்டன் குழம்பு வைப்பது எப்படி?

    அசைவம் இருந்தாலே போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறும். அசைவத்தில் உள்ள அனைத்தும் எல்லோருக்கும் விரும்பத்தக்கவை என்று அவசியமில்லை.

    சிலருக்கு சிக்கன், மீன், இறால், நண்டு போன்றவை பிடிக்கும்.ஆனால் சிலருக்கு மட்டன் பிடிக்காது, சிலருக்கு மட்டன் கிரேவி பிடிக்கும். அப்படி விரும்பி சாப்பிடுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த பேக்கேஜில் மட்டன் கிரேவியை மிகவும் சுவையாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மட்டன் – தேவையான அளவு

    மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள் தூள் – 3 சிட்டிகை

    இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு – சிறிதளவு

    எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

    பட்டை – 3

    ஏலக்காய் – 3

    கிராம்பு – 4

    ஸ்டார் பூ – 1

    மல்லி – 3 டேபிள் ஸ்பூன்

    மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

    பச்சை மிளகாய் – 2

    தோல் சீவிய இஞ்சி – 1

    தோல் உரித்த பூண்டு – 10

    நறுக்கிய வெங்காயம் – 1

    சீரகம் – அரை டேபிள் ஸ்பூன்

    பிரியாணி இலை – 2

    நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் – 2

    சிகப்பு மிளகாய் – 3

    நறுக்கிய தக்காளி – 1

    தண்ணீர் – தேவையான அளவு

    செய்முறை

    மட்டன் குழம்பு வைப்பது எப்படி:

    ஒரு பௌலில் தேவையான அளவு மட்டன் எடுத்து அதை சுத்தபடுத்தி கொள்ளவும்.

    பின்னர் அதில் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் 3 சிட்டிகை, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன், உப்பு சிறிதளவு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இதை ஒரு 10 நிமிடம் அப்படியே ஊறவைக்கவும்.

    பிறகு ஒரு மிக்சி ஜாரில் பட்டை 3, ஏலக்காய் 3, கிராம்பு 4, ஸ்டார் பூ 1, மல்லி 3 டேபிள் ஸ்பூன், மிளகு 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பொடியாக்கி கொள்ளவும்.

    பின்னர் அரைத்து வைத்த பொடியுடன் பச்சை மிளகாய் 2, தோல் சீவிய இஞ்சி 1, தோல் உரித்த பூண்டு 10, நறுக்கிய வெங்காயம் 1 மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடான பிறகு சீரகம் அரை டேபிள் ஸ்பூன், பிரியாணி இலை 2, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் 2, சிகப்பு மிளகாய் 3 சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கிய பின்பு நறுக்கிய தக்காளி 1 சேர்த்து வதக்கவும். வதக்கிய பின்பு மிக்ஸ் செய்து வைத்திருக்கும் ஆட்டுகறியை சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்.

    10 நிமிடம் கழித்து அரைத்து வைத்திருக்கும் பேஸ்டை சேர்த்து நன்றாக கிளறவும். பின் அதில் தேவையான அளவு உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து 40 நிமிடம் வேகவைக்கவும்.

    40 நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான ஆட்டுக்கறி குழம்பு தயார்.

  • வெஜிடபிள் புலாவ் செய்வது எப்படி?

    புலாவ் பொதுவாக நம்மில் பலருக்குப் பிடித்தமான உணவு. புலாவை பல வழிகளில் செய்யலாம். எனவே இன்று நாம் இங்கு காண இருப்பது ஆந்திரா பாணி வெஜிடபிள் புலாவ் ஆகும், இது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் செய்முறையின் படி செய்யப்படுகிறது.

    பிரியாணிக்கு முன்னதாக உதயமான உணவு புலாவ் என்றால் நம்ப முடிகிறதா? எட்டாம் நூற்றாண்டில் Abbasid பேரரசின் போது உருவான ஒரு உணவாக புலாவை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

    காலப்போக்கில் இவை உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தன. இப்போதெல்லாம், புலாவ் உலகெங்கிலும் உள்ள மக்களால் அந்தந்த பிராந்தியங்களின் சமையல் பாணிக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு ருசிக்கப்படுகிறது.

    தேவையான பொருட்கள்

    1 cup பாசுமதி அரிசி

    1 bowl காலிஃப்ளவர்

    1 bowl பீன்ஸ்

    1 bowl பச்சை பட்டாணி

    2 வெங்காயம்

    1 உருளைக்கிழங்கு

    1 தக்காளி

    1 cup கேரட்

    3 பச்சை மிளகாய்

    3 பல் பூண்டு

    15 முந்திரிப் பருப்பு

    2 ஏலக்காய்

    1 இலவங்கப்பட்டை

    4 கிராம்பு

    1 நட்சத்திர சோம்பு

    1 pcs மராத்தி மொக்கு

    1 pcs ஜாதிக்காய்

    2 pcs ஜாதிப்பத்திரி

    1 tsp கொத்தமல்லி விதைகள்

    1 tsp மிளகு

    2 pcs கல்பாசி

    1 tsp சீரகம்

    1 tsp கசகசா

    1 tsp கல் உப்பு

    1 tsp தூள் உப்பு

    2 tsp நெய்

    1 தேங்காய் துண்டு

    1 சிறு துண்டு இஞ்சி

    1 பிரியாணி இலை

    தேவையான அளவு புதினா

    தேவையான அளவு கொத்தமல்லி

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு தண்ணீர்

    செய்முறை

    வெஜிடபிள் புலாவ் செய்வது எப்படி:

    முதலில் பாசுமதி அரிசியை எடுத்து அதை நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

    அடுத்து காலிஃப்ளவர், பீன்ஸ், பச்சை பட்டாணி, வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி, கேரட், பச்சை மிளகாய், தேங்காய், புதினா, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது மிக்ஸி ஜாரை எடுத்து அதில் பூண்டு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, மராத்தி மொக்கு, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, கொத்தமல்லி விதைகள், மிளகு, கல்பாசி, சீரகம், கசகசா, நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, தேங்காய், இஞ்சி, கொத்தமல்லி, மற்றும் புதினாவை சேர்த்து அதை நன்கு அரைக்கவும்.

