கார குழம்பு செய்வது எப்படி

மிகவும் சுவையான செட்டிநாடு கார குழம்பு செய்வது எப்படி?

இன்றைய சமையல் பதிவில் சுவையான செட்டிநாடு காரக்குழம்பு செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். பொதுவாக அனைவருக்கும் கார குழம்பில் சாப்பிடுவது பிடிக்கும்.

அதிலும் செட்டிநாட்டு சுவையில் கரக்குழம்பு செய்தால் யாருக்குத்தான் பிடிக்காது. செட்டிநாடு பாணியில் செய்தால் நாம் வழக்கமாக சாப்பிடுவதை விட கூடுதலாக உணவையும் சாப்பிடுவோம்.

எனவே, செட்டிநாடு கரம் வாசனை வரும் வகையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்

கடுகு- 1 ஸ்பூன்

பெருங்காயத்தூள்- 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை- 1 கொத்து

வெங்காயம்- 1 (சிறிய வெங்காயம் 8)

தக்காளி- 1

கத்தரிக்காய்- 2

முருங்கைக்காய்- 1

மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்

புளி- எலுமிச்சை பழம் அளவு

வெல்லம்- 1 சிறிய துண்டு

உப்பு- தேவையான அளவு

மிளகு தூள்- 1/2 ஸ்பூன்

கொத்தமல்லி இலை- சிறிதளவு

மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

மல்லி- 3 ஸ்பூன்

உளுந்து- 1/2 ஸ்பூன்

வெந்தயம்- 1/2 ஸ்பூன்

கடலை பருப்பு- 1 ஸ்பூன்

துவரம் பருப்பு- 1 ஸ்பூன்

காய்ந்த மிளகாய்- 7

கசகசா- 1 டீஸ்பூன்

பூண்டு- 8 பற்கள்

துண்டு- 1 (சிறிய துண்டு)

தேங்காய்- 1/4 கப்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். பாத்திரம் சூடானதும், மேலே குறிப்பிட்டுள்ள மசாலாவுக்கு தேவையான பொருட்கள் மற்றும் தேங்காய் தயார் செய்யவும்.

பின்னர் அனைத்து மசாலாப் பொருட்களையும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அடுத்து 5 நிமிடம் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

இப்போது, ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு வதக்கவும்.

கடுகு வதங்கியதும் கறிவேப்பிலை, பெருங்காயம், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய முருங்கைக்காய், கத்தரிக்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை வதக்கவும்.

இப்போது, அடுப்பின் தீயை குறைத்து, முருங்கைக்காய் , கத்தரிக்காய் இரண்டையும் எண்ணெயில் நன்கு வதங்கும் வரை 5 நிமிடம் மூடி வைக்கவும்.

5 நிமிடம் கழித்து அரைத்த மசாலா விழுதை சேர்த்து கிளறவும். அடுத்து பெரிய எலுமிச்சை அளவில் ஊறவைத்த கரைத்த புளிக் கரைசலைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இப்போது இதனுடன் ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு 5 நிமிடம் கழித்து 1 ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் சிறிது மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் சூப்பரான செட்டிநாடு கார குழம்பு ரெடி.

Leave a Reply

Previous Post

Next Post

Discover more from Dad's Kitchen

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading