முட்டைக்கோஸ் பலவித நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இதில் நார்சத்து அதிகம் உள்ளது. முட்டைகோஸ் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. மேலும் இது சரும ஆரோக்கியத்தை பராமரிக்க பயன்படுகிறது. முட்டைகோஸ் பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நீளமாக நறுக்கிய முட்டைகோஸ்- 1 கப்
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1/4 கப்
மிளகாய் துாள்- 1/2 டீ ஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
ஓமம் – 1 சிட்டிகை
சீரகம் – 1 டீ ஸ்பூன்
சோம்பு – 1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
உப்பு – 1 சிட்டிகை
கடலை எண்ணெய் – 200 மிலி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில், சிறிதாக நறுக்கிய முட்டைக்கோஸ், சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொஞ்சம் இஞ்சி சேர்க்கவும்.
கடலை மாவுடன் வெங்காயம், முட்டைக்கோஸ், நறுக்கிய கொத்தமல்லி இலைகள், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், பெருங்காயம், ஓமம், சீரகம், சோம்பு, கறிவேப்பிலை சேர்க்கவும்.
பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
Delicious Cabbage Baguette
சிறிது நேரம் கழித்து ஒரு கடாயில் எண்ணெய்யை சூடாக்கவும். மிதமான தீயில் அந்தக் கலவையை சிறிது சிறிதாக பொரித்து எடுக்கவும்.
இப்பொழுது சுவையான முட்டைக்கோஸ் பக்கோடா ரெடி.
பின்னர் முட்டைக்கோஸ் பக்கோடாவை தக்காளி சட்னி அல்லது புதினா சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
Leave a Reply