    பின்பு அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதை நன்கு பேஸ்ட் ஆக அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.

    அது சூடானதும் அதில் பிரியாணி இலை மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து முந்திரி பருப்பு பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.

    முந்திரி பருப்பு பொன்னிறமானதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வெங்காயம் சற்று நிறம் மாறும்வரை அதை வறுக்கவும்.

    வெங்காயம் சற்று நிறம் மாறியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.

    2 நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் காலிஃப்ளவர், கேரட், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் ஒரு மேஜைகரண்டி அளவு கல்லுப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 5 நிமிடம் வரை வேக விடவும்.

    5 நிமிடத்திற்க்கு பிறகு மூடியை திறந்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை நன்கு கிளறி விடவும்.

    3 நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து அரிசி உடைந்து விடாமல் அதை பக்குவமாக நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் சுமார் 2 கப் அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு பக்குவமாக ஒரு கரண்டியின் மூலம் கலந்து விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 15 நிமிடம் வரை வேக விடவும்.

    15 நிமிடத்திற்குக்ப் பிறகு அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து புலாவை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக ஒரு கிளறு கிளறி மீண்டும் மூடியை போட்டு அதை சுமார் 5 நிமிடம் வரை அப்படியே வைக்கவும்.

    5 நிமிடத்திற்க்குப் பிறகு ஆந்திரா ஸ்டைல் வெஜிடபிள் புலாவை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுடசுட பரிமாறவும்.

  • ஆரோக்கியமான லெமன் இஞ்சி ஜூஸ் செய்வது எப்படி?

    கோடை வெயிலில் சோர்வாக இருப்பது சகஜம். சத்தான உணவுடன் பழங்கள் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்வதன் மூலம் உடலை தெம்பாக வைத்திருக்கவும்.

    அப்படியென்றால் இன்று இங்கு நாம் காண இருப்பது இஞ்சி மற்றும் எலுமிச்சையுடன் கூடிய ஜூஸ். இஞ்சி எலுமிச்சை ஜூஸ்ன் சிறப்பு என்னவென்றால், எலுமிச்சை மற்றும் இஞ்சியை மட்டும் பயன்படுத்தி மிக எளிதாக வீட்டிலேயே செய்யலாம்.

    உடலுக்கு குளிர்ச்சி தரும் எலுமிச்சை மற்றும் இஞ்சி சேர்த்து சாப்பிட்டால் உடல் வலியும் நீங்கும்.

    எனவே கோடை வெயிலில் இருந்து நம்மை காக்க எந்த செலவும் இல்லை என்றால், இஞ்சி எலுமிச்சை ஜூஸ் உடலுக்கு மிகவும் சத்தான பானம் என்பதில் சந்தேகமில்லை.

    மேலும் தேவையான சிரப்பை ஒரு முறை செய்து 10 முதல் 15 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், அவ்வப்போது ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து ஜூஸை எளிதில் கலந்துகொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்

    14 எலுமிச்சம் பழம்

    150 கிராம் இஞ்சி

    தேவையான அளவு சர்க்கரை

    செய்முறை

    ஆரோக்கியமான லெமன் இஞ்சி ஜூஸ்

    முதலில் இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் தெளித்து அதை நன்கு அரைத்து கொள்ளவும்.

    அடுத்து அரைத்த இஞ்சியை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி சாரை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதை சுமார் 30 நிமிடத்தில் இருந்து 40 நிமிடம் வரை அப்படியே வைக்கவும்.

    இஞ்சி சாரு இருக்கும் பாத்திரம் ஆடாமல் இருப்பது அவசியம் அப்பொழுது தான் அதில் இருக்கும் சுண்ணாம்பு அடியில் தங்கும் அதை நாம் எளிதில் நீக்கி விடலாம்.

    இப்பொழுது எலுமிச்சம் பழங்களை எடுத்து அதை பாதியாக வெட்டி ஒரு juicer ரின் மூலம் ஜூஸை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து கொள்ளவும். அமேசான் மூலம் Juicer வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

    பின்பு அது எத்தனை ml இருக்கிறது என்பதை உறுதி செய்த பின் அதை ஃப்ரிட்ஜில் வைத்து விடவும்.

    பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் ஜூஸ்க்கு முக்கால் பாகம் தண்ணீர் என்ற கணக்கிர்க்கு தண்ணீரை அளந்து அதில் ஊற்றவும்.

    அடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப தேவையான அளவு சர்க்கரையை போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் நன்கு கரைத்து விடவும். (சர்க்கரையை விரும்பாதவர்கள் இதில் சர்க்கரைக்கு பதிலாக உப்பை சேர்த்து கொள்ளலாம்.)

    சர்க்கரை முழுவதும் கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே அடுப்பிலேயே வைத்திருக்கவும்.

