Tag: Uplukandam

  • மட்டன் உப்பு கண்டம் செய்வது எப்படி?

    மட்டன் உப்புகண்டத்தை பொதுவாக நன்றாக வெயில் அடிக்கும் கோடையில் செய்து வைத்தால் தான் நன்கு காய்ந்து இருக்கும். நன்கு காய்ந்தால் தான் மழைகாலத்தில் பொரித்தோ அல்லது உப்புகண்டம் குழம்பு வைத்தோ சாப்பிடலாம்.

    ஆட்டு இறைச்சி சாப்பிடுவதற்கு சுவையான மற்றும் சத்தான உணவு. உப்பு சேர்த்து நன்கு உலர்த்தி உப்புகண்டமாக சேர்த்து சாப்பிட கூடுதல் சுவை கிடைக்கும். இன்றும் தென் மாவட்ட கிராமங்களில் செய்து சாப்பிடுகிறார்கள்.

    மட்டன் உப்புகண்டம் பொதுவாக வெப்பமான கோடை காலத்தில் தயாரிக்கப்படுகிறது மற்றும் மழைக்காலத்தில் வறுத்த அல்லது உப்புகண்டம் குழம்புடன் உண்ணப்படுகிறது. கிராமத்தில் உள்ள விவசாயிகள் தினமும் உப்புகண்டத்தை ஊறுகாயாக சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    ஆட்டு இறைச்சி – 1 கிலோ

    பூண்டு – 20 பல்,

    காய்ந்த மிளகாய் – 15

    மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்

    உப்பு – தேவையான அளவு

    செய்முறை

    மட்டன் உப்பு கண்டம் செய்வது எப்படி:

    ஆட்டு இறைச்சியை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

    பூண்டு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். இந்த விழுதினை நறுக்கி வைத்த கறியில் சேர்த்து நன்கு கலக்கவும்.

    மசாலா நன்றாக பிடிக்க வேண்டும். இதனை ஒரு நூலில் கோர்த்து வெயிலில் காய வைக்கவும்.

    ஈரம் வற்றும் வரை இரண்டு மூன்று நாட்கள் வரை காய வைக்கவும். நன்றாக காய்ந்த உடன் காற்று புகாதா டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

    சில மாதம் வரை கெட்டுப்போகாது. தேவைப்படும் போது உப்புக்கண்டத்தை எடுத்து சிறு சிறு துண்டுகளாக அம்மிக்கல்லில் தட்டி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.

    சுவையான ருசியான உப்புக்கண்டம் ரெடி.