Blog

  • பொரிக்கடலை சட்னியை இட்லிக்கு ஒரு தடவை முயற்சித்துப் பாருங்கள்!!

    பொரிக்கடலை சட்னியை இட்லிக்கு ஒரு தடவை முயற்சித்துப் பாருங்கள்!!

    இட்லி தோசையில் சட்னி, சாம்பார், பொடி என ஏதாவது இருந்தால் மட்டுமே சாப்பிட முடியும். குறிப்பாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி போன்ற சட்னிகளை தினமும் சாப்பிட்டு சலிப்படைந்தவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

    தேவையானவை :

    தேங்காய்       –     1

    பொரிகடலை    –     50 கிராம்

    பச்சை மிளகாய்  –     5

    செய்முறை :

    தேவையான உப்பு சேர்த்து உரலில் போட்டு கரகரப்பாய் ஆட்டி தேவைக்கு ஏற்ப கரைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம்பருப்புப் போட்டு சிவந்ததும், கருவேப்பிலை போட்டு பொரித்து சட்னியில் ஊற்றவும்.

    பிரியப்பட்டால் கருவேப்பிலையுடன் வடகத்தூள் அல்லது 2 வற்றல் கிள்ளிப்போட்டுப் பொரித்து ஊற்றாலாம்.

    சட்னியை உரலிலிருந்து எடுக்கும் முன் புளி சிறிதளவு, வெங்காயம் 3, பூண்டு 2 பல் சேர்த்து ஆட்டி எடுக்கலாம்.

  • ஆரோக்கியம் மிகுந்த கேழ்வரகு கூழ் செய்வது எப்படி?

    நாம் அனைவரும் வெயிலில் குளிர்ச்சியாக சாப்பிட விரும்புகிறோம். இதற்காக கடைக்கு சென்று குளிர்பானங்கள் வாங்குவோம். மாறாக, உடலுக்கு நன்மை தரும் கூல் கேழ்வரகு பச்சரிசி செய்து குடித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

    தேவையானவை:

    கேழ்வரகு             – கால் கிலோ,

    கொள்ளு, கோதுமை, சோளம், சிவப்பு அரிசி   – தலா 25 கிராம்,

    பொட்டுக்கடலை, கம்பு    – தலா 100 கிராம்.

    முந்திரி, பதாம்           – தலா 10,

    ஏலக்காய்    – 5,

    பார்லி     – 4 டேபிள்ஸ்பூன்,

    நெய், சர்க்கரை    – தலா ஒரு டீஸ்பூன்

    செய்முறை:

    கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, கம்பு ஆகியவற்றை ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, ஒரு துணியில் போட்டு முடிந்து வைத்தால் காலையில் முளைவிட்டிருக்கும்.

    வெறும் வாணலியில் பொட்டுக்கடலை, சோளம், பாதாம், முந்திரி, சிவப்பு அரிசி, பார்லி, ஏலக்காய் எல்லாவற்றையும் தனித்தனியாக நன்கு வறுக்கவும்.

    இவற்றுடன் முளைகட்டிய தானியங்களையும் சேர்த்து அரவை மெஷினில் நைஸாக அரைத்துக் வைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் சூடுபடுத்தவும். அதில் 2 டேபிள்ஸ்பூன் மாவு போட்டு நன்கு கிளறவும். சில நிமிடங்களில் இது கெட்டியாக வெந்துவிடும். இதனுடன் நெய், சர்க்கரை கலந்து கொடுக்கவும்.

    குறிப்பு:

    அனைத்து தானியங்களும் கலந்திருப்பதால் குழந்தை ஆரோக்கியமாக வளரத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. குழந்தைக்கு எளிதில் ஜீரணம் ஆகும். 4 மாதம் முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்.

  • இனிப்பு ராகி தோசை செய்வது எப்படி!!

    நமது ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவைப் பொறுத்தது. ஆம்! இந்த உணவு ஆரோக்கியமான உணவு.