    இப்பொழுது நாம் இஞ்சி சாரை ஊற்றி வைத்து இருக்கும் பாத்திரத்தை எடுத்து அதில் இருக்கும் சாரை பக்குவமாக வேறு ஒரு பாத்திரத்தில் பொறுமையாக அதன் அடியில் இருக்கும் சுண்ணாம்பு இதனுடன் கலந்து வராமல் ஊற்றவும்.

    பின்னர் அதை மீண்டும் சுமார் 20 லிருந்து 30 நிமிடம் வரை அப்படியே வைக்கவும். (இரண்டாவது முறை இவ்வாறு செய்யும் செய்யும் போதும் சுண்ணாம்பு அதிகமாக அடியில் படிந்தால் அதை மீண்டும் ஒரு முறை இவ்வாறு செய்து கொள்ளவும்.)

    அடுத்து இந்த சாரை வெது வெதுப்பாக இருக்கும் சர்க்கரை பாகில் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.

    பாகு நன்கு ஆறியவுடன் அதை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி அதை நாம் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் எலுமிச்சை சாரை வெளிய எடுத்து அதில் ஊற்றி நன்கு கலந்து விடவும்.

    பின்பு ஒரு டம்ளரை எடுத்து அதன் பாதி அளவிற்கு இந்த சிரப்பை ஊற்றி அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஐஸ் கியூபை போட்டு தண்ணியை ஊற்றி சில்லென்று பரிமாறவும்.

    மீதமுள்ள சிரப்பை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது எடுத்து இவ்வாறு ஜூஸை தயார் செய்து பருகலாம்.

    இப்பொழுது உங்கள் அருமையான மற்றும் சில்லென்று இருக்கும் இஞ்சி லெமன் ஜூஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.

  • கோடைக்கு ஏற்ற தர்பூசணி எலுமிச்சை புதினா ஜூஸ் தயார் செய்வது எப்படி?

    தர்பூசணி ஒரு சிறந்த தாகத்தைத் தணிக்கும் மற்றும் கோடையில் வெயில் அல்லது வெப்பத்திற்கு உடனடி தீர்வாகும்.

    இது ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஈரப்பதத்தைக் கொண்டுள்ளது, எனவே இது நம்மை நீரேற்றமாக வைத்திருக்கிறது.

    தர்பூசணியில் லைகோபீன் நிறைந்துள்ளது, இது நமது உடலை ஆரோக்கியமான அமைப்புக்கு தீங்கு விளைவிக்காமல் பாதுகாக்கிறது.

    தர்பூசணி வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் பயோட்டின் மற்றும் நமது தோல், இதயம், சிறுநீரகங்கள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பல ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும்.

    கோடை நாளில் முழு குடும்பத்திற்கும் மிகவும் பழம் மற்றும் புத்துணர்ச்சி.

    கோடை நாளில் எலுமிச்சைப் பழத்தை விட தர்பூசணி எலுமிச்சைப் பழம் மட்டுமே சிறந்தது.

    இந்த தர்பூசணி புதினா லெமனேட் இனிப்பு, புளிப்பு, மிளகு சுவை கொண்டது.

    தேவையான பொருட்கள்

    6 கப் தர்பூசணி துண்டுகள்

    2 தேக்கரண்டி புதினா இலைகள் நறுக்கியது

    2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

    தேவையான அளவு ஐஸ் கட்டிகள்

    அலங்கரிக்க :

    எலுமிச்சைத்துண்டுகள்

    புதினா இலைகள்

    செய்முறை

    தர்பூசணியின் தோல் மற்றும் விதைகளை அகற்றவும்.

    தர்பூசணித் துண்டுகளுடன் புதினா இலைகள், எலுமிச்சைச் சாறு சேர்த்து ப்ளெண்டரில் அரைத்தெடுக்கவும் . அமேசான் மூலம் Juicer வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

    கண்ணாடி டம்பளர்களில் ஐஸ் கட்டிகள் சேர்த்து, ஜூஸ் ஊற்றவும்.

    மேலே எலுமிச்சைத் துண்டுகள், புதினா இலைகள் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

  • சிக்கன் சாண்ட்விச் செய்வது எப்படி?

    சாண்ட்விச் இளைய தலைமுறையினரிடையே மிகவும் பிரபலமானது. குறிப்பாக சிக்கன் சாண்ட்விச், கேட்க வேண்டியதில்லை. அவை பெரும்பாலும் மாலை நேர சிற்றுண்டியாக உண்ணப்படுகின்றன, ஆனால் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கும் நல்லது.

    இந்த சாண்ட்விச்கள் அமெரிக்காவில் தோன்றியதாகவும், உலகம் முழுவதும் பிரபலமாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இது பொதுவாக சாண்ட்விச் கடைகள் அல்லது உணவகங்களில் உண்ணப்படுகிறது. ஆனால் வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.

    இப்போது சிக்கன் சாண்ட்விச் செய்வதற்கான பொருட்கள் மற்றும் எளிய செய்முறையை கீழே பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    200 கிராம் போன்லெஸ் சிக்கன்

    4 to 6 பிரெட் துண்டுகள்

    1/2 கப் பெரிய வெங்காயம்

    1/2 கப் பச்சை குடைமிளகாய்

    1/2 கப் சிவப்பு குடைமிளகாய்

    4 பல் பூண்டு

    வெண்ணெய் தேவையான அளவு

    மிளகு தூள் தேவையான அளவு

    1/4 கப் mayonnaise

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    கொத்தமல்லி ஒரு கை அளவு

    செய்முறை

    சிக்கன் சாண்ட்விச் செய்வது எப்படி

    முதலில் வெங்காயம் மற்றும் குடை மிளகாயை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் செய்து வைத்துக் கொள்ளவும். பின்பு சிக்கனை எடுத்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சிக்கனை வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுட வைக்கவும்.

