பொதுவாக, சிலருக்கு சமையலைப் பற்றி பேசவே தேவையில்லை, ஏனென்றால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் சிலர் அதை ரசித்து சாப்பிடுவார்கள். வீட்டில் சமைத்தாலும் அவர்கள் எதிர்பார்த்தது போல் சுவை இல்லை என்று சொல்வார்கள்.
சிலர் வீட்டில் சொல்வார்கள் ஐயர் வீட்டில் சமையலான புளி குழம்பு , சாம்பார் சாதம், மோர் குழம்பு அல்லது வத்தல் குழம்பு அவர்கள் செய்வது போல இல்லை என்று வீட்டில் சொல்வார்கள்.
இதெல்லாம் தெரியாதுன்னு சொன்னாலும் நல்லா இருக்காது. எனவே இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இந்த பதிவில், உங்கள் வீட்டில் உங்கள் கை பக்குவத்தில் சுவையுடன் கூடிய ஐயர் வீட்டு மோர் செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டு வீட்டில் உள்ளவர்களுக்கும் செய்து கொடுப்போம்.
தேவையான பொருட்கள்:
தயிர்- 1 கப்
தேங்காய்- 1/2 கப்
பச்சை மிளகாய்- 3
வெள்ளரிக்காய்- சிறிய துண்டு
இஞ்சி- சிறிய துண்டு
சின்ன வெங்காயம்- 3
காய்ந்த மிளகாய்- 3
கடலை பருப்பு- 1 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள்- 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்- 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு- 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
எண்ணைய்- தேவையான அளவு
செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி நறுக்கிய வெள்ளரிக்காயை கொதிக்க வைக்கவும். அதன் பிறகு, கடலை பருப்பை தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும்.
இப்போது மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சீரகம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், ஊறவைத்த கடலை பருப்பை சேர்த்து ஒரு பாத்திரத்தில் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் வேகவைத்த வெள்ளரிக்காய் நன்கு வெந்ததும் தேங்காய் துருவல், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். அதன் பிறகு, 1 கப் தயிர் எடுத்து சிறிது தண்ணீரில் கலக்கவும்.
கடைசியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெயை காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயப் பொடி, கருவேப்பிலை தாளித்து அடுப்பை அணைக்கவும்.
இப்போது வேகவைத்த வெள்ளரிக்காய், கடுகு மற்றும் மோரினை சேர்த்து நன்றாகக் கலக்கினால், சுவையான ஐயர் வீட்டு மோர் குழம்பு ரெடி.
