குறைந்த நேரத்தில் மிக சுவையான உணவை சமைத்து சுவைக்க யாருக்குத்தான் பிடிக்காது? எனவே இன்று இங்கு காணவிருப்பது வெங்காய சாதம் மிக எளிதாகவும், குறைந்த நேரத்திலும் செய்யப்படும். இப்போது நாக்கில் எச்சில் ஊறுவது என்ன? உங்கள் சுவை மொட்டுகளை திருப்திப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் அறிவுப் பசியையும் தணிக்கும் வெங்காய சாதம்.
அவசரகாலத்தில் நாம் உண்ணக்கூடிய உணவுகளின் பட்டியல் நம் அனைவரிடமும் உள்ளது. அந்த லிஸ்டில் இந்த வெங்காய சாதத்தையும் சேர்க்கவும்.
காலையில் அவசரமாக அலுவலகத்திற்குச் செல்லும் போதோ அல்லது நம் குழந்தைகளுக்கு மதிய உணவைத் தயாரித்து, சிறிது நேரத்தில் பள்ளிக்கு அனுப்பும் போதோ இந்த ஆனியன் ரைஸ் சரியாக இருக்கும். அதை முயற்சி செய்து, கருத்துகள் பிரிவில் அது எப்படி சென்றது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
1 cup பாசுமதி அரிசி
1/2 cup வறுத்த வேர்க்கடலை
2 வெங்காயம்
4 பச்சை மிளகாய்
1 முழு பூண்டு
2 tsp கடலை பருப்பு
1/4 tsp மஞ்சள் தூள்
1 tsp மிளகாய் தூள்
1 tsp சீரகம்
1 tsp கடுகு
1/4 tsp பெருங்காய தூள்
1 tsp உப்பு
1/4 cup புளி தண்ணீர்
தேவையான அளவு கருவேப்பிலை
தேவையான அளவு கொத்தமல்லி
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு தண்ணீர்
செய்முறை:
முதலில் ஒரு கப் பாசுமதி அரிசியை எடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
இப்பொழுது வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை நறுக்கி வைத்து பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு சிறு துண்டு புளியை சுமார் பத்து நிமிடம் வரை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.
பின்பு அதில் 1/2 tsp உப்பு சேர்த்து ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை நன்கு வடிகட்டி அதில் போட்டு 20 இல் இருந்து 25 நிமிடம் வரை அதை வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு pan ஐ எடுத்து மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 2 tsp அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
எண்ணெய் சற்று சூடானதும் அதில் கடுகு, சீரகம், கடலை பருப்பு, மற்றும் வேர்க்கடலையை போட்டு வேர்க்கடலை நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
வேர்க்கடலை பொன்னிறமானதும் அதில் நாம் உரித்து வைத்திருக்கும் பூண்டு மற்றும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து சுமார் இரண்டில் லிருந்து மூன்று நிமிடம் வரை அதை வதக்கவும்.
மூன்று நிமிடத்திற்கு பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம், 1/2 tsp உப்பு, மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய்யை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
அடுத்து அதில் கருவேப்பிலை மற்றும் நாம் கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீரை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
பின்பு அதில் 1/4 cup அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் மூன்றி லிருந்து நான்கு நிமிடம் வரை வேக வைக்கவும்.
நான்கு நிமிடத்திற்க்குப் பிறகு அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை அதில் சேர்த்து பக்குவமாக சாதம் உடையாதவாரு சுமார் ரெண்டு நிமிடம் வரை அதை கிளறி விடவும்.
ரெண்டு நிமிடத்திற்க்கு பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி விடவும்.
அவ்வளவுதான் உங்கள் அட்டகாசமான வெங்காய சாதம் ரெடி. இதை சுட சுட உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