    தண்ணீர் சிறிது சூடானதும் அதில் கழுவி வைத்திருக்கும் சிக்கனை போட்டு, தேவையான அளவு உப்பு, கால் மேஜைக்கரண்டி மிளகுத் தூள் மற்றும் 2 பல் பூண்டு சேர்த்து ஒரு மூடி போட்டு 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

    4 விசிலுக்கு பின் சிக்கனை குக்கரில் இருந்து எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற விடவும். (சிக்கன் வெந்த தண்ணியை அப்படியே வைத்துக் கொள்ளவும்.)

    சிக்கன் சிறிது ஆறியவுடன் அதை சிறு சிறு துண்டுகளாக ஆக்கி வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.

    எண்ணெய் சுசூடானதும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சிறிதாக நறுக்கிய பூண்டை போட்டு அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மற்றும் சிவப்பு குடை மிளகாய் போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் வேக வைத்து சிறு துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் சிக்கன், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகு தூள் போட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை ஏற்றி வைத்து சிக்கன் வெந்த தண்ணியை சிறிதளவு இதில் ஊற்றி நன்கு கிளறி சுமார் 5 நிமிடம் வரை வேக விடவும்.

    5 நிமிடத்திற்கு பிறகு சிக்கனில் ஊற்றிய தண்ணீர் நன்கு வற்றி இருக்கும். இப்பொழுது இதை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆறவிடவும்.

    அடுத்த ஒரு கிண்ணத்தில் mayonnaise ஐ போட்டு அதில் ஆற வைத்திருக்கும் சிக்கனை மற்றும் ஒரு கை அளவு கொத்தமல்லியை போட்டு நன்கு பிரட்டிக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பிரட்டை எடுத்து அதில் இந்த சாண்ட்விச் fillings ஐ வைத்து அதன் மேலே இன்னொரு பிரட்டை வைக்கவும்.

    பின்பு இதை toast செய்வதற்கு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைகரண்டி அளவு வெண்ணெய்யை ஊற்றி வெண்ணெய் உருகியதும் இந்த சாண்ட்விச்சை அப்படியே எடுத்து அதில் வைக்கவும்.

    இப்பொழுது அதன் மேலே சிறிதளவு வெண்ணெய்யை தடவி சாண்ட்விச்சை திருப்பி போடவும். ஒரு நிமிடத்திற்கு பிறகு எடுத்து அதை கெட்சப் உடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சிக்கன் சாண்ட்விச் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்

  • பன்னீர் சாண்ட்விச் செய்வது எப்படி?

    இன்றைய தலைமுறையினரின் விருப்பமான உணவு சாண்ட்விச். சாண்ட்விச்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பிரபலமானவை சிக்கன் சாண்ட்விச், வெஜிடபிள் சாண்ட்விச், காளான் சாண்ட்விச் மற்றும் பனீர் சாண்ட்விச்.

    இங்கு நாம் பார்ப்பது பன்னீர் சாண்ட்விச். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக் கூடிய உணவு இது. மாலையில் குழந்தைகளுக்கு இதைச் செய்தால், பள்ளியிலிருந்து வரும் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    இதைச் செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. மேலும் பன்னீர் உடலுக்கு மிகவும் நல்லது, பயமின்றி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    400 கிராம் பன்னீர்

    தேவையான அளவு பிரெட்

    1 1/2 பெரிய வெங்காயம்

    2 பச்சை மிளகாய்

    1 குடை மிளகாய்

    5 பல் பூண்டு

    1 துண்டு இஞ்சி

    1/2 எலுமிச்சம் பழம்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    கரம் மசாலா 1 மேஜைக்கரண்டி

    சாட் மசாலா 1 மேஜைக்கரண்டி

    தனியா தூள் 1 மேஜைக்கரண்டி

    சீரக தூள் 1 மேஜைக்கரண்டி

    அம்ச்சூர் தூள் 1 மேஜைக்கரண்டி

    1 கை புதினா

    சிறிதளவு கொத்தமல்லி

    பட்டர் தேவையான அளவு

    சீஸ்தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    செய்முறை

    முதலில் வெங்காயம், பூண்டு, குடை மிளகாய், கொத்தமல்லி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, மற்றும் பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாரை எடுத்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் நாம் நறுக்கி வைத்திருக்கும் அரை வெங்காயம், கொத்தமல்லி, புதினா, ஒரு பச்சை மிளகாய், 2 பல் பூண்டு, இஞ்சி, நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு, மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் 3 பல் பூண்டு மற்றும் ஒரு பச்சை மிளகாயை சேர்த்து அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயை போட்டு நன்கு கிளறி விட்டு அதை சுமார் 6 லிருந்து 8 நிமிடம் வரை வதக்கவும்.

    8 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு உப்பு, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், கரம் மசாலா, அம்ச்சூர் தூள், சாட் மசாலா, தனியா தூள், மற்றும் சீரக தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வேக விடவும்.

    அடுத்து அந்த மசாலாவில் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு அதை நன்கு மசாலாவோடு ஒட்டுமாறு கிண்டி விட்டு சுமார் 5 நிமிடம் வரை வேக விடவும். (பன்னீரை முன்பாகவே நறுக்கி வைத்தால் அதில் தண்ணீர் விடும் அதனால் நாம் செய்யும் போது நறுக்கிப் போட்டால் நல்லது.)

    5 நிமிடத்திற்கு பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை அதன் மேலே தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

    அடுத்து 2 பிரெட் துண்டுகளை எடுத்து அதில் வெண்ணெய்யை தடவி பின்பு நாம் செய்து வைத்திருக்கும் புதினா சட்னியை அதன் மேலே தடவி விடவும்.

    பின்னர் ஒரு பிரெட்டில் பன்னீர் ஸ்டாப்பிங்கை வைத்து அதன் மேலே அவரவர் விருப்பத்திற்கேற்ப சீஸை துருவி போட்டு மற்றொரு பிரட்டை அதன் மேலே வைக்கவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு பட்டரை போட்டு அதை உருக விடவும்.

    பட்டர் உருகியதும் அதை நன்கு pan ல் தடவி விட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் சாண்ட்விச்சை வைத்து அது வெந்து கொண்டிருக்கும் போதே மேலே உள்ள பிரடடில் சிறிதளவு பட்டரை தடவி ஒரு புறம் வெந்ததும் சாண்ட்விச்சை மறு புறம் பக்குவமாக திருப்பி வைக்கவும்.

    பின்பு சிறிது நேரத்திற்குப் பிறகு அதை எடுத்து அப்படியே சுட சுட ஒரு தட்டில் வைத்து கெட்ச்சப்புடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் கிறிஸ்பியான பன்னீர் சாண்ட்விச் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • சிக்கன் ஷவர்மா செய்வது எப்படி?

    ½ கப் ஷவர்மா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இது. குறிப்பாக இளம் தலைமுறையினர் மற்றும் உணவு பிரியர்கள் மத்தியில் தனி ஈர்ப்பை பெற்றுள்ளது. ஷவர்மாவில் பல வகைகள் உள்ளன.

    அவற்றில் சிக்கன் ஷவர்மா, பீஃப் ஷவர்மா, பன்றி இறைச்சி ஷவர்மா மற்றும் வெஜிடபிள் ஷவர்மா ஆகியவை மிகவும் பிரபலமானவை. பொதுவாக மாலையில் விதவிதமான தின்பண்டங்களைச் செய்து சுவைப்போம்.

    இதில் பல தின்பண்டங்கள் நமக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். நமது வழக்கமான மாலை நேர சிற்றுண்டிகளுக்கு இது ஒரு சிறந்த மாற்றாகும். இதை உங்கள் குழந்தைகளுக்கு ஒரு முறை செய்தால், அவர்கள் கண்டிப்பாக மீண்டும் மீண்டும் செய்ய விரும்புவார்கள். ஏனெனில் இது மிகவும் அற்புதமான சுவை.

    தேவையான பொருட்கள்

    500 கிராம் போன்லெஸ் சிக்கன்

    கேரட் ½ கப்

    வெள்ளரிக்காய்

    பச்சை குடை மிளகாய் ½ கப்

    lettuce ½ கப்

    1 பெரிய வெங்காயம்

    3 கப் மைதா மாவு

    1 கப் வினிகர்

    ½ கப் வெஜிடபிள் எண்ணெய்

    1 முட்டை

    25 கிராம் dry yeast

    2 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு

    ¼ மேஜைக்கரண்டி Dijon Mustard

    ½ எலுமிச்சம் பழம்

    3 மேஜைக்கரண்டி தயிர்

    1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்

    2 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்

    வெள்ளை மிளகு தூள் தேவையான அளவு

    கருப்பு மிளகு தூள் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    சர்க்கரை தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    செய்முறை

    முதலில் வெங்காயம், வெள்ளரிக்காய், கேரட், குடை மிளகாய், lettuce, மற்றும் பூண்டை நறுக்கி எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்த பின்பு சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை பொடி பொடியாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் தண்ணீர், ஒரு கப் வினிகர், 2 மேஜைக்கரண்டி அளவு சர்க்கரை, மற்றும் 2 மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை அதை ஒரு கரண்டியின் மூலம் கிண்டி கொண்டே இருக்கவும்.

    சர்க்கரை நன்கு கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு bowl லை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய், மற்றும் குடை மிளகாயை போட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் வினிகர் தண்ணீரை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதை ஊற விடவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும். (தண்ணீர் மிதமான அளவு சூடானதும் அடுப்பை அணைத்து விடவும்.)

    பின்னர் ஒரு bowl லை எடுத்து அதில் dry yeast டை போட்டு அதனுடன் நாம் சுட வைத்த தண்ணீரை ஊற்றி அதை சுமார் 3 லிருந்து 4 நிமிடம் வரை அப்படியே வைக்கவும்.

    அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் மைதா மாவு கொட்டி அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி அளவு உப்பு மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு சர்க்கரையை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் நாம் dry yeast டை போட்டு வைத்திருக்கும் தண்ணீரை அதில் ஊற்றி அதை சுமார் 6 லிருந்து 8 நிமிடம் வரை நன்கு பிசையவும்.

    8 நிமிடத்திற்கு பிறகு அதை எடுத்து ஒரு மேஜையில் வைத்து அதை சுமார் 6 லிருந்து 8 நிமிடம் வரை நன்கு இழுத்து இழுத்து பிசைந்து விடவும்.

    8 நிமிடத்திற்கு பிறகு மாவின் மீது நன்கு எண்ணெய் தடவி பாத்திரத்தை ஒரு துணியின் மூலம் மூடி அதை சுமார் 1 லிருந்து ஒன்றரை மணி நேரம் வரை ஊற விடவும்.

    ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு மாவை எடுத்து அதை மீண்டும் சுமார் ஒரு நிமிடத்திற்கு நன்கு பிசைந்து அதை சுமார் 10 உருண்டைகளாக பிரித்து அதன் மீது மீண்டும் எண்ணெய்யை தடவி அதை சுமார் 30 லிருந்து 45 நிமிடம் வரை ஊற விடவும்.