    தேவையானவை:

    கேழ்வரகு மாவு – 200 கிராம்,

    வெல்லம் – 100 கிராம்,

    ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,

    அரிசி மாவு – 4 டீஸ்பூன்,

    நெய் – ஒரு கப்

    செய்முறை:

    வெல்லத்தைப் சிறிய துண்டுளாக உடைத்து கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்து கொள்ளுங்கள், வெல்லத்தில் மண் இருக்கலாம் அதனால் நன்கு வடிகட்டிக்கொள்ளவும்.

    வெல்ல தண்ணீருடன் கேழ்வரகு மாவுடன் சேர்க்கவும். இதனுடன் அரிசி மாவு, ஏலப்பொடி சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

    வெல்ல தண்ணீருடன் மாவு சேர்வதால் கட்டி இல்லாமல் கலந்துகொள்ளவும். அதன் பின் தோசைக்கல்லில் நெய் விட்டு, இந்த மாவை தோசையாக வார்த்து எடுக்கவும்.

    குறிப்பு:

    கேழ்வரகில் கார்போஹைட்ரேட்டும், வெல்லத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளன. இவை இரண்டுமே உடல் வளர்ச்சிக்குத் தேவையானவை. தொட்டுச் சாப்பிட ஏதும் தேவை இல்லை.

  • தித்திக்கும் இனிப்பான உளுந்து குலோப் ஜாமூன் செய்வது எப்படி?

    இனிப்பு இல்லாமல் எந்தவொரு விசேஷமும் முழுமையடையாது. இந்திய ரெசிபிகளில் பெரும்பாலும் இனிப்புகள் மற்றும் கேக்குகள் கண்டிப்பாக இருக்கும். அதுவும் அனைவருக்கும் மிகவும் பிடித்த இனிப்பு குலாப் ஜாமூன்.

    தேவையான பொருள்கள் :

    உளுந்தம் பருப்பு -250 மி.லி

    பச்சரிசி -ஒரு பிடியளவு

    சீனி -500 மி.லி

    தண்ணீர் -250 மி.லி

    ரிபைண்ட் ஆயில் -பொரித்து எடுப்பதற்கு

    செய்முறை :

    உளுந்தம் பருப்பை பச்சரிசியுடன் ஊற வைக்கவும். உளுந்தம் பருப்பை வடைக்கு ஆட்டுவது போல் நன்கு பந்து மாதிரி வரும் வரை சிறிது தண்ணீர் தொட்டு தொட்டு ஆட்டவும். மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளவும்.

    உளுந்து குலோப் ஜாமூன் எப்படி செய்வது?

    வாணலியில் எண்ணெய் விட்டு ஆட்டி வைத்த மாவை குலோப் ஜாமூன் வடிவத்தில் போட்டு எடுத்து சீனிப்பாகில் போடவும். சீனிப்பாகில் குங்குமப்பூ ஒரு சிட்டிகை போடவும்.

    சீனிப்பாகு காய்ச்சும் பக்குவம்

    சீனியை தண்ணீருடன் கலந்து சற்று பிசுக் பக்குவம் வரும் வரை காய்ச்சவும். கலர் வேண்டுமாயின் சீனிப்பாகில் கலந்து கொள்ளலாம். சீனிப்பாகில் மிதக்கும் உளுந்து குலோப் ஜாமுனை அப்படியே கிண்ணங்களில் பரிமாறலாம்.

  • செட்டிநாடு ரெசிபியானா Stuffed Crab Delight எப்படி செய்வது?

    நண்டு என்றாலே அது செட்டிநாடு வகையில் செய்வதுதான் அனைவருக்கும் பிடிக்கும். அந்த வகையில் நாம் இன்று Stuffed Crab Delight செய்வது எப்படி என்று பார்ப்போம்.

    தேவையான பொருள்கள் :

    நண்டு -6

    வெங்காயம் வெட்டியது -3 மேஜைக்கரண்டி

    சீரகம் -1 தேக்கரண்டி

    இஞ்சி , பூண்டு -1/2 தேக்கரண்டி மசித்தது

    முருங்கையிலை –  சிறிது

    செய்முறை :

    வெந்நீரில் நண்டை சிறிது நேரம் போட்டு வைக்கவும். நண்டை எடுத்து கால் மற்றும் கொடுக்குகளை ஒடித்து தனியே உடம்பு பகுதி கால் கொடுக்குகளின் உள்ளே உள்ள கறியை தனியே எடுத்து உதிர்த்து கொள்ளவும்.

