Advertisement
Egg Egg

சூப்பரான மொறு மொறு சில்லி முட்டை போண்டா செய்வது எப்படி?

Advertisement

காபி, டீ குடிக்கும் போது, பலரும் சூடான பஜ்ஜி, போண்டா சாப்பிட விரும்புவார்கள். சூரியன் இல்லாமல் மேகமூட்டமாக இருந்தால் இந்த ஆசை இன்னும் அதிகமாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

இந்த நேரத்தில், நீங்கள் வீட்டில் முட்டைகளை வைத்திருந்தால், அவற்றைக் கொண்டு ஒரு சுவையான சிற்றுண்டி செய்யுங்கள். அது சில்லி எக் போண்டா. இந்த செய்முறையை பசியுள்ள குழந்தைகளுக்கு எப்போது வேண்டுமானாலும் பரிமாறலாம், அவர்கள் அதை விரும்புவார்கள்.

முட்டை போண்டா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? வாங்க பார்க்கலாம்!!

Advertisement

தேவையான பொருட்கள்:

முட்டை போண்டாவிற்கு

வேக வைத்த முட்டை – 4

கடலை மாவு – 3/4 கப்

அரிசி மாவு – 1/4 கப்

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

Advertisement

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

தண்ணீர் – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

முட்டை சில்லிக்கு…

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1/4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 3

வரமிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிது

இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

முதலில் முட்டை போண்டாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்திற்கு கலக்கவும்.

பிறகு அடுப்பில் வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் வேகவைத்த முட்டையை இரண்டாக வெட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது முட்டை போண்டா தயார்.

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, பச்சை மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

அடுத்து மசாலா பொடிகளை ஒவ்வொன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

மசாலாவில் இருந்து பச்சை வாசனை போனதும் முட்டை போண்டாவை சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கினால், இறுதியாக சில்லி எக் ஃபோண்டா ரெடி.

இதையும் முயற்சிக்கலாமே!: உருளைக்கிழங்கு போண்டா செய்முறை

Advertisement
Written by Arumugam K

உங்கள் கருத்தைப் பகிருங்கள்

Your email address will not be published. Required fields are marked *