சாக்லேட் பிடிக்காதவர்கள் யாராவது உண்டா? குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். நினைவுக்கு வரும் முதல் இனிப்பு சாக்லேட். பல தாய்மார்கள் சாக்லேட் செய்வது சுலபமாக இருந்தால், வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். அதனால நாங்களும் சாக்லேட் பண்ணுவோம்..!!
தேவையான பொருட்கள்:
அமுல் பால் பவுடர் – 160 கிராம் (அல்லது) 15 டீஸ்பூன்
கோகோ பவுடர் – 30 கிராம் (அல்லது 3 டீஸ்பூன்.)
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 170 கிராம் (அல்லது) 9 டீஸ்பூன்
தண்ணீர் – 1 1/2 கப்
வெண்ணிலா எசன்ஸ் – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
கடாயில் சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து அடுப்பை சிம்மில் வைத்து கம்பியாக வரும் வரை கொதிக்க வைக்கவும். பால் பவுடர் மற்றும் கோகோ பவுடரை ஒன்றாக கலந்து கட்டி இல்லாமல் பிசையவும்.
சாஸ் தயாரானதும், அடுப்பிலிருந்து கடாயை அகற்றி, வெண்ணெய் சேர்க்கவும்.
வெண்ணெய் உருகியதும், வெண்ணிலா எசென்ஸை ஊற்றவும். சலித்த பால் பவுடர் மற்றும் கோகோ பவுடர் சேர்த்து நன்கு கலந்து நெய் தடவிய தட்டில் ஊற்றவும். ஆறிய பிறகு, சதுரங்களாக வெட்டி அல்லது கைகளில் எண்ணெய் தடவி சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
