கொத்தமல்லி தொக்கு

ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கு செய்வது எப்படி?

தொக்கு என்பது இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு சைட் டிஷ் ஆகும். தொக்கு என்பது தென்னிந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் ஒரு சைட் டிஷ் ஆகும். தொக்கில் பல வகைகள் இருக்கிறது.

இவற்றில் மிகவும் பிரபலமானவை இறால் தொக்கு, தக்காளி தொக்கு, கத்திரிக்காய் தொக்கு, புதினா தொக்கு, மாம்பழம் தொக்கு, கொத்தமல்லி தொக்கு மற்றும் நெல்லிக்காய் தொக்கு. இன்று நாம் இங்கு பார்ப்பது கொத்தமல்லிக் தொக்கு.

பொதுவாக, நாம் அன்றாட வாழ்வில் தவறாமல் உண்ணும் உணவுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரே மாதிரியான உணவுகளை மீண்டும் மீண்டும் சாப்பிடும்போது ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்படுவது சகஜம்.

சலிப்படையாமல் இருக்க அவ்வப்போது வெவ்வேறு உணவுகளை முயற்சிக்கவும். அந்த வகையில் இந்த ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கு நமது வழக்கமான உணவுகளுக்கு மாற்றாக உள்ளது.

தேவையான பொருட்கள்

2 கொத்தமல்லி கட்டு

பெரிய எலுமிச்சம் பழம் சைஸ் புளி

15 to 17 காஞ்ச மிளகாய்

2 மேஜைக்கரண்டி வெல்லம்

1 மேஜைக்கரண்டி கடுகு

1 மேஜைக்கரண்டி வெந்தயம்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

செய்முறை

முதலில் கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து கழுவி ஆய்ந்து ஒரு தட்டில் வைத்து பரப்பி விட்டு அதை காய விடவும்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் புளியை ஊற வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும் அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி அதில் புளியை போட்டு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை ஊற விடவும்.

அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

எண்ணெய் சூடான பின் அதில் நாம் ஆய்ந்து வைத்திருக்கும் கொத்தமல்லியை போட்டு அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வதக்கவும். (கொத்தமல்லி இலை நன்கு சுருளும் வரை அதை வதக்கவும்.)

3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு நாம் வதக்கிய கொத்தமல்லியை ஒரு தட்டில் கொட்டி அதை பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.

பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 6 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

எண்ணெய் சூடான பின் அதில் காய்ந்த மிளகாயை போட்டு அதை சுமார் 3 லிருந்து 4 நிமிடம் வரை வதக்கவும். (மிளகாய் நன்கு வதங்கி சிறிது நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.)

காய்ந்த மிளகாய் சிறிது நிறம் மாறியதும் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்தவுடன் அதில் வெந்தயத்தை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வறுக்கவும்.

ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு கடாயில் இருக்கும் காய்ந்த மிளகாயை மட்டும் எடுத்து நாம் வதக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியுடன் சேர்த்து அதை பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.

கடாயில் இருக்கும் கடுகு மற்றும் வெந்தயத்தை எண்ணெய்யின் சூட்டிலேயே சிறிது நேரம் வைத்து பின்பு அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி அதை பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.

நாம் வதக்கிய அனைத்தும் ஆறியதை உறுதி செய்த பின் அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி அதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை விட்டு விட்டு நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.

பின்பு அதில் வெல்லத்தை எடுத்து அதை தட்டி போட்டு மீண்டும் நன்கு அரைத்து கொள்ளவும். (வெல்லம் விரும்பாதவர்கள் இதை போடாமல் தவிர்த்து விடலாம்.)

பின்னர் அதில் கடாயில் இருக்கும் எண்ணெய்யை ஊற்றி மீண்டும் ஒரு சுற்று சுற்றி கொள்ளவும்.

பிறகு கொத்தமல்லி தொக்கை எடுத்து சாதத்தில் போட்டோ அல்லது தோசைக்கு சைடிஷ் ஆக வைத்தோ அதை சுட சுட பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சூடான மற்றும் அருமையான கொத்தமல்லி தொக்கு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழும்.

Leave a Reply

Previous Post

Next Post

Discover more from Dad's Kitchen

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading