Advertisement
Snacks Veg

சுவையான மில்க் கஜா செய்வது எப்படி?

சுவையான மில்க் கஜா செய்வது எப்படி?
Advertisement

சிரோட்டி என்றும் அழைக்கப்படும் காஜா, சர்க்கரை பாகில் கலக்கப்பட்ட அடுக்கு இனிப்பு பஜ்ஜி ஆகும். மாவில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மெல்லிய இனிப்பு பஃப்ஸ், விசேஷ சந்தர்ப்பங்கள் மற்றும் திருவிழாக்களில் ருசிக்கப்படுவதுடன், குழந்தைகளுக்கு ஏற்ற சிற்றுண்டியாகவும் பிரபலமாக உள்ளன.

மிருதுவான அமைப்பும் இனிப்பும் அதை தவிர்க்க முடியாத உணவாக மாற்றுகிறது. உலர் பழங்கள், ஏலக்காய் தூள் போன்ற பிற சுவைகளைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் விருப்பப்படி இந்தப் பிராந்திய செய்முறையை மாற்றலாம்.

தேவையான பொருள்கள் :

எருமைப்பால்    – 1 லிட்டர்

Advertisement

எலும்மிச்சைபழம்  –  1

சீனி      – 1/2 கிலோ

மைதா    – 100 கிராம்

டால்டா   –  1/4 கிலோ

சோடா உப்பு  – 1/4 தேக்கரண்டி

செய்முறை :

பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும். நன்றாக கொதிக்கும் போது எலும்மிபிச்சம்பழத்தை பிழிந்து திரிக்கவும். பின் துணியில்கட்டி பன்னீரை பிரத்து எடுக்கவும்.

Advertisement

பின் பன்னீருடன் மாவு, சோடா உப்பு கலந்து நன்றாகப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

சீனி முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அழுக்கை எடத்து விட்டு பிசு பிசு என்று வரும் வரை பாகு காய்ச்சி இறக்கி வைக்கவும்.

வாணலியில் டால்டாவை ஊற்றி, இளஞ்சூட்டில் தயார் செய்து வைத்திருக்கவும். உருண்டைகளை 4, 5 ஆக போட்டு சிவந்ததும் எடுத்து சூடாக சீனிப்பாகில் போட்டு பாகு குடித்ததும் தனியாக தட்டில் எடுத்து வைக்கவும்.

Advertisement
Written by Arumugam K

உங்கள் கருத்தைப் பகிருங்கள்

Your email address will not be published. Required fields are marked *