Advertisement
Fast Food Veg

சுவையான இந்திய ஸ்டைல் பாஸ்தா செய்வது எப்படி?

Pasta
Advertisement

பாஸ்தா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான உணவாகும் மற்றும் பல உணவுப் பிரியர்களால் விரும்பப்படுகிறது. இவை இத்தாலிய சமையல் பாணியை அடிப்படையாகக் கொண்டவை என்றாலும், உலகம் முழுவதும் இதற்கு தனித்துவமான வரவேற்பு உள்ளது.

குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே இது குறித்து ஒரு தனி மனப்பான்மை உள்ளது. இத்தாலியில் தோன்றிய இது, அதன் சிறந்த சுவை மற்றும் எளிமையான செய்முறை காரணமாக மெதுவாக உலகம் முழுவதும் பிரபலமடைந்தது.

பாஸ்தாவுக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. முதல் நூற்றாண்டிலேயே இன்றைய இத்தாலியில் வாழும் மக்களின் உணவின் ஒரு பகுதியாக அவை இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

Advertisement

இத்தாலி மக்களின் பாரம்பரிய உணவாக இருப்பதால், உலகிலேயே அதிக பாஸ்தாவை உண்ணும் நாடு இத்தாலி. இத்தாலியில் வாழும் ஒருவர் சராசரியாக வருடத்திற்கு 27 கிலோ பாஸ்தா சாப்பிடுகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

பாஸ்தாவின் சுவையை அதிகரிக்க தக்காளி சாஸ் சேர்ப்பதே உலகம் முழுவதும் பலரைச் சென்றடைந்ததற்குக் காரணம் என்கிறார்கள் சில உணவு நிபுணர்கள்.

தேவையான பொருட்கள்:

1 1/2 கப் பாஸ்தா

2 பெரிய வெங்காயம்

2 தக்காளி

1/2 கப் கேரட்

Advertisement

1/2 கப் பீன்ஸ்

1 குடை மிளகாய்

1 பச்சை மிளகாய்

3 பல் பூண்டு

1 துண்டு இஞ்சி

தேவையான அளவு மிளகாய் தூள்

1/2 மேஜைக்கரண்டி மிளகு தூள்

1/2 மேஜைக்கரண்டி கரம் மசாலா

1/2 மேஜைக்கரண்டி சீரக தூள்

2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

செய்முறை:

இந்திய ஸ்டைல் பாஸ்தா

முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், குடை மிளகாய், மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாஸ்தாவை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீரை சுட வைக்கவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும். (பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருப்பதற்காகவே நாம் எண்ணெய்யை சேர்க்கிறோம்.)

பின்பு கொதித்து கொண்டிருக்கும் தண்ணீரில் பாஸ்தாவை போட்டு அதை அவ்வப்போது வெந்து விட்டதா என்று பார்த்துக் கொள்ளவும். (பொதுவாக இவை வேகுவதற்கு சுமார் 12 லிருந்து 15 நிமிடம் வரை ஆகும்.)

பாஸ்தா வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை வடிகட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.

இப்பொழுது ஓரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

எண்ணெய் சூடான பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், மற்றும் குடை மிளகாயை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு மூடி போட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

2 நிமிடத்திற்கு பிறகு மூடியைத் திறந்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து நன்கு கிளறி விட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு மீண்டும் மூடி போட்டு சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை அதை வேக விடவும்.

3 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் மிளகுத் தூள், கரம் மசாலா, சீரக தூள், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கி மீண்டும் மூடி போட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வேக விடவும்.

2 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பாஸ்தாவை சேர்த்து அதை நன்கு மசாலாவோடு சேருமாறு கிளறி விடவும்.

பின்பு இதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு தக்காளி சாஸ்சை சேர்த்து நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கி அதை சுட சுட ஒரு தட்டில் எடுத்து வைத்து பரிமாறவும்.

இப்போழது உங்கள் சூடான மற்றும் சுவையான இந்தியன் ஸ்டைல் பாஸ்தா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Advertisement
Written by Arumugam K

உங்கள் கருத்தைப் பகிருங்கள்

Your email address will not be published. Required fields are marked *