    நண்டின் ஓட்டில் உடம்பு பகுதியை தனியே எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

    செட்டிநாடு ரெசிபியானா Stuffed Crab Delight எப்படி செய்வது?

    உதிர்த்து வைத்திருக்கும் நண்டை தனியே உப்பு சேர்த்து புரட்டவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், வெங்காயம், முருங்கையிலை, மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    பின் மசித்த இஞ்சி, பூண்டு உதிர்த்த நண்டையும் சேர்க்கவும். தண்ணீர் சத்து வற்றும் வரை அடுப்பில் வைத்திருந்து எடுக்கவும். இந்த நண்டு புட்டை எடுத்து நண்டு ஓட்டில் அடைக்கவும்.

    நண்டு ஓட்டின் பின் பகுதியை முட்டையில் தேய்த்து ரஸ்க்தூளில் புரட்டி எடுத்து பெரிய தட்டில் எடுத்து வைக்கவும்.

    காய்கறிகளை அழகாக அடுக்கி நடுவே நண்டை வைத்து பரிமாறவும்.

  • சுவையான சேலத்து மாம்பழத்தை வைத்து மாம்பழ பாயசம் செய்வது எப்படி?

    பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் மாம்பழத்தை மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள். மாம்பழம் சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து செரிமான மண்டலம் மற்றும் குடல்களின் ஆரோக்கியம் மேம்படும்.

    மாம்பழத்தை அடுப்பில் வைக்காமல் சுவையான மாம்பழ பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போமா?

    தேவையான பொருட்கள்

    மாம்பழம்-3

    தேங்காய் பால்-2கப்

    ஏலக்காய் தூள்-1 டீஸ்பூன்

    குங்கும பூ- சிறிதளவு

    வெல்லம்-1கப்

    பாதம்-10

    உப்பு-சிறிதளவு

    செய்முறை

    துருவிய மாம்பழத்தை எடுத்து கைகளில் நன்றாக மசித்து கொட்டையை தனியாக வைக்கவும்.

    பின்னர் துருவிய மற்றும் வடிகட்டிய தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.

    அடுத்து ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்த்து கலக்கவும்.

    மாம்பழ பாயசம் செய்வது எப்படி?

    அதன் பிறகு வெல்லத்தை இடித்து அதனுடன் சேர்க்க வேண்டும்.

    வெல்லம் கரைந்ததும் சிறிது உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பாதாம் சேர்க்கவும்.

    பிறகு மாம்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் பரிமாறவும். சுவையான மாங்காய் பாயசம் தயார்.

  • குழந்தைகளுக்கான மாலை நேர ஸ்னாக்ஸ் ரவை பணியாரம் செய்வது எப்படி!!

    குழந்தைகளுக்கான மாலை நேர ஸ்னாக்ஸ் ரவை பணியாரம் செய்வது எப்படி!!

    ரவை பணியாரம் குழந்தைகளுக்கு மாலையில் கொடுக்கக்கூடிய ஒரு அவசர சிற்றுண்டி. இதைச் செய்ய அதிக நேரம் எடுக்காது. உடனே ரவை பணியாரம் செய்து அசத்துங்க!!

    தேவையான பொருள்கள் :

    ரவை – 1 கப்

    மைதா – 1 கப்

    சீனி – 1 கப்

    தேங்க்காய் – 1/2 மூடி

    ஏலக்காய் – 5

    முந்திரிபருப்பு – 1மேஜைக்கரண்டி

    செய்முறை :

    ரவை  மைதா இரண்டையும் தேங்காய்பால் விட்டு கட்டியாக கரைத்து, ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    ஊறி  பின், பிறகு மிக்ஸியில் அரைத்து, சீனியை சேர்த்து இட்லி மாவு போல் கலந்து கொள்ளவும்.

