கத்தரிக்காய் கடையல் இட்லிக்கு ஏற்ற குழம்பு. காலையில் எந்த பதற்றமும் இல்லாமல் நிதானமாக சமைக்கலாம்.
தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் – 5
சிறு பருப்பு – 1/4 கப்
சின்னவெங்காயம் – 6
தக்காளி – 1
பூண்டு – 3
மஞ்சள் பொடி – 1/4 tsp
பச்சை மிளகாய் – 5
புளி சிறிய – நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் – 1 tsp
வெங்காயம் – 1
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
புளியை ஊற வைத்துக்கொள்ளுங்கள். சிறு பருப்பை 10 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள். அதற்குள் காய்கறிகளை நறுக்கிக் கொள்ளுங்கள்.
பின் குக்கரில் பருப்பை கழுவிக் கொட்டுங்கள். அடுத்ததாக கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டு என அனைத்தையும் ஒன்றாகக் கொட்டி ஒரு கப் தண்ணீர் ஊற்றுங்கள். குக்கரை மூடிவிட்டு அடுப்பில் வையுங்கள்.
3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். பிரஷர் இறங்கியதும் மூடியைத் திறந்து உப்பு சேர்த்து மத்து வைத்து கடைந்துகொள்ளுங்கள்.
பின் புளித்தண்ணீர் ஊற்றி கலந்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள். அதற்குள் இடையில் தாளிக்கக் கொடுத்த பொருட்களை சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டுங்கள்.
இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் கத்தரிக்காய் கடையல் தயார்.
இதையும் செய்யலாமே!: கத்திரிக்காய் துவையல் செய்வது எப்படி!!







