Advertisement
Chutney Veg

காலை உணவிற்கு காலிபிளவர் சட்னி செய்வது எப்படி?

Advertisement

காலை உணவிற்கு சட்னி இல்லாம சாப்பிடமுடியுமா? இட்லிக்கு ஏற்ற சட்னியான காலிபிளவர் சட்னிதான் இன்னைக்கு ரெடி பண்ணப்போறோம்.

தேவையான பொருள்கள்:

காளிப்ளவர்               – ½ கிலோ

தேங்காய்                 – ½ மூடி (சிறியது)

Advertisement

இஞ்சி                    – 1 சிறிய துண்டு

சோம்பு                   – 1 ஸ்பூன்

ஏலக்காய்                 – 1

மிளகாய் (அல்லது) வற்றல்  – 6

பூண்டு                        – 5 பல்

முந்திரிப் பருப்பு               -10

Advertisement

கசகசா                         – 1 மேஜைக்கரண்டி

கிராம்பு                        – 1

பட்டை                        – 1 சிறிய துண்டு

சிறிய வெங்காயம்             – 20

தக்காளி                       – 1

உப்பு                          – தேவையானது

எண்ணெய்                     – 1 முட்டைக் கரண்டி

செய்முறை:

காளிப்பளவரை பொடிப் பொடியாக வெட்டவும்.

இஞ்சி, பூண்டு, ஏலக்காய், சோம்பு, கிராம்பு, பச்சை மிளகாய், கசகசா, தேங்காய் எல்லாவற்றையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி போட்டு காளிப்ளவரை வதக்கி அரைத்த மசாலை ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கொதி வந்து வெந்தபின் இறக்கவும்.

சப்பாத்தி, இட்லிக்குத் தொட்டு சாப்பிடலாம். தேங்காயை பால் எடுத்தும் ஊற்றலாம்.

Advertisement
Written by Arumugam K

உங்கள் கருத்தைப் பகிருங்கள்

Your email address will not be published. Required fields are marked *