    45 நிமிடத்திற்கு பிறகு ஒரு சப்பாத்தி கல்லை எடுத்து அதில் சிறிது மைதா மாவை தூவி அதில் நாம் ஊற வைத்திருக்கும் மைதா மாவு உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து அதை சப்பாத்தி கல்லில் வைத்து சப்பாத்திக்கு தேய்பதை விட சிறிது கனமாக தேய்த்து அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அது சுட்டதும் அதில் நாம் தேய்த்து வைத்திருக்கும் ரொட்டியை அதில் போட்டு அது ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி போட்டு அது வெந்ததும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இவ்வாறு மீதமுள்ள ரொட்டிகளையும் சுட்டு எடுத்து தட்டில் தயாராக வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வெஜிடபிள் எண்ணெய்யை ஊற்றி அதனுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதை நன்கு அரைத்து கொள்ளவும்.

    பின்பு அதில் ஒரு மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு, தேவையான அளவு உப்பு, கருப்பு மிளகு தூளை, ஒரு மேஜைக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு, ஒரு மேஜைக்கரண்டி வினிகர், மற்றும் Dijon கடுகை போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதில் ஒரு மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு, ஒரு மேஜைக்கரண்டி வெள்ளை மிளகு தூள், ஒரு மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், தயிர், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி வினிகரை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.

    ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை எடுத்து பக்குவமாக போட்டு அதில் இருக்கும் தண்ணீர் நன்கு வற்றும் வரை அதை வேக விடவும்.

    தண்ணீர் நன்கு வற்றியதும் அடுப்பை அணைத்து விட்டு சிக்கனை எடுத்து கீழே வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் வினிகரில் ஊற வைத்திருக்கும் காய்கறிகளை போட்டு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் lettuce மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் Mayonnaise சை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    அடுத்து நாம் சுட்டு வைத்திருக்கும் பிட்டா பிரட்டை எடுத்து அதில் Mayonnaise சை தடவி பின்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப Mayonnaise கலவை மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் சிக்கனை வைத்து அதை உருட்டி சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் சிக்கன் ஷவர்மா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • ஃப்ரூட் மிக்ஸர் செய்வது எப்படி?

    ஃப்ரூட் மிக்ஸர் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான கோடைகால பானமாகும். எலுமிச்சைச் சாறு, கரும்புச் சாறு, தர்பூசணிச் சாறுக்கு அடுத்தபடியாக கோடைக்காலத்தில் தமிழகத்தில் அதிகம் உட்கொள்ளும் பழச்சாறு ஃப்ரூட் மிக்ஸர்தான். ஃப்ரூட் மிக்ஸர் தமிழகத்தில் கூட்டம் இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

    அதனால்தான் ஃப்ரூட் மிக்ஸர் ஜூஸ் இல்லாத ஜூஸ் கடைகளை தமிழகத்தில் அரிதாகவே காண்கிறோம். பொதுவாக நாம் வெவ்வேறு பழங்களை தனித்தனியாக ஜூஸ் செய்கிறோம்.

    ஆனால் ஃப்ரூட் மிக்சர் ஜூஸ் என்பது பலவிதமான பழங்களை கலந்து நாம் தயாரிக்கும் குளிர்பானம். எனவே அவை உடலுக்கு மிகவும் குளிர்ச்சியாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். கடையில் வாங்கும் பழச்சாறுகளை விட முழு பழச்சாறுகளை வீட்டிலேயே தயாரிப்பது எளிதானது மற்றும் சுகாதாரமானது.

    தேவையான பொருட்கள்

    3 வாழைப்பழம்

    1 சப்போட்டா பழம்

    ½ தர்பூசணி பழம்

    ¼ கப் பப்பாளி பழம்

    ¼ கப் மாதுளை பழம்

    ½ கப் மாம்பழம்

    ½ கப் அண்ணாச்சி பழம்

    10 -12 கிரேப்ஸ்

    4 – 6 பேரீச்சம் பழம்

    தேவையான அளவு சர்க்கரை

    தேவையான அளவு ஐஸ் க்யூப்ஸ்

    ¼ மேஜைக்கரண்டி ஆரஞ்சு சிரப்

    செய்முறை

    முதலில் வாழைப்பழம், அண்ணாச்சி பழம், மாதுளம் பழம், பப்பாளி பழம், மாம்பழம், சப்போட்டா பழம், மற்றும் தர்பூசணி பழத்தை துண்டுகளாக்கி மற்றும் பேரிச்சம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் அளவு சர்க்கரையை போட்டு அதில் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டியின் மூலம் சர்க்கரையை நன்கு கரைத்து விடவும்.

    சர்க்கரை நன்கு கரைந்த பின் அடுப்பை அணைத்து விட்டு அந்த பாத்திரத்தை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் அதை ஆற விடவும்.

    பின்பு சிறிதளவு தண்ணீரை சுட வைத்து அதில் நாம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் பேரிச்சம் பழத்தை போட்டு அதை சுமார் 2 லிருந்து 4 நிமிடம் வரை ஊற விட்டு அதை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    பின்னர் நாம் நறுக்கி வைத்திருக்கும் தர்பூசணி பழத்தை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து கொள்ளவும்.

    பிறகு அதை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து கொள்ளவும். (வேண்டுமென்றால் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.)

    அடுத்து ஒரு bowl ஐ எடுத்து அதில் முதலில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வாழைப்பழத்தை போட்டு அதை நன்கு மசித்து விடவும்.