    ஏலப்பொடி, சிறியதாக வெட்டிய முந்திரி பருப்பு சேர்த்து கொள்ளவும். சிறு தீயில் வாணலியில் எண்ணெய் காய வைத்து ஒரு உருண்டை கரண்டியினால் மாவை ஊற்ற வேண்டும்.

    பணியாரம் எழும்பியவுடன் திருப்பி போட்டு வெந்தது பார்த்து, ஓரம் சிவந்து வந்தவுடன் எடுத்தால் ரவை பணியாரம் ரெடி.

    குறிப்பு:
    தேங்காய்பாலுக்கு பதில் பூவும் துருவி போடலாம்.

  • அடை தோசை செய்வது எப்படி?

    அடை தோசை செய்வது எப்படி?

    பொதுவாக தோசை அனைவருக்கும் பிடிக்கும். அடை தோசை என்று சொல்லவே வேண்டாம். அரிசி, பருப்பு, மிளகாய் சேர்த்து தோசை மாவு போல் ஊற்றினால், எவ்வளவு கொடுத்தாலும் போதாது. இவ்வளவு அற்புதமான சுவையுடன் கூடிய இந்த அடை தோசையை அனைவரும் செய்யும் வகையில் மிக எளிதான முறையில் செய்வது எப்படி?

    தேவையான பொருள்கள் :

    இட்லி அரிசி – ஒரு டம்ளர்

    பச்சரிசி – முக்கால் டம்ளர்

    துவரம் பருப்பு – முக்கால் டம்ளர்

    உளுந்து – முக்கால் டம்ளர்

    கடலைப்பருப்பு – முக்கால் டம்ளர்

    வெந்தயம் – ஒரு டேபிள்ஸ்பூன்

    சீரகம் – ஒரு ஸ்பூன்

    வரமிளகாய் – 6

    கட்டி பெருங்காயம் – ஒரு சிறு துண்டு

    கறிவேப்பிலை – இரண்டு கொத்து

    சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி

    நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு

    உப்பு – தேவையான அளவு.

    செய்முறை :

    அடை தோசை செய்வது எப்படி:

    அடை தோசை செய்ய முதலில் பருப்பு மற்றும் அரிசி வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டபடி எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    தானியங்கள் எல்லாம் சேர்த்து உள்ளதால் அடை தோசை ஆரோக்கியம் மிகுந்தது எனவே இதனை வாரம் ஒரு முறை ஆவது செய்து சாப்பிட்டால் நலம் பெருகும்.

    ஒரு பெரிய பாத்திரத்தை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். 200 கிராம் அளவிற்கு ஒரு டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா அளவுகளும் இதே டம்ளரை வைத்து அளந்து கொள்ளுங்கள்.

    முதலில் ஒரு டம்ளர் முழுவதுமாக இட்லி அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். மீதி எல்லா பொருட்களையும் முக்கால் டம்ளர் அளவிற்கு அளந்து எடுக்க வேண்டும்.

    பச்சரிசி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை அளந்து எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் இவற்றை நன்கு ஓரிரு முறை அலசி நல்ல தண்ணீரை ஊற்றி குறைந்தது 2 மணி நேரம் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

    2 மணி நேரம் கழித்து கிரைண்டரை கழுவி அதில் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு துண்டு கட்டி பெருங்காயம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். சில பருப்பு வகைகள் வாய்வு என்பதால் சீரகம் மற்றும் கட்டிப் பெருங்காயம் சேர்த்தால் வாய்வை எடுத்துவிடும்.

    இவற்றுடன் கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து ஊற வைத்துள்ள அரிசி, பருப்பு வகைகளை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கொரகொரவென மாவை அரைக்க வேண்டும்.

    அதிகபட்சம் 20 நிமிடத்தில் நன்கு மாவு கொரகொரவென்று அரைந்துவிடும். கடைசியாக பொடிபொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி அளவிற்கு சேர்த்து அடை மாவு பதத்திற்கு மாவு நன்கு கெட்டியாக அரைந்து வந்ததும் அதனை எடுத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

    கிரைண்டர் கழுவிய தண்ணீரையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவிற்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை அப்படியே விட்டு விட வேண்டும்.

