தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 200 மிலி
பதநீர் – 800 மிலி
நெய் – 3 மேசைக்கரண்டி
தேங்காய் – 1 மூடி
முந்திரி பருப்பு – 1 மேசைக்கரண்டி
கிஸ்மிஸ் பழம் – 10
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பதநீரை ஊற்றி சுடவைத்து, அரிசியை சுத்தம் செய்து அதில் போட்டு சிறு தணலில் நன்கு பொங்கலுக்கு மாதிரி குழைவாக வேகவிடவும்.
நன்றாக குழைந்த பிறகு கரண்டியால் நன்றாக கடைந்து விடவும். (பதநீரில் சாதம் வேக அதிக நேரம் ஆகும்.
தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்) வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் பழத்தை வறுத்து சாதத்தில் கலந்து தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
குறிப்பு:
நல்ல இனிப்பான பதநீராக இருந்தால் தான் சாதமும் இனிப்பாக இருக்கும். இல்லாவிட்டால் இறக்கும் போது தேவையான சீனி கலந்து கிளறி இறக்கவும்.