    பின்பு அதில் நாம் துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் பப்பாளி பழம், மாம்பழம், சப்போட்டா பழம், மற்றும் நாம் சுடு தண்ணீரில் ஊற வைத்து எடுத்து வைத்திருக்கும் பேரீச்சம்பழத்தை போட்டு அதை நன்கு மசித்து விடவும்.

    பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் அண்ணாச்சி பழம், மாதுளம் பழம், மற்றும் திராட்சையை போட்டு அதை லேசாக மசித்து விடவும்.

    இப்பொழுது அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் சர்க்கரை சிரப்பை அவரவர் விருப்பத்திற்கேற்ப சேர்த்து அதனுடன் ஆரஞ்சு சிரப்பையும் சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். (கலர் சிரப்பை விரும்பாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.)

    அடுத்து இதில் நாம் செய்து வைத்திருக்கும் தர்பூசணி பழச்சாறை ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (தர்பூசணி பழச்சாறை விரும்பாதவர்கள் வெறும் தண்ணியை சேர்த்து கொள்ளலாம்.)

    பின்பு ஒரு கிளாஸ் டம்ளரை எடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஐஸ் க்யூப்ஸை போட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் ஃப்ரூட் மிக்ஸர் ஊற்றி அதை சில்லென்று பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் அருமையான மற்றும் உடம்பிற்கு மிகவும் சத்தான ஃப்ரூட் மிக்ஸர் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.

  • சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

    சிக்கன் பிரியாணியை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவை இல்லாத கட்சிகள் இல்லை. சாப்பாட்டு பிரியர்கள் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரும் அதன் பெயரை சொன்னாலே எச்சில் ஊறுவார்கள்.

    இந்திய உணவு வகைகளில் பிரியாணி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பிரியாணியில் பல வகைகள் உண்டு. பிரபலமான பிரியாணி வகைகள் ஹைதராபாத் பிரியாணி, திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி, ராவுத்தர் பிரியாணி, தலச்சேரி பிரியாணி, கோழிக்கோடு பிரியாணி, வட இந்தியாவில் டெல்லி பிரியாணி, கொல்கத்தா பிரியாணி மற்றும் காஷ்மீரில் தெஹாரி பிரியாணி.

    பிரியாணியில் பல வகைகள் இருந்தாலும், ஹைதராபாத் பிரியாணிக்கு நிகரானதல்ல, பிரியாணியின் ராஜா. இந்த சுவையான பிரியாணி எங்கிருந்து வந்தது என்பதற்கான சரியான வரலாற்று பதிவுகள் இல்லை.

    அவர்கள் ஈரானில் பெர்சியாவில் தோன்றி முகலாய படையெடுப்பின் போது இந்தியாவிற்கு பரவியதாக ஒரு கோட்பாடு கூறுகிறது, மற்றொரு கோட்பாடு முகலாய படையெடுப்பிற்கு முன்பு இந்தியாவில் தோன்றியதாக கூறுகிறது.

    இந்தியாவிலேயே இவை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு முறைகளைப் பின்பற்றிச் செய்யப்படுகின்றன. பிரியாணியில் பல வகைகள் இருப்பதால், ஒவ்வொன்றுக்கும் அதன் சொந்த சுவாரசியமான வரலாறு உண்டு. இப்போது சிக்கன் பிரியாணி தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் செய்முறையை கீழே பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    3/4 கிலோ பாசுமதி அரிசி

    1 கிலோ சிக்கன்

    5 பெரிய வெங்காயம்

    4 தக்காளி

    5 பச்சை மிளகாய்

    1 கப் தயிர்

    2 கையளவு புதினா

    2 கையளவு கொத்தமல்லி

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    நெய் தேவையான அளவு

    3 பிரியாணி இலை

    3 ஸ்டார் பூ

    3 பட்டை

    3 கிராம்பு

    3 ஏலக்காய்

    1 1/2 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்

    1 1/2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்

    1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    4 to 5 முந்திரி

    1/2 லெமன்

    செய்முறை

    முதலில் பாசுமதி அரிசியை எடுத்து அதை நன்றாக கழுவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

    பின்பு முந்திரியை எடுத்து அதையும் பத்து நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, பாத்திரம் சூடானதும் அதில் மூன்று மேஜைக்கரண்டி நெய் மற்றும் நான்கு மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.

    நெய் சூடானதும் அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு ஏலக்காய், ஸ்டார் பூ சேர்த்து வதக்கவும். பட்டை, இலை சிறிது சிவந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்க வேண்டும்.

    தக்காளி நன்றாக வதங்கியவுடன் அதில் 3 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்ச வாசனை போகும் அளவிற்கு வதக்கி கொள்ளவும்.

    பின்பு அதில் ஒரு கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து இரண்டு நிமிடம் வரை வதக்கவும்.

    அதற்குள் சிக்கனை நன்றாக கழுவி அதில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கிளறவும்.

    சிக்கன் சிறிது வதங்கியவுடன் அதில் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தயிரை சேர்த்து நன்கு வதக்கவும்.

    இரண்டு நிமிடங்கள் வரை சிக்கனை பாத்திரத்தின் மேல் மூடி போட்டு வேக வைக்கவும்.

    அதற்குள் ஊற வைத்திருக்கும் முந்திரியை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.

    இரண்டு நிமிடங்களுக்கு பிறகு பாத்திரத்தை திறந்து ஒரு கிளறு கிளறி அதில் அரைத்த முந்திரி பேஸ்ட்டை சேர்த்து கலக்கவும்.