    ஒரு மணி நேரத்தில் மாவு நன்கு புளித்துவிடும். மாவு லேசாக புளித்ததும் கெட்டியாக இருந்தால் தேவையான அளவிற்கு கிரைண்டர் கழுவிய தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்.

    நறுக்கிய கொத்தமல்லி தழையை சேர்த்து கலந்து தோசைக் கல்லை சுட வைத்து அடை போல தோசை வார்த்தால் அடை தோசை ரெடி.

    மல்லித் தழையுடன் முருங்கைக் கீரையை கொஞ்சம் உருவி அலசி சேர்த்துக் கொள்ளலாம் இன்னும் ஆரோக்கியமும், சுவையும் அதிகரிக்கும்.

    ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த அடை தோசையை நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து அசத்துங்கள்.

    இதையும் செய்யலாமே!: மசாலா தோசை செய்வது எப்படி?

  • ஆரோக்கியமான, சுவையான, காரசாரமான அடை தோசை செய்வது எப்படி?

    ஆரோக்கியமான, சுவையான, காரசாரமான அடை தோசை செய்வது எப்படி?

    இதையும் செய்யலாமே!: ரசகுல்லா செய்வது எப்படி?

  • நீங்கள் விரும்பி சாப்பிடும் பான் கேக் செய்வது எப்படி?

    நீங்கள் விரும்பி சாப்பிடும் பான் கேக் செய்வது எப்படி?

    பான் கேக் எப்படி செய்வது: இந்த பான் கேக்குகளை வெற்று அல்லது வெண்ணெய் தூவப்பட்ட சர்க்கரையுடன் அல்லது கிரீம் அல்லது சீஸ் மற்றும் பழத்துடன் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    மைதா மாவு – 2 கப்

    முட்டை – 2

    பால் – 1 1/2 கப்

    பேக்கிங் பவுடர் – அரை டீ ஸ்பூன்

    வெண்ணெய் – 2 ஸ்பூன்

    சர்க்கரை – 5 ஸ்பூன்

    செய்முறை:

    பான் கேக் செய்வது எப்படி:

    முதலில் முட்டைகளை உடைத்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் மைதா, பேக்கிங் பவுடர், வெண்ணெய், சர்க்கரை சேர்க்க வேண்டும்.

    பின்னர் உருகிய வெண்ணையையும், பாலையும் அவற்றுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். மாவில் சின்ன சின்ன கட்டி துண்டுகள் இருந்தால் பேன் கேக் உப்பி வரும்.

    அதனால் சின்ன கட்டிகள் இருந்தால் அவை கரையுமளவுக்கு கலக்க வேண்டாம்.

    ஒரு நான்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து நன்கு சூடேற்ற வேண்டும். பான்கேக் ஒட்டாமல் இருக்க எண்ணெய் அல்லது வெண்ணையை வாணலியில் தடவ வேண்டும்.

    எண்ணெயில் சன் ப்ளவர் ஆயில் பயன்படுத்தினால் ஒட்டாமல் இருப்பதற்கு சரியாக இருக்கும்.

    பிறகு 3 டேபிள் ஸ்பூன் அல்லது வாணலி அளவை பொறுத்து மாவை ஊற்றி வட்டமாக தேய்க்க வேண்டும்.

    குறைந்த அளவு மாவை ஊற்றுவது நல்லது. ஏனென்றால் பின்னர் உப்பி பெரிதாகும்.

    பேன்கேக்கை 2 நிமிடங்கள் அல்லது அதன் ஓரங்கள் பொன்னிறமாக வரும் வரை வேக வைக்கவும்.

    பின்னர் திருப்பி போட வேண்டும். இப்படியாக ஒவ்வொரு பேன் கேக்காக செய்ய வேண்டும்.

    பேன் கேக்குகள் செய்த பின் அவற்றின் மீது பழங்கள், சாக்லேட் சிப்ஸ், ஜாம் அல்லது சிரப் என உங்களுக்கு விருப்பமான ஐட்டங்களை தூவி சாப்பிடலாம்.

    விருந்தினர்களுக்கும் கொடுக்கலாம்.