தேவையான பொருள்கள்

இறால்                       – 1/4கிலோ

பட்டாணி                   – 1/4கிலோ

காரட்                       – 50கிராம்

பீன்ஸ்காய்                 – 100கிராம்

பெல்லாரி வெங்காயம்      – 1/4கிலோ

தக்காளிப்பழம்             – 2

எலும்மிச்சம்பழம்          – 1

உப்புத்தூள்                – தேவையான அளவு

வற்றல் தூள்               – தேவையான அளவு

பச்சை மிளகாய்            – 10

பிரியாணி அரிசி            – 1/2 கி்லோ

நெய்                       – 100 மிலி

இஞ்சி                     – 2 அங்குலத்துண்டு

பூண்டு                      – 1

பட்டை                     – 2 துண்டு

கிராம்பு                     – 3

மல்லி                      – தேவையான அளவு

புதினா இலை               – தேவையான அளவு

ஏலம்                      – 3

செய்முறை

முதலில் ராலை உரித்து சுத்தம் செய்து தேவையான வற்றல் தூள், உப்பு சேர்த்து வேக வைத்து சிறிது நெய்யில் சிவக்க பொரித்து வைத்துக் கொள்ளவும். அதே போல் காய்கறிகளையும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

அரிசியை லேசாக நெய்யில் வறுத்துக் கொள்ளவும். அரிசியின் அளவில் ழூன்று பங்கு தண்ணீர் வைத்து கொதித்ததும் அரிசியைப் போட்டு பாதி வெந்ததும்  (நெற்று  பதத்தில்) வடித்து விடவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி வாசனை சாமான்களைப் போட்டு நறுக்கிய வெங்காயம் கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கி, அரைத்து  வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு கல‌ந்து நன்றாகக் கிளறி எலும்மிச்சம்பழம் பிழிந்து மல்லி புதினா, இலை தூவி தகுந்த உப்புத்தூள் சேர்த்து தம்மில் போடவும். கீழே சிறு தணல் போதும்.

முட்டை, கொத்துக்கறி இத்துடன் சேர்க்கப்பிரியப்பட்டால், முட்டையை வெங்காயத்துடன் உதிரியாக கிளறி, கொத்துக்கறியையும் தனியாக காரம், உப்புடன் சேர்த்து வேக வைத்து கடைசியில் சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.