    பிறகு அதில் 4 கப் தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை மூடி பத்து நிமிடம் வேக விடவும்.

    பத்து நிமிடம் கழித்து பாத்திரத்தை திறந்து அதில் ஊற வைத்துள்ள அரிசியை எடுத்து போடவும்.

    அதில் அரிசிக்கு தேவையான அளவு உப்பை சேர்த்து பாதி மூடி லெமன் ஐ பிழியவும்.

    பின்பு அதை பக்குவமாக கிளறி 10 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும். (கிளறும் போது மெதுவாக கிளறவும் வேகமாக கிளறினால் அரிசி உடைந்துவிடும்.)

    பத்து நிமிடங்களுக்குப் பிறகு மூடியைத் திறந்து அதில் ஒரு மேஜைக் கரண்டி நெய்யை ஊற்றி பொறுமையாக கிளறவும். (அதில் தண்ணீர் இருந்தால் அடுப்பை நன்கு குறைத்து வைத்து தண்ணீர் வற்றும் வரை வைக்கவும்.

    இப்பொழுது அனைவருக்கும் பிடித்த சூடான சுவையான பிரியாணி உண்ண தயார்.

    இதை தயிர் வெங்காயத்துடன் சேர்த்து உண்டு மகிழுங்கள்.

  • மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

    பிரியாணி அனைவருக்கும் பிடித்த உணவு. நறுமணத்திற்காகவே பலர் கூடுதலாக ஒரு ஸ்பூன் பிரியாணி சாப்பிடுகிறார்கள். அவ்வளவு சுவையான பிரியாணி.

    பிரியாணியில் பல வகைகள் உண்டு. சிக்கன் பிரியாணி, காளான் பிரியாணி, முட்டை பிரியாணி, மீன் பிரியாணி, இறால் பிரியாணி என பல வகைகள் உள்ளன. பிரியாணியில் பல வகைகள் இருந்தாலும், மட்டன் பிரியாணியின் சுவைக்கு இணையான பிரியாணி வேறில்லை.

    மதிய உணவிற்கு சுவையான மட்டன் பிரியாணி செய்வது எப்படி? இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

    பிரியாணி மசாலா பொருட்கள்

    நட்சத்திர சோம்பு (அன்னாசி பூ) – ஒன்று

    ஜாதிபத்திரி – 1

    இலவங்கப்பட்டை – 1

    ஏலக்காய் – 3

    கிராம்பு – 4

    சீரகம் – 1 டீஸ்பூன்

    சோம்பு – 1/2 டீஸ்பூன்

    மிளகு – 1/2 டீஸ்பூன்

    மல்லி – 2 ஸ்பூன்

    பிரியாணி இலை – 1

    தேவையான பொருட்கள்

    எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

    நெய் – 2 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் – 3

    கிராம்பு – 3

    பிரியாணி இலை – 1

    பெரிய வெங்காயம் – 2 (நைசாக நாறுகிறது)

    உப்பு – தேவையான அளவு

    பச்சை மிளகாய் – 5 (நேர் வாக்கில் கீறியது)

    இஞ்சி பூண்டி விழுது – 2 ஸ்பூன்

    மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் – 1 அல்லது 2 ஸ்பூன்

    மல்லி இலை – ஒரு கைப்பிடியளவு

    புதினா இலை – ஒரு கைப்பிடியளவு

    தக்காளி – 2 (பொடிதாக நறுக்கின)

    கட்டி தயிர் – 1/2 கப்

    பாஸ்மதி அரிசி – 500 கிராம்

    ஆட்டுக்கறி – 500 கிராம்

    செய்முறை

    கேஸ் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் பிரியாணி மசாலா செய்வதற்கு மேல் முதலாவதாக கூறப்பட்டுள்ள பொருட்களான நட்சத்திர சோம்பு, ஜாதிபத்திரி, இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம், சோம்பு, மிளகு, மல்லி மற்றும் பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    பின் மிக்ஸியில் இந்த பொருட்களை நைசாக அரைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் பிரியாணி மசாலா தயார்.

    இப்பொழுது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அவற்றில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் சூடேறியதும் ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமாக வந்த பிறகு இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 5 பச்சமிளகாய், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், அரைத்த பிரியாணி மசாலா 1 1/2 ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

    மசாலா நன்கு வதங்கிய பின் ஒரு கையளவு மல்லி இலை, ஒரு கையளவு புதினா ஆகியவற்றை சேர்த்து வதக்குங்கள்.

    பிறகு பொடிதாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும், தக்காளி நன்கு வதங்கியதும், 1/2 கப் தயிர் சேர்த்து கிளறிவிடுங்கள்.

    அடுத்ததாக 500 கிராம் ஆட்டுக்கறி சேர்த்து வதக்க வேண்டும். பின் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 4 விசில் வரும் வரைக்கும் வேக வைக்கவேண்டும்.

    நான்கு விசில் வந்த பிறகு பிரஷர் அடங்கியது குக்கரை தின்றது 500 கிராம் பாஸ்மதி அரிசி, ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பி தேவையான அளவு சேர்த்து கிளறி விடுங்கள். பின் குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரைக்கு வேக வைக்க வேண்டும். ஒரு விசில் வந்த பிறகு அடுப்பை ஆப் செய்து விடுங்கள்.

    பின் குக்கரை 15 நிமிடங்கள் கழித்து குக்கரை திறக்க வேண்டும். அவ்வளவு தாங்க சுவையான மற்றும் உதிரி உதிரியான மட்டன் பிரியாணி தயார். உங்கள் வீட்டில் ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.