Advertisement
Gravy Veg

மருத்துவ குணம் கொண்ட மிளகு ரசம் செய்வது எப்படி?

Advertisement

ரசம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் மருத்துவ குணம் கொண்ட உணவு. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இவை எவ்வளவு பிரபலமாக உள்ளனவோ, ரசம் இல்லாத எந்தக் விருந்தும் முழுமையடையாது. ரசங்களில் பல வகைகள் உள்ளன.

மிளகு ரசம், தக்காளி ரசம், பூண்டு ரசம், முருங்கை ரசம், இஞ்சி ரசம், புதினா ரசம், பன்னீர் ரசம் போன்றவை மிகவும் பிரபலம். இன்று இங்கு காண இருப்பது அதிக மருத்துவ குணம் கொண்ட மிளகு ரசம்.

மிளகு ரசம் அஜீரணம் மற்றும் சளிக்கு மிகவும் நல்ல உணவு. அதனால்தான் நம் முன்னோர்கள் ஆடம்பரமான விருந்துக்குப் பிறகு அதை கடைசி உணவாக வைத்திருந்தார்கள்.

Advertisement

மேலும் மருத்துவர்கள் பொதுவாக ஜலதோஷத்திற்கு பெப்பர்மின்ட் சாற்றை பரிந்துரைக்கின்றனர். அவை எடை இழப்புக்கு மிகவும் நல்லது என்றும் கூறப்படுகிறது. எனவே உடல் எடையை குறைக்கும் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் தினமும் ஒரு டம்ளர் மிளகு ஜூஸ் அருந்தலாம்.

தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் சைஸ் புளி

1 தக்காளி

2 பூண்டு பல்

2 காஞ்ச மிளகாய்

10 to 12 வெந்தயம்

Advertisement

2 மேஜைக்கரண்டி மிளகு

1 மேஜைக்கரண்டி சீரகம்

¼ மேஜைக்கரண்டி கடுகு

¼ மேஜைக்கரண்டி பெருங்காய தூள்

¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

சிறிதளவு கொத்தமல்லி

சிறிதளவு கறிவேப்பிலை

செய்முறை:

முதலில் பெரிய நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து பின்பு கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு மற்றும் சீரகத்தை போட்டு அதை நன்கு அரைத்து கொள்ளவும். (இதை மிக்ஸி ஜார்க்கு பதிலாக அம்மிக்கல்லிலும் தூள் செய்து கொள்ளலாம்.)

பின்பு 2 பல் பூண்டை அம்மிக்கல்லில் தட்டி மிளகு மற்றும் சீரக தூளுடன் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் தக்காளியை போட்டு அதை நம் கைகளின் மூலம் பக்குவமாக பிசைந்து வைத்து கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

எண்ணெய் சூடான பின் அதில் கடுகைப் போட்டு கடுகு வெடித்தவுடன் அதில் வெந்தயம் மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு அதை வதக்கவும்.

பிறகு அதில் பெருங்காய தூள், மஞ்சள் தூள், மற்றும் கருவேப்பிலையை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

அடுத்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மிளகு மற்றும் சீரக தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

பின்பு அதில் நாம் பிசைந்து வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

இப்பொழுது நாம் கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீரை அதில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும்.

ரசம் கொதிக்க ஆரம்பித்த உடனே அடுப்பை அணைத்து விட்டு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி சுட சுட சாதத்தில் ஊற்றி பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சூடான மற்றும் உடம்பிற்கு மிகவும் சத்தான மிளகு ரசம் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.

Advertisement
Written by Arumugam K

உங்கள் கருத்தைப் பகிருங்கள்

Your email address will not be published. Required fields